Love தான் தீம் அப்பறம் ஏன் Misunderstanding சண்டை எல்லாம்.. ஒரு Healthy relationship/ healthy marriage ஐ படிக்குறது என்ன சுகம்னு உங்க கமெண்ட்ஸ் ஒவ்வொரு பதிவிலும் காட்டிடுச்சு..
அதிரன்
பணத்தில் கோடிஸ்வரன்!!!
குணத்திலும் கோடிஸ்வரன்!!!
ஆளுமையான அதி!!!
ஆர்ப்பரிக்கும் அவன் பிரியம்!!!
யாரிடமும் பேசாதவன்!!
அவளில் பேசுபவன்!!!
தந்தையை தொலைத்து விட்டு
தந்தையாய் மாறி நிற்பவன்!!!
தாய் பாசத்தை தேடும் சிறுவன்!! தேவரஞ்சனா
தேவதையின் அம்சம்!!!
கண்டிப்பின் உருவம்!!!
நேர்மையின் வடிவம்!!!
பெற்றோரை தொலைத்து விட்டு
சொந்தங்களால் கைவிடப்பட்ட
கன்னி பெண்!!!
துயரங்கள் அனைத்தையும்
மனதில் புதைத்து விட்டு
தாயாய் தனயனை சுமக்கும்
தைரியசாலி ரஞ்சி!!
அவனுக்காகவே
திருமணத்தையும் மறுப்பவள்!!
பணத்தை மதிக்காத
அவள் குணத்தில் கவரப்பட்டவன்
தன்னை அறியாமல்
அவளில் தொலைந்து
அவளிலும் நிறைகின்றான்!!!
பேசாத அவர்களின் பிரியங்கள்
சொல்லாத நேசங்கள்!!
விழி பார்த்தே அவன்
வழி செல்லும் திமிரழகி !!
அவனுக்காய் அவள் யோசிப்பதும்!!
அவளுக்காக அவன் செய்வதும்!!
அவன் குடும்பத்தை
இவள் வழி நடத்த!!!
இவள் தம்பிக்கோ
அவன் தந்தையாய்!!!
தள்ளி வைத்து சோதிக்காமல்
தன் வீட்டில் இருக்க வைத்து
பாசமாய் பேணுபவன்!!!
தாயாய் மாமியாரை
மதிப்பதும், நேசிப்பதும்,
அவர் மடி சாய்ந்து
குழந்தையாய் சிரிப்பதும்
மறு மகளாய் தான் மருமகளே!!!
பிரியங்களின் நிழல்களில்
ஆணி வேராய் பிரியம்!!
விழுதுகளும் பிரியம்!!!
பிரியத்தை கூட
குடும்பத்திற்கு
பிச்சை போட யோசிக்கும்
உலகில் வாழ்கிறோம்!!
நிஜத்தில் இது போல்
நடப்பதில்லை!!
நடந்தால் பேரழகே!!!
கற்பனையில் என்றாலும்
நிறைவாய் காதலை சொல்லி
மனதை நிறைத்து
பிரியம் சொன்ன ஸ்ரீமா
இம்முறையும் போட்டியில்
வாகை சூட
வாழ்த்துக்கள்!!!
உங்கள் பிரிய கதைகளும்
தொடரட்டும் என்றுமே...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.