மனைவி 19

Advertisement

Nivi Ammu

Well-known member
Member
மனைவி - 19

"என்னை படிக்க வைக்காம இருந்திருக்க வேண்டியது தானே? நான் படிச்சு வேலைக்கு போய் சம்பாதித்து ஒவ்வொரு ரூபாயும் நான் மட்டும் அனுபவிக்கல.

மாசா மாசம் என் சம்பளம் 20,000 - 25,000-ஐ நீயும் உன் பொண்டாட்டியும் தானே வாங்கிக்கிட்டீங்க? அதை நான் மறக்கல, நீயும் மறந்திருக்க மாட்டேன்னு நினைக்கிறேன்.

நான் வீணாகப் பேச வரல. எனக்கும் உனக்கும் இனி எந்த உறவும் இல்லை. என் பிள்ளைகளோட பொருள் மட்டும் எனக்கு வேணும். எடுத்துக்கலாமா?" என்று கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு நின்றாள்.

தன் முன்னே திமிராக நிற்கும் தங்கையை எப்படி அடக்குவது என்று தெரியாமல் மருதுபாண்டி தடுமாறினான்.

ஆனால், அவளுக்கு வழிவிட அவனது அகந்தை இடம் கொடுக்கவில்லை.

கனகவல்லி அந்த வீட்டு வாசலின் ஓரமாக, ஒரு மரம் போலச் சமைந்து போய் நின்றிருந்தார்.

தன் கண் முன்னாலேயே தன் மகளின் வாழ்க்கை சுக்குநூறாக உடைந்து சிதறுவதை மூன்றாவது மனிதரைப் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

ராஜலட்சுமி ஆக்ரோஷத்தில் கத்தினாள், "இவளுக்கு என்னடி அவ்வளவு திமிர்? திமிர் எடுத்து அலையுறா... அந்தப் பேப்பரைக் கொண்டு வந்து இவ மூஞ்சியிலேயே நேராகத் தூக்கி எறியுங்க!" அவள் குரலில் இருந்த நஞ்சு காற்றையே தீய்த்தது.

கனகவல்லி நடுங்கும் கரங்களுடன் அந்த விவாகரத்து பத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்து, பெற்ற மகள் கையில் கொடுத்தார்.

ராதை மெல்ல அந்த பத்திரத்தைத் திறந்து பார்த்தாள். அது அவளுடைய வாழ்நாள் சிறையிலிருந்து அவளுக்குக் கிடைத்த விடுதலைச் சீட்டு விவாகரத்துப் பத்திரம்.

அவள் முகத்தில் எந்த அதிர்ச்சியும் இல்லை, இடி விழுந்த வலியும் இல்லை. இதை அவள் என்றோ எதிர்பார்த்துதான் இருந்தாள்.

"இதை நான் பார்த்துக்கிறேன்... என் பிள்ளை பொருளும், என்னோட பொருளையும் நான் எடுத்துக்கணும். உங்க பையன் கிட்ட சொல்லிடுங்க," என்று உறுதியாகச் சொன்ன ராதை,

'அம்மா' என்ற வார்த்தையை வாய் தவறி கூடச் சொல்லவில்லை. அந்த ஒரு வார்த்தையைச் சொல்ல கூட அந்த இடத்தில் அவளுக்குச் சொந்தம் இல்லாமல் போயிருந்தது.

கனகவல்லி ஓடிவந்து அவள் கையைப் பற்றிக் கொண்டு கண்ணீரோடு கதறினார், "ராதை... அம்மா உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்மா. உன்னோட இந்த வீண் பிடிவாதம், கௌரவம் எல்லாத்தையும் தூக்கிப் போடு. மாப்பிள்ளை கூடச் சேர்ந்து வாழற வழியைப் பாரு. இனிமேல் சீதாவையும், மகவையும் நான் நல்ல முறையில் பார்த்துக்கிறேன்.

இந்த மருதுபாண்டியையும் ராஜலட்சுமியையும் நம்பி இல்லை, உன் மேல இருக்கிற பாசத்துல நான் பிள்ளைகளை நல்லபடியா வளர்க்கிறேன்.

தயவு செஞ்சு உன் வாழ்க்கையைக் காப்பாத்திக்கப் பாரு. எத்தனை காலத்துக்குத்தான் உன்னால இப்படித் தனி மரமா நிக்க முடியும்?" என்று பதற்றத்தில் வார்த்தைகளைக் கொட்டினார்.

ராதை தன் தாயைப் பார்த்த பார்வை கனகவல்லியைச் சுட்டெரித்தது. "உன் மகன் என்னை மிரட்டுறான்... நீ என்னன்னா செண்டிமெண்டா பேசி என்னைக் குழப்புற! நீங்க யாருமே என் பிள்ளைகளைப் பார்த்துக்கத் தேவையில்லை. அவங்க ஒன்னும் இங்க அநாதைங்க கிடையாது. அவங்களுக்கு 'அம்மா'ன்னு நான் இன்னும் உயிரோடதான் இருக்கேன். என்னால என் பிள்ளைகளைப் பார்த்துக்க முடியும். இதுவரைக்கும் நீ பார்த்துக்கிட்ட லட்சணத்தை நான் பார்த்துட்டேன். என் பிள்ளைங்க ஒரு வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாம இந்த வீட்ல தவிச்சப்ப உன் பாசம் எங்க போச்சு?

பெத்த வயிறு எரியுது... உன்கிட்ட எல்லாம் அதைச் சொல்லி நான் எதையும் எதிர்பார்க்க முடியாது. உனக்கு என் பிள்ளைகளை நல்லா பார்த்துக்கணும்னு எண்ணம் இருந்திருந்தா, இத்தனை நாள்ல அவங்க வயித்துப் பசி தெரியாம நீ பார்த்திருப்ப. இனிமேல் உங்க கிட்ட பேசறதே வேஸ்ட்!" என்று ஆவேசமாக கத்தியவள், மின்னல் வேகத்தில் வீட்டை விட்டு வெளியே வந்தாள்.

"போகட்டும்... எங்க போயிடப் போறா? நாலு தெரு தள்ளிப் போயிட்டுத் திருப்பி இங்கதானே வரணும்!" என்று மருதுபாண்டி திமிராகத் திண்ணையில் காலை ஆட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.

ஆம், ராதை மீண்டும் வந்தாள். ஆனால் இந்த முறை அவள் தனியாக வரவில்லை; அழுது புலம்பிக் கொண்டு வரவில்லை.

ஊர் தலைவருடன் ஒரு போர்க்காளியாக அந்த வீட்டு வாசலில் வந்து நின்றாள்.
மருதுபாண்டியும் ராஜலட்சுமியும் ராதையைப் பார்த்து முறைத்துக் கொண்டே நின்றனர்.

ஏற்கனவே ஊர் தலைவருக்கு இவர்களுக்கும் இடையே தீராத பகை உமி போல எரிந்து கொண்டிருந்தது.

இப்போது குடும்பப் பஞ்சாயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தலைவர் உள்ளே நுழைந்தால் அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்?

"என்ன மருதுபாண்டி... இதெல்லாம் நீ கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தா? இல்ல உங்க அப்பா கஷ்டப்பட்டு சேர்த்ததா? ஏற்கனவே ராதையும் அவ பொண்ணுங்களும் படுற கஷ்டத்தை பார்த்துட்டு தான் உன்கிட்ட நான் சண்டை போட்டேன். 'பிள்ளைகளை நான் பாத்துக்குறேன், நான் படிக்க வைக்கிறேன், என்கிட்ட கொடுத்துட்டு ன்னு சொன்னப்ப கூட நீ திமிரக் காட்டின.

ராதை... உன்னையும் உங்களை மாதிரி இருக்குற மொள்ளமாரிங்களையும் நம்பி அந்தப் பிள்ளைகளை விட்டது தப்புன்னு ராதை மேல நான் கோவமா இருந்தேன்.

ஆனா, இன்னைக்கு தான் இந்த புள்ள வந்து தன் வாழ்க்கையை சொல்லி அழுவுது. எப்படிடா நீங்க எல்லாம் மனுஷனா உயிர் வாழ்றீங்க? ஒழுங்கு மரியாதையா ஒதுங்கி நில்லு... இல்ல நான் என்ன பண்ணுவேன்னு உனக்கு நல்லாவே தெரியும்!" என்று சொக்கன் தன் வேட்டியை மடித்துக் கட்டி மிரட்ட, அந்த இடமே நிசப்தமானது.

மருதுபாண்டி குடும்பமே மிரண்டு போய் நின்றது.

"ராதா... நீ தைரியமா உள்ள போ. உனக்கு என்னென்ன பொருள் வேணுமோ எல்லாத்தையும் எடு. எவன் தடுக்கிறான்னு நான் பார்க்கிறேன்!" என்று அவர் சிங்கம் போல வழிவிட்டார்.

ராதை வீட்டிற்குள் சென்று தன் மகள்களின் புத்தகப் பைகள், துணிகள் மற்றும் தன்னுடைய சில உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்து வைத்தாள்.

அப்படியே அவள் சட்டென்று வீட்டின் பின்பக்கம் செல்வதைக் கண்ட மருதுபாண்டி, "இவ எதுக்கு இப்ப அங்க போறா?" என்று குழப்பத்துடன் பார்த்தான்.

அவள் பின்னால் சென்று பார்த்தபோது, அங்கே ஒரு பழைய ஸ்டோர் ரூம் இருந்தது. தேவையற்ற குப்பைகளும், ஒட்டடைகளும் நிறைந்த அந்த அறையில் பழைய பொருட்கள் மண்டிக்கிடந்தன.
மீண்டும் வெளியே வந்தவள்,

"அண்ணா... பின்னாடி வந்து எனக்குக் கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?" என்று கேட்டாள்.

"வாம்மா, என்ன உதவி?" என்று அவரும் சென்று அங்கிருந்த கனமான பொருட்களை அப்புறப்படுத்த, அவளோ அந்தச் சுவரில் இருந்த ஒரு ரகசிய ஓட்டைக்குள் கையை விட்டாள்.

உள்ளிருந்து ஒரு சிறிய பெட்டி கீழே வந்து விழுந்தது.

"என்ன எடுக்கிறா இவ?" என்று ராஜலட்சுமி கழுத்தை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இது என்ன ராதா?" என்று சொக்கன் ஆச்சரியமாகக் கேட்க,

ராதை பெருமூச்சுடன் சொன்னாள், "நான் வேலைக்குப் போயிட்டு இருந்தப்ப எனக்காகச் சிறுகச் சிறுகச் சேர்த்து வச்ச காசு அண்ணா. என் பிரண்ட்ஸ் எல்லாம் ஏதாவது அன்பளிப்பா கொடுப்பாங்க, அதையும் இதுக்குள்ள தான் பத்திரமா வச்சிருந்தேன். இருக்குமான்னு சந்தேகத்தோட தான் பார்த்தேன், என் நல்ல நேரம் கிடைச்சிருச்சு."

"பணம் வச்சிருந்தாளா? இந்த இடத்திலயா? இத்தனை நாளா நமக்குத் தெரியாமப் போச்சே!" என்று ராஜலட்சுமிக்கு வயிற்றெரிச்சலில் நெஞ்சு விம்மியது.

அடுத்ததாக ராதை பரண் மீது ஏறி, தூசு படிந்த ஒரு பழைய டிரங்குப் பெட்டியை இழுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

"இவ்வளவுதான் அண்ணா என் உலகம். இதை மட்டும் நான் எடுத்துட்டுப் போறேன்."

"நீ கிளம்பு... ஆனா, இந்தச் சொத்துல சரி பாதி பங்கு உனக்கு இருக்கு. ஊர்க்காரங்க எல்லாரும் கூடிப் பேசி ஒரு முடிவு எடுத்து, அந்தச் சொத்துக்களை உனக்குக் கண்டிப்பா வாங்கித் தர்றேன்" என்றார் சொக்கன் உறுதியாக.

"எனக்குச் சொத்து எதுவும் வேண்டாம் அண்ணா... நிம்மதி இருந்தாப் போதும்."

"நீ வேண்டாம்னு சொல்லலாம், அது உன்னோட நல்ல குணம். ஆனா, இவனுங்க உன்னை நல்ல முறையில் வாழ வச்சிருந்தாலோ, உனக்கு ஒரு நல்லது கெட்டது பார்த்திருந்தாலோ நாங்க இதில தலையிட மாட்டோம்.

ரெண்டு பொம்பள பிள்ளைகளை நான் பார்த்துக்கிறேன்னு சொல்லி கூட்டிட்டு வந்தானே, அந்தப் பிள்ளைகளை கொத்தடிமை மாதிரி இல்ல வச்சிருந்தான்? எங்க கண்ணு முன்னாடியே இது எல்லாம் நடந்துச்சு.

இவனுங்களுக்கு இரக்கம் காட்டவே கூடாது. உனக்குன்னு ஒரு பங்கு சொத்தை நாங்க கண்டிப்பா வாங்கித் தருவோம். அது உனக்காக இல்லை, உன் ரெண்டு பொண்ணுங்களுக்காக.

இன்னைக்கு நீ புருஷன் கூட வாழல, நாளைக்கு அந்தப் பிள்ளைகளுக்கு ஒரு கல்யாணம் காட்சிப் பண்ணனும்னா கையில காசு இருக்கணும்.

காசு இல்லைன்னா இந்த உலகத்துல நாய் கூட மதிக்காது. பிள்ளைங்க மேல படிப்பு படிக்கணும்னு ஆசைப்பட்டா என்ன பண்ணுவ?

இன்னைக்கு இருக்கிற காலத்துல நீ வேலைக்குப் போய் எல்லாத்தையும் செஞ்சிடலாம்னு நினைக்காத.

நீ ஒன்னும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் கிடையாது. நான் சொல்றதை இனிமேலாவது புரிஞ்சுக்கோ. கொஞ்சம் நிதானமா வாழப் பாரு.

எல்லா இடத்திலும் நல்லவளா இருந்தா வாழ முடியாது; கொஞ்சம் சுயநலமாகவும் இருந்தால் தான் உயிர் வாழ முடியும். உனக்காக இல்லைன்னாலும், உன் பொண்ணுங்களுக்காக நீ சுயநலமா இருந்துதான் ஆகணும்!" என்று அவர் அன்பு கலந்த கோபத்தில் திட்டினார்.

"எனக்கு எந்தப் பிரச்சினையும் வேணாம்னுதான் நான் ஒதுங்கி போறேன்.

என் பொண்ணுங்களுக்கு பத்து ரூபாய் சேர்த்து வைக்கணும்னு எனக்கு ஆசைதான். ஒருவேளை நீங்க சொத்து வாங்கித் தந்தா சந்தோஷம், அதை நான் என் பொண்ணுங்க பேர்ல ரிஜிஸ்டர் பண்ணி வச்சிப்பேன். ஆனா, இந்த மனுஷங்க கிட்ட என்னால போராட முடியாது அண்ணா."

"உன்னை நாங்க போராடச் சொல்லல. இவனா, நாங்களான்னு நாங்க பாத்துக்கிறோம். நீ பத்திரமா இரு. உன் ரெண்டு பொண்ணுங்க படிப்புச் செலவுல பாதியை ஊர் பஞ்சாயத்து சார்பாவே ஏத்துக்கிறோம். அடுத்த வருஷம் நல்ல ஸ்கூலா பார்த்துப் பிள்ளைகளைச் சேர்ப்போம், சரியா?"

"ரொம்ப நன்றி அண்ணா!" என்று நெகிழ்ச்சியில் விம்மியபடி தன் பொருட்களைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாள்.

"எப்படிப் போவ? இவ்வளவு தூரம் எப்படி வந்த?"

"நான் நடந்துதான் அண்ணா வந்தேன்."

"இவ்வளவு தூரம் நடந்து வந்தியா?” என்றவர்

“என்ன மனுஷன் டா நீ! ஒரே ஒரு தங்கச்சி இந்த நிலைமையில் நிக்கிது. மனசு துடிக்க ல?" என்று மருதுபாண்டியை பார்த்துக் கோபமாகக் கத்தியவர்,

தன் போனில் யாரிடமோ பேசிவிட்டு, "கொஞ்ச நேரம் காத்திரு, வண்டி வரும்" என்றார்.

தொடரும்.....
 
👌
 
என்ன சொல்றதுனே தெரியல இவ்வளவு. கஷ்டம் வேண்டாம் இந்த ராதைக்கு, பரவாயில்ல இதுபோல நல்ல மனிதர்களும் இருக்கதான் செய்றாங்க
 
ராதை வாழ்க்கைக்கு உறவுகள் தான் கை கொடுக்கலை, ஊராவது கை கொடுக்கட்டும்.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top