அவனிடம் நீண்ட அமைதி நிலவியது. அந்தத் தர்மசங்கடமான அமைதியைத் தவிர்க்க எண்ணியவன், பேச்சை மாற்றினான். "லஞ்ச் எல்லோருக்கும் எடுத்துக்கிட்டீங்களா?"
"எடுத்துக்கிட்டேன் அண்ணா."
"எனக்கு எங்கே?" என்று அவன் கேட்க…
"நீங்க வருவீங்கன்னு எனக்குத் தெரியாது... அதான் நான் எதுவும் எடுத்துட்டு வரலையே!" என்று தழுதழுத்த குரலில் கூறினாள் ராதை.
கையில் ஏதுமில்லாமல் வெறுங்கையோடு நிற்கும் தனது இயலாமை, அவள் முகத்தில் ஒரு பாவமான உணர்வைத் தந்தது.
காலையிலேயே சுட்டெரிக்கும் வெயிலில் வாடிய மலரைப் போல நின்ற அவளைப் பார்க்கப் பிரபாகரனுக்குள் ஒரு மெல்லிய வலி பிறந்தது.
அவள் கண்களை நேராகப் பார்த்த பிரபாகரன், "நாளைக்கு மறக்காம எடுத்துட்டு வந்துரும்மா... தினமும் போய் ஹோட்டல்லயே சாப்பிட வேண்டியதா இருக்கு. வயிறு வேற சுத்தமா ஒத்துக்க மாட்டேங்குது. அதுவுமில்லாம வீட்ல யாரும் எனக்காகச் சமைக்கிறதும் இல்லை," என்றான்.
அவன் குரலில் ஒருவிதமான ஏக்கமும், தனிமையின் வலியும் கலந்திருந்தது.
ராதை சட்டென நிமிர்ந்து, "நான் இப்படியே வந்து லஞ்ச் வாங்கிட்டு, குழந்தைகளை அழைச்சுட்டுப் போய் ஸ்கூல்ல விட்டுட்டு, அப்புறம்தான் வேலைக்குப் போவேன்”.
“உங்களுக்கு எதுக்கு அண்ணா சிரமம்?”
“இதே வழியிலதான் தினமும் நானும் போறேன்... அப்புறம் எதுக்கு நீங்க தனியா, நான் தனியா போகணும்?" என்று ஒரு நியாயமான கேள்வியை முன்வைத்தான்.
அவனது அக்கறையில் ஒரு பிடிவாதம் தெரிந்தது.
அவன் சொன்னது கேட்டு ஒரு நிமிடம் யோசித்த ராதைக்குள்ளே சந்தேகம் முளைத்தது.
"இந்த வழியாவா நீங்க ஸ்கூலுக்கும் வேலைக்கும் போறீங்க? நீங்க ஏன் இந்த வழியைத் தேர்ந்தெடுத்தீங்க?" என அவள் தன் புருவங்களை சுருக்கிச் சந்தேகமாகக் கேட்க, அந்த இடமே ஒரு நிமிடம் நிசப்தமானது.
பிரபாகரன் சில நிமிட மௌனத்துக்குப் பிறகு, அந்த மௌனத்தை ஒரு பெருமூச்சால் கலைத்தான்.
"அது வேறொரு காரணம், இன்னொரு நாளைக்கு சொல்றேன். எனக்கு இனிமேல் தினமும் லஞ்ச் எடுத்துட்டு வந்துருங்க," என்று பேச்சை மாற்றினான்.
அவனது கண்கள் ஏதோ ஒரு ரகசியத்தைச் சுமந்திருப்பதை அவள் கவனித்தாள்.
ராதை புன்னகைத்து, "கண்டிப்பா! இதைக்கூட நான் செய்ய மாட்டேனா என்ன?" என்று உறுதியளித்தாள். அந்தப் பதில் பிரபாகரனின் மனபாரத்தை வெகுவாகக் குறைத்தது.
தள்ளி நின்ற குழந்தைகளைப் பார்த்து, "சீதா, மகா... படிப்பு எல்லாம் எப்படிப் போயிட்டு இருக்கு? நல்லா படிக்கிறீங்கதானே?" எனப் பிரியத்தோடு பிரபாகரன் விசாரிக்க,
குட்டி மகா துள்ளிக் குதித்து முன்னால் வந்தாள்.
"மாமா, அக்கா தான் எப்பவும் கிளாஸ் ஃபர்ஸ்ட் வருவா! அவ சூப்பரா படிப்பா மாமா..." எனத் தன் அக்காவின் புகழை வானளாவப் பாடினாள் மகா.
தங்கையின் பேச்சைக் கேட்டுச் சீதா நாணத்தோடு சிரிக்க, சீதா தொடர்ந்தாள்.
"மகா நல்லா படிப்பா... ஆனா அவளுக்குப் படிப்பை விட விளையாட்டு தான் ரொம்ப பிடிக்கும். அவ கலந்துக்கிற எல்லா போட்டிகளிலும் அவதான் ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்குவா. அதுக்காகப் படிப்பையும் விட்டுட மாட்டா... சில நேரம் ஃபர்ஸ்ட் ரேங்க் வராது, ஆனா டாப் டென் ரேங்க்குள்ள கண்டிப்பா வந்துருவா," என்று சீதா மூச்சுவிடாமல் பேசி முடித்தாள்.
அந்தச் சிறுமிகள் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல், ஒரு நிழலைப் போலவும் நிஜத்தைப் போலவும் அன்பால் பிணைந்திருப்பது பார்க்கப் பிரபாகரனின் உள்ளம் குளிர்ந்தது.
"நீங்க எப்பவும் இதே மாதிரி ஒற்றுமையா, சந்தோஷமா இருக்கணும். எனக்கு அதுவே போதும்," என அவன் மனதார வாழ்த்தினான்.
முதலில் ராதையை அவள் புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ள சூப்பர் மார்க்கெட் வாசலில் இறக்கி விட்டான்.
அவளைப் பார்த்து, "ஆல் த பெஸ்ட் ராதை! இன்னையிலிருந்து நீ ஒரு சூப்பர் லேடியா மாறணும். எதற்கும் யாரையும் எதிர்பார்க்காமல் சுயமா யோசிச்சு, சுயமா வாழ பழகிக்கணும், சரியா?" என்று ஊக்கமளித்தான்.
ராதை தன் கண்களில் ஒரு புதிய தன்னம்பிக்கையைத் தேக்கிக்கொண்டு,
"கண்டிப்பா அண்ணா, நீங்க நினைக்கிற மாதிரி இனி நான் இருப்பேன். ஏன் முடியாது? நான் வாழ்ந்து காட்டுவேன்!" என கம்பீரமாக மொழிந்தாள்.
தன் மகள்களுக்கு பிரியமாகா முத்தமிட்டு 'பை' சொல்லிவிட்டு, அந்தப் பெரிய கடைக்குள் ஒரு புதிய வாழ்க்கையை நோக்கி நுழைந்தாள்.
பிரபாகரன் பிள்ளைகள் இருவரையும் பள்ளியை நோக்கி அழைத்துச் சென்றான். காரில் செல்லும் போது மெதுவாக பேசினான்.
"சீதா, மகா... நீங்க ரெண்டு பேரும் இனி இன்னும் பொறுப்பா இருக்கணும். எல்லாத்துக்கும் அம்மாவையே எதிர்பார்க்கக் கூடாது. அம்மாவுக்கு உங்களால் முடிஞ்ச உதவிகளைச் செய்யணும். அம்மாவோட மனநிலை இப்போ எப்படி இருக்குன்னு உங்களுக்குத் தெரியும்ல? உங்க அப்பாவோட ஞாபகம் வந்து அவங்க வருத்தப்படாம, நீங்கதான் அம்மாவை சிரிச்சிட்டே இருக்க வைக்கணும், சரியா?"
"கண்டிப்பா நாங்க நல்லாப் பார்த்துப்போம் மாமா. ஆனா..." என இழுத்த மகாவின் குரலில் ஏக்கம் பிழிந்தது.
"அப்பாவும் அம்மாவும் இனி சேரவே மாட்டாங்களா மாமா?"
அந்த மழலையின் ஏக்கமான வினா பிரபாகரனின் இதயத்தைச் சுக்குநூறாக உடைத்தது.
பள்ளிக்கு முன்பு காரை மெதுவாக நிறுத்தியவன், சீட் பெல்ட்டை கழற்றி விட்டு பின்னால் திரும்பி இருவரையும் ஆழமாகப் பார்த்தான்.
"மாமா உங்களுக்கு ஒரு சத்தியம் பண்ணி தரேன். அம்மாவும் அப்பாவும் கண்டிப்பா ஒரு நாள் சேர்ந்து வாழ்வாங்க. அவங்க மட்டும் கிடையாது, உங்க அப்பா கூட நீங்களும் சேர்ந்து வாழ்வீங்க. 'அவன் ரொம்ப நல்லவன்' என்கிற அந்தப் போலிப் பெருமைதான் அவன் வாழ்க்கையையே இன்னைக்கு அழிச்சுட்டு இருக்கு. என்னைக்குமே ரொம்ப நல்லவனா மட்டும் இருந்தா இந்த உலகத்துல வாழ முடியாது. அவனும் கொஞ்சம் கெட்டவனாக, அதாவது நல்லவைக்காக உறுதியா போராடுறவனா மாறினாத்தான் உங்க அம்மாவுக்கு நல்ல புருஷனாவும், உங்களுக்கு நல்ல அப்பாவாவும் மாற முடியும்.
ஸ்ரீராம் உங்க கூட சேர்ந்ததுக்கு அப்புறம் அவனைப் பத்தி உங்களுக்குத் தெரியும். அப்பா இல்லையேன்னு நீங்க கவலைப்பட வேண்டாம். இந்த அத்தனை பிரச்சனைகளும் இன்னும் கொஞ்ச நாள்ல சரியாயிடும். மாமா நான் உங்களை சேர்த்து வைப்பேன், நம்பிக்கையா இருங்க. எதிர்காலத்தை நினைச்சு இன்னைக்குப் பயந்துட்டு, இந்த அழகான வயசைச் சந்தோஷமா கழிக்காம விட்றாதீங்க, சரியா?"
"உங்க மேல எங்களுக்கு நிறைய நம்பிக்கை இருக்கு மாமா. அப்பாவும் அம்மாவும் சேர்ந்துட்டா அதுவே எங்களுக்குப் போதும்," என்றனர் அந்தப் பிஞ்சுகள் நம்பிக்கையுடன்.
"அப்பா, அம்மா மட்டும் இல்ல... நீங்க நாலு பேருமே சேர்ந்து சந்தோஷமா வாழ்வீங்க, அதை நானும் பார்ப்பேன்," என அவர்களுக்கு ஒரு சத்திய வாக்கு கொடுத்தான் பிரபாகரன்.
அவர்கள் இறங்கிச் செல்வதைப் பார்த்தபின், ஒரு நிம்மதியுடன் தனது அலுவலகத்திற்குப் புறப்பட்டான்.
அங்கே வீட்டில், கலை மாறி மாறி வேலை செய்து செய்து உடல் சோர்ந்து போயிருந்தார்.
ராதை அந்த வீட்டில் இருந்தவரை ராணி போல வகை வகையாகச் சமைத்துப் போட்டாள். அவளைத் துரத்தி விட்டு இன்று அவரே அடுப்படியில் நின்றபோதுதான் அதன் அருமை புரிந்தது.
காலையில் டிபன் செய்ததற்கே அவருக்கு மூச்சு முட்டியது. இடையில் அந்த இரு பெண்களும், "அம்மா ஜூஸ் வேணும், அத்தை டீ வேணும், பால் வேணும்" என்று இம்சை செய்ததில் அவருக்குத் தலை சுற்றியது.
சமையலறையை விட்டு வெளியே வர முடியாதபடி அவர்கள் செய்த வேலை கலைக்கு வெறுப்பின் உச்சத்தைத் தந்தது.
ஸ்ரீராம் சோபாவில் அமர்ந்து அனைத்தையும் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் மனதில் ஒரு மெல்லிய சலனம், ஒரு சிறு மாற்றம் உண்டானது. அது அவனுக்குச் சாதகமாக முடியப் போகிறதா அல்லது தாயின் பிடிவாதத்திற்குப் பலியாகப் போகிறதா என்பது போகப்போகத்தான் தெரியும்.
மாலை மங்கிய வேளையில், மலரும் அசோக்கும் மிக நவீனமான உடைகளை அணிந்து கொண்டு வெளியே செல்லத் தயாராக நின்றிருந்தனர்.
மலர், தன் கணவன் அசோக்கின் கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு ஸ்ரீராமின் முன்னே வந்து நின்றாள். "அண்ணா, நாங்க வெளிய போயிட்டு வரோம். நைட்டு அப்படியே சினிமாவுக்கு போயிட்டு வருவோம்," என்றாள் மிதப்பாக.
"சரி, போயிட்டு வாங்க," என்று சுருக்கமாகக் கூறிவிட்டு ஸ்ரீராம் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
மலர் தன் தாயைக் கண்ணால் ஜாடை காட்ட, கலை உடனே மகனைப் பார்த்தார். "ஸ்ரீராம், அவங்களுக்கு வெளியே செலவுக்கு ஒரு 2000 ரூபாய் பணம் கொடுத்து அனுப்பு," என்றார் அதிகாரமாக.
ஸ்ரீராம் அதிர்ந்து போனான். "அம்மா... என்கிட்ட ஏது பணம்? என்கிட்ட இருந்த எல்லாத்தையும் உன்கிட்ட தான் கொடுத்தேன்!" என்றான் ஆதங்கமாக.
கலை மகனை ஒரு விசித்திரமான பார்வையில் பார்த்துவிட்டு, "ஆமால்ல... நான் மறந்துட்டேன், இருமா வர்றேன்," என்று உள்ளே சென்றார்.
பீரோவைத் திறந்து 2000 ரூபாய்க்குப் பதில் 3000 ரூபாயாக அள்ளி வந்து தன் செல்ல மகளிடம் நீட்டினார்.
"பை மா, பை அண்ணா! நாங்க போயிட்டு வரோம்," என்று அசோக்குடன் இணைந்தபடி வெளியே சென்ற மலர், பைக்கில் பின்னால் அமர்ந்தபோது அவனை இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டாள்.
ஜன்னல் வழியே அதைப் பார்த்த ஸ்ரீராம் முகம் சுளித்தான். "கொஞ்சம் நாகரிகமா போகலாமே? இவ்வளவு நெருக்கமும், இப்படிப்பட்ட ஆடையும் அவங்களுக்கு தேவையா?" என்று முணுமுணுத்தான்.
"ஸ்ரீராம், என்ன பேசுற நீ? அது உன் தங்கச்சி, அவளுக்குப் பிடிச்ச மாதிரி அவ டிரஸ் போட்டுருக்கா, இதுல என்ன தப்பு இருக்கு? மாப்பிள்ளை எதுவும் கேட்கல, அவங்க புருஷன்-பொண்டாட்டி அப்படித்தான் இருப்பாங்க. அதெல்லாம் நாம கண்டுக்க கூடாது," என்று கலை தன் மகனை அடக்கினார்.
அலர் தன் தங்கையின் ஆடம்பரத்தைப் பொறாமையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஸ்ரீராமுக்கு வீட்டில் இருப்பது சொல்ல முடியாத அளவுக்கு போர் அடித்தது. "அம்மா, நான் சும்மா வெளியே போயிட்டு வர்றேன், எனக்குக் கொஞ்சம் பணம் வேணும்," என்றான் இயல்பாக.
உடனே கலை அடுக்கடுக்காக கேள்விகளை வீசினார். "எங்க போற ஸ்ரீராம்? என்ன வேலை இருக்கு உனக்கு? எதுக்கு இப்ப காசு கேக்குற?"
அவன் தாயை அதிர்ச்சியாக பார்த்தான். "சும்மா கடைக்குப் போறேன்மா, வீட்ல போர் அடிக்குதுன்னு தானே சொன்னேன்!"
"நீ கடைக்குப் போய் என்ன பண்ணப் போற? சும்மா மொபைல்ல வீடியோ ஏதாவது பாரு. என்கிட்ட இப்ப காசு இல்லை ஸ்ரீராம். வீட்ல யாருமே வேலைக்குப் போகலை, நீயும் வீட்ல தான் இருக்க... உனக்கே நிலைமை புரியும்னு நினைக்கிறேன். அம்மா சொன்னா கேட்பல?" என அவன் தாடையைப் பிடித்துக் கொஞ்சி விட்டு நகர்ந்தார்.
ஸ்ரீராம் குழப்பத்துடன் புருவத்தை சுருக்கினான். "எப்படி? மாப்பிள்ளைங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போகலையா? மலர் வீட்டுக்காரர் என்ன பண்றாரு?"
"அவர் பேங்க்ல மேனேஜரா வேலை செய்யுறாருப்பா," என்றார் கலை சாதாரணமாக.
"அப்புறம் எதுக்கு அவங்க உங்க கிட்ட காசு வாங்கிட்டு போறாங்க?" என ஸ்ரீராம் கேட்ட வினாவிற்கு தாயிடம் பதில் இல்லை.
தொடரும்.....