Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

பாரதிப்பிரியன்
Reaction score
866

Profile posts Latest activity Postings About

  • அனைவருக்கும் வணக்கம். என்னுடைய கலங்கரை கோபுரம் வரலாற்று சிறுகதை, ஹெரிடேஜர் தளம் நடத்திய சிறுகதை போட்டியில் சிறப்பு பரிசு வென்றுள்ளது. ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. என்னுடைய வரலாற்று தொடர் கிரேக்க மனிமகுடத்தை தொடர்ந்து ஆதரிக்கும் வெற்றிமதி, srd. ரதி, பானு அக்கா, அம்பிகா புருஷோத்தமன், இலக்கி கார்த்தி, செம்மொழி, சாய்தீரா, உள்ளிட்ட அத்தனை வாசகர்களுக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.
    அன்புடன்
    பாரதிப்பிரியன்
    அழகிய தமிழ் அறிவோம் -11

    1. இகலன்- நரி, பகைவன்
    2. இகவு- இகழ்ச்சி
    3. இகலை- வெண்ணெய்
    4. இகனி- வெற்றிலை
    5. இகுளை- தோழி
    6. இக்கணம்- இந்த நொடியே
    7. இங்கிசை- இம்சை
    8. இசல் - வாதாடுதல்
    9. இசைதல் - சம்மதித்தல்
    10. இடாவேணி - அளக்கப்படாத நிலம்

    இனிய காலை வணக்கம்???
    கிரேக்க மணிமகுடம் வாசியுங்கள்
    அழகிய தமிழ் அறிவோம் - 10

    1. அருணமணி - மாணிக்கம்
    2. அருஞ்சிறை - நரகம்
    3. அருணன் - சூரியன்
    4. அருத்தா பத்தி- சொல்லியது கொண்டு சொல்லப்படாத பொருளைப் பெறுதல்.
    5. அரியணை- சிங்காசனம்

    என்னுடைய கிரேக்க மணிமகுடம் வரலாற்றுத் தொடரின் 14ம் பாகம் படியுங்கள். என் உயிரின் உயிரான மனைவிக்கு கடிதத் தொடர் வாசித்துப்பாருங்கள்.

    இனிய காலை வணக்கம்?
    கிரேக்க மணிமகுடம் 14ம் அத்தியாயம் பதிப்பித்து உள்ளேன். வாசித்துப்பாருங்கள். உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி
    அழகிய தமிழ் வார்த்தைகள் அறிவோம் -9

    1. அட்சதை- மங்கள அரிசி
    2. அட்ட மூர்த்தி- எட்டு வகையில் உணரப்படும் சிவன்.
    3. அட்டாகரம்- திருமாலுக்கு உரிய எட்டு எழுத்தாலான மந்திரம்
    4. அணியம்-கப்பலின் முன் பக்கம்
    5. அணிவிரல்- மோதிரம் அணியும் விரல்

    இனிய காலை வணக்கம்???
    "தோழர்கள் துரோகிகளாகவும் ஆகக்கூடும் பாண்டிய பேரரசே!!, துரோகம் சிலநேரம் மண்ணுக்காகவும், சிலநேரம் பொன்னுக்காகவும், பலநேரம் பெண்ணுக்காகவும் தீர்மானிக்கப்படுகிறது" - கிரேக்க மணிமகுடம் ,வரலாற்றுத் தொடர் (அத்தியாயம் 14) பதிவிடப்பட்டுள்ளது. உங்கள் ஆதரவைத் தாருங்கள்.
    என்னுடைய புதிய குறும் தொடர் "என் உயிரின் உயிரான மனைவிக்கு" கடிதம் 2, MM தளத்தில் பதிவிட்டு உள்ளேன். வாசித்துப்பாருங்கள் உங்கள் கருத்தை பகிருங்கள். நன்றி
    என்னுடைய புதிய குறும் தொடர் ஒன்றை "என் உயிரின் உயிரான மனைவிக்கு" என்ற தலைப்பில், M M தளத்தில்.... பொழுது போக்கு பகுதியில் பதிவேற்றம் செய்துள்ளேன். ஒரு கணவன் தன் மனைவிக்கு எழுதும் கடிதமாக இது நீளும்... 10 பாகங்கள்... வாசித்துப் பாருங்கள். உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி
    அழகிய தமிழ் அறிவோம் - 8

    1. அசலம் - மலை
    2. அசனி - இடி
    3. அசா - தளர்ச்சி, இயலாமை
    4. அசுரம் - எண்வகை மணங்களில் ஒன்று.
    5. அசூயை - பொறாமை
    6. அச்சு - உயிர் எழுத்து
    7. அஞலம் - மின்மினி
    8. அஞ்சனம் - மை, கறுப்பு, இருள், குற்றம்
    9. அஞ்சித்தல்- பூஜித்தல்
    10.அடலை - துன்பம்
    இனிய காலை வணக்கம் ???
    அழகிய தமிழ் அறிவோம் -7

    1. அகவை - வயது
    2. ஆகிஞ்சனன் - தரித்திரன்
    3. அகூபாரம்- ஆமை
    4. அகோராத்திரம்- பகலும் இரவும்
    5. அக்காராம் - சர்க்கரை
    6. அங்கிதம் - தழும்பு
    7. அங்குட்டம் - பெருவிரல்
    8. அங்கிரி - கால்
    9. அங்கை - அழகிய கை
    10. அசரீரி- ஆகாய வாணி, காற்றில் வரும் உருவமற்ற குரல்.

    இனிய காலை வணக்கம்?????
  • Loading…
  • Loading…
  • Loading…
Top