கடைசி இரண்டு அத்தியாயங்களில் நிறைய நல்ல விஷயங்கள் சொல்லி இருக்கீங்க. அருமை.
உத்ரா மூலமாக அந்த ட்வின்ஸ் திரும்ப கொண்டு வந்தது மிகப் பிடித்தது. கதை மாந்தர்கள் அத்தனை பேரும் நல்லவர்களாக இருந்தது மனதை கொள்ளை அடித்தது.
ஒரு எமோஷனல் ரோலர் கோஸ்டர் போல ரம்யா ஷ்ரவன் இவார்கள் இருவரின் உணர்வுகளின் ஏற்ற...
எமோஷனல் எபி. எல்லா உணர்வுகளையும் மொத்தமாக கொட்டி தீர்த்து இருக்காங்க ரம்யாவும் ஷ்ரவனும்.. எல்லா உணர்வுகளையும் அப்படியே செதுக்கி இருக்கீங்க. காசியில் ரம்யா ஷ்ராவனுக்கு எக்ஸ்ப்லைன் செய்வது அபாரமாக இருந்தது. வாழ்த்துக்கள்.
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்.
ரொம்ப ரொம்ப வித்தியாசமான அழகான எபி. ஷ்ரவனோட நினைவுகள் திரும்ப வர இடம் ரொம்ப ரொம்ப தத்ரூபமா எழுதி இருக்கீங்க.
A very different thought and beautiful writing.
பொதுவாக சினிமாவிலும் கதைகளிலும் ஒரு விஷயத்தை மறந்தவர்களுக்கு எல்லாம் மொத்தமாக நினைவுக்கு வந்து விடும். ஆனால் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக...
அடடா என இப்படி? இருந்தாலும் 101 நாட்கள் ஒரே அத்தியாயத்தில் ரொம்ப அழகா முடிச்சிடீங்க. தொய்வு இல்லாமல் கதையை நகர்த்துவதே பெரிய களை. இங்கே எல்லா கதாப் பாத்திரங்களும் சேர்ந்து அவர்களே அழகாக கதையை நகர்த்திக் கொண்டு செல்கிறார்கள்.
Great writing
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
செம தீபாவளி. நாங்களும் அவங்களோட சேர்ந்து கொண்டாடினோம். இன்னும் நூறு நாட்கள் பிரிஞ்சு இருக்கணுமா? ஓ நோ மை லார்ட என்று கத்த தோன்றினாலும். பைவ் ஸ்டார், பால் பாயசம். புடவை தீபாவளி என எல்லாவற்றையும் காதப் பாத்திரங்களாக மாற்றும் உங்கள் எழுத்துக்காக உங்களை சும்மா விடுகிறேன் எழுத்தாளரே!
ப்ரியங்களுடன்...
அழகான நிறைவான முடிவு. குழந்தை சேர்த்து வைப்பாள் என நின்னைதேன். நிலவனை பேசி விட்டான். சிம்பிள் அண்ட் ஸ்வீட்டா இருந்தது இந்த த்தியாயம். சிவஞானம் கடை வரை அழகா கொண்டு வந்து சேர்த்து முடிச்சிட்டீங்க.
அவர்கள் கல்லூரி காலம் தொடங்கி பிரிந்து இணைவது வரை எஸ்.பி.பி சர் துணை வந்தது அழகா இருந்தது. நிலவன்...
எழிலனும் நிலாவும் நிறைய பேசி இருக்கணும். அவங்களுக்கு நிறைய நேரம் இருந்தது. அவள் கருவுற்று இருக்கும் போது எழிலன் கொஞ்சம் ஆதரவாக பேசி இருந்தால் இது இத்தனை தூரம் சென்று இருக்காது. இருவருக்கும் இடையில் ஒரு மெல்லிய திரைதான் இருக்கிறது. சின்னதாக கீறினால் விழுந்து விடும் குழந்தை மஞ்சரி அதை செய்வாள்...
இங்கேயும் எழிலனுக்கு அவசரம்தான். கணவன் மனைவி இருவரும் கொஞ்சம் மனம் விட்டு பேசி இருக்கலாம். நிலா இன்னும் லிட்டில் பிரின்சஸ் ஆகவே இருக்கிறாள். காட்சிகள் மிக இய்லாபாக இருக்கு. இந்த காலத்தில் இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள்தான் பெரிதாகி டைவர்ஸ் வரை போகிறது. நிலாவும் சரி எழிலனும் சரி இன்னும் கொஞ்சம்...
இப்படி ஒரு பிரபோசல் நான் எதிர்பார்க்கலை. எழிலன் கொஞ்சம் அவாரப் பட்டு விட்டான் என்று கூட தோன்றியது. முதலில் நிலாவிடம் பேசி இருக்க வேண்டும் கூட தோன்றியது. ஸ்டில் அண்ணனோட லிட்டில் பிரின்சஸ் நேரே அங்கேதான் போய் நிற்கும். ஸோ கடகடன்னு மூவ் பண்றதே நல்லது அப்படின்னு எழிலன் முடிவு பண்ணிட்டான்.
வெகு...
வந்தனா வந்ததுமே எதவஹ்டு பிரச்சனை வரும் நினைத்தேன். அது போலவே வந்தது. எழிலன் அதை சரியா கையாண்டு விட்டான். படிக்கும் நாங்கள் கூட கல்லூரியில் வலம் வருவதைப் பலவே இருக்கிறது. பாடல்கள் அங்கங்கே மிகப் பொருத்தம். தொடர்ந்து படித்து விட்டு வருகிறேன்.
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
நான் எஸ்.பி.பி சர் பாட்டு எங்கேயாவது ஸ்டக் ஆகும் எழிலன் பாட நிலா ஆடுவாங்க ன்னு கற்பனை பண்ணேன். நீங்க வாட்ஸ் ஆப் எமொஜி வோட வே முடிச்சிடீங்க ரொமான்ஸ். வடை போச்சே ... ஹாஹா...
அழகான அத்தியாயம்.
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
எஸ்.பி.பி சர் கதையில் ஒரு முக்கிய அங்கமாகவே வருகிறார். பாடல்களை மிக அழகாக தேர்ந்தெடுத்து எழுதறீங்க. கல்லூரி நாட்கள் அந்த கல்சுரல் டைம் ப்ராக்டீஸ் எல்லாம் மறுபடியும் கண் முன்னே வந்து போகிறது. வெரி நைஸ்.
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
முன் கதை மெல்ல சூடு பிடிக்கிறது. கல்லூரி காலத்தில் இப்படி குடும்பத்தில் கூடவே ஒருத்தர் கண்காணித்துக் கொண்டே இருந்தால் அது கண்டிப்பா டென்ஷன் கொடுக்கும். அதுவே பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். அதுதான் இங்கே நடந்திட்டு இருக்கு.
எல்லா கதாப்பாத்திரங்களும் அவரவர் பார்வையில் சரி. எல்லாருமே...
அழகான ஆரம்பம் எஸ்..பி.பி யுடன். அவரது குரலை நெய்யில் மிதக்கும் முந்திரி திராட்சை சுவையோடு ஒப்பிட்டதை மிக ரசித்தேன். போகப் போக எஸ். பி.பி பாடல்களும் ஒரு கதாப் பாத்திரமாக மாறுமோ என்று தோன்றுகிறது.
கதாப்பாத்திரங்களின் அறிமுகத்தோடு கதை அப்படியே நகர்ந்த நேரத்தில் ஒரு கொக்கி போட்டு நிறுத்தி...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.