அதிகாலையிலேயே செழியனின் வீடு ஆரவாரமாக இருந்தது..
"பிரகாசம், அந்த நாதஸ்வரம் வாசிக்கிறவனுக்கு ஃபோன் பண்ணிட்டியா?" என்று வெங்கடாஜலம் கேட்க..
"பண்ணிட்டேன்- ப்பா நேரத்துக்குள்ள வந்துடுவாங்க" என்றான் பிரகாசம்..
"சரி, இந்தா இந்த மாவிலையை வாசநிலவுக்கால்ல கட்டிடு!.. அப்படியே பூமாலை வேலை முடிஞ்சதான்னு...
இரவு உணவை முடித்துவிட்டு மாயவேல் அருகில் அமர்ந்து பொதுவாக பேசிக்கொண்டிருந்தான் செழியன்..
"ஏன் மாப்பிள்ளை, புள்ளைக்கு தாலிப்பிரிச்சி கோர்க்கணுமில்ல! அதைப்பத்தி வூட்டுல எதாவது சொன்னாங்களா?" என்று மாயவேல் கேட்க..
"ஆடி பெருக்கன்னைக்கு பண்ணலாம்னு அம்மா யோசிச்சியிருந்தாங்க மாமா!.. அப்பாத்தான்...
“என்ன செழியா அவ பாட்டுக்கு பேசிட்டே போறா!.. நீ அவ வாயை பாத்துக்கிட்டு எனக்கென்னன்னு நிக்கிறவன், பொண்டாட்டி பக்கம் தாவிட்டியோ? கேட்டும் கேட்காத மாறி அமுக்கனா நிக்கிற” என்று எரிச்சலுடன் சின்னப்பொண்ணு கேட்க..
“என்னம்மா விசியம்” என்று செழியன் நிதானமாக கேட்டான்..
மேல்மூச்சி கீழ் மூச்சி வாங்க மகனை...
ராகவி குளித்து மாற்றுடை அணிந்து வெளியே வர, செழியன் எழுந்து அமர்ந்திருந்தான்...
தலைமுடியை துண்டால் சுத்திக்கொண்ட ராகவி அறையின் மூலையிலிருந்த துடப்பத்தை எடுத்து அறையை சுத்தம் செய்ய ஆரம்பிக்க, இடுப்பில் வேஷ்டியை சுத்திக்கொண்டு எழுந்து பால்கனி போன்ற அமைப்பிலிருந்த இடத்திற்கு சென்றான் செழியன்...
சூரியன் உதயமாகுவதற்கு முன்னால் கட்டிலுக்கடியில் கசங்கிய நிலையில் சுருண்டுக்கிடந்த உடுப்பை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கதவை அடைத்தாள் ராகவி..
அவளின் அசைவை உணர்ந்து கூட செழியன் அசையவில்லை!.. அசைவற்று படுத்திருந்தவனின் உள்ளம் ஆசைகளை முற்றிலும் துறந்து துன்பத்தில் தான் தத்தளித்தது...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.