Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இமை மீதூறும் துளிகளில் - 20

Advertisement

துமி

Well-known member
Member
அத்தியாயம் 20

"அந்த இரண்டு டிப்பார்ட்மென்டும் எப்பவும் அடிச்சிக்குமாம்…"

"உம்ம்ம்ம்ம்…"

"ஆனா ஆர்ட்ஸ் டிப்பார்ட்மென்ட்ல ஒரு பொண்ணும், சயின்ஸ் டிப்பார்ட்மென்ட்ல ஒரு பையனும் லவ் பண்ணினாங்களாம்…"

"வார்ரே வா… என்த்த பெத்த டிவிஸ்ட்டு!"

கதை நித்யாவையும் திலீப்பையும் அவர்களின் காதல் காலத்திற்கு கடத்தி சென்றது. பார்வைகளின் விசை கூடி கொண்டே சென்றது.

"ஆனா அவங்களோட ப்ரெண்ட்ஸ் எப்ப பாத்தாலும் அடிச்சிக்கிட்டே இருப்பாங்களாம்."

"நம்ம டிப்பார்ட்மொன்ட் மாதிரினு சொல்லு..."

"இவங்க இரண்டு பேரும் சீக்ரெட்டாவே லவ் பண்ணிட்டு இருந்துருக்காங்க… அதை அவங்க ப்ரெண்ட்ஸ் யார்கிட்டையும் சொல்லவே இல்லை."

விட்டால் குளம் கட்டி கொள்வேன் கண்கள் நித்யாவை பயமுறுத்தியது. வலி என்ன என்பதை திலீபின் இதயம் காட்டி கொண்டிருந்தது.

"அப்பறம் கொஞ்ச நாள்ல இரண்டு பேரும் ப்ரேக் அப் பண்ணிகிட்டாங்க… அந்த பையன் பெரிய கிரிக்கெட் ஸ்டார் ஆகிட்டான்.."

"நம்ம திலீப் சார் மாதிரின்னு சொல்லு…"

திலீபனும் நித்யாவும் காதலின் வலி சூழ் உலகில் தனித்திருந்தனர்.

"அப்படியும் சொல்லலாம்…" மர்மமாய் சுபி சொல்ல,

"அந்த பொண்ணு என்ன ஆனா??" கூட்டம் ஆர்வமாய் கேட்டது.

"அவளா…. கஷ்டப்பட்டு படிச்சி பெரிய கம்பெனில ஒரு நல்ல பொஷிஷன்க்கு வந்துட்டா… ஒரு நாள் அவ வீட்டுல இருக்க எல்லாரும் சேர்ந்து அவளுக்கு கல்யாணம் வச்சிட்டாங்க…"

"அச்சச்சோ.."

"அப்பறம் என்னாச்சு??"

"அப்பறம் என்னாச்சுன்ன்ன்ன்னாஆஆஆஆ…" இழுத்தவள், நித்யாவின் கையை பற்றி கொண்டு கூட்டத்தின் நடுவில் வந்தே நின்றாள். கூட்டத்தில் இருப்பவர்களுக்கு எதுவோ புரிந்தும் புரியாத நிலை.

"அந்த பொண்ணு கல்யாண பத்திரிக்கை எடுத்துட்டு அவளோட ப்ரெண்ட்டை பாக்க அவ படிச்ச ஓல்ட் காலேஜ்க்கே வந்தாளாம். அப்போ அங்க அவ எனிமி டிப்பார்ட்மென்ட் பொண்ணை எதேர்ச்சேயா மீட் பண்ணி போட்டோ எடுத்து சோசியல் மீடியால போட, அவளோட ப்ரெண்ட்ஸ் எல்லாரும் அங்க வந்துட்டாங்க. ஹை லைட் என்னன்னா அந்த சயின்ஸ் ஸ்டூடன்ட்டுமும் அதை பாத்துட்டு அங்க இருந்து வந்துட்டான்." இம்முறை திலீபனை இழுத்து கொண்டு வந்து விட்டாள்.

சுபிக்ஷாவின் இழுப்போ, அவளது கதையோ இருவரது வலி சூழ் உலகை கலைக்கவில்லை. இருவரும் இன்னமும் பார்வையின் இழுவிசையிலே கட்டுண்டிருந்தனர்.

பேரிரைச்சலான ஓர் அமைதி அங்கு நிலவியது. அதன் சத்ததை உணர்ந்த பின் தான் இருவரும் தாங்கள் எங்கிருக்கிறோம் என்பதை உணர்ந்தனர். நண்பர்கள் அனைவரும் அவர்களையே வித்தியாசமாக பார்ப்பதையும், தாங்கள் இருவர் மட்டும் அவர்களுக்கு நடுவே இருப்பதையும் அப்பொழுது தான் கண்டனர்.

"இனிமே மீதி கதையை இவங்க தான் சொல்லணும்..." சலுகையாய் திலீப்பின் தோளில் மீது சுபிக்ஷா கைவைத்து பேச, கூட்டத்தின் பார்வை இருவரையும் மொய்த்தது.

அவமானமாய், தலை இறக்கமாய் நினைத்த நித்யா, அங்கே இருந்து அழுது கொண்டே ஓடினாள்.

"ஹே நித்யா..." என்றவாறே நித்யாவின் பின் ஓடினாள் சுபிக்ஷா.

அனைவரின் பார்வையும் திலீப்பின் மீது படிந்தது. ஆட்காட்டி விரலால் லேசாக நெற்றியை நீவி விட்டுக் கொண்டான்.

நீ எதுவும் சொல்ல வேண்டாம் என்பது போல் ஆறுதலாக அவனது நண்பன் ஒருவன் வந்து தோளில் கையை வைத்து அழுத்த, அத்தனை இளைப்பாறுதலாக இருந்தது திலீப்பிற்கு.

மொத்த கதையில் அவர்களுக்கு தேவையான பகுதியை மட்டும் சொன்னான். அவன் வலியில் கூட நித்யா தேவதையாய் மட்டுமே வந்து சென்றாள். தூய அன்பு செய்யும் மாயாஜாலமது!

எங்கே ஓடுகிறோம் எதற்காக ஓடுகிறோம் என தெரியாமலே ஓடிய நித்யா, மாடிப்படிகளில் வந்து தொய்ந்து அமர்ந்தாள். அதுவரை கரை மீறும் சிறு நீர் துளிகளாய் இருந்த கண்ணீர், மதகுடைத்த காட்டாற்று வெள்ளமாய் வந்தது. இது நாள் வரை மூச்சு முட்ட முட்ட அழுத்தியதெல்லாம், அடித்து கொண்டு வந்தது.

"நித்யா..." தயக்கத்தோடு அழைத்தாள் சுபிக்ஷா.

கண்ணீர் சுமந்த முகத்தோடு அவளை நிமிர்ந்து பார்த்தாள் நித்யா.

'ஏன் இப்படி செய்தாய்?' கேட்காமல் கேட்டது நித்யாவின் கண்ணீர் துளிகள். சுர்ரென்று சுட்டது சுபிக்ஷாவை.

சுபியும் நித்யாவின் அருகிலே அமர்ந்து கொண்டு, ஆறுதலாக அவளை அணைத்து கொண்டாள். அவசரப்பட்டு விட்டோமோ என்ற நினைப்பில் அவளறியாமளே கண்ணீர் கோடாய் கன்னம் கிழித்திறங்கியது.

"சாரி நித்யா… சாரி..." சுபியின் மன்றல்கள் நித்யாவின் கேவலுகளுக்கிடையே புதைந்து கொண்டிருந்தன.

"கூட படிச்ச ஒருத்தியோட மனசை கூட புரிஞ்சிக்காம இருந்துருக்கோமேடா!!" வருத்தம் மேலோங்க ரஹீம் சொன்னான்.

"எப்பவும் நம்ம பின்னாடியே சுத்திட்டு இருந்தாளே டா… கடைசியா நமக்காக அவ லவ்வை விட்டுட்டு போய்ட்டாளே டா..." சந்தீப் உணர்ச்சி ததும்ப பேச,

"அவங்க இரண்டு பேரையும் சேத்து வைக்கிறோம் டா..." விஜய் உணர்ச்சி குவியலாய் வேகமாய் சொன்னான்.

திலீப் அவர்களின் காதல் கதையை சொன்னதும், மெக்கும் சிஎஸ்சும் அப்படியே தனித்தனியே பிரிந்து வந்து தங்களுக்குள்ளாக பேசி கொண்டிருந்தனர்.

"டேய் கொஞ்சம் சும்மா இருக்கிங்களா?? நித்யா அவளோட கல்யாண பத்திரிக்கையை வைக்க வந்துருக்கா?? அவளுக்கு கல்யாணம் நடக்க போகுது. எப்பவோ நடந்த காதல். அதுவும் முடிஞ்சி போனது. அதை ஏன் டா தோண்டி எடுக்கறிங்க? இதனால அவ லைஃப்ல எதுனா பாதிப்பு வந்தா என்னாகும்?? எதா இருந்தாலும் கொஞ்சம் நிதானமாக யோசிச்சு பண்ணலாம்." அனுபவமிக்க ஆசிரியராய் ஸ்ரீதர் பேசினான்.

சிஎஸ்சும் மெக்கும் மீண்டும் சந்திக்கும் பொழுது அதே பழைய உரசல் பார்வைகள் தென்பட்டன.

"இந்த பொண்ணுங்களே இப்படி தான்!!" என அங்காங்கே முணுமுணுப்புகள் கேட்டன.

"தேவை இல்லாம பேசாதிங்க..." மெக் எச்சரிக்கை விட, போர் சூழும் அபாயம் அங்கே தென்பட்டது.

"இப்படி நீங்க அடிச்சிப்பிங்க… உங்க படிப்பும் கெரியரும் வீணா போய்டும். தேவையில்லாம எங்க லவ்வால உங்களுக்கு பிரச்சனை வர கூடாதுனு தான் நாங்க பிரிஞ்சி போனோம். திரும்பும் அதே தப்பை பண்ணாதிங்க ப்ளீஸ்..." தவறு தன் மேலும் உள்ளது போல் பேசினான் திலீப்.

"ஒரு பையனும் பொண்ணும் லவ் பண்ணுறதும் ப்ரேக் அப் பண்ணுறதும் ரொம்ப சாதாரண விசயம். இதை பெருசு படுத்தாதிங்க… மோர் ஓவர் இது திலீப் அன்ட் நித்யாவோட பர்சனல் விசயம். இதை இப்படி சுபிக்ஷா சொன்னதே தப்பு." ஸ்ரீதர் முன் வந்து பேச, சிஎஸ் எதிர்க்க,

"அடுத்தவங்க பர்சனலை யார் பப்ளிக்கா கொண்டு வந்தாலும் தப்பு தான்." கோபமாய் ஸ்ரீதர் சொல்ல, அனைவரும் அடங்கினர்.

"இது அவங்க இரண்டு பேர் சம்பந்தபட்ட பிரச்சனை… அவங்களே பேசி முடிவெடுத்துக்கட்டும். அது எந்த முடிவா இருந்தாலும் நாம தலையிட வேண்டாம்." ஸ்ரீதரின் சொல்லுக்கு அனைவரும் செவி சாய்த்தனர்.

அழுது ஓய்ந்திருந்த நித்யா முகம் கழுவி வந்தாள்.

"சாரி..." இன்னமும் சொல்லி கொண்டிருந்தாள் சுபிக்ஷா.

புன்னைகைப்பதை தவிர வேறு என்ன செய்ய வேண்டும் என தெரியாததால் அமைதியாக இருந்தாள் நித்யா.

நித்யாவின் அலைபேசி இசைத்தது. மீண்டும் மழை ஆரம்பித்தது. ஸ்ரீதர் தான் அழைத்திருந்தான். கட் செய்து விட்டாள். மீண்டும் மீண்டும் முயற்சி செய்தான். அழைப்பை அவள் ஏற்கவே இல்லை. மனம் குற்றத்தில் குறுகுறுத்தது.

சுபிக்ஷாவின் அலைபேசி ஒலித்தது. அவள் காதில் சில தகவல்கள் ஓதப்பட, நித்யாவிடம் பூசி முழுகி ஒரு இடத்திற்கு அழைத்து சென்றாள்.

"இங்க யாருமே இல்ல..." என நித்யா சொல்லி கொண்டிருக்கும் பொழுதே, சுபிக்ஷா அங்கிருந்து நழுவி விட்டாள்.

சுபிக்ஷாவை தேடியவளின் கண்களுக்கு திலீப் சிக்கினான். இருவரும் பேசி ஒரு மனதாக ஒரு முடிவை எடுக்கட்டும் என்று அவர்களின் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

"திலீப்..." குரல் நடுக்கமுற அவன் பெயரை அழைத்தாள் நித்யா.

"என் பேர்லாம் உனக்கு நியாபகம் இருக்கா??" சூடாய் அவன் கேட்க, சரேலென கண்ணீர் தடம் உருவானது அவள் கன்னத்தில்.

கண்ணீர் கரைந்து செல்லும்
வழித்தடங்கள் முழுதும் - ஏனோ

உந்தன் நியபகங்களே!!!
 
Top