Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அணலில் துளிர்த்த பூந்தளிரே 13

Advertisement

ரமா

Member
Member
அணலில் துளிர்த்த பூந்தளிரே 13

தன் மார்பில் சாய்ந்து சுகமாய் உறங்கி கொண்டிருந்தவளை இமை சிமிட்டாமல் பார்த்திருந்தான் ஆடவன்.

இத்தனை நேரமும் அவனின் மார்பில் சாய்ந்திருந்தவள் இப்பொழுது தான் சயனித்திருந்தாள் தன் கூட்டை சேர்ந்த நிம்மதியில்.

அவளை இன்னமுமாய் இறுக்கி அணைத்தவனுக்கு மனமெங்கும் சொல்லெனா மகிழ்ச்சியில் திளைத்தது.

தன் மேல் சாய்ந்திருந்தவளை ஆசையாய் தன் கைகளில் அள்ளிக் கொண்டவன் அவர்களின் படுக்கையறைக்குள் இருந்த படுக்கையில் படுக்க வைத்தவன் தானும் அவளுடன் இணைந்து அவளை இறுக்கமாய் அணைத்து கொண்டு உறங்கி விட்டான்.

புலர்ந்தும் புலராத அதிகாலை பொழுதில் சிட்னி நகரின் குளிரில் தூக்கம் கலைந்தவள் மெல்லமாய் எழுந்தவளுக்கு தன் தலை எதோ பாறையின் மேல் படுத்திருப்பதை போல் உணர்ந்தாள்.

மெல்லமாய் தலையை உயர்த்தி பார்க்க அது தன்னவன் தான் என்று உணர்ந்ததும் மீண்டும் அவனின் மார்பில் தலைவைத்து படுத்துக் கொண்டாள்.

ஏனோ இப்பொழுது அவனிடம் அதீதமாய் பயம் இல்லை.. ஒரு பாதுகாப்பை கொடுத்துள்ளான்.. அவனின் செயலிலும் நடவடிக்கையிலும்.

அவனின் மார்பு கூட்டில் இன்னமுமாய் முகத்தை புதைத்துக் கொண்டு தன் மலர் கரங்களை அவனின் தோளோடு அணைத்துக் கொண்டாள்.

நன்றாக கண்களை மூடியவனின் உதடுகள் இதழ் பிரியாமல் சிரித்திருந்தது.

அவள் எழும் முன்பே அவன் விழித்திருந்தவன் கண்டது தன்னவளின் அசையும் விழிகளை தான்.

உள்ளுக்குள் சற்று பயம் இருந்தாலும் அவளின் மனது தெரிய அமைதியாய் அப்படியே படுத்திருந்தான்.

ஆனால் அவன் எதிர்பார்க்காதது பெண்ணவள் அவனின் நெஞ்சை மஞ்சமாக்கி கொள்வாள் என்று.

சற்று நேரம் அப்படியே இருந்தவனின் தேகத்தில் சூடான நீர் விழ சடாரென எழுந்தான்.

பெண்ணவளின் விழிகளில் தான் நீர் மழை பொழிந்து கொண்டிருந்தது.

" ஹேய் தளிர் தளிர் மா இங்கே பாருடா.. என்னாச்சி மா.. எதுக்கு இந்த அழுகை டா.. அது தான் உனக்கு ஒன்னும் ஆகலையே மா.. எதாவது பெயின் இருக்கா டா.. நாம டாக்டர்கிட்ட போலாமா மா.." என்று அவளின் கண்ணீருக்கு அவனே பல விடைகளை கூறினான்.

ஆனால் அவனின் கேள்வியில் பெண் தான் இன்னும் அதிகமாய் அழ ஆரம்பித்து விட்டாள்.

ஆடவன் ஒன்றும் விளங்காமல் அவளை சமாதானம் செய்ய முனைந்தாலும் அவள் சமாதானம் ஆகாமல் இன்னும் இன்னும் அவனிடம் நெருங்கியவள் அழுகையில் கரைய காதல் கொண்ட மனதால் தான் தாங்க முடியவில்லை.

அவளின் முதுகை மென்மையாய் தடவி கொடுத்தவன் அவள் அழுகை ஓயும் வரை காத்திருக்க மெதுவாய் அழுகையை குறைத்தவள் நிமிர்ந்து அவனின் முகத்தை இமை தட்டாமல் பார்த்திருந்தாள்.


ஆடவனோ அவளின் இமைகளை பார்த்தவனுக்கு அவளின் பார்வை புதிது.. அந்த பார்வை ஆடவனின் உயிர் அணுக்களை பூக்கச் செய்தது.

இது என்ன பார்வை விந்தையிலும் விந்தையாய்.. உடலெங்கும் மின்சாரம் பாய வைக்கும் பார்வை..

பெண்ணவளின் காதல் கணைகள் ஆடவனின் இருதயத்தை அளவில்லாததாய் துடிக்க வைக்க வஞ்சியவளின் பார்வையோ புதிதாய் ஆடவனை தழுவி கொண்டது.

ஒரு கட்டத்திற்கு மேல் அவளின் பார்வை வீச்சை தாங்காதவன்,

"என்னாச்சுடா கண்ணம்மா.. எதுக்கு இந்த பார்வை.." என்றான் அவளின் தலையை தடவியபடி.

பெண்ணவளோ அதற்கும் பதில் பேசாமல் அவனையே பார்த்திருந்தவள் தன் வலது கையை அவனை நோக்கி நீட்ட என்னவென்று புரியாத ஆடவனும் அவளின் கரத்திற்குள் தன் கரத்தினை புகுத்தினான் அவனறியாமல் இயல்பாய்.

பெண்ணவளும் அந்த கரத்தினை அழுத்தமாய் பற்றிக் கொண்டவள் அவற்றில் தன் இதழ்கள் கொண்டு சென்றவள் அவனின் கரத்தின் மேலே அழுத்தமாய் முத்தம் பதித்தாள்.

அவளிடமிருந்து கிடைத்த முதல் முத்தம் ஆடவனை சிறகேயில்லாமல் பறக்கச் செய்தது.

அவனை அமர வைத்து அவனின் மார்பினில் ஒன்டியபடி படுத்துக் கொண்டவள்,

"மாமூ.." என்றழைத்தாள் மென்மையாக.

அவளின் அழைப்பு அவனின் மேல் பூமாரி தூவி விழவைத்தது.

"ஏய் கண்ணம்மா இப்போ என்ன டா சொன்னே.. எங்கே திரும்ப சொல்லு டா.." என்றான் மகிழ்ச்சியாய்.

அவளோ அவனின் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டவள்,

" சாரி மாமூ.. என்னை மன்னிச்சிடுங்க.. நான் உங்களை தப்பா நினைச்சுட்டேன் இல்லை.. சாரி.." என்றாள் அழுதபடி.

"ஹேய் இப்போ எதுக்கு இந்த அழுகை சாரி.. நீ என்னை எப்படி கூப்பிட்டேன்னு தெரிஞ்சுதா.. சின்ன வயசுல ஒரு முறை இப்படி அழைச்சிருக்க.. ஆனா நான் அப்போ இருந்த கோபத்துல உன்னை காயப்படுத்தி இப்படி சொல்லாதன்னு சொல்லி சண்டை போட்டிருக்கேன்.. ஆனா நீ அப்படி கூப்பிட்டதும் என் மனசுல உண்டான அந்த சந்தோஷம் இப்பகூட சொல்ல வார்த்தை இல்லை தெரியுமா.. ஆனா என் முன்கோபம் உன்னை என்கிட்ட இருந்து பிரிச்சிருச்சி.. ஐ ஆம் சாரி டி..

என் வாழ்க்கை நீதான்னு தெரியாம உன்னை நிறைய காயப்படுத்தியிருக்கேன்.. ஐ ஆம் சாரி கண்ணம்மா.. ஐ ஆம் எக்ஸ்டிரிம்லி சாரி டா.." என்றபடி அவளை இன்னமுமாய் அணைத்துக் கொண்டான்.

தன் கூட்டை சேர்ந்த பறவையாய் அவனின் மார்பு கூட்டுக்குள் தன்னை பொத்தி வைத்துக் கொள்ள முனைந்தாள் பெண்ணவள்.

அவன் கூறியதற்கு எதுவும் பேசவில்லை.. ஆனால் அவளின் செயல்களில் புரிந்த விடயம் பெண்ணவள் ஆடவனின் உயிர் கூட்டுக்குள் உறைந்து போக துடிக்கிறாள்.

அவளின் எண்ணப் பேக்கை அறிந்தவன் அவளை இன்னமும் தனக்குள்ளே இறுகிப் பிடித்துக் கொண்டு அப்படியே அம்ர்ந்திருந்தார்கள். எத்தனை நேரமோ ஆடவனின் அலைபேசி அடித்து அவர்களின் அந்த மோன நிலையை கலைத்தது.

பெண்ணவளோ அலைபேசி சத்தத்தில் சுதாரித்து வேகமாய் அவனிடமிருந்து எழுந்தவள் அவனின் முகத்தை பார்க்காமல் அங்கிருந்து குளியலறைக்கு சென்று விட்டாள்.

அவள் சென்றதும் முகத்தில் பிரித்தறியா புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவன் அலைபேசி மீண்டும் அடிக்கவும் அதை முறைத்தபடி எடுத்து காதுக்கு கொடுத்தவன் எதிர்ப்புறத்தில் இருந்ததை யார் என்று கேட்காமலே கோபத்தில் திட்டிக் கொண்டிருந்தான்.

பாவம் அவனின் கோபத்திற்கு பலியாகி கொண்டிருந்தது அரவிந்தன் தான்.

ஒரு அளவுக்கு மேல் பொறுக்க முடியாமல்,

"பாஸ் பாஸ் போதும்.. இப்போ ஏன் இந்த திட்டு நேத்து நீங்க தானே இன்னை அந்த கொலாப்ஸ் கம்பெனியோட ஆன்லைன் மீட்டிங் அரேன்ஜ் பண்ண சொன்னீங்க.. அதை ரீமைன் பண்ணத்தான் கால் பண்ணேன் பாஸ்.." என்றான் பாவமாய்.

அப்பொழுது தான் வேலை நினைவு வந்தவனுக்கு தன்னவளின் நெருக்கத்தில் அனைத்தும் தான் மறந்திருந்ததையும்.

தன் தலையை தானே தட்டிக் கொண்டவன், "சரி அரவிந்த் ஒரு பிப்டின் மினிட்ஸ் ல அரேன்ஜ் பண்ணு.." என்று விட்டு அலைபேசியை வைத்து விட்டு மீண்டும் தன்னவளை விழிகளால் தேடினான்.

ஆனால் அவளோ அவன் பேசி கொண்டிருந்த இடைவெளியிலே குளித்து விட்டு சென்று விட்டாள்.

மனமெங்கும் மகிழ்ச்சி பூ பூக்க முகத்தில் உறையா புன்னகையுடன் எழுந்தவன் ஆதவனின் அழகை கான ஜன்னல் திரைச்சீலையை இழுத்து விட்டான்.

செந்நிறத்தோன் பூமியெங்கும் மின்ன அதன் அழகை கண்டவனுக்கு அதன் ஒளியில் தன்னவளின் பிம்பம் தோன்ற அவன் வாழ்வின் மகிழ்ச்சியான விடியல் இது தான் என தோன்றியது.

உதட்டில் உறைந்த புன்னகையுடன் தன்னவளை காண ஆவலில் வேகமாய் குளியலைறைக்குள் சென்று குளித்து விட்டு வேகமாய் கிளம்பி கீழே சென்றான்.

அவனின் தேடலுக்குரியவளோ டைனிங் டேபிளில் சமைத்ததை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

உதட்டில் சீட்டியடித்தபடி அங்கு உள்ள டேபிளில் வந்தமர்ந்தான்.. அங்கிருந்த வேலையாட்கள் அனைவரும் அவனை விசித்திரமாய் பார்த்திருந்தனர்.

ஏனோ இத்தனை நாளாக பொம்மையாய் வலம் வந்தவன் இன்று சிறுபிள்ளையாய் இருந்தது அனைவருக்கும் மகிழ்ச்சி தான்.. அவனின் மகிழ்ச்சிக்கு காரணமானவளோ அவனுக்கு தேவையானதை பார்த்து பார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

அவள் பரிமாற அவன் அவளின் வதனத்தை பார்த்துக் கொண்டே சாப்பிட்டவனுக்கு உள்ளம் நிறைந்து போனது.

அவனின் முகத்தை பார்க்காமல் தட்டை பார்த்து பரிமாறி கொண்டிருந்தவளின் மனமும் சற்று மகிழ்ச்சி தான்.. ஆனால் இருவரும் இயல்பாக பேசவில்லை.

அவன் சாப்பிட்டு முடிந்ததும் எழுந்து கைக்கழுவ சென்றவனின் பின்னே சென்றவள் அவன் கைத்துடைக்க தன் புடவை முந்தானையை கொடுத்தாள்.


அதை வாங்கியவன் தன் கையை துடைத்து விட்டு அவளையே பார்த்தபடி நின்றான்.

அவன் பார்வை தன் மேல் படிந்திருப்பது புரிந்தாலும் வஞ்சியவளோ எதுவும் பேசாமல் அவனிடமிருந்து விலகி டைனிங் டேபிளை நோக்கி சென்று அவன் சாப்பிட்டு வைத்திருந்த தட்டில் தானும் அமர்ந்து சாப்பிட்டாள்.

அதை பார்த்தவனுக்கு விழிகள் விரிந்திடும் அளவு உறைந்தவன் அதிர்ச்சியில் அவளையே பார்த்திருந்தான்.

இவர்கள் திருமணம் ஆன புதிதில் தாட்சாயினி அவன் சாப்பிட்ட தட்டில் இவளை சாப்பிட சொல்ல அவளின் முகமோ அதை பிடிக்கவில்லை என்பதை காட்டி கொடுத்து விட ஆடவனின் மனதில் அந்த வலி அப்படியே தங்கி போனது.

அதன் பின்பு அவளே அந்த தட்டில் தண்ணீர் தள்ளிவிட்டு அதை சாப்பிடாமல் ஒதுங்கி போனது அடுத்த விஷயமாகி போனது.

ஆனால் இன்றோ யாரும் சொல்லாமல் அவளே அதை செய்ததை தான் ஆடவனின் விழிகள் நம்ப இயலாமல் அவளையே பார்த்திருந்தான்.

ஆனால் அவனின் பார்வை தன்னை தொடர்ந்து அறிந்தும் பெண்ணவள் எதுவும் கூறாமல் அமைதியாக சாப்பிட்டு விட்டு எழுந்தாள்.

அதற்குள்ளாக மீண்டும் அரவிந்தன் அழைக்க அலைபேசியை எடுத்து காதுக்கு கொடுத்தவனின் முன்னே வந்து அவனின் கண்களை பார்த்தபடி நின்றாள் பெண்.

ஆடவனோ அலைபேசியை காதுக்கு கொடுத்து விட்டு அதில் பேசாமல் தன்னவளை தான் ஏன் என்ற கேள்வியுடன் பார்த்திருந்தான்.

" மாமா.." என்றாள் மென்மையாய்.

அவளின் மாமாவென்ற அழைப்பு ஆடவனின் உடலில் மின்சாரம் பாய்ச்சியது.

" சொல்லு கண்ணம்மா.." என்றான் ஆடவனும் மென்மையாய்.

"எனக்கு உங்ககிட்ட பேசனும்.." என்று தத்தி தத்தி சொல்லிவிட்டாள் உன்னுடன் பேச ஆவல் என்று.

அதை எதிர்புறத்திலிருந்து கேட்ட அரவிந்தனுக்கு தான் இவர்களின் நேரங்காலம் தெரியாத ரொமன்ஸில் கோபம் வந்தது சிறுபிள்ளையாய்.

"பாஸ் பாஸ் இங்கே நான் இருக்கேன் பாஸ்.." என்று அவன் கத்த இவனோ அதை கட் செய்து விட்டு தன்னவளிடம் திரும்பி,

"சொல்லு தளிர் மா.." என்றான் மென்மையை காட்டியபடி.

" என்னை என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போறீங்களா.." என்றாள் நிலம் நோக்கி.

அவனோ புன்சிரிப்பு மாறாது, "நிச்சயமா நீ போய் கிளம்பிட்டு வா.. நானும் போய் பார்மல் டிரஸ்ல வரேன்.." என்று அவளை அனுப்பியவன் தன் கையில் உள்ள அலுவலக பெட்டியை தூக்கி போட்டு ஊ ஊ என்று கத்தியபடி மீண்டும் தன் அறைக்கு சென்றான்.

இருவரும் சந்தோஷமாய் கோவிலுக்கு கிளம்பும் நேரம் இதே சந்தோஷத்துடன் மீண்டு வருவார்களா என்ன பொறுத்திருந்து தான் பார்ப்போமே..?





அடுத்த பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. இது போட்டிக் கதை தான்..ஆனா அந்ந நேரத்துக்குள்ள முடிக்க முடியலை.. ஆனா கதை தொடர்ந்து வரும் மக்களே யாரும் கவலை கொள்ள வேண்டாம்.

இந்த கதை பிடித்திருந்தால் உங்க பொன்னான கருத்துக்களை சொல்லிட்டு போங்க பட்டூஸ்.
 
Top