Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அணலில் துளிர்த்த பூந்தளிரே 8

Advertisement

ரமா

Member
Member
அணலில் துளிர்த்த பூந்தளிரே 8

சிபியின் மீது ஒரு அழுத்தமான கரம் விழுக திரும்பியவனின் முன்னே வருத்தமான முகத்துடன் நின்றிருந்தார் வர்த்தன்.

" சிபி என்னய்யா ஆச்சி இங்கே வந்து நிக்குற..மாது எழுந்துட்டாயா வா ராசா.." என்றழைத்தார் மென்மையாய்.

அதை கேட்டவன் விரக்தியான புன்னகையுடன்,

"வேணாம் தாத்தா.. அவ இன்னும் டென்சன் ஆவா.. இப்போ தான் கொஞ்சம் நல்லாருக்கா.. என்னை பாத்தா திரும்பவும் அவ தன்னோட கூட்டை சுருக்கிகுவா தாத்தா.. வேணாம் அவ சந்தோஷமா இருக்கட்டும்.. நான் இங்கே இருக்கறது அவளுக்கு தெரிய வேணாம்.. எப்படி அவளுக்கு தெரியாம வந்தேனோ அப்படியே போயிடுறேன்.." என்றான் வருத்தமாய்.

"டேய் என்ன பேசுற நீ அவ உன்னோட பொண்டாட்டி டா.. எதுக்காக நீ அவளை இப்படி விட்டுட்டு போற.. இன்னும் எத்தனை நாள் பா நீங்க இப்படி பிரிஞ்சி இருக்க போறீங்க..வேணாம் யா ஒன்னு உன்னோட நேசத்தை அவளுக்கு புரிய வை.. இல்லையா அவ உன்னோடவே இருக்கட்டும் என்ன நடந்தாலும்.." என்றார் இறுதியாய்.

"வேணாம் தாத்தா அவ உங்களோட இங்கே இருக்கட்டும்.. முன்ன மாறி இல்லாம இப்போ நான் சாப்பிடறனா இல்லையான்னு பாக்குறா தாத்தா.. அதுவே முன்னேற்றம் தான்.. கொஞ்சம் கொஞ்சமா ஏத்துப்பா தாத்தா என்னை.. நீங்க கவலைப்படாதீங்க.. போங்க போய் அவளோட இருங்க.." என்றவன் தன் தாத்தாவிற்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தான்.

அரைகுறை மனதுடன் அவர் சென்றதும் இந்த பக்கம் அவளின் புகைப்படத்திற்கு நேரே வந்து நின்று சற்று நேரம் பார்த்து கொண்டிருந்தவனின் விழிகளில் அளவில்லாத காதல் பொங்கி வழிந்தது.. அவளின் நிழற்படத்தை தன் விரல்களால் மென்மையாய் தீண்டினான்.

இங்கே சமையலறையில் சமைத்து கொண்டிருந்தவளின் மேனி சிலிர்த்தது.

அதன் காரணம் விளங்காமல் காற்றினால் இருக்க கூடும் என்று அவள் போக்கில் அவனுக்கு பிடித்தமானது தான் சமைத்து கொண்டிருந்தாள்.. அரவிந்திடம் கேட்டு தெரிந்து கொண்டாள்.

அவனை பார்த்தால் பயம் வரும் தான் என்றாலும் அவளின் கணவன் அவன் தானே..

இதோ அவள் சுமந்திருக்கும் மாங்கல்யத்தை ஊரறிய அவளின் சங்கு கழுத்தில் கட்டியவன்.. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற கட்டுக்கோப்பில் வளர்ந்த வெண்பிறையவளுக்கு அவள் கணவனின் விருப்பத்தை நிறைவேற்றுவது தானே முதல் கடமை.

அவனுக்கு பிடித்தமானதை சமைத்தவளுக்கு தெரியும் இரவில் அவன் அருகாமையை உணர்ந்திருந்தாள்.

அவனை கண்டாள் பயம் என்பவளுக்கு இரவில் அவனுடனான அந்த அரவணைப்பை எப்படி ஏற்றுக் கொண்டாள் என்பதே இன்னுமும் அவளுக்கு விளங்கா விடை தான்.

ஆனால் அவனின் அந்த அணைப்பில் பயத்தை தவிர பாதுகாப்பை உணர்ந்தாள் என்பதே நிதர்சன உண்மை.

அவள் மனதுக்கும் மூளைக்குமான கேள்விகளில் இன்னமும் குழம்பி தான் நிற்கிறாள்.

அவனை ஏற்றுக் கொள்ளும் உடலுக்கும் ஏற்றுக் கொள்ளாத மனதுக்கும் இடையே போராடுகிறாள் வஞ்சியவள்.

கை போக்கில் சமைத்து கொண்டிருந்தவளின் நினைவோ அவர்களின் முதலிரவு அன்று சென்றது.

உள்ளம் தடதடக்க உடலெல்லாம் மெல்லியதாய் பயம் ஓட அந்த அறையின் நுழைந்தவளின் நாசியால் மோதியது அந்த ஊதுபத்தி மணம்.

அதை நுகர்ந்தவளின் சின்னதாய் நிம்மதி பிறந்தது என்னவோ நிஜம்.. ஆனால் அடுத்த நொடியே அதை தகர்க்கும் விதமாய் அழுத்தமான காலடி சத்தம் கேட்க மெல்லமாய் தலையை நிமிர்த்தி பார்த்தவளின் கண்களுக்கு தப்பாமல் விழுந்தது இரு வலிய கால்கள்.. அந்த காலடி தடம் அவளை நோக்கி தான் வந்து கொண்டிருந்தது.

ஏனோ அதை பார்த்ததும் ஆடவனின் குணம் கண்டு அவளின் உடல் நடுங்க ஆரம்பித்தது.

மெதுவாய் அவளருகில் வந்தவன்,

"தளிர் மா.." என்றான் மென்மையாய்.

நங்கையவளுக்கோ ஆடவனின் குரலில் இருந்த மென்மை பெண்ணவளை மதி மயங்க வைத்தது.

அடுத்த நொடியே அவனின் விழிகளை சந்தித்தாள் தன் கந்தர்வ விழிகளால்.

இரு விதிகளுக்கும் இடையில் பார்வை பரிமாற்றம் நடக்க இருவரின் மனமும் இணைந்தது அந்த பார்வை ஸ்பரிசத்தில்.

இருவரின் மனதும் கூட அந்த பார்வையில் நெருங்க ஆரம்பித்தது என்னவோ கனவோ என்று எண்ணும் அளவுக்கு அடுத்த நிகழ்வு நடந்தேறியது.

அவர்களின் பார்வையை கலைக்கவென ஆடவனின் அலைபேசி அடிக்க அதில் அவள் புறமிருந்து பார்வையை திருப்பியவன் அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி அலைபேசியை எடுத்து காதுக்கு கொடுத்தான்.

உடல் வியர்த்தபடி தன் பார்வையை சுவற்றை நோக்கி திருப்பிக் கொண்டாள்.

அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ அடுத்த நொடியே இலகுவாய் இருந்த சிபியின் முகம் செந்தனல் பூசியது.

" ராபர்ட் அவன் வேணாம்.. அவனை நான் திரும்பவும் பார்க்க கூடாது.. அவனுக்கும் இந்த உலகத்துக்குமான பந்தம் முடிஞ்சி போச்சு.. ஆனா என்னால தான் அவன் சாகனும்னு அவனோட விதின்னா யாரு அதை மாத்த முடியும்.. அவனை முடிச்சிடு ராபர்ட்.." என்றான் கடைசி வரியை அழுத்தமாய்.

அவன் முன்னால் பேசிய வார்த்தையின் அர்த்தம் சரியாக விளங்காதவளுக்கு கடைசி வரியில் அவளின் ஆவி துடித்தது.

ஒரு ஈ எறும்பிற்கும் துரோகம் செய்யாதவளின் கணவன் ஒரு கொலைகாரன் என்பதை வஞ்சியவளின் உள்ளம் நம்பத்தான் முடியவில்லை.

உதிரத்தின் சுவையில் உயிர் வாழ்பவனா அவளின் கணவன் என எண்ணி அவளின் மென்மையான தேகம் தவித்து துடித்தது.

உடலின் இருக்கும் ஒவ்வொரு அணுக்களிலும் அவன் சொல்லிய வார்த்தையின் வீரியம் சென்று பாய மின்னல் கொடியென பெண்ணவளின் தேகம் மண்ணில் வேரோடு சாய்ந்தது.

அலைபேசியில் பேசி விட்டு திரும்பியவனின் கண்களில் பெண்ணவள் மண்ணில் வீழ்ந்து கிடக்க அப்பொழுது தான் அவன் செய்த தவறின் வீரியம் உணர்ந்தான்.

அவளருகில் வேகமாய் சென்றவன் அவளை தன் மடியில் எடுத்து போட்டுக் கொண்டவன் அவளின் கண்ணங்களை வேகமாய் தட்டி எழுப்பினான்.

" ஹேய் தளிர் தளிர் மா.. இங்கே பாருடி.. தளிர் தளிர் மா..பாருடா கண்ணம்மா.." என்று படபடத்தான்.

ஆனால் அவனின் பதட்டத்துக்கு காரணமானவளோ ஆடவனின் வார்த்தை வீரியத்தில் உயிர் கூடாய் அல்லவா கிடந்தாள்.

வெகுநேரம் கண்ணத்தை தட்டியும் அவள் எழாததால் டாக்டருக்கு தகவல் கொடுத்து விட்டு அவளை தன் கைகளில் ஏந்தி படுக்கையில் கிடத்தினான்.

ஏனோ பெண்மகளின் இந்த குணம் ஆடவனுக்குள் முதல் முறையாய் பயத்தை விளைவித்தது.. ஆனாலும் தன் காதலால் அவளை மீட்டு கொண்டு வர முடியும் என்று நம்பினான்.

டாக்டர் வருவதற்குள்ளாக பெரியவர்களுக்கும் அரவிந்துக்கும் தகவல் கொடுத்து வர சொன்னவன் அவளின் அருகில் அமர்ந்து அவளின் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டான்.

"ஏன்டி இப்படி இருக்கே தளிர் மா.. எல்லரோடவும் இருக்கற மாறி எப்போடி என்கிட்ட இருப்ப.. என்னை பாத்து அப்படி என்னடி உனக்கு பயம்.. ஆனா என் உயிரே நீ தானே டி.. இப்போ ஊரறிய நான் உன்னோட புருஷன் டி.. உன்னை என்னவெனாலும் பண்ண எனக்கு உரிமை இருக்கு.. ஆனா நான் அப்டி பண்ணமாட்டேன் டி.. நீ என்னை புரிஞ்சிட்டு வர வரைக்கும் நான் காத்திட்டு இருப்பேன்.. என் காதலும் என்னோட கோபத்துல இருக்கற நியாயம் புரிஞ்சிக்கற வரைக்கும் நான் காத்திருப்பேன் கண்ணம்மா.." என்றவன் அவளின் நெற்றியில் அவனின் மொத்த காதலையும் தேக்கி வைத்து முத்தமொன்றை வைத்தான்.

அந்த ஒற்றை முத்தம் சொன்னது ஆணவன் பெண்ணின் மேல் வைத்த நேசத்தின் அளவை.

அவளை விட்டு மெல்ல எழுந்தவனின் கரத்தை மெல்லிய கரமொன்று இறுக்கமாய் பிடித்துக் கொண்டது.

நங்கையின் வென்பிஞ்சு கைகளுக்குள் சிறைபட்டு கிடக்கும் தன் இரும்பு கரத்தினை நோக்கியவனின் விழிகள் இரு துளி நீரை சொரிந்தது.

அதற்குள்ளாக பெரியவர்கள் வந்து சேர அவர்களின் பின்னே அரவிந்தன் மருத்துவருடன் அங்கே வந்தான்.

பெண் மருத்துவர் வேகமாய் அவளருகில் வந்து பரிசோதனை செய்ய இங்கே ஆடவனின் மனமோ ரணமாய் வலித்தது தன் காதலின் வலிமையை நினைத்து.

சற்று நேரத்தில் அவளை செக் செய்து விட்டு வந்த மருத்துவர் அதிர்ச்சியால் வந்த மயக்கம் என சொல்லி அவளின் உடலில் ஒரு ஊசியை செலுத்தி விட்டு சென்றார்.

அவர் சென்றதும் ஆடவன் சற்று நேரம் நின்று தன்னவளை பார்த்து விட்டு சட்டென வெளியேறி விட்டான்.. அவனின் பின்னே அரவிந்தனும்.

" பாஸ் என்னாச்சி தங்கச்சிமா க்கு.. சாயந்திரம் கூட நல்லா தானே இருந்தாங்க.." என்றான் அரவிந்தன்.

அதை கேட்டதும் ஒரு பெருமூச்சு விட்டவன்,

"எல்லாம் வழக்கம் போல தான்.. உன் தங்கச்சி என்னை தப்பா நினைச்சிகிட்டா.. ராபர்ட் கால் பண்ணான்.. இவ இருக்கறது தெரியாம நான் தான் அங்கேயே அட்டெண்ட் பண்ணி தொலைச்சிட்டேன்.. அதால தான் இப்படி இருக்கா.. அரவிந்த் நான் உடனே இங்கிருந்து போக ஏற்பாடு பண்ணு.. நான் சென்னை கிளம்புறேன்.. அதுமட்டுமில்லாம அந்தமான் ல இருக்க அந்த பிரனோஷன் கம்பெனியோட டீல் இருக்கு.. நான் போயிட்டு வர்றேன்.. நான் கிளம்புறேன்.." என்று முன்னே சென்றவனின் காதுகளில்,

"பாஸ் தங்கச்சி மா வை விட்டுட்டு போறீங்களா.." என்ற கேள்வி முன்னே நின்றது.

அதை கேட்ட ஆடவனின் முகத்தில் ஒரு விரக்தி புன்னகை வந்து நின்றது.

"பாஸ்.." என்றான் அரவிந்தன்.

" உன் தங்கச்சி என்னை பார்க்காத இருந்தானாவே நல்லா இருப்பா அரவிந்த்.. அவளுக்கு இந்த ஜென்மத்துல என் மேல இருக்க பயம் போக போறது இல்லை.. ஆனா என்னோட காதல் உண்மை அரவிந்த்.. அது உண்மைன்னா அவ என்னோட தான் இருப்பா.. ஓகே பாத்துக்கோ.." என்றவன் அரவிந்தனின் தோளில் தட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.


போகும் அவனை வலிகள் சுமந்து விழிகளுடன் பார்த்திருந்த அரவிந்தன் விழிகள் கலங்கி தான் போனது.

அன்று அவளை பார்த்துவிட்டு சென்றதுடன் சரி அதற்கு பின்பு அவளின் முகத்தில் கூட அவன் விழிக்கவில்லை.

ஆனால் அவளை பாராமல் இருக்க முடியாதவனுக்கு அவளுக்கே தெரியாமல் வந்து அவளை பார்த்துவிட்டு சென்று விடுவான்.

ஆடவனின் வாசனை பெண் மயிலுக்கு உணர்ந்தாலும் அதை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாதவள் கொஞ்சம் கொஞ்சமாய் அதை விட்டு வெளியே வந்தாள்.

அதுமட்டுமன்றி தெரிந்தோ தெரியாமலோ அவனை கண்டுவிட்டால் கன்னியவளுக்கு உள்ளம் உடைந்து உடல் நடுங்க ஆரம்பித்துவிடுகிறது.

அவளின் நடுக்கத்தில் ஆடவனின் உயிர் கூடு ஆங்காங்கே துடித்தது.

அவனும் அதிகம் இங்கே வராமல் தன்னவளை மட்டும் தன் தாத்தா பாட்டியின் பாதுகாப்பில் விட்டு வைத்தவன் என்றாவது அவளுக்கு தெரியாமல் அவள் நன்றாக அசந்து தூங்கும் சமயத்தில் அவளை கட்டிக் கொண்டு படுத்துவிடுவான்.

ஆடவனின் மார்பு சூட்டில் தன்னையறியாமலே முகத்தை ஒட்டி உரசி கொண்டு கட்டியபடி படுத்துக் கொள்வாள் வஞ்சி மகள்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தபடி அடுத்தடுத்த நடந்த நிகழ்வில் ஆடவன் பெண்ணவளை நெருங்கினான்.


அடுத்த பாகத்துல பாக்கலாம் மக்களே.. இந்த கதை படித்திருந்தால் படித்து விட்டு உங்க கருத்துக்களை சொல்லிட்டு போங்க செல்லம்ஸ்.
 
Top