Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அணலில் துளிர்த்த பூந்தளிரே 9

Advertisement

ரமா

Member
Member
அணலில் துளிர்த்த பூந்தளிரே 9

அன்று மஹா சனிப்பிரதோசம் தாட்சாயினியும் வர்த்தனும் சிவன் கோவிலுக்கு சென்றனர்.. மாந்தளிர் மட்டும் வீட்டிலிருந்தாள்.. அவளின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவளால் கோவிலுக்கு செல்ல இயலவில்லை.

வழக்கம் போல தாத்தா பாட்டியை பார்க்க வந்த ஆடவனும் தான் வருவதை யாரிடமும் சொல்லவில்லை.

வீடு வந்து சேர்ந்தவனுக்கு வீட்டில் யாரும் இல்லாதது யோசனையை தந்தாலும் வேலையாட்களை கேட்க அவர்களோ கோவிலுக்கு சென்றுள்ளார்கள் என பொத்தாம் பொதுவாய் சொல்லிவிட்டு சென்றார்கள்.

இவனும் தன்னவளை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தை மறைத்துக் கொண்டு தன் அறை நோக்கி சென்றவனின் மனதில் வஞ்சியவளின் கள்ளமில்லா பிள்ளை முகமே பதிந்து போனது.

அவளின் நினைவில் ஆடவனின் உடல் சிலிர்த்து போனது.. பெண்மையின் மென்மையை அவளை தாங்கிய நொடியில் உணர்ந்து கொண்டவனுக்கு அவளை ஆளும் தாபம் எழுந்தது.

ஆனால் அவளின் மனநிலை சற்றாவது மாறினால் தான் தன் காதல் அவளுக்கு புரியும்.. இல்லையென்றால் அது வெறும் காமம் என பெண்ணவளின் மனதில் பதிந்து விடும் என்பதை உணராதவனா ஆடவன்.

தன்னை தேற்றி கொண்டு தன் அறைக்கு செல்லும் வழியில் ஒரு மெல்லிய இசை ஆணவனின் காதுகளில் ஒலிக்க சுற்றிலும் பார்வையை பதித்தான்.

அவன் அறைக்கு பக்கத்து அறையில் தான் அந்த மென்மையான இசை கேட்டது.

மெல்லமாய் அறையை எட்டி பார்த்தான்.. அறைக்குள்ளே அவனின் உயிர் அங்கே அமைதியாய் உறங்கி கொண்டிருந்தது.

கால்களில் மெல்லிய தங்க கொலுசும் அரக்கு வண்ணத்தில் இளம் ரோஜா நிறத்தில் பார்டர் வைத்த புடவையை நேர்த்தியாய் உடுத்தியிருந்த விதமும் பால் நிலாவில் மஞ்சள் பூசிய முகமும் அழகாய் சிறியதாய் நீட்ட வடிவ பொட்டும் நெற்றி வகிட்டில் திருமணம் ஆனதற்கான அடையாளமாய் குங்குமம் கைகளில் கண்ணாடி வளையலுடன் பார்டர் வைத்த தங்க வளையல்களும் நித்திரையை சுகமான உறக்கமும் வஞ்சியவளை கொள்ளை கொள்ள வைத்தது.

அவனின் காலடி ஓசை அவனுக்கே கேட்காமல் மெல்லமாய் அவனறியாமல் அவளருகில் சென்றான்.. ஏனோ திகட்ட திகட்ட தித்திக்கும் தீஞ்சுவையை போன்ற பொன்னிற முகம் ஆடவனுக்குள் உறங்கியிருந்த ஆண்மையை தட்டி எழுப்பியது.

யாரிடமும் இதுவரை நெருங்காதவன் யாரிடமும் மயங்காதவன் எந்த ஒரு பெண்ணின் நிழலையும் தன் அருகில் நெருங்க விடாதவன் முதல் முறையாக தன் மனம் கவர்ந்தவளின் அருகே சென்றான்.

கன்னியின் பால்வடியும் பிள்ளை முகத்தில் ஆணவனின் கர்வம் தலைகவிழ்ந்தது.

தன் கையிலிருந்த பேக்கை ஓரமாய் வைத்தவன் அவளின் அருகே கட்டிலின் ஓரமாய் சென்று அமர்ந்தான்.

அவளின் தலையை மென்மையாய் வருடி விட்டவனின் கண்களில் அளவில்லாத காதல் பொங்கி வழிந்தது.

"ஏன்டி நீ என்னை புரிஞ்சிக்கலை.. கண்ணம்மா என்னோட காதல் நீ தான்.. என் உயிர் உலகம் எல்லாமே உன்னை மட்டும் தாண்டி சுத்தி இயங்குது.. எந்த நிமிஷத்துல உன்னை நேசிக்க ஆரம்பிச்சேன்னு கேட்டா என்கிட்ட இப்பவும் பதில் இல்லை.. ஆனா என்னோட கோபம் என் காதலோட அடையாளத்தை மறக்கடிச்சிடுச்சி இல்லை.. ஐ லவ் யூ டா தளிர் மா.. என்னைக்கு நீ என்னை புரிஞ்சிகிட்டு வருவேன்னு தெரியலை.. ஆனா நான் காத்திருப்பேன் டி.." என்றவனுக்கு உள்ளம் வலிக்க நங்கையின் நெற்றியில் அழுத்தமாய் இதழ்பதித்தான்.

ஏனோ இந்த சமயம் ஆடவனுக்கு பெண்ணவளின் அருகாமை தேவை என்பதை மனம் உணர்த்த அவளின் அருகில் அப்படியே படுத்தவன் இறுக்கமாய் அவளை அணைத்தபடி படுத்து நிம்மதியாய் உறங்கி போனான்.

இங்கே கோவிலுக்கு வந்த தாட்சாயினி தம்பதியர்கள் சாமியை தரிசித்து விட்டு கோவில் திண்டில் அமர்ந்தனர்.

அப்பொழுது தான் தாட்சாயினி அந்த கேள்வியை கேட்டார்.

"ஏங்க இன்னைக்கு சிபி வரான்னு அரவிந்த் சொன்னதா சொல்லிட்டு அவளை வீட்டுல விட்டுட்டு எதுக்காக என்னை மட்டும் பிடிவாதமா கோவிலுக்கு கூட்டிட்டு வந்தீங்க.. அவனை கண்டாலே அவ பயப்புடுவாளேங்க.." என்றார் கணவனின் முகம் பார்த்தபடி.

தன் கணவனின் எந்த ஒரு செயலிலும் ஒரு காரணம் இருக்கும் என்பதை உணர்ந்தவர் பொறுமையாய் கேட்டார்.

அவரின் பதிலில் சற்று புன்னகை சிந்தியவர்,

"தாட்சா எத்தனை நாளைக்கு தான் அவ புருஷனை பாத்து பயப்புடுவா.. எத்தனை நாளைக்கு நாம இருக்க போறோம்.. அவளோட வாழ்க்கை அவனோட தானே.. பயந்தா எப்படி வாழறது.. சொல்லு பாக்கலாம்.. அவங்களுக்கு தேவை இப்போ தனிமை தான்ம்மா.. முதல்ல ரெண்டு பேரும் புரிஞ்சிகிட்டு அவங்க வாழ்க்கையை தொடங்கட்டும்.. நம்ம சிபி மேல இருக்கற பயம் நம்ம மாதுக்கு போகனும்.. அப்போ தான் அவங்க வாழ்க்கை நல்லாருக்கும் மா.." என்றார் பொறுமையாய்.

"ஆனா நம்ப பேரனும் கோபத்தை குறைக்க மாட்டேங்குறானே.. அதுவும் இல்லாம அவ செய்யற செயல் சரிதான்னாலும் அவளோட குணத்துக்கும் மனசுக்கும் அது தப்புன்னு தானே தோணுது.. விரோதிக்கு கூட துரோகம் செய்யமாட்டா நம்ப மாது.. ஆனா துரோகம்னு தெரிஞ்சாலே அவனோட உயிரை எடுத்துடுவான் நம்ப சிபி.. எதிரும் புதிருமா இருக்கற இரண்டு பேரும் எப்படிங்க சேருவாங்க.." என்றார் தாட்சாயினி கவலையாய்.

அதை கேட்டு மெதுவாய் சிரித்த வர்த்தன் தன் மனைவியின் தோளில் கை போட்டு, "மை டார்லிங் உனக்கு இன்னும் இந்த லவ்வர்ஸோட சைக்காலஜியே தெரியலை.. நியூட்டன் தியரி படிச்சவ தானே நீ.. எதிரெதிர் துருவம் தானே ஒன்றையொன்று ஈர்க்கும்.. அது போல தான் இந்த சிபின்ற முரடனை அடக்குற அங்குசம் நம்ம பேத்தி மாந்தளிர் தான்.. அதை நீ புரிஞ்சிக்கோ.. ஒன்னு நம்ப பேத்தி பேரனை மாத்துவா.. இல்லையா அவனுக்காக இவ மாறுவா.. இதுல கண்டிப்பா எதாவது ஒன்னு நடக்கும்.. அதுக்கு இதோ இந்த உலகாளும் ஈசன் அருள் புரிவாரு.." என்றார் பரமேஸ்வரனை வணங்கியபடி.

அதே நேரம் கோவிலின் மணியோசை நாலாபுறமும் ஒலித்தது.

இங்கே நீண்ட நாள் கழித்து மனைவியின் அருகாமையில் நிம்மதியான துயில் கொண்டிருந்த சிபியின் இதழ்கள் மெல்ல விரிந்து ஆழ்ந்த தூக்கத்திலும் புன்னகைத்தது.

அதே போல் தான் தூக்கத்தில் அவன் அருகாமையை உணர்ந்தாளா இல்லை பாதுகாப்பை உணர்ந்தாளா என்று தெரியாமல் அவனின் மார்பில் நிம்மதியாய் துயில் கொண்டாள்.

ஆனால் அதன் அயுள் குறையென்று தான் தோன்றியது.

எங்கேயோ அழைத்த அலைபேசி அழைப்பில் மெதுவாய் கண்விழ்த்த வஞ்சியின் முகமதில் ஆடவனின் பரந்து விரிந்த மார்பும் அவள் தலையை அழுந்தியபடி அவனின் தாவாயும் அவளை இறுக அணைத்த கரங்களும் என பெண்ணின் முகத்தில் அதிர்ச்சியில் சிலையாய் இருந்தாள்.

கொஞ்ச நேரம் எதுவும் அவளுக்கு விளங்கவில்லை என்றாலும் அவள் காதுகளில் ஒலித்த அவனை முடிச்சிடு என்ற ஒற்றை வார்த்தை பெண்ணின் அந்த இனிமை நிலையை கலைத்தது.

ஆஆஆ என்ற அலறலுடன் எழுந்து அமர்ந்தாள் வஞ்சி மகள்.

அவளின் அலறலில் ஆடவனும் உடன் எழுந்து அமர்ந்தான்.

"தளிர் தளிர் என்னாச்சி டா.." என்றான் அவளை அணைத்தபடி.

ஆனால் பெண்ணவளோ அவனின் இறுகிய அணைப்பையும் உதறி தள்ளியவள் மூச்சு வாங்கியபடி,

"போயிடுங்க நீங்க போங்க.. கொலை கொலை கொலைகாரன் நீங்க போங்க.." என்றாள் பயத்தில் உளறியபடி.

அவனை கொலைகாரன் என்றதும் ஆடவனுக்கு அதீத கோபம் வந்தது.

அவனின் பெரும் பிரச்சனையே இது தான்.. கோபம் என்று வந்துவிட்டால் அதை அடக்குவது பெரும் கடினமான விஷயம் தான்.

அதே போல் தான் இப்போது தன் மனம் கவர்ந்தவளும் தன்னை கொலைகாரன் என்றதில் ஆடவனின் கோபம் அலைகடந்து போயின.

"ஏய் யாரை பார்த்து கொலைகரன்னு சொல்றே.." என்று கோபத்தில் அவளை அடிக்க கை ஓங்கினான்.

அவன் அடிக்க வந்ததில் பயத்தில் கண்ணை மூடியவளின் உடல் நடுங்கியது.

அவளின் உடல் நடுக்கத்தில் தன் கோபத்தை ஒடுக்கியவன் அவளை பார்த்து ச்சீ போடி என்று வெறுத்து போய் அங்கிருந்து சென்று விட்டான்.

அன்று சென்றவன் சென்றது தான்.. அதற்கு பின்பு இங்கு அதிகம் வருவதில்லை.. இவற்றை அறிந்த பெரியவர்களும் அரவிந்தனும் பெண்ணின் அறியாமையை நினைத்து மனம் வருந்தி போனார்கள்.

அந்த கோபத்தில் அரவிந்தன் தான் அவளிடம் வந்து ஒரு நாள் பேசினான்.

" தங்கச்சி மா.." என்றபடி ஒருநாள் அவள் தோட்டத்தில் இருக்கும் சமயத்தில் வந்து பேசினான்.

அவனை கண்டதும் பெண்ணவளின் முகத்தில் வந்த சந்தோஷம் "வாங்க அண்ணா.." என்று அவளின் குரலிலும் ஒலித்தது.

மென்மையாய் முறுவலித்தவன் அவளருகில் வந்து அமர்ந்தவன்,

"என்ன மா பன்றீங்க.." என்றான் சிரித்தபடி.

"அண்ணா இந்த மீனுக்கு பசிக்கும் இல்லை.. அது தான் இந்த பன்றியை போட்டுட்டு இருக்கேன்.." என்றாள் புன்னகையாய்.

" நான் உன்கிட்ட சில விஷயம் பேசனும்.. பேசலாமா டா.." என்றான் கேள்வியாய்.

"சொல்லுங்க அண்ணா.." என்றாள் மகிழ்ச்சியுடன்.

"நான் யாரும்மா.. என்னை உனக்கு எப்படி தெரியும்.." என்றான் அவளை ஆராய்ச்சியாய் பார்த்தபடி.

அவளோ அதே புன்னகை மாறாது,

"நீங்க அரவிந்தன் அண்ணா.. அவரோட பர்சனல் பீ ஏ.." என்றாள் சிரித்தபடி.

" அந்த அவரு யாரும்மா.." என்றான் அவனும் விடாமல்.

அதன் பின்பு அவளின் புன்னகை மறைந்து போனது.

" அவரு.. அவரு.. அவரு தான் ணா.." என்றாள் அங்கிருந்த கிணற்றை வெறித்தபடி.

"அது தான்மா அந்த அவரு உனக்கு என்ன டா வேணும்.." என்றான் மீண்டும்

அவளின் கைகள் தன்னிச்சையாய் அவள் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த மாங்கல்யத்தை பிடித்துக் கொண்டது.. ஆனால் வாய் திறந்து அவள் எதுவும் பேசவில்லை.

"சொல்லு மா அந்த அவரு யாரு உனக்கு.. ரோட்ல போற வழிபோக்கனா மா.. இல்லை உனக்கு சம்பந்தம் இல்லாத ஒருத்தரா மா.." என்றான் ஆதங்கமாய்.

அவன் இத்தனை கேட்டும் தன் கணவன் என்று சொல்லாமல் அவள் சாதிக்கும் மௌனம் ஒரு சகோதரனாய் அவனுக்கு கஷ்டமாக இருந்தது.

" அவரு தாத்தா பாட்டியோட பேரன் அண்ணா.. உனக்கு முதலாளி.. ஆனா எனக்கு.." என்றதற்கு அடுத்த வார்த்தை பேச முடியாமல் மௌனமானாள்.

" ஏம்மா உன் புருஷன்னு சொல்லவே அசிங்கமா இருக்கா.. இல்லை அந்தளவுக்கு மோசமானாவரா பாஸ்.. உனக்கு ஒன்னு தெரியுமா.. பாஸ் உன்னை உயிருக்குயிரா நேசிக்குறாரு.. தாத்தாவுக்காவோ இல்லை இந்த ஊரு உன்னை தப்பா பேசும்னோ அவரு உன்னை கட்டிக்கலை.. உன்னை தன் உயிரா சுவாசமா நேசிச்சதால தான் கல்யாணம் செஞ்சுகிட்டாரு.. அவரு கோபபடுறது மட்டும் தான் உனக்கு தெரியுது.. ஆனா அந்த கோபத்துல இருக்கற நியாயம் உனக்கு புரியலை.. ஏன் உன் பார்வையில அவரு தப்பு.. மனிதாபிமானம் இல்லாதவரு.. ராட்சசன்.. அரக்கன்னு இப்படி நீயே உனக்குள்ள ஒரு பிம்பத்தை உருவாக்கிட்டு அதை சுத்தி மட்டும் பாக்குற.. அதை விட்டு வெளியே வந்து பாரு.. இன்னும் நிறைய விஷயம் இருக்கு..

எந்த ஒரு நாணயத்திற்கும் ரெண்டு பக்கம் உண்டு.. ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துட்டு யாரோட கேரக்டரையும் எடை போடகூடாது... ஆனா நீ உன் கண்ணை இறுக்கமா மூடிட்டு பூமி இருட்ன்னு தான் சொல்லிட்டு இருக்க.. நல்லா கண்ணை திறந்து பாரு.. இந்த உலகம் இருட்டும் இல்லை.. அவரு அரக்கனும் இல்லை..

என்னடா இவ அவனோட முதலாளிக்கு விசுவாசமா இருக்கானேன்னு பாக்குறியா.. இல்லை மா என் முதலாளியோட மனசு புரிஞ்சதால பேசுறேன்.. நீ நினைக்கிற மாறி அவரு அரக்கனோ ராட்சசனோ கிடையாது.. அவரோட பழகி பாரு.. அவரோட உண்மையான குணம் உனக்கு தெரியும்..

நீ என் தங்கச்சி தான்..எப்பவும் இந்த அண்ணனோட சப்போர்ட் என் தங்கச்சிக்கு இருக்கும்.. ஆனா அதையெல்லாம் விட ஒரு உண்மையான மனுஷனுக்கு கிடைக்க வேண்டிய எந்த பாசமும் கிடைக்கலை.. ஆனா அவரு உயிரா நேசிக்குற பொண்ணே அவரை தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கறதை தான் அவரால தாங்க முடியலை.. மனுஷன் நிலைகுலைஞ்சி போயிட்டாரு.. முதல்ல உன்னோட பயத்தை விட்டுட்டு வெளியே வந்து அவரோட மனசை பாரு.. அப்போ அவரை பத்தி சொல்லு..

என்னவோ உன்னை என்னோட சொந்த தங்கச்சியா நினைச்சதால தான் நான் இதையெல்லாம் சொன்னேன்.. தப்பா இருந்தா என்னை மன்னிச்சிடு மா.." என்று விட்டு அவன் என்னவோ போய்விட்டான் தான்.

ஆனால் அதன் பின்பு அடுத்தடுத்த நிகழ்வில் தான் பெண்ணின் மாற்றம் அனைவருக்கும் புரிந்தது.

அடுத்த பாகத்துல பாக்கலாம் மக்களே.. இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்க பொன்னான கருத்துக்களை சொல்லிட்டு போங்க பட்டூஸ்.
 
தளிர் மீனுக்கு இறை போடுறாளா, இல்லை பன்றிய போடுறாளா🤔🤔🤔
 
Top