Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் – 13

Advertisement

Dhanuja

Well-known member
Member
அத்தியாயம் – 13

இன்று ஞாயிறு என்பதால் வீட்டில் உள்ள அனைவரும் உறக்கத்தில் இருக்க வீட்டின் அழைப்பு மணி விடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது.பானு ஒருபக்கம், மறுபக்கம் வஞ்சியின் பிள்ளையென இருவரும் வஞ்சியை இறுக்கி அனைத்துச் சுகமான தூக்கத்தில் இருக்க.விடாமல் கேட்ட அழைப்பு மணியில் அடித்துப் பிடித்து எழுந்தது என்னவோ மாலா தான்.


அவசரமாக எழுந்தவள் தனது உடையைச் சரி படுத்தியவரே “யாருடா இது விடாம பெல் அடிச்சுக்கிட்டே இருக்குறது” என்று கதவை திறக்க

அங்கு நிற்கும் கபிலனை பார்த்து “கபி!.............................” அதிர்ச்சியில் பெரிதாகவே கத்தி விட்டாள். விடாமல் ஒலித்த அழைப்பு மணி சத்தத்தில் முழித்து வந்த அண்ணன், தம்பி இருவரும் மாலா கத்திய கத்தில் என்னவோ ஏதோவென்று விரைந்து வந்தனர்.


கண்ணில் ஏறிய சிவப்புடன் கலைந்த தலையுமாய் நிற்கும் அண்ணனை பார்த்து “அண்ணா!.....வா அண்ணா!......” என்று தோளோடு அனைத்துக் கொண்டான் உடையவன் வஞ்சி கொண்டான் பேச்சுகளற்று கையை இறுக்கி பிடித்துக் கொண்டான்.மாலாவின் நிலையோ சொல்லவே வேண்டாம் கண்ணில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்த வண்ணமே இருந்தது.


உள்ளே வந்த கபிலன் சோபாவில் அமர்ந்து கண் மூடி கொள்ள உடையவன் அவனது பெட்டிகளை எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றான்.வஞ்சி கொண்டான் நேராகச் சமையல் அறை சென்று கபிலனுக்குக் காப்பி வைக்க மாலா கபி மட்டுமே அங்கே.....


நேற்று மாலா தன்னை அழைத்துப் பேசியதும், அவளது அழுகையும் அவனை வதைக்க இனி அவளை விடுவதாக இல்லையென்ற நிலையில் இதோ வந்தாயிற்று.இது எப்பவோ எடுத்த முடிவு தான் என்றாலும் அவளாகப் பேசிய பிறகு வந்தாக இருக்க வேண்டும் என்றே காத்திருந்தான்.

வஞ்சி கொண்டான் விரைவாகக் காபி கலந்தவன் “அண்ணா முதல இதைக் குடிங்க” கபிலனிடம் நீட்ட

“ஹ்ம்ம்..” என்றவன் பார்வை என்னவோ மாலாவை தான் சுற்றி வந்தது. இன்னும் கதவில் சாய்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டு இருந்தாள்…. இருக்காதா பின்னே எத்தனை வருட பிரிவுக்குப் பிறகு அவனது தரிசனம்.

அவனும் தன்னைச் சமன் செய்து கொள்ளத் தான் கண்களை மூடி அமர்ந்திருந்தான் சென்ற காலம் திரும்பி வருமா?.... அதனை எண்ணி கொண்டு நடப்பை விடவும் மனம் வரவில்லை இரு தலை கொள்ளி என்பது இது தான் போலும்.

*******************

வஞ்சி கொண்டான் எங்கே பிள்ளைகள் முழித்தால் இவர்களது தனிமை கெட்டு போய்விடுமோ என்று வேகமாகச் சென்று மதுவின் அறையைச் சாத்த போக.வஞ்சியின் மகள் கதவின் இடுக்கின் வழியே இவனைக் கண்டு கொண்டு தவழ்ந்து வந்து கால்லை பற்றியது


“ஒய்!.... நீ முழிச்சுக்கக் கூடாதுனு தான் கதவை மெதுவா வந்து சாத்தினேன் நீ என்ன டிக்கரி டிக்கிரின்னு ஓடி வர ஹ்ம்ம்…. அக்கா முழிச்சுக்குவா அங்க போகலாம்” என்றவன் பிள்ளையைத் தூக்கி கொண்டு கபிலன் அருகில் அமர்ந்தான்.

மாலாவிடமிருந்து கண்களை வலுக்கட்டாயமாகப் பிரித்தவன் தனது அருகில் அமர்ந்திருக்கும் தம்பியின் தோள் மீது கையைப் போட்டு “என்னடா சொல்லுறாங்க உன் பொண்ணுங்க” என்றவனைப் பார்த்துப் பற்களைக் காட்டியவன்

“இரண்டும் ஒரே கொஞ்சல் தான்… நான் இல்லனா ஒரே அழுகையாம்…” தன்னை நாடும் இரு தேவதைகளையும் எண்ணி பெருமை பொங்கியது அந்தத் தகப்பனுக்கு.


“ஹ்ம்ம்… அப்போ முழிச்சுட்ட”

“ஆமா!... என்றவன் முகத்தில் அத்தனை வேதனை “பாவம் பானு அவளுக்கு நான் நியாயம் செய்யல”

“ரொம்பச் சீக்கரம் வருத்த பட்டுட்ட போடா” என்றவன் பேச்சை மாற்றும் பொருட்டு “சரி தம்பி பெட்டியை வைக்குற சாக்குல போய் ஒளிஞ்சுக்கிட்டான் போல”

“ஹா!… ஹா!.... உங்க கிட்ட அடி வாங்க பயந்துகிட்டு தான்”

“யாரு நீங்கயெல்லாம் பயப்புடுற ஆளடா…. மாமா கிட்ட அந்தப் பேச்சு பேசி இருக்க நீ….. தப்பு நீங்க இரண்டு பெரும் பண்ணது பெரியவங்க என்னடா செய்வாங்க?…அவுங்கள எப்படி நீ பேசலாம்”

“அண்ணா இப்போ தான் வந்து இருக்கீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க அப்புறம் நல்லா திட்டலாம்”

“அதுவும் சரி தான் இன்னைக்கு எங்கையும் இரண்டு பேரும் போகக் கூடாது எல்லாரும் மதியம் சாப்பாடு முடிச்சு மேல வாங்க பேசலாம்” என்றவன் யார் பதிலையும் எதிர் பார்க்காமல் சென்று விட்டான்.

பானு,மது,வஞ்சி.துளசி வழக்கத்துக்கு மாறாக உறங்கி கொண்டு இருக்க அவர்களைக் கலைக்காமல் மாலா பொறுப்பைக் கையில் எடுத்து கொண்டாள் நீண்ட நாள் சென்று தன்னவனைப் பார்த்த உற்சாகம் வேறு அதனைச் சமையலில் காட்டி கொண்டு இருந்தாள்.

***************

10’ மணியளவில் ஒவ்வொரும் முழித்து வர வஞ்சி தான் பதறினாள் “ஐயோ!... அக்கா எம்புட்டு நேரம் தூங்கி புட்டேன் என்ன எழுப்ப மாட்டிங்களா......”

“ஒரு நாள் தானே தூங்குன விடு… அவர் வந்து இருக்கார்” மாலா சொல்லுவது புரியாமல்

“யாருக்கா”

“கபிலன்”

“ஆத்தி அடுத்தா”

“ஒய் என்ன கொழுப்பா”

“நீங்க தானே சொன்னீங்க….”

“அடியேய் கத்தி பேசி என்ன மாட்டி விடாத முதல பிள்ளைகளுக்குச் சாப்பிட கொடு பால் வேண்டாம் மணி இப்பவே பத்துக்கு மேல.மது முழிச்சுட்டாளா” பேச்சை மாற்றினாள் மாலா உள்ளதை உள்ளபடி பேசி வைக்கும் வஞ்சி. தான் பேசியதை சொன்னால் இப்போது இருக்கும் கோபத்திற்கும் ஆடி தீர்த்து விடுவான் கபிலன் என்பது திண்ணம். அதனால் தான் பேச்சை திசை திருப்பி விட்டாள் பிள்ளைகள் என்றால் சகலமும் மறந்து விடும் நமது வஞ்சிக்கு என்பது தெரியாத என்ன...

“இதோ வந்துட்டேன் மாலாக்கா”

“நீ போய்த் துளசிக்கு பல் விளக்கிவிட்டு வா பால் தரேன்”

“சரிக்கா”

“மது இதைக் குடுச்சிட்டு போ.... அப்புறம் உங்க பெரிய அண்ணன் வந்து இருக்கார்”

ஐ!.... அவளது உற்சாகம் உண்மையென்றாலும் அதில் அதிகம் ஆர்வமில்லை என்பதைக் கண்டு கொண்ட மாலா குழம்பி போய்ப் பார்க்க “துளசிக்கு பசிக்கும் மாலாக்கா” என்று நழுவினாள் மது.

*******************************

காலை உணவு வேண்டாமென்று கபிலன் களைப்பில் தூங்கிவிட அவனைத் தவிர்த்து மற்றவர்கள் உண்டனர்.இன்று ஞாயிறு என்பதால் துளசியைப் பொறுமையாகக் குளிக்க வைக்கலாம் மதுவின் துணையோடு. அதனால் தண்ணீர் சுட வைத்து மதுவும் ,வஞ்சியும் துளசியை குளிக்க வைத்துக் கொண்டு இருந்தனர்.

வஞ்சி அவளது உடலை ஆராய்ந்து கொண்டு இருக்க “என்ன” என்று பதட்டமாகக் கேட்டாள் மது தங்கையின் உடல் நலம் பொருட்டு அத்தனை பயம் அவளுக்கு.

“ஒண்ணுமில்ல மது பாப்பாக்கு உடம்புல சில மாற்றம் தெரியுது நான் வந்த நாளுல இருந்து பார்க்குறேன் அதேன்”

“ஹ்ம்ம்….” என்றவள் கண்ணில் இருந்து நீர் வர

“மது இதுக்குத்தேன் சொல்லல என்ன பண்றது பொண்ண பிறந்துட்டோம்”

“புரியுது எனக்கு ரொம்பப் பயமா இருக்கு வெயிட் வேற கூடிட்டா தானே”

“ஏய்!... அதுனால என்ன? நீங்க அது வயதுக்குப் பத்தாமா சாப்பிட கொடுத்தா வயசு புள்ள அதுவும் உடம்பு முடியாத புள்ளையை வீணாக்கிடீங்க”

“ஐயோ! வஞ்சி நான் என்ன செய்ய அவளை எப்படி பார்த்துக்கனும் தெரியல இதுக்கு முன்னாடி இருந்த நர்ஸ் அதிகம் சாப்பிட்டா அவ டாய்லெட் போவானு கொஞ்சம் தான் கொடுக்கும்”

“அடி பாவிங்களா!... அவளுக்குக் கொடுக்குற மாத்திரைக்குச் சாப்பிடுற சாப்பாடு பத்தாதுன்னு நானே கவலை பட்டுக்கிட்டு இருக்கேன். நீ என்ன இப்படி சொல்லுற கடவுளே!...... காசு கொடுத்து தானே வேலை வாங்குது செய்றதுக்கு என்ன நீயும் பார்த்துகிட்டு சும்மா இருந்தியா?”

“இல்ல அண்ணன் கிட்ட சொன்னேன் வேலைய விட்டு நிறுத்திட்டாரு அப்புறம் தான் நீ.... நீங்க வந்தீங்க”

“என்ன சொல்லுறதுனு தெரியல மது எனக்கு உங்க மேல கோபம் கோபமா வருது” பேசிக்கொண்டே துளசியைக் குளிக்க வைத்து துணி மாற்றிப் பவுடர் போட்டு படுக்க வைத்து விட்டு சூடாக நெய் ஊற்றி பருப்புச் சாதம் ஒரு பயிறு என வைத்து ஆங்கமாக ஊட்டியவள் தலையைக் காய வைத்து தூங்க வைத்தாள்.

பின்பு பானு அவள் குழந்தையென நேரம் ஓட ஒரே வீட்டில் இருந்து கொண்டு மற்றவர்களிடம் பேச கூட முடியவில்லை.இரு குழந்தைகளுக்கும் பால் கொடுத்து மதுவின் அறையில் உறங்க வைத்து விட்டுப் பெண்கள் உண்ண வர சரியாக ஆண்களும் இறங்கி வந்தனர்.

மாலா உணவை பரிமாற வர கபிலன் எல்லாரும் உட்காருங்க வேண்டியதை எடுத்துக்கலாம் என்றுவிட அனைவரும் அவன் சொல்வதை கேட்டு அமர்ந்தனர்.அப்போதான் வஞ்சி முதல் முறையாகப் பார்க்கிறாள் கபிலனை வஞ்சி கொண்டான் சாயல் சிறுது இருந்தது மூன்று ஆண்களும் அமர வஞ்சி அமர மறுக்க

வஞ்சி கொண்டான் அவள் கை பிடித்துத் தனது அருகில் அமர வைத்தான் "இவரை” என்று பல்லை கடித்தவள் பேசாமல் அமர்ந்து கொண்டாள் மறுப்பு தெரிவித்தால் அடுத்து எதையாவது செய்து வைப்பான் தேவை இல்லாத ரசபாசம் ஆகி விடும் என்று அமைதியாக உண்டாள்.

மாலா கபிலனிடம் அமர்ந்து கொண்டாள் அவனும் அவள் அன்மையை ரசித்துக் கொண்டே உண்டான்.அனைவரும் உண்டு முடிக்க வஞ்சியைப் பார்த்து குழந்தைங்க தூங்கிட்டாங்களா வஞ்சி தன்னிடம் கபிலன் பேசியதும் சிறு பயம் எட்டி பார்க்க தயங்கியவாறே

“தூங்கிட்டாங்க சார்”

“சார் வேணாம் நான் மாமா உனக்கு”

“ஹ்ம்ம்…” என்று தலையை ஆட்ட

“கதவை சாத்திட்டு மேல வாங்க கொஞ்சம் பேசனும்” என்று சொல்லிவிட்டு உன்னையும் தாண்டி வா என்று மாலாவை சொல்ல வஞ்சி ஆ!.... என்று அதிர்ந்து மாலாவை பார்க்க

“நான் தான் சொன்னேனா நீயே பார்” என்பது போல் பார்த்து வைத்தாள் மாலா.அனைவரும் ஒன்று கூடி நிற்க முதலில் வஞ்சிடமிருந்து பேச்சை ஆரம்பித்தான் கபிலன்...










 
இனிமேலாவது எல்லாரும் நல்லா இருக்கணும் ???
 

Advertisement

Top