Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 2

Advertisement

Dhanuja

Well-known member
Member
அத்தியாயம் - 2


மாரியை வழி அனுப்பி வைத்த இருவரையும் காலை ஓட்டம் தன்னுள் இழுத்துக் கொள்ள.மாலாவின் தினசரி வேலையைப் பார்த்து மனதுக்குள் குறித்துக் கொண்டாள் வஞ்சி. அவளின் நிற்காத ஓட்டம் சிறு மலைப்பை கொடுக்க அவளையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

காலை,மதியமென சமைத்து, தண்ணீர் எடுத்து, குளித்து முடித்து வேலையில் உட்காந்த மாலா மதிய உணவுக்கு மட்டுமே ஒரு மணி நேரம் இடம் கொடுத்தாள்.

மீண்டும் தைக்க தொடங்க இரவு எட்டுக்கு தான் அந்தக் காலுக்கு ஓய்வு ஒரே இடத்தில் இடுப்புக் கடுக்கக் கால்கள் மரத்து போக உழைத்தவளை பார்க்கும் பொது வஞ்சிக்கே ஆச்சிரியமாக இருந்தது.

“என்ன வஞ்சி காலையில இருந்து என்ன பார்த்துகிட்டே இருக்க”

“எப்படிக்கா உன்னால முடியுது நிற்காம மிசின் ஓட்டுற கால் கடுக்கல”

“வலிதான் ஆனா இந்த வலி தான் என் தனிமைக்கு மருந்து மாசம் சோலையா முப்பது வருது”

“ஹ்ம்ம்…… நல்ல தொழில் தான் ஆனா உங்க உழைப்பு அதிகம்”

“என்ன செய்ய வஞ்சி என்ன மறக்கனும் அதுக்கு உழைப்பு தான் சரி” என்று பெருமூச்சு விட்டவள் “சரி நீ வா குட்டிக்கு சாப்பாடு கொடு உங்கிட்ட கொஞ்சம் பேசனும்” என்றவர் வெட்டி தைத்த துணிகளைத் தனியாக எடுத்துவைத்துச் சுத்தம் செய்ய மேலும் சில மணி நேரம் பிடித்தது.

மாலா வேலையை முடித்துக் கொண்டு வருவதற்குள் வஞ்சி குழந்தைக்கு உணவு கொடுத்து தூங்க வைத்து விட்டாள்.இருவரும் உண்ண வரும் பொது மணி இரவு பத்தை நெருங்க

“என்ன வஞ்சி இது மணி என்னனு பார்த்தியா புள்ளைக்குப் பால் கொடுக்குறவ சீக்கரம் சாப்பிட வேண்டாம்” என்று கடிந்து கொண்டவளை சிறு புன்னகையுடன் பார்த்தவள்.

“தனிச்சுச் சாப்பிட சங்கடமா இருக்குக்கா அதேன்”

“சரி இனி எனக்காகக் காத்து இருக்காதா என்ன” என்றவர் அவளுக்கும் ஓர் தட்டு வைத்து உணவை பரிமாற எந்த வித பேச்சுகளும் இல்லாமல் உண்டு முடித்தனர் அதன் பின் இருவரும் சேர்ந்து அனைத்தையும் ஒழுங்கு செய்து படுக்க மேலும் அரை மணி நேரம் கடந்தது.

மாலா வஞ்சியிடம் “வஞ்சி நாளைக்கு ஒரு இடத்துக்குப் போகனும் என்கிட்ட இருக்கச் சீலையைக் கட்டிக்க என்ன”

எங்க? எந்த இடம்? என்ற கேள்விகள் இல்லாமல் சரியென்பது போல் தலையை ஆட்டினாள்.இருவரும் உறங்கி சரியாக ஒரு மணி நேரத்தில் மாலாவின் வீட்டுகதவு உடை பட்டது.

ஏய்! மாலா கதவை திற கதவை தட்டும் சத்தத்தில் குழந்தை முழித்து அழுக இருவரும் அடித்துப் பிடித்து எழுந்தனர். வஞ்சி யார் இப்போது அதுவும் ஆண் குரல்…. இது என்ன இங்கும் தொடர் கதையா?.... கலங்கி போனாள்.கதவை திறக்கும் ஒரு நொடிக்குள் ஓராயிரம் எண்ணங்கள் கொன்று தின்றன அவளை

பயந்து போய் மூலையில் குழந்தையுடன் கண்களை இறுக்க மூடி ஒண்டி கொண்டாள் வெளியில் ஓங்கி ஒலித்த ஆண் குரலும் அதற்குப் பதில் சொல்லும் மாலாவின் குரலும் செவிகளுக்கு எட்டினாலும் மூளைக்குச் செல்லவில்லை இதயம் தாறுமாறாகத் துடிக்க வேர்த்து வழிந்தது பயத்தில் குழந்தையை அழுத்தி பிடிக்கவும் மூச்சுக்கு திணறி தாயின் பிடியில் இருந்து வெளி வர போராடி கொண்டு இருந்தது.

பயம் என்ற பிணி அண்ட இமை பிரியாமல் இந்தப் பெண் ஜென்மத்தை எண்ணி கடவுளிடம் சபித்துக் கொண்டு இருந்தாள் வஞ்சி.இமை திறந்தாலே கற்பை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் கண்ணுக்குத் தெரியாத கடவுளிடம் ஓர் போர்.

********************************************

வஞ்சி கண் விழித்துப் பார்க்கும் பொது மருத்துமனையில் இருந்தாள் எத்தனை மணி நேரமோ தெரியாது.மருந்தகத்தில் நின்று வஞ்சிக்கு மருந்துகளை வாங்கி கொண்டு.குழந்தைக்கு அங்கு உள்ள உணவகத்தில் பசியாற்றி வர

தொலைந்த குழந்தையின் நிலையில் மல்க விழித்துக் கொண்டு இருந்தாள் வஞ்சி.என்ன நடந்தது என்று தெரியவில்லை மாலா அந்த ஆணிடம் பேசி விட்டு வரும் பொதுக் கண்டது குழந்தையைப் பிடித்த வாக்கில் மயங்கி சரிந்திருந்த வஞ்சியைத் தான்.அவளது நிலையை எண்ணி பதறியவர் தெரிந்த சிலரை உதவிக்கு அழைத்துக் கொண்டு மருத்துமனைக்கு விரைந்து விட்டார்.

"இப்போ எப்படி இருக்க வஞ்சி"

"ஹ்ம்ம் ..." தலை அசைத்தாள் வஞ்சி அதன் பின் எந்த வித பேச்சுகளும் இல்லாமல் வஞ்சியை தாங்கி பிடித்து பணத்தை செலுத்தி கூட்டி கொண்டு வீட்டுக்கு வந்தாள்.வீட்டுக்கு வந்ததும் அவளையும் குழந்தையையும் வெந்நீர் வைத்து குளிக்க செய்து வேறு உடை உடுத்த செய்து மேலும் அவர்களுக்கு பருக சூடாக பால் காய்ச்சி கொடுத்து அமரும் நேரம் சற்று ஓய்ந்து தான் போனாள்.

அவளது ஓட்டம் வஞ்சிக்கு குறுகுறுக்க “என்னால உங்களுக்கு ரொம்ப சிரமம் எம்புட்டு காசுக்கா ஆச்சு”

“உனக்கு எதுக்கு அது? என்கிட்ட காசு இருக்கு”

“அது சரி எங்களுக்கு செலவு பண்ண உங்களுக்கு என்ன இருக்கு சொல்லுங்க”

“இனிமே உங்களுக்காக மட்டும் தான் எல்லாம் மாலாவின் குரல் உறுதியாக வர விழுக்கென்று நிமிர்ந்த வஞ்சி” அக்கா!.........................

“எதுக்கு அதிர்ச்சி எனக்கு யாரு இருக்கா சொல்லு”

“ஆனாலும் அக்கா” மேற் கொண்டு பேச போனவளை தடுத்து

“இங்கன பாரு வஞ்சி வந்த உடனே எதுவும் பேச வேண்டாம்னு தான் அமைதியா இருந்தேன்.அதுனால என்ன பத்தின விவரம் நான் உங்கிட்ட சொல்லல இப்போ சொல்லுறேன் கேளு,

எங்க அப்பன் ஆத்தா போய் சேர்ந்து இருப்பது வருஷம் ஆச்சு என்கூட சேர்ந்து மொத்தம் ஆறு பொண்ணு ஒரு பையன் அம்புட்டையும் கண்ணுல காத்து, இமையில பொத்தி வளர்த்து, வாலிபம் பண்ணி கல்யாணமும் பண்ணி வச்சாச்சு பொறுப்புகள் சரிவரப் பண்ணி அப்பாடான்னு மூச்சுவிட்டு உட்காரும் பொது எனக்கு காலம் போச்சு.தலைவலி காச்சல்னா கூட கஞ்சி வச்சு கொடுக்க ஆள் இல்லை”

“அக்கா இம்புட்டு உடப்பிறப்பு இருக்கும் போது நீங்க ஏக்கா தனிச்சு கடக்கணும் ஒவ்வொருத்தர் வீட்டுல இரண்டு மாசம்னா கூட வருஷம் ஓடிடுமே”

“அதுசரி யாரு என்ன வச்சுக்க தயாரா இருக்கா சொல்லு… அதுவும் எனக்கு கல்யாணம் ஆகல தங்கச்சி வீட்டுல போய் இருக்க முடியுமா சொல்லு தகப்பனா இருக்க வேண்டிய தம்பியே நீ உன் வழிய பாருன்னு சொல்லியாச்சு காசு வேணுமா அப்பப்போ வந்து கறந்துட்டு போகுங்க எல்லாம் சுயநல பிண்டம்”

“இனி எதுவும் தர முடியாதுனு சொல்லியாச்சு அதுக்கு தான் ஐயா வந்து குதிச்சுட்டு போறாரு”

“என்னக்கா சொல்லுறீங்க ஏன் அப்படி சொன்னீங்க என்னதான் இருந்தாலும் அவுக உங்க இரத்தம் இல்லையா”

“அதை அவுங்க நினைக்கனுமே எனக்கு இனி எல்லாமே நீயும் இந்தச் சின்னக் குட்டியும் தான் நான் படுத்த நீ பார்க்க மாட்டிய என்ன” மாலாவின் பேச்சில் பதறிய வஞ்சி

“என்னக்கா பேச்சு நான் இருக்கேன்”

“பார்த்தியா நீ எனக்கு யாரு? என்ன உறவு? ஆனா யோசிக்காம நான் இருக்கேனு சொல்லுற ஆனா என் உடன்பிறப்புகள்.........” என்று நிறுத்தியவர் முகத்தில் அத்தனை வேதனை அதனை தொண்டையில் அதக்கியவர்

“வஞ்சி நான் இந்த முடிவெடுத்ததுக்குக் காரணம் வேற அதைச் சொல்லுற நேரம் இது இல்லை......” என்றவர் சிறிது மௌனம் கொண்டு பின்பு தெளிந்தவராக அதை விடு வஞ்சி நீ சொல்லு எதுக்குப் பயந்து அந்தக் கத்து கத்துன?

அவளது கேள்வியில் தடுமாறிய வஞ்சி மௌனமாகத் தலையைக் குனிந்து கொண்டு கண்ணீர் வடித்தாள் அவளது நிலை உணர்ந்த மாலா எழுந்து சென்று அவளிடம் அமர்ந்து தோளில் கை வைக்க வெடித்துச் சிதறியது பெண்.

அவளது கதறல் மனதை வதைத்தாலும் அவளைத் தெளிய வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவளைப் பேச வைக்க முயன்றார் மாலா.இதே போல் இருந்தால் ஒரு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு இந்தச் சமுதாயத்துல நீந்தி கரை சேர்வது என்பது இயலாத காரியம்.

இன்றைய நமது சமூகம் அப்படிப் பிறந்த பெண் குழந்தையின் கையில் கத்தி கொடுத்துத் தன்னைக் காத்துக் கொள்ளச் சொல்ல வேண்டும் போலும் அத்தகைய நிலையை நாம் உருவாக்கி உள்ளோம்.மனம் கனக்கிறது இன்றைய நிலையை எண்ணினால்.

சிறிது நேரம் அழுது கரைந்தவள் தன்னைத் தேற்றிக் கொண்டு மாலாவின் முகம் நோக்கி “அக்கா எனக்கு அப்பன் ஆத்தா இல்ல தாய் மாமன் தான் …….” வஞ்சி தொடங்கும் முன்னே கை நீட்டி தடுத்தவர் “மாரியாக்க எல்லாம் சொல்லுச்சு வஞ்சி அதை விடு நீ ஏன் பயந்து அழுத அதைச் சொல்லு?”

தயக்கமாகப் பார்த்தவள் “அக்கா இரவைக்கு வந்து குடிகார பயலுக வம்பு பண்ணுவானுக …க்கா அக்கம் பக்கம் உள்ள ஆம்புளைங்க கண்ணும் சரியில்லை என்று நிறுத்தியவள்... அதுல உங்க மாமாவும் அடக்கம்”

இதனைக் கேட்டு மாலா பதறவில்லை “எனக்குத் தெரியும் மாரியாக்க சொல்லுச்சு”

இதனைக் கேட்டு அதிர்ந்த வஞ்சி “என்னக்கா சொல்லுறீங்க”

“அக்கா எனக்குப் போன் போட்டு அழுதுச்சு எரியுற கொல்லில எது நல்ல கொல்லி சொல்லு ஆம்பளைங்க அப்படி தான் அதுல ஒன்னு இரண்டு விதி விலக்கு இருக்கு”

“ஹ்ம்ம்… இல்லை எல்லாமே அப்படிதாக்கா நான் அந்த விதி விலக்க பார்த்ததில்லை…. எனக்கு வெறுத்து போச்சுக்கா இரவைக்கும் பகலுக்கும் எவன்கிட்ட மாட்டுவோன்னு பயந்து பயந்து செத்தேன்.அது மட்டுமில்ல கடைக்குப் போன இடத்துல கண்ட இடத்துல கை வைக்குறான்.

ஒரு நாள் இந்தச் சின்னக் குட்டிய பார்த்துக்க ஆள் இல்லாம காட்டுக்கு ஒதுங்க முடியலை…. சரி பக்கத்து வீட்டு செல்வி அக்கா வீட்டுக்காருகிட்ட கொடுத்துட்டு போன்னேன் அங்க” என்று சொல்ல முடியாமல் வஞ்சி மீண்டும் அழுக

அங்கு என்ன நடந்து இருக்கும் என்று ஊகித்த மாலாவிற்கு சீ…. என்று ஆனது என்ன வகை உயிரினம் இதுங்கள் என்று தான் தோன்றியது.

அழுகும் வஞ்சியை உலுக்கி “இங்கன பாரு வஞ்சி இனி எதுக்கும் அழுக கூடாது எதுக்குப் பயந்து சாகனும் கையில ஒரு வேலைய புடிச்சுக்கோ எண்ணம் செயல் எல்லாம் நம்பப் பாப்பாவ கொண்டு தான் அதை மனசுல வை,

அப்புறம் எதுக்குமே ஆகாத இந்த அழுகைய முதல நிறுத்து பயந்து உன்ன நீ காட்டி கொடுக்காத உன் பலவீனம் வெளில நீ காட்டிக்கக் கூடாது.அதே மாதிரி சிறுசு தொடங்கிப் பெருசு வரை எவனும் விட்டு வைக்க மாட்டேங்கறான் காலம் கேட்டு கடக்கு அதுக்குன்னு அவனுகளுக்கு பயந்து பட்டினியா இருக்க முடியுமா என்ன?,

இது போலச் சம்பவங்களைக் கடந்து வா தைரியமா எதிர்த்து நில்லு உன்ன கொண்டு தான் உன் பெண் வாழ்க்கை.அவளுக்கு முன் உதாரணமா இரு.உனக்கும் சின்ன வயசு தான் எதிர் காலத்துல உனக்குன்னு தடு மாற்றம் வரும் கண்டிப்பா”

“ஐயோ! அக்கா”

“நான் சொல்லுறதை முழுசா கேளு வஞ்சி நான் தப்பா சொல்லல வயசு அப்படி…. எதுவும் நடக்கலாம் நல்ல வாழ்க்கை அமைஞ்சா முழுசா ஏத்துக்கோ. நம்ப எல்லாரும் உயிர், உணர்வு கொண்ட மனுஷ ஜென்மம் தான் அதுல ஆசை இருக்கும் தடுமாற்றம் வரும் பொது அந்த......... அஞ்சு நொடிய உன் புத்திய கொண்டு கடந்துடு மாலாவின் பேச்சில் சிறு தெம்பு பிறக்க மெதுவாகத் தலையை ஆட்டினாள்.

“சரி வஞ்சி சீக்கரம் படு இன்னைக்கே உடையவன் தம்பி வீட்டுக்கு போக வேண்டியது உனக்கு முடியல நாளைக்கி வரோம்னு சொல்லி வச்சு இருக்கேன்”

“வேலைக்காகவாக்கா”

“ஆமா நாளைக்கி சொல்லுறேன் உடம்பு அசந்து வருது நீயும் படு” என்றவர் உடலின் உள்ள ஒவ்வொரு செல்லும் ஓய்வுக்குக் கெஞ்சியதோ என்னமோ படுத்த நொடியில் அசந்து தூங்கிவிட்டார். தூங்கும் மாலாவை கண் எடுக்காமல் பார்த்து வைத்தால் வஞ்சி எத்தனை குணம் கொண்ட மனிதர்கள் மானிட பிறவியே விசித்திரம் போலும்.

தான் கடந்து வந்த மனிதர்கள் அனைவரையும் தனது எண்ணத்தில் கொண்டு வர பிடிக்காமல் கண்களை இறுக்க மூடி கொண்டது அரிவை.

வழமை போல் விடியல் இருக்க ஜோராகக் கிளம்பினர் மூன்று தேவதைகளும் கண்ணனுக்கு உறுத்தாத அதே சமயம் கண்ணியம் கொண்டு இரு பெரிய பெண்களும் புடவை உடுத்தி இருக்க.தேவதை என்றால் பல வண்ணங்கள் என்பது போல் நின்று இருந்தாள் சின்னக் குட்டி

துணி தைக்கும் பொது மிஞ்சும் துணிகளில் பட்டு போன்ற துணியை எடுத்து அழகாக ஒரு கவுன் தைத்திருந்தாள் மாலா.அரக்கப்பரக்க மூவரும் கிளம்பி மூன்று தெருக்கள் கடந்து காம தேனு விதியில் நுழைய அந்த இடமே சொன்னது இது பணம் படைத்தவர் புழங்கும் இடமென்று.

தெருவினில் நுழைந்து இரு வீடுகள் தள்ளி இருந்த ஒரு வீட்டின் கதவை திறந்து கொண்டு மாலா உள்ளே செல்ல அவளைத் தொடர்ந்து வஞ்சி வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள் குழந்தையும் சமத்தாக தனது மான் விழிகளை உருட்டி சுற்றி முற்றி பார்த்துக் கொண்டு இருந்தது.

வீட்டினுள் மாலா உரிமையாக நுழைவதை பார்த்து வெகு நாள் பழக்கம் போலும் என்று எண்ணி கொண்டாள் வஞ்சி .வீட்டினில் நுழைந்த மாலா நடுக் கூடத்தில் நின்று “தம்பி” என்று அழைக்க

“இதோ வரேன்க்கா கொஞ்சம் உட்காருங்க” என்றவன் குரல் மட்டுமே வந்தது

“வஞ்சி தம்பி வேலையா இருக்கு போல் இங்கன உட்காரு”

“ஹ்ம்ம் சரிக்கா” என்றவள் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு கண்ணனுக்கு எட்டும் தூரம் வரை பார்த்துக் கொண்டு இருந்தவள் தீடீரன கேட்ட பெணின் அழுகுரலில் பதறி எழுந்தாள்

ஹா ... ..விடு டா .............. அம்மா............. வலிக்குது................... ஏண்டா சாக அடிக்கிற என்று குரலில்களில் முற்றிலும் பயந்து போனாள் வஞ்சி

‘எங்குச் சென்றாலும் புலி புகுந்த காடாக இருந்தாள் எங்குச் சென்று பிழைப்பது’ வாஞ்சியின் எண்ணம்








































 
Top