Super story
Thanks maSuper story
அருமையான கதைஅத்தியாயம் – 20
ஒரு வழியாகக் கபிலன் வாழ்வு செழுமையை நோக்கி என்ற பின் பார்வை வஞ்சியிடம் அவளோ தனது மடியில் சேயென முகம் புதைத்து கலங்கி நிற்கும் கணவனை என்ன செய்து தேற்றுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தாள் வஞ்சி.
“என்னங்க செத்த பாருங்க... என்ன இது சின்னப் பிள்ளை மாதிரி...”
“ப்ச்…. முடியல என்னால நாங்க ஏன் டா பிறந்தோம்னு இருக்கு”
“அது சரி நீங்களே இப்படி சொன்னா நான் என்னத்த சொல்ல யாருக்கு இல்ல கஷ்டம் துளசி படாத கஷ்டமா.நம்பெல்லாம் நம்மோட சோகத்தை வாய் விட்டு சொல்லுறோம் கதறி அழுகுறோம் ஆனா துளசி எல்லாத்தையும் மனசுக்குள்ள வச்சு.....” அதற்கு மேல் சொல்ல முடியாமல் தேம்ப மடியில் துயில் கொண்டு இருந்தவன் சடாரென எழுந்து அமர்ந்து அவளை அணைத்துக் கொண்டான்.
அவனுக்கும் அந்த எண்ணம் உண்டு தான் போலும் வார்த்தையால் சொல்லாமல் தனது இறுக்கத்தால் உணர்த்திக் கொண்டு இருந்தான். பின்னே அவன் மனமுடைந்து சுற்றிய காலத்தில் துளசியின் மடியில் தானே தஞ்சம் புகுந்தவன் அவள் இல்லாத இந்த வீட்டை எண்ணி பார்க்க பயந்தவனாக ஓடி ஒழிந்த காலம் உண்டே.
நிதர்சனம் பேசினாலும் மனித உணர்வுகளை மறைக்க முடியுமா என்ன இருவரும் ஒரு நொடி அதனைக் கடக்க முயற்சித்தனர்.முதலில் தெளிந்த வஞ்சி அவனைத் தன்னில் இருந்து பிரித்தெடுத்தாள்.அவனும் தள்ளி அமர்ந்து கொண்டான் ஏனோ வஞ்சியிடம் நிறையப் பேச வேண்டும் போல் தோன்றியது.
“நீ பட்ட கஷ்டத்தையெல்லாம் மாரி அக்கா சொன்னாங்க”
“அவங்கள உங்களுக்குத் தெரியுமா” ஆச்சிரியமாகக் கேட்டாள் அவளுக்குக் கபிலன் கணக்குத் தெரியாது அல்லவா
ஹ்ம்ம்… தெரியும் மாலா அண்ணிய பொண்ணு கேட்கும் போது அம்மா அப்பா அவுங்கள தான் வச்சு பேசுனாக.அண்ணன் ரொம்பப் பேசுனாக அண்ணி கிட்ட அவுங்க தம்பி தங்கச்சிய படிக்கச் வச்சுக் கல்யாணம் பண்ணிடலாம் எல்லாம் சொன்னாங்க அண்ணி தான் முடியாது என் உழைப்பு, சுயம், அது, இதுனு பேசி முடியாதுனு சொல்லிட்டாங்க,
பார்த்து பார்த்து வளர்த்து தன் வாழ்க்கையே தியாகம் பண்ணினது எல்லாமே வீண் தான்.ஒரு இரண்டு வருசத்துக்கு முன்னாடி அண்ணியோட தங்கச்சி வீட்டுக்கு போயிருக்காங்க இரண்டு நாள் இருந்துட்டு வரலாம் அப்போ தங்கச்சி வீட்டுக்கார் தப்ப நடந்துக்கிட்டார் போலக் கோபம் வந்து அண்ணி அடிச்சுட்டாங்க அந்தப் பொண்ணு என்னடானா அண்ணிய குத்தம் சொல்லி அசிங்க படித்திடுச்சு..
இதனைக் கேட்ட வஞ்சி அதிர்ந்து “என்னங்க சொல்லுறீங்க இதெல்லாம் அக்கா என்கிட்ட சொல்லவே இல்லையே”
ஹ்க்கும்… இது வரைக்கும் யார்கிட்டையுமே சொல்லல உங்கிட்ட மட்டும் சொல்லுவாங்களா என்ன.மாரி அக்கா தான் போன் பண்ணி அண்ணன் கிட்ட சொல்லி இருக்காங்க அண்ணன் உடையவனைப் போய்ப் பார்க்க சொல்லி இருக்காங்க அவனும் போய்ப் பார்த்து இருக்கான் தங்கச்சி தம்பி எல்லாரும் அண்ணிக்கு எதிரே இருந்து ரொம்பப் பேசிட்டாங்க
அண்ணி அழுது கிட்டே வீட்டுக்கு வந்துட்டாங்க அப்போ தான் அண்ணன்கிட்ட பேசி இருக்காங்க அவருக்குச் செம கோபம் இத்தனை வருஷம் அவங்க தொலைச்ச இளமை,வாழ்கை,உழைப்பு எல்லாம் ஒரு நொடியிலே வீண் காசு மட்டுமே முதன்மையோனு கோபம் அதான் அண்ணனும் திட்டிட்டாங்க போல. அதுக்கு அப்புறம் தான் நீ வந்த உன்ன வச்சு அண்ணிய கூட்டிட்டு வந்தாச்சு” வஞ்சி புரியாமல் முழிக்க
“என்ன முழிக்கிற உன்ன கல்யாணம் பண்ணிக்கச் சொன்னதே அண்ணன் தான் எனக்கும் உன்ன பிடித்து இருந்தது.நீ வந்த அப்புறம் தான் இந்த வீட்டுக்கு ஒரு உயிர்ப்பு வந்த மாதிரி இருக்கு அதான் சரினு சொல்லிட்டேன்”
“அடப்பாவிங்களா”
“அப்பாவிங்க மா நாங்க அப்…பா… ஒரு கல்யாணம் பண்ண என்ன பேச்சு, என்ன கேள்வி, என்ன சண்டை அண்ணி தனியா வேற பேசுனாக”
“ப்ச்.. உங்கள மாதிரி எல்லாம் சட்டுனு முடிவெடுக்க முடியாது நாலும் யோசிக்கனும் ஏன்னா எது நடந்தாலும் முதல் குறி எங்களை நோக்கி தான் அதான் நானும் அக்காவும் யோசுச்சோம்”
“எனக்கும் கண்ணாலத்துல அத்தனை விருப்பமில்ல மறுக்கா ஒரு வாழ்கை அதே ஓட்டம் பிள்ளை, உறவுன்னு எல்லாம் இருக்கு அதை யோசுச்சலே பயம் அதேன் அக்கா கேட்கும் போது வேணான்னு சொன்னேன்,
அதுமட்டுமில்ல இந்தச் சமுதாயத்துல பாப்பாவ வச்சுட்டு வாழுறது நடவாத காரியம் அது எனக்கு நல்லாவே தெரியும் அதான் சரினு சொல்லிட்டேன் இன்னொன்னு என்னால பானுவையும்,துளசியையும் விட முடியல”
“இந்த பிணைப்பு தான் வஞ்சி என்ன ஊன்றி பார்க்க வைத்தது.என் கூட வளர்ந்த என் மாமன் மகளுக்கு இல்லாத உரிமையும் அக்கரையும் உங்கிட்ட பார்த்த போது எனக்கு ஆச்சிரியம் தான்.இந்த கால மனுஷங்களுக்குச் சகிப்புத் தன்மை சுத்தமா கிடையாது வஞ்சி ஆனா அதிலும் விதி விலக்கு உண்டுன்னு உன்ன பார்க்கும் போது புரிஞ்சு கிட்டேன்,
உண்மையா சொல்லுறேன் வஞ்சி உன் பெயரை கேட்ட அடுத்த நொடி நான் நானா இல்லை.பெயர் பொருத்தம் சொல்லுவாங்களே அது இது தான் போல இந்த வஞ்சிய கொண்டாட பிறந்தவன் நான்” என்றவன் அவளை மீண்டும் இறுக்கி அனைத்துக் கொண்டான் மேலும் தங்களின் வாழ்க்கையைப் பற்றிய பேச்சுக்கள் நீள அவளை சீண்டும் பொருட்டு
“ஏன் வஞ்சி நாம் இருவர் நமக்கு இருவருனு வாழ்க்கை ஓடுது இதே போல இருந்தா எப்படி? நமக்கு ஒருவர் வேண்டாமா? அவன் பேச வருவது புரியாமல் அவனது முகம் பார்க்க அவள் மூக்கில் இதழ் தீண்டி நின்றவன் “அதாவது நமக்கு இருவர் பானு,இனியா இப்போ உனக்கும் எனக்கும் ஒருவர் ..........” என்று இழுக்க அவன் சொல்ல வருவதைப் புரிந்து கொண்டவள்
“அவனைத் தள்ளி விட்டு எழுந்து நின்று முறைத்தவரே “ஏது இன்னொரு புள்ளையா ?”
அவள் நின்ற கேட்ட தோரணையில் ஜெர்க்கானவன் “ஏன் வேணாமா அந்த எண்ணம்...........” என்றவனைக் கை நீட்டி தடுத்தவள்
“பத்து மாசத்துல ஒன்னு இரண்டு வயசுல ஒன்னு இன்னும் ஒன்னுனா நல்ல இருக்கு” அவன் முகம் வாடுவதைப் பார்த்தவள் ப்ச்…. முதல் முறையாக அவன் முகம் தாங்கி
“நம்ப வாழ்க்கையில எல்லாம் உண்டு... கண்ணாலம் பண்ணிக்கிறேன் சொல்லும் போதே எல்லாத்துக்கும் நான் என்ன தயார் செஞ்சுகிட்டு தான் சரினு சொன்னேன், ஆனா இப்போ கடமை இருக்கு மதுவை கல்யாணம் பண்ணி கொடுக்கனும், உங்க தம்பிக்குக் கல்யாணம் பண்ணனும் இது எல்லாத்துக்கும் மேல உங்க அண்ணன் அண்ணிக்கு ஒருகுழந்தை வேணும்”
அவளது பதிலில் உள்ளம் குளிர வியந்தவன் “என்னால உன்ன கணிக்கவே முடியல வஞ்சி.நீ கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னது எல்லாமே……… நீயும் அண்ணியும் புரியாத புதிர் தான் போ.....” சும்மாவா சொன்னாங்க கடல் ஆழத்தை கண்டவர் உண்டோனு கடல் ஆழி போலப் பெண்மையும் ஒரு ஆழி தான் போலும்.
அவர்கள் பிள்ளைகள் அவர்களை அழைக்கும் வரை இருவரும் வெகு நேரம் மனம் விட்டு பேசினர்.பானு வந்து வஞ்சியைத் தேடி அழுக அவளது குரல் கேட்டு விரைந்து வந்தாள் வஞ்சி அவள் பின் வஞ்சி கொண்டான் வந்தவன் பானுவை வஞ்சி தூக்க இனியாளை அவன் தூக்கி கொண்டான்.
இளமை இருந்தாலும் கடமை முன் நிற்க அன்பு கொண்டு இளமையையும் கடமையையும் சரி விகிதம் பகிர முடிவு கொண்டனர் வஞ்சியும் அவளைக் கொண்டாட பிறந்தவனும்.
இவர்கள் வெளியில் வரவும் உடையவன் தனது தாய் மாமன் குடும்பத்தோடு உள்ளே வரவும் சரியாக இருந்தது.வஞ்சியும் கொண்டானும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் இரவு நெருங்கும் வேளையில் அவர்களது வருகை எதற்கு என்ற கேள்வி இருந்த போதிலும் அவர்களை வரவேற்று அழைத்து அமர வைத்தனர்
அமர்ந்தவர் சற்றுக் கோபமாக “எங்க டா உங்க அண்ணன் எதுக்கு அந்தப் புள்ளைய கோபமா திட்டுனானாம்” அவரது கேள்வியில் அதிர்ந்த வஞ்சி கொண்டானை பார்க்க அவனோ தனது தம்பியின் வேலையை எண்ணி தலையில் அடித்துக் கொண்டான்
வஞ்சி கொண்டான் உயரத்திற்கு எம்பி நின்று அவனது காதினுள் “உங்க குடும்பமே இப்படித்தான பார்க்குற வேலை அம்புட்டும் வேண்டாத வேலை தான்.. கழண்ட மாதிரியே வேலை பார்த்து வைங்க”
அவளது கேலியில் போலி கோபம் பெற “அடிங்க நீ எந்தக் குடும்பம் டி......” இவர்களது நெருக்கத்தைப் பார்த்த அவரது மாமாவுக்குக் கோபம் சற்று மட்டுப்பட இதழ்களில் தானாக ஓர் பொன் முறுவல்
இத்தனை நாள் தன் பெண் செழுமையாக வாழ தனது உடன் பிறப்பின் உதிரத்தை விட்டுட்டோமே என்ற குறு குறுப்பு நீங்கி ஓர் நிம்மதி பிறந்தது அவர்களையே ஆசையாக பார்த்து கொண்டு இருக்க விஜி தான் அவரைக் கலைத்தார் “பிள்ளை இனியாவது நல்ல இருக்கட்டும்” அவரும் அவர்களது நெருக்கத்தை தான் பார்த்து கொண்டு இருந்தார்
ஹ்ம்ம்.... “டேய் எங்க அவன் கூப்பிடு” வந்த வேலையை திறம்பட செய்தார்.
இதோ என்ற உடையவன் தமயன் அறை நோக்கி விரைந்தான் அதற்குள் அவரது குரல் கேட்டு எழுந்து வந்த மது அவரைப் பார்த்தவுடன் அழுகை முட்டி கொண்டு வர அவரது தோள் சாய்ந்து ஒரே அழுகை.அவரது அழுகையைப் பார்த்த பெரியவர்கள் இருவரும் பதறி போனார்கள் விடயம் ரொம்பப் பெரிதோ என்று எண்ண தொடங்கி விட்டனர்.
வஞ்சி மீண்டும் தலையில் அடித்துக் கொண்டு நடக்கும் கூத்தை பார்க்க முடியாமல் அவளது கடமையைச் செய்ய அடுக்கலைக்குள் புகுந்து கொண்டால் இரவு உணவு குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும் அல்லவா
இங்குத் தங்களை மறந்து இருவரும் தூங்கி கொண்டு இருக்க உடையவன் கதவை தட்டி பார்த்தவன் கபிலன் திறக்க வில்லை என்றதும் வேகமாக உடைக்க ஆரம்பித்து விட்டான் அதில் தூக்கம் கலைந்த மாலா அடித்துப் பிடித்து எழுந்து கபிலனை உலுக்கினாள்
“என்னங்க யாரோ கதவை தட்டுறாங்க பாருங்க” என்றதும் எழுந்த கபிலன் தன்னைச் சரி படுத்திக் கொண்டு கதவை திறந்தான் மாலாவும் தன்னைச் சரி படித்துக் கொண்டு வர
“அண்ணா என்ன பண்ணுற நீ” தூக்கம் கலைந்த கோபத்தில் இருந்தவனை கேள்வி கேட்டால் என்ன செய்ய.
“என்னடா கேள்வி இது தூங்கிறவனை எழுப்பி என்ன பண்ணிட்டு இருந்தனு”
“கதவை தட்டிகிட்டே இருக்கேன் திறக்க மாட்டேங்குற”
“ஹ்ம்ம் ...” என்று முனகியவனிடம் மாமா வந்து இருக்கார் என்றவன் அவன் பதில் சொல்லும் கை பற்றி இழுத்து கொண்டு போக என்னடா பண்ணுற
“நீ வா முதல” என்றவன் அழைத்து வந்து தனது மாமன் முன் நிறுத்தி “கேளுங்க மாமா” என்க
கபிலனுக்கு அவன் செய்கை புரியவில்லை கபிலனின் கோலம் கண்டு சங்கடம் கொண்ட பெரியவர்களுக்குப் பேச நா எழவில்லை அவர் சற்று சாய்ந்து தணிவான குரலில் “என்னடி விஜி இது சண்டைனு சொன்னான் ஆனா இவன் வந்து நிற்கிறதா பார்த்த அது மாதிரி இல்லையே” பின்னே மாலாவின் குங்குமம் மொத்தமும் அவனது மார்பில் வண்ணம் தீட்டி இருந்தது.
“ஐயோ! இந்தத் தத்தி சொன்னதை நம்பி என்ன எதுன்னு கேட்காம வந்துட்டோம் என்ற விஜி என் பொண்ணு பாவம்”
“ரொம்பத்தாண்டி அவனுக்கு என்ன தெரியும் கோபமா பேசவும் பயந்துட்டான் போல” என்றவர் கபிலனிடம் திரும்பி “ஏன் டா சின்னப் பிள்ளைங்க இருக்கும் போது இப்படித்தான் சண்டை போடுவியா” அவர் சொல்வதைப் புரியாமல் பார்த்தவன் “யார் சண்டை போட்டா”
அவனது கேள்வியில் பொங்கி எழுந்த மது “நீ தானே அண்ணிய திட்டி கை புடுச்சு இழுத்துகிட்டு போன” என்க மாலாவிற்கே சிரிப்பு வந்து விட்டது கபிலன் தான் நொந்து விட்டான்
“ஐயோ மது குட்டி அது சும்மா சண்டை டா”
“சும்மா சண்டையே இப்படின்னா?.... நீ சமளிக்காத இனி சண்டை போடாத அதுக்குத் தான் மாமாவை கூட்டிட்டு வந்தேன்” என்றானே பார்க்கலாம் நமது உடையவன்
“விளங்கும் டேய் எருமை என்ன வயசு ஆகுது உனக்குச் சண்டைனு மாமாவை போய்க் கூட்டிட்டு வர எருமை… எருமை…. என்றவனை
“டேய் நீ பிள்ளைங்க இருக்குனு பார்த்து நடந்துகனும் அதுங்களுக்கு என்ன தெரியும் இந்த மாதிரி சூழ்நிலையைப் பார்த்தது இல்லை தானே அதான்”
“மது... டேய் தம்பி இது சின்ன விஷயம் அவங்களுக்குள்ள எதோ வாக்குவாதம் அது தானே சரியா போகும் எதுக்கு எடுத்தாலும் அழுக கூடாது மது” இருவருக்கும் பொதுவாக சொன்னார்
சரியென்று தலையை ஆட்டியவள் அவரது மடியில் படுத்துக் கொள்ள இரவு உணவை முடித்து விட்டு அனைவரையும் சாப்பிட அழைத்தாள் வஞ்சி “வாங்க மாமா சாப்பிட்டுப் பேசலாம்”
“இல்லடா இவன் வந்து சொல்லவும் நான் சின்னவளை தனியா விட்டுட்டு ஓடி வந்துட்டேன் அவ தனியா இருப்பா நாங்க கிளம்புறோம் அப்புறம் உடையவனுக்கு எப்போ கல்யாணம் பண்ணுறத இருக்கீங்க என் பொண்ணுக்குப் பரீட்சை முடிய போகுது”
“பண்ணிடலாம் மாமா முறையைப் பெண் கேட்டு வருவோம்” என்றவன் கூடுதல் தகவலாக மதுக்கு இரண்டு வருஷம் செண்டு பார்க்கலாம் இருக்கோம் எங்க கூடக் கொஞ்சம் நாள் இருக்கட்டும்
அதுவும் சரிதான் என்றவர் இதுவரை பேசாத வஞ்சியிடம் சென்று அவளது தலையைத் தடவி “தேவதை பொண்ணு நீ உன்ன முதல பிடிக்கல ஆனா நீ வந்த பின்பு எங்க அக்கா குடும்பமே தலை தூக்கிடுச்சு நல்ல இரு இவனுகள எண்ணி நாங்க வருத்தப்படாத நாளே இல்ல இப்போ நிம்மதியா இருக்கு பார்த்துக்கோ என்றவர் மாலாவிடம் திரும்பி நீயும் தான் மாலா பிள்ளைகளைப் பார்த்துக்கோ” இவர்களுடன் தன் பெண்ணும் சேர்ந்தால் வீடு சொர்கமே என்ற எண்ணத்தில் பெரியவர்கள் விடை பெற.
அவர் சென்றவுடன் உடையவனை பார்த்த கபிலன் “ஏண்டா என் மானத்தை வாங்குறீங்க”
“நீ ஏன் அண்ணிய திட்டுன இனி அண்ணிகளை எங்க முன்னாடி திட்டுனா இப்படி தான் செய்வேன்” என்று நின்றவனை வாஞ்சையாக வஞ்சியும் மாலாவும் பார்க்க கடுப்புடன் பார்த்தனர் கபிலனும்,கொண்டானும்
“முதல இவனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும் டா வஞ்சி”
“ஹ்க்கும் வரதும் அப்படித்தாண்ணே இருக்கும் இவனுக்கு மேல அவ இருப்பா”
அதிர்ந்தவன் “என்னடா சொல்லுற”
“ஆமா அண்ணே இவன் சொன்னதை மட்டும் தான் கேட்பா நம்ப மாமா பொண்ணு”
“அது சரி.. நல்ல பொருத்தம்”
அதன் பின் உண்டு சிறிது நேரம் கேலி பேசி கொண்டு இருக்க முதல் முறை அனைவரும் சற்று நிகழ்வான மனநிலையில் இருந்தனர் இதில் துளசியும் இருந்தால் என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் இருந்தது தான்... என்ன செய்ய நினைவுகள் மட்டுமே துணை.
*******************************
வஞ்சி,மாலா,மது,பானு,இனியாள் ஒரு பக்கமாக அமர்ந்து கொண்டு விளையாண்டு சிரித்துக் கொண்டு இருக்க அவர்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தனர் ஆண்கள்...
கபிலன் “இந்தப் பொண்ணுக இல்லனா நம்ப வாழ்க்கையை யோசுச்சு கூடப் பார்க்க முடியல அதிலும் வஞ்சி இல்லனா”
“ஆமா அண்ணே இப்ப வரைக்கும் எனக்குப் புரியல என்ன இருக்கு இந்தப் பொண்ணுகிட்ட சாதாரணக் கிராமத்துல இருந்து வந்த பொண்ணு சின்னப் பொண்ணும் கூட ஆனா வயசுக்கு மீறின யோசனை, செய்கை அது தான் பிடித்துப் போச்சோ என்னமோ”
“அப்படி சொல்லாதடா சின்ன வயசுல இருந்து நிறையக் கஷ்டம் அதான் தெளிவா யோசிக்கிது உங்க அண்ணி மட்டும் என்ன நானே மிரண்டு போற அளவுக்கு உழைப்பு,புத்தி சலித்தனம் துனிச்சல் இல்லனா தனியா நீந்தி வர முடியுமா?”
“நம்ப அம்மாவும் இப்படி தானே அண்ணே இருப்பாங்க” உடையவன் கேட்க இரு ஆண்களும் அதிர்ந்து பார்த்தனர்
“வயசுல சின்னப் பொண்ண இருந்தாலும் வஞ்சி அண்ணி வேலை செய்யுற விதம் வீட்டை பார்த்துக்குறது எல்லாமே நம்ப அம்மா மாதிரியே தெரியும் சொல்ல போன அவங்க வந்த அப்புறம் தான் நான் நிம்மதியா தூங்கினேன் மூணு பொண்ணுகளைப் பார்த்துக்கப் பயமா இருக்கும் விடிய விடிய தூக்கம் வராது,
அதுவும் துளசி என்ன பண்ணுறா அவளுக்கு என்ன வேணும் பார்த்து பார்த்து செய்யணும் நம்பப் பானு எதுக்கு அழுகுறானே தெரியாது.மது ரெண்டுக்கட்டான் வஞ்சி அண்ணி வரலைனா யோசுச்சு கூடப் பார்க்க முடியல”
அவனது பேச்சில் இரு ஆண்களுக்கும் குற்ற உணர்வு தலைதூக்க இருவரும் அவனை அணைத்து கொண்டனர்.மூவரது பார்வையும் எதிரில் இருக்குப் பெண்களிடம் திரும்பியது.தேவைதைகள் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டு இருந்தனர் அக்காட்சி அழகிய ஓவியமாக மனதுக்குள் பத்திர படுத்தினர்.
ஒரு பெண் இல்லையென்றால் அக்குடும்பத்தின் நிலை என்ன? சமுதாயத்தில் ஓர் துணை அற்ற பெண்ணின் நிலை என்ன? பெண் இல்லாமல் ஒரு ஆண் பிள்ளைகளை வளர்க்க முடியாம என்ன ? இக்கேள்விக்கெல்லாம் என்னுடைய எளிமையான படைப்பே பெண்ணாழி
Beautifulஅத்தியாயம் – 20

kandipa pathuralamஎழுத்து பிழை இருக்கு சிஸ்டர் நேரம் கிடைக்கும் போது சரி பண்ணுங்க.
ஆண் இல்லாமல் குழந்தைகளை வளர்த்துவிடுவாள் பெண். பெண்துணை இல்லாமல் பெண் பிள்ளைகளை வளர்ப்பது ஆண்களுக்கு அது சவாலே என்பதை
மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் வஞ்சி மாதிரி ஒரு துணை அமைவது பாக்கியமே