Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 29

Advertisement

SHALU shalu

Well-known member
Member
இப்படியானதொரு, மேன்மை பொருந்திய, குணமுள்ளப் பெண்ணைத், திருமணம் செய்வதில், அவனுக்கு மட்டற்ற, மகிழ்ச்சியே தோன்றியது.

மென்மேலும், தாய் கூறிய, செய்திகளைக் கேட்டு, முகம் மலர்ந்தான் ஸ்வரூபன்.

அப்படியென்றால், ருத்ராக்ஷிக்கு, இந்த ஊரில், அமைதியான சூழலில், வாழத் தான், பிடித்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டான். அது மட்டுமில்லாமல், அவள் பணம் மற்றும் நகைகளின் மீது, கிஞ்சித்தும் நாட்டம், கொள்ளாதவளாக இருக்கிறாள் என்பதும், அவனுக்குக் கிடைத்த, ஆனந்தமான தகவலாகும்.

அதனாலும் கூட, அவளை மணக்க வேண்டும், என்ற எண்ணத்தை, உறுதி செய்து விட்டவன், அவள் செல்லும் வரை, பார்த்து ரசித்தவாறே, அன்னையுடன் பயணமானான் ஸ்வரூபன்.

தன்னை வரவேற்ற நூலகத்தின் உரிமையாளர் துரைமுருகனிடம்,”சார், நான் வர்றதுக்குள்ளே, யாராவது டவுட் கேட்டு, வெயிட் பண்றாங்களா?” என்று அவரிடம் வினவினாள் ருத்ராக்ஷி.

“இல்லை ம்மா. நீ கரெக்ட் டைமுக்கு வந்துட்ட! ரெஸ்ட் எடு. யாராவது வந்தால் பாத்துக்கலாம்” என அவளை, நாற்காலியில் உட்கார அனுமதித்தார்.

அவளும் ஆசுவாசமடைந்து கொண்டு, ஒரு புத்தகத்தை, எடுத்துக் கையில், வைத்து வாசிக்க, ஆரம்பித்து விட்டாள்.

சில நிமிடங்களுக்குப் பிறகே, ஒரு சில பெண்மணிகள், அங்கே வந்து, புத்தகங்களைப், புரட்டிப் பார்த்துக், கொண்டு இருந்தார்கள்.

அவர்களுக்கு, உதவி தேவைப்படும் என்று, தன்னுடைய கரத்திலிருந்ததை மூடி, அதன் இடத்தில், வைத்து விட்டாள் ருத்ராக்ஷி.

அதற்காகவே காத்திருந்தவளைப் பார்த்த, ஒரு பெண்ணோ,”இந்தப் புத்தகத்தைப் பத்தி, உனக்குத் தெரியுமா ம்மா?” என அவளிடம் கேட்டார்.

“நல்லாவே தெரியும் மா. நான் உங்களுக்கு இதைப் பத்தி, விளக்கமாகச் சொல்றேன்” என்று அவரிடம் உரைத்தவள், அந்தப் புத்தகத்தைப், பற்றிய விவரங்களை, அவருக்குக் கூறிப், புரிய வைத்தாள்.

அந்த உரை முடிந்ததும்,”நன்றி ம்மா” என்ற அவளிடம், தெரிவித்து விட்டு, அங்கிருந்து, அகன்று விட்டார் அந்தப் பெண்மணி.

அவருக்குப் பின்னர், வந்த அனைவருக்குமே, அவர்களுக்குத் தேவையானப், புத்தகங்களைப் பற்றிய, உரைகளைத் தெளிவாக, விவரித்துச் சொல்லி விட்டு, இரவானதும், தன் வீட்டிற்குப் போனவள், தொடர் வேலையின் காரணமாக, அடித்துப் போட்டாற் போல, உறங்கி விட்டாள் ருத்ராக்ஷி.

அந்த இரவு முழுவதும், விழித்திருக்க வேண்டியதாகிப் போயிற்று ஸ்வரூபனுக்கு.

தான் காதலைத், தெரிவித்தக் கன்னியவளோ, இன்னும் சில நாட்களில், ஊருக்குச் செல்லப் போகிறாள், என்பதை அறிந்தவனுக்கோ, இருப்புக் கொள்ளவில்லை.

முன்பை விட, இப்போது ருத்ராக்ஷியை, இன்னும் அதிக நாட்களுக்குக் காணாமல் தவிக்கும் நிலையை அடையப் போகிறானே?

அதனாலேயே, உறக்கமின்றி வாடித் தவித்தான் ஸ்வரூபன்.

இப்படியாக, ஓரிரு நாட்கள், கழிந்தப் பிறகு, வகுப்பு முடிந்தப் பின்னர், கொஞ்சம் பேச வேண்டுமென, அவர்களை, அந்த இடத்திலேயே, தேக்கி வைத்தவள்,”நாளைக்கு ஊருக்குப் போறேன் ங்க” என்று அனைவரிடமும் மொழிந்தாள் ருத்ராக்ஷி.

“ம்ம்.‌.. உங்க அண்ணனுக்கு எங்களோட வாழ்த்தையும் சொல்லிரு ம்மா” என அவளிடம், மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர் கவிபாரதியும், மற்ற பெண்களும்.

“கண்டிப்பாக சொல்றேன் ம்மா” என்று குறுநகை முகிழ்த்தியவளோ,”இது வரைக்கும், சொல்லிக் கொடுத்ததைச், செஞ்சுப் பாருங்க. அதுக்குத் தேவையானதை எல்லாம் தந்துட்டுப் போறேன் ங்க” என்று அவர்களிடம் கூறினாள் ருத்ராக்ஷி.

“நல்லது ம்மா” என்றவர்கள், அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்.

அதை தனிப்பட்ட முறையில், மிருதுளாவிடமும் கூறியிருந்தால், அவரே, சில இலகுவான, சிற்றுண்டிகளை, ருத்ராக்ஷியின் பயணத்திற்காகச், செய்து கொடுத்து விட்டார்.

அடுத்த நாளிலேயே, உடனே பேருந்து நிலையத்தை அடைந்து, தனக்கானப் பேருந்தில் ஏறித், தன் ஊருக்குப் பயணம் செய்து கொண்டிருந்த ருத்ராக்ஷியோ,“அண்ணா, நான் பஸ் ஏறிட்டேன். எப்பவும் போல, என்னை வந்து கூட்டிட்டுப் போயிரு” என்று கூறி வைத்து விட்டாள்.

அவனும் தந்தையிடம் போய்,”ருத்ரா வந்துட்டு இருக்கா அப்பா!” என்ற செய்தியை, அவருக்குத் தெரிவித்தான் காஷ்மீரன்.

“ஆஹ்ஹா! அவ எத்தனை தடவை வந்தாலும், நம்ம வீட்டுப் பொண்ணுக்குக் கொடுக்கப் போகிற மரியாதையை, மாத்தவே கூடாது!” என்று மகனுக்கு உத்தரவிட்டார் சந்திரதேவ்.

“ஷூயர் ப்பா” என்றவன், அவள் ஊருக்கு வரும், நேரத்தைக் கணக்கிட்டுப் பேருந்து நிலையத்திற்குச் சென்று, தங்கையை அழைத்து வந்து விட்டான்.

“ருத்ரா ம்மா” என்றவருடைய பாசமான குரலும், வார்த்தையும், இப்போதும் மாறாமல், அப்படியே இருந்ததைக் கண்டு, உள்ளம் பூரித்துப் போனவாறு,“ப்பா!” எனத், தனது பாசத்தையும் குறைக்காமல், தந்தையிடம் மிகுதியாகவே காண்பித்தாள் அவரது மகள்.

அவர்களிருவரிடமும், எப்போதும் போல, நடந்து கொள்ளப், பிரயத்தனப்பட்டுப் போனாள்.

ஏனென்றால், அவளுக்குத், தன்னிடம் காதலைச் சொன்ன, ஸ்வரூபனுடைய ஞாபகங்கள் யாவும், மனதிற்குள் அணிவகுத்து நின்று கொண்டிருக்கவே, தன் இயல்பான நடவடிக்கைகளைத், தொலைத்து விட்டு, நடமாடியவளோ,‘என்னப் பண்ணி வச்சிருக்கீங்க?’ என ஸ்வரூபனை வேறு, கரித்துக் கொட்டினாள் ருத்ராக்ஷி.

அதன் பின், எப்போதும் போல, நடந்து கொள்வது மாதிரி, தன்னைத் தானே, மாற்றிக் கொள்ள, வேண்டியதாகி விட்டது அவளுக்கு.

அதனால், குடும்பத்தினருடைய அருகாமையை, மிகவும் தேடினாள் ருத்ராக்ஷி.

“நானும் வேலைக்கு லீவ் போட்டதால், ரொம்பவே போர் அடிக்குது ம்மா! நாம ரெண்டு பேரும், சேர்ந்தே எல்லாத்தையும் பர்சேஸ் பண்ணுவோமா?” என்று அவளிடம் வினவினாள் மஹாபத்ரா.

“ஷூயர் அண்ணி, முதல்ல எங்கே போகப் போறோம்?” என்று விசாரித்தவளிடம்,”துணி எடுக்கப் போகனும்! வீட்டுக்கே வர, வச்சுக் கூட, செலக்ட் பண்ணிக்கலாம். ஆனால், நான் தான், கடைக்கே போய்ப் பார்த்து வாங்குவோம்னு சொல்லிட்டேன். நகைக்கும் அப்படித் தான் பிளான் போட்டிருக்கேன்” என்று கூறிச் சிரித்தாள் அவளது அண்ணி.

“அப்போ நமக்கு ஜாலி தான்!” என்று அவளுடன் இணைந்து நகைத்தாள் ருத்ராக்ஷி.

“ம்ஹ்ம் யெஸ்!” என்று அவளுக்கு ஹைஃபை கொடுத்தாள் மஹாபத்ரா.

ஆகவே, இருவரது குடும்பத்தாரும், முதலில் ஜவுளி, எடுக்குத் தயாராகி விட்டனர்.

மணப்பெண்ணிற்கான கட்டுப்பாடுகள் என, மகளுக்கு எதையும் விதிக்கவில்லை, அவளது தாயும், தந்தையும்.

அதனால், ருத்ராக்ஷியுடன் சேர்ந்து கொண்டு, கடையினுள் மகிழ்ச்சியாக, வளைய வந்தாள் மஹாபத்ரா.

இரு வீட்டாரும், சமூகத்தில் மிகவும், முக்கியத்துவம் வாய்ந்தவர்கள், என்பதால், இந்தக் கடைக்கு வருவதற்கு, முந்தைய நாளிலேயே, அதன் உரிமையாளரிடம் தெரிவித்து விட்டதால், அவர்களை மட்டும் தனியாக கவனித்தனர் அந்தக் கடையின் ஊழியர்கள்.

தனக்கு இதெல்லாம் சாதாரணம், என்ற காரணத்தால், இயல்பாக இருந்தாள் மஹாபத்ரா.

ஆனால், ருத்ராக்ஷியோ, இவற்றையெல்லாம் எதிர் கொள்ளப் பிடிக்காமல் தான், வேறு ஊரில் வசிக்கிறாள்.

- தொடரும்
 
ருத்ராக்ஷி இனி நீ ஓடவும்முடியாது, ஒளியவும் முடியாது. ஸ்வரூபன் உன் மனசுக்குள்ள வந்து strong aah உட்கார்ந்துட்டான்.😍😍😍😍😍😍
 
ருத்ராக்ஷி இனி நீ ஓடவும்முடியாது, ஒளியவும் முடியாது. ஸ்வரூபன் உன் மனசுக்குள்ள வந்து strong aah உட்கார்ந்துட்டான்.😍😍😍😍😍😍
Adhe dha sis... Thank you so much ❤️
 
Top