Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று EPISODE - 17

Advertisement

naveen prabu

Member
Member
EPISODE - 17/21

இதனிடையில் நவீனுக்கு ஒரு சந்தேகம், “சூர்யா அங்க தங்கி இருந்தா சரி, அப்புடி இல்லனா…” நவீன் தன் போனை ஆதித்யாவுக்கு டைல் செய்தார்…


“ஆதித்யா…”


“சொல்லுங்க சார்…”

“சத்தியா இப்போ ஒரு போட்டோ அனுப்புவான் உங்களுக்கு, அந்த போட்டோவை ஏலெக்க்ஷன் ஐ.டி-ல, ஆதார்ல, பேன் கார்டல்னு எல்லா கவர்மெண்ட் டேட்டாபேஸ்ளையும் தேடு அவனை பத்தின இன்பர்மேஷன் இருக்காணு செக் பன்னிட்டு எனக்கு உடனே கால் பண்ணு…”


“எஸ் சார்…”



“போனை ஜெய் கிட்ட குடு…” (ஜெய் - டீமில் இருக்கும் மற்றொரு சப்-இன்ஸ்பெக்டர்)


“சார்… ஜெய் பேசுறன் சொல்லுங்க சார்…”


“ஜெய்… கில்லர் போட்டோவை எல்லா ஸ்டேஷன்க்கும் அனுப்புங்க அவனை பத்தின எந்த டீடெயில்ஸ் தெரிஞ்சாலும் உடனே அப்டேட் பண்ணுங்க… அடுத்து ஹைவே போலீஸ்க்கு அந்த போட்டோவை அனுப்புங்க ஹைவே-ல போற எல்லா பஸ், கார், டூ-வீலர்ன்னு ஒன்னு விடாம எல்லாத்தையும் செக் பண்ண சொல்லுங்க… எந்த இன்பர்மேஷன் கிடைச்சாலும் உடனே எனக்கு அப்டேட் பண்ணுங்க…”


“எஸ் சார்…” என்றார் ஜெய், அழைப்பை துண்டித்து போனை பாக்கெட்டில் திணித்தார் நவீன்.. காத்திருந்த சத்தியா நவீனினிடம்…


“சார்… அன்டனியோட கார் கிடைச்சிடுச்சி… நாம நினைச்ச மாரி கார் கரடிபாக்கத்துல தான் இருந்துது… கரடிப்பாக்கத்துல இருந்த ஒரு குவாரி குளத்துல… கார ஓட்டிட்டு வந்தவன் கிடைக்கல…”


நவீனின் போன் ஒலித்தது… போனில் ஆதித்யா…


“சார்… செக் பண்ணிட்டேன், எந்த கவெர்மென்ட் டேட்டாபேஸ்லையும் அவன் போட்டோ மேட்ச் ஆகல… இந்தியால ஒரு மனுஷன்னு வாழ்ந்தா அவன் எந்த விதத்துலயாவது கவர்மெண்ட்கூட தொடர்புள இருக்கணும் ஈவென் நா டிரைவிங் லைசென்ஸ் கூட செக் பண்ணிட்டேன் எங்கையுமே இல்ல, எப்புடி ஒருதன்னால கவர்மெண்ட்கூட எந்த விதத்துலையுமே தொடர்பில்லாம இருக்க முடியும், ரொம்போ ஆச்சிரியமா இருக்கு சார்…”


சிறிது நேரம் யோசித்தபடி, “ஆதித்யா... ஒரு வேலை அவன் இந்தியாவே இல்லனா…”


“சார்… புரியல…”


“அவன் ஏன் ஒரு பாரினரா(foreigner) இருக்க கூடாது… அப்புடி அவன் பாரினரா இருந்தா பாஸ்போர்ட்ட தவிர எந்த தொடர்புமே கவர்மெண்ட் கூட இருக்காது இல்லையா…”


“ஆமாம் சார்…”


“எல்லா ஏர்போர்ட்கும் காண்டாக்ட் பண்ணி டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணுங்க… இப்பைல இருந்து 2017 வரிக்கும் தேடுங்க கிடைகளான அதுக்கு முன்னாடியும் தேடுங்க… அப்புறம் மேட்டர் வெரி அர்ஜென்ட் அதுனால அவுங்கள போர்ஸ் பண்ணுங்க… உடனடியா எனக்கு இன்பர்மேஷன் வேணும்…” பதிலுக்கு காத்திருக்காமல் அழைப்பை துண்டித்தார் நவீன்.


தோராயமாக மூன்றுமணி நேரம் கடந்திருக்கும், நவீனின் போன் ஒலித்தது… போனில் ஆதித்யா…


“சொல்லு…”


“சார்… ஏர்போர்ட்ல விசாரிச்சிட்டேன்… அவன் பெரு சூர்யா, அவன் யூஸ் பண்ணது பிரெஞ்சு நேஷனாலிட்டி பாஸ்போர்ட் பெப்ரவரி 25 2018 கொழும்பு ஏர்போர்ட்ல இருந்து கோயம்பத்தூர் ஏர்போர்ட்க்கு வந்திருக்கான் சார்… பிலைட் நேம் ஏர்பஸ் A320 - 100, வரும்போது மூணு டெட் பாடி கொண்டு வந்திருக்கான்…”


“என்னது டெட் பாடியா?...”


“எஸ் சார்…” நவீனுக்கு ஒரு கணம் சூர்யா கலைவாணனிடம் கூறிய வார்த்தை “18 தலைய வெச்சி இருந்து போன என் மனைவி குழந்தைகள மறுபடியும் உயிரோட கொண்டுவருவன்…’’ அதே வார்த்தைகள் நவீன் காதில் ஒலித்தது, நவீன் பார்த்த கல்ட் பைபிள், இறந்து போன அலெக்ஸ் குடும்பமும் ஆண்டனி குடும்பமும் ஒரு கணம் கண்முன் தெரிந்தது, அப்போ கலைவாணனிடம் சூர்யா சொன்னது அத்தனையும் உண்மை என புரிந்தது நவீனுக்கு.


“வேற ஏதாவது தெரிஞ்சிதா?...”



“ அவளோ தான் சார்... வேற எந்த டீடைல்ஸும் கிடைக்கல…”


“சரி…” அழைப்பை துண்டித்தார் நவீன். கோயம்பத்தூர் ஏர்போர்ட்டை நோக்கி விரைந்தது போலீஸ் ஜீப்…




இதனிடையில் சூர்யாவிடம் கொடைக்கானலில் தன் மூத்த மகனை இழந்து வாடிக்கொண்டிருந்த டேனியலின் குடும்பம் சிக்கியது, தன் வசீகர பேச்சால் டேனியலையும் அவர் மனைவியையும் தன் பக்கம் இழுத்து அவர்களை முழுவதுமாய் நம்பவைக்க இன்று இரவு 12 மணிக்கு இறந்த பூனைக்கு உயிரூட்டி காட்டுவதாக சொல்லியிருந்தான் சூர்யா.


போலீஸ் ஜீப் கோயம்பத்தூர் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டை அடைந்தது இன்ஸ்பெக்டர் நவீன், ஏர்போர்ட் அதிகாரிகளிடம் தகவலை சரி பார்த்துகொண்டார்


“சார்… எனக்கு அந்த டேட்டொட சீ.சீ.டிவி கேமெரா புட்டேஜ் கிடைக்குமா?…”


“நோ.. சார்… அந்த புட்டேஜ் எல்லாம் சென்ட்ரல் ஏர்போர்ட் ஆதாரிட்டி கிட்ட தான் இருக்கும் இப்போ பக்க முடியாது… உங்களுக்கு அது வேணும்னா அட்லீஸ்ட் மூணுநாள் ஆகும்…”


“ஓகே… அந்த பாஸ்போர்ட் ஒரு பிரெஞ்சு நேஷ்னாலிட்டி பாஸ்போர்ட்னு சொன்னீங்ககளே, அதுல அவர் எப்போ ஸ்ரீலங்கா போனாங்கனு சொல்லமுடியுமா?…”


“ஹோ எஸ்…” ஆஃபீஸ்ர் சிறிது நேர தேடலுக்கு பின்


“பிரான்ஸ்ல இருந்து டிசம்பர் 24 2017க்கு கொழும்பு ஏர்போர்ட்கு போயிருக்காங்க… அதுக்கு அப்புறம் பெப்ரவரி 25 2018 கொழும்பு ஏர்போர்ட்ல இருந்து கோயம்பத்தூர் ஏர்போர்ட் வந்து இருக்காங்க…”


“ஓகே தேங்க்ஸ்…”




இணைந்திருங்கள் அடுத்த பாகத்துக்காக...
மறக்காம இந்த பாகம் எப்புடி இருந்துதுனு எனக்கு எழுதி அனுப்புங்க. உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நவீன் பிரபு....
நன்றி....!
 
டேனியல் குடும்பம் எத்தனையாவது பலினு தெரியல. நவீன் இந்த குடும்பத்தை சூர்யா கிட்ட இருந்து காப்பாத்துவானா? o_O :unsure:
 
Top