Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அரக்கன்(ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்று EPISODE - 5

Advertisement

naveen prabu

Member
Member
EPISODE - 5/21


வீட்டினுள் நுழைந்தார் வீடு பார்பதற்க்கே பழைய வீடாக இருந்தது ஒருமாதம் பூட்டி இருந்த தூசியும் சேர்ந்து இன்னும் பாழடைந்ததாக தெரிந்தது, பாரென்சிக் டீப்பார்டுமென்ட் ஆளுங்க தடயங்களை சேகரித்த வாறு இருந்தார்கள், வீட்டினுள் நுழைந்ததுமே ஒரு ஹால் ஹாலின் வலது பக்கத்தில் ரூம் இருந்தது அதனுள் தான் ஆச்சரியமே காத்திருந்தது… ரூமினுள்…

சுவர் எங்கும் கருப்பு நிற பேயின்டினால் கிறுக்க பட்டியிருந்தது உற்று கவனித்தார், இல்லை ஏதோ வரையப்பட்டியிருக்கிறதை உணர்ந்தார் தன் கைல் இருக்கும் செல் போனில் ஒரு போட்டோ எடுத்து கொண்டார் தரை முழுதும் புலியூர் காட்டினுள் வரையப்பட்டிருந்த அதே கோலம் ஒரு பெரிய வட்டத்தினுள் நிறைய முக்கோணம் அந்த பெரிய வட்டத்தை சுற்றிலும் சிறிய வட்டங்கள் அந்த சிறிய வட்டத்தினுள் பூனை தலைகள் இதை பார்த்தவுடனே ரெண்டு சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கு என முடிவு செய்தார் அதையும் ஒரு போட்டோ எடுத்துக்கொண்டார் திரும்பி ஹாலில் ஏதாவது எவிடென்ஸ் இல்ல கிளு எதாவது கிடைக்குமானு பார்த்தபடி ரூமை விட்டு வெளியே வந்தார் சுவற்றில் ஒரு போட்டோ ஒரு குடும்பம், ஒரு ஆன் ஒரு பெண் இரண்டு குழந்தைகள் ஒரு பெண் வயது தோராயமாக 50 இல்ல 55 இருக்கனும் ஒன்னு அந்த பொண்ணோட அம்மாவா இருக்கனும் இல்ல அந்த பையனோட அம்மாவா இருக்கனும்.

“சத்தியா…’’

“சார்…’’

“அந்த போட்டோவ வெச்சி அந்த போட்டோல இருக்க அந்த அம்மாவை ரீச் பண்ண முடியுமான்னு ட்ரை பண்ணு…’’

அதையும் ஒரு போட்டோ எடுத்துக்கொண்டார், ஒரு போட்டோ அதில் ஒரு சிறுவன், போடவிற்கு மாலை போட்டு இருக்கிறது மாலை காய்ந்து தொங்கி கொண்டிருந்தது இது மீண்டும் வீட்டினும் ஆல் நடமாட்டம் இருந்து கொறஞ்சது 20 நாளாக இருக்கும் என உறுதி படுத்தியது பிடோவின் அருகில் சென்று பார்த்தார் போட்டோவில் இருப்பது அதே சிறுவன் பேமிலி போட்டோவில் இருந்தவன், போட்டோவின் அருகில் ஒரு ஸ்டாண்ட், சிறியதுதான் ஒரு மாதா சிலை அதன் அருகில் ஒரு புத்தகம், அருகில் இருந்த மெழுகு வத்தி அந்த புத்தகத்தின் மீது சாய்ந்து பாதி எறிந்த நிலையில் இருந்தது, புத்தகமே பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது அதையும் ஒரு போட்டோ எடுத்துக்கொண்டார், அந்த புத்தகம் என்ன என பார்க்க அவருக்கு ஆர்வம் தூண்டியது புத்தகத்தை எடுத்து பிரித்து பார்த்தால் அது என்ன மொழி என்றே தெரியல கண்டிப்பா அது இங்கிலிஷ் இல்லனு உறுதி படுத்திகொண்டு புத்தகத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

“சத்தியா… நீ கூடவே இரு வேற எதாவது எவிடென்ஸ் கிடைக்காதனு பாரு ஒரு சின்ன விழியத்தை கூட விட்டுடாத எனக்கு கமிஷனர் ஆபீஸ்ல அர்ஜென்ட் மீட்டிங் இருக்கு நா கிளப்புறான் எந்த இன்போர்மஷனாலும் உடனே எனக்கு அப்டேட் பண்ணு…’’ கிளம்பினார் இன்ஸ்பெக்டர் நவீன்….

சூர்யா தன் அடுத்த பயணத்தை துடங்கினான். இந்த முறை கொடைக்கானல் காரணம் மலை பிரதேசம் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகள் பல. பைக்கில் மிகவும் பாதுகாப்பாக காப்பரினால் செய்யபட்ட குடுவையில் ஆசிடை ஊற்றி என்ன ஆனாலும் தன் மேல் படாத வண்ணம் பாதுகாப்பாக தன் ஷோல்டர் ஃபேக்கில் வைத்து பைக்கின் பின்புறத்தில் பாதுகாப்பாக கட்டி கிளம்பினான்.

கொடைக்கானல் 5 கீ.மீ போர்டை தாண்டி 80 கீமீ வேகத்தில் பைக் சீறி பாய்ந்தது, பெரும்பறை கிராமம். அண்ணாமலை ஹோட்டல் சைவம் உள்ளெ நுழைந்தான் சூர்யா 15 வயது மதிக்கதக்க சிறுவன்

“என்ன சார் சாப்புடுறீங்க…’’

“என்ன இருக்கு…’’

“சாப்பாடு…. வெஜிடேபில் ரைஸ்… பரோட்டா…’’

“வெஜிடேபில் ரைஸ் ஒன்னு…’’

“சாருக்கு ஒரு வெஜிடேபில் ரைஸ்…’’ கூச்சலிட்டான்

சிறிது நேரத்தில் வந்தது, சாப்பிட்டு விட்டு கிளம்பும் முன் “டேய் தம்பி…’’

நிச்சியம் டிப்ஸ்சா தான் இருக்கும், முகத்தில் சந்தோசதோடு “சொல்லுங்க சார்…’’

சூர்யா தன் பர்சிலிருந்து 20 ருபாய் சிறுவனிடம் குடுத்துவிட்டு.

“இங்க ஏதாச்சும், சின்னதா ஹோட்டல் தங்குற மாரி பெரிசாலம் இல்ல சின்னதா…. எதாவது இருக்கா…’’

“இருக்கு சார்.. நம்ப அன்ன ஹோட்டலு… நேரா பொய் ஒரு ரைட், நேரா போனா ஒரு புள்ளையார் கோவிலு ஓட்டுனப்புல ஒரு சந்து உள்ள போனீங்கன்னா கணேஷ் காட்டேஜ்னு போர்டு இருக்கும் அதான் எல்லாமே கிடைக்கும்… சார் எல்லாமே…’’

கிளம்பின்னான் சூர்யா 5 நிமிட பயணம் ஹோட்டல் வாசலில் பைக் பார்க் செய்து விட்டு உள்ளெ சென்றான்

“ரூம் இருக்கா…’’ ரிசெப்ஷானில் இருபவரிடம்

“இருக்கு சார், சிங்கள்லா டபுள்லா…’’

“சிங்கள்…”
.
“எத்தனை நாளைக்கு சார்…”

“15 நாள்…”

“ஒரு நாளைக்கு 450 ருபாய் சார்… புள் அமௌன்ட் இப்போவே குடுத்துடனும்…. 15ஆவது நாள் மதியம் 12 மனுக்குலாம் டான்னு காலி பனிடனும் சார் இல்லனா எக்ஸ்ட்ரா பெ பண்ணனும்…”

பதில் ஏதும் சொல்லாமல் சூர்யா தலையை மட்டும் ஆட்டினான்

“ஐ.டி கார்டு சார்…’’

தன் பாக்கெட்டில் இருக்கும் ஆதார்கார்டை நீட்டினான். ஒரு ஜெரோக்ஸ் போடுக்கொண்டு மீண்டும் சூர்யாவிடம் கார்டை நீட்டினார்.

“டிபன் வேணும்னா பையன்ட சொன்ன போதும் சார் வாங்கிட்டு வந்து தந்துடுவான்…”

இதற்கும் பதில் இல்லை.

“டேய் மணி…. ரூம்நம்பர் 201 சார்க்கு காட்டு…”

அமைதியாக விளையாடிக் கொன்டே வழி காட்டிய சிறுவனை பின் தொடர்ந்தான் சூர்யா “சார் இதன் ரூம்… இந்தாங்க சாவி…”

“தம்பி இங்க சர்ச் எதாவது இருக்கா…”

“இருக்கு சார் 5 கீ.மீ போகணும் இங்கேயிருந்து நேரா மைனரோடுக்கு போயிடு தெற்கால போய்ட்டே இருந்தா மலை மேல ஒரு சர்ச் தெரியும்.. இன்னும் கொஞ்சம் தூரம் போன இன்னும் நறிய சர்ச் இருக்கு சார்…”

“சரி…”

கதவை சாத்திவிட்டு ஃபேக்கில் இருந்த ஆசிடை எடுத்து கபோர்டில் வைத்து தான் கொண்டு வந்திருந்த பூட்டினாள் பூட்டி சாவியை பான்ட் பின் பாக்கெட்டில் வைத்து கொண்டான்.



இணைந்திருங்கள் அடுத்த பாகத்துக்காக...
மறக்காம இந்த பாகம் எப்புடி இருந்துதுனு எனக்கு எழுதி அனுப்புங்க. உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நவீன் பிரபு....
நன்றி....!

அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் ஒன்றுமுழு நாவலையும் உடனடியாக படிக்க வேண்டுமா இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்
 
அந்த வீட்டுல இருக்குற நபர்களுக்கும் சூர்யாவுக்கும் என்ன சம்பந்தம்... சர்ச் எதுக்கு கேக்குறான்..... வித்தியாசமா இருக்கு..... என்ன நடக்கும்னு.ஆர்வமாவும் இருக்கு
 
மந்திரம், பில்லி, சூனியம் ஏதாவது பண்ண போறானா சூர்யா? திக் திக் திகிலா இருக்கு. சூர்யா அடுத்த வேட்டைக்கு தயாராகிட்டான்.
 
Top