ஹப்பாடா
ஒருவழியாக மூர்த்தியின் சூரசம்ஹாரம் முடிந்தது
இப்போத்தான் வரட்டுமா வேண்டாமான்னு கொஞ்சூண்டு நிம்மதி எட்டிப் பார்க்குது, ஷோபா டியர்
அவனின் வேட்டையும் சரி
சூரசம்ஹாரமும் சரி
ஊருக்கு திரும்பி வருவதும் சரி
எல்லாம் எல்லாமே கவிதை கவிதையாக இருக்கு
"மூர்த்தி ஸார்" உடன் நானும் பம்பாய் வீதிகளில் அலைந்தேன்
குழந்தைகளின் ரத்தம் குடித்த ஓநாய்களின் வேட்டையின் பொழுது "மூர்த்தி ஸார்" கூட நானும் இருந்தேன்
ஊருக்கு திரும்பி ரயிலில் வரும் பொழுது துளசியில் மூழ்கிப் போன "மூர்த்தி ஸார்" பக்கத்தில் உட்கார்ந்து நானும் பயணித்தேன்
புதிய நரகாசுர போரில் வெற்றி பெற்று மனைவியிடம் வீரத் திலகம் பெற செல்லும் அந்த பேராசிரியனை நான் மிகவும் ரசித்தேன்
வெட்ட வெட்ட களைகள்தான் வளருமா?
வளர வளர நாங்களும் வேரோடு அழிப்போமில்லே
சத்யன், பிரேம் அருமையான நண்பர்கள்
"துளசி மா"வுடன் "மூர்த்தி ஸாரி"ன் இன்பமான வாழ்க்கையை ரசிக்க அவர்களின் "குட்டி துளசி மா"வுடன் நானும் ரொம்பவே ஆவலாய் காத்திருக்கிறேன், ஷோபா டியர்
கொலுசு ரெடியா இருக்கிறதா, மூர்த்தி ஸார்?
இல்லேன்னாலும் பரவாயில்லை
கன்னியாகுமரியில் வெள்ளிக் கடைக்கா பஞ்சம்?