Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் – Episode 8

Advertisement

Aathirai

Well-known member
Member
(Episode-8)
அன்று தான் தன் சொந்த ஊரான சேலத்திற்கு திரும்பியிருந்தான் அர்ஜுன்.. அவன் பஸ்ஸை விட்டு இறங்கியதுமே, அவன் நண்பன் ரவி வந்து தோளில் கையைப் போட்டான்... யாரென்று திரும்பியவன் புன்னகைத்தான்..

“டேய் ரவி... நீ எங்கடா இங்க...?? நான் இன்னைக்குத் தான் ஊருக்கு வருவேன்னு உனக்குத் தெரியுமா??” என்றான் அர்ஜுன் உற்சாகத்தோடு...

“ம்ம்ம்... ஆமா டா... உன்னோட வீட்டுக்குப் போயிருந்தேன்.. அம்மா தான் நீ இன்னைக்கு ஊருல இருந்து வரேன்னு சொன்னாங்க.. அதான் வந்தேன்..” என்றான் ரவி வண்டியைக் கிளப்பியவாறு...

“ஓ.. அப்டியா... என்ன திடீர்ன்னு வீட்டுக்கெல்லாம் வந்திருக்கே..??” என்றான் அர்ஜுன் சந்தேகத்தோடு...

“ஏன்டா.. நான் வீட்டுக்கு வரக்கூடாதா...? இல்ல, இது வரைக்கும் நான் வந்தது தான் இல்லையா...? என்னமோ புதுசா கேக்கற...?” என்றான் ரவி...

“இல்லடா... எப்பவும் நான் தான் உன்னைப் பார்க்க வருவேன்.. நீ ஏதும் வேலைன்னா தான வருவ... அதான் கேட்டேன்...” என்றான்...

“டேய்.. சும்மா தாண்டா, ஊருக்குப் போனவன் இன்னுமா வரலன்னு பாக்க வந்தேன்... அப்பா டேய்... உனக்குப் பதில் சொல்ல நான் கொஞ்சம் அதிகம் சாப்பிடணும் போல இருக்கேடா...” என்று சலித்துக்கொண்டான் ரவி...

ரவி இப்படிப் பேசப் பேச, அர்ஜுன் அங்கே சிரித்துக்கொண்டிருந்தான்...

“சரிடா... பெங்களூர் போயிருந்தயே, அங்க ரமேஷ், அப்பறம் அவங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா...??” என்றான் ரவி...

ரவி அதைக் கேட்டதும், அன்று பிருந்தாவன் கார்டனில் நடந்த சம்பவம் தான் அர்ஜுனின் நினைவுக்கு வந்தது.. அதை நினைத்து சிரித்தவன், கூடவே ரமேஷ் அவனை எச்சரித்ததும் நினைவுக்கு வர சற்று அமைதியானான்...

“டேய்.. உன்னத் தாண்டா கேக்கறேன்.. எங்க கனவு உலகத்துல மிதந்துட்டு வரியா...” என்று சொன்ன ரவி வண்டியை சற்று ஓரமாய் நிறுத்திவிட்டு அவனை திரும்பிப் பார்த்தான்...

எதையோ யோசித்துக்கொண்டே ரவியைப் பார்த்தான் அர்ஜுன்... முகம் வாடிப்போயிருந்தது... இதைக் கண்ட ரவி என்னவென்று விசாரிக்க, அர்ஜுன் அனைத்தையும் சொல்லி முடித்தான்...

“அப்படியா சங்கதி... ஹும்ம்... சரி விடுடா... அதெல்லாம் அப்பறமா பாத்துக்கலாம்... இப்போ உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்லத்தான் உன்னைக் கூட்டிட்டு போறேன்... தெரிஞ்சா நீ ரொம்ப சந்தோஷப்படுவ...” என்றான் ரவி...

“அடப்பாவி... அதானே பார்த்தேன்.. இவ்ளோ நேரமா இதத் தானே கேட்டுட்டு வரேன்... ஆனா, நீ எதுமே சொல்லாம இப்போ சொல்ற..” என்றான் அர்ஜுன்...

“சும்மா ஒரு சஸ்பென்ஸ் தான்...” என்றான் ரவி கேஷுவலாக...

ரவி அவர்கள் படித்து முடித்த கல்லூரிக்கு வண்டியை செலுத்தினான்.. அவன் அங்கே செல்வதைக் கண்டதும் அர்ஜுனுக்கு ஒன்றுமே புரியவில்லை...

“டேய்... என்னடா நம்ம காலேஜுக்குள்ள போயிட்ருக்க... என்னன்னுதான் சொல்லித் தொலையேண்டா..” என்று ரவியை அடித்தே விட்டான் அர்ஜுன்...

“யப்பப்பா.... உன் தொல்லை சத்தியமா தாங்கல டா... இரு சொல்றேன்... மொதல்ல வண்டியை விட்டு இறங்கு..” என்று தாங்கள் படித்த டிபார்ட்மென்ட் முன்னே வண்டியை நிறுத்தினான் ரவி...

அர்ஜுனுக்கு எதுவுமே புரியவில்லை... அங்கே அவன் கிளாஸ் நண்பர்கள் மற்றும் அவனுடைய வகுப்பு பேராசிரியர்கள் என அனைவருமே அவனுக்காக காத்திருந்தனர்... அவன் வருவதைக் கண்டதும் அனைவரும் ஓடி வந்து அவன் கைகளைப் பற்றி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்... எதற்க்காக என்பதைப் போல் அர்ஜுன் ரவியைப் பார்த்தான்...

“மச்சான்... நமக்கு ரிசல்ட் வந்துடுச்சு டா... நீதான் நம்ம காலேஜ் பர்ஸ்ட்... அப்பறம் யுனிவர்சிட்டி பர்ஸ்ட்டும் கூட டா... 98.9%.. கலக்கிட்ட டா மச்சான்...” என்றான் ரவி அவனைக் கட்டி அணைத்தபடி...

அப்போது தான் அர்ஜுனுக்கு எல்லாமே புரிந்தது... அவன் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்... எவ்வளவு நாள் தான் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்ததாய் உணர்ந்தான்... எத்தனையோ துன்பத்திற்கும், வேதனைக்கும் இடையே அவன் அதை சாதித்திருந்தான்... அது அவன் கூடவே இருந்த அனைவருக்கும் தெரியும்... கண்கள் சற்று கலங்கியே விட்டது அவனுக்கு...

அனைவரும் அவனை உள்ளே தூக்கிக்கொண்டு சென்றனர்.. அங்கே அவன் அம்மா ஜானகியும் இருந்தார்... அவனுக்கு சந்தோஷம் தாளவில்லை.. அம்மாவை ஓடிப் போய் கட்டிக் கொண்டான்.. ஜானகியும் அவனை ஆசிர்வதித்தார்... அனைவரும் கேக் ஒன்றை வெட்டி அந்த சந்தோஷத்தை அர்ஜுனுக்கு வெளிப்படுத்தினர்.. அப்போது கல்லூரியின் பிரின்சிபால் வந்தார்...

“கங்க்ராட்ஸ் அர்ஜுன்.. அன்எக்ஸ்பெக்டேட் ஒன்.. இது வரைக்கும் யாருமே நம்ம காலேஜ்ல வாங்காத பர்சென்டேஜ், ஆல்சோ யுனிவெர்சிட்டி பர்ஸ்ட்.. ஐ ஆம் வெரி ஹாப்பி ஆப் யூ பாய்..” என்றார் பிரின்சிபால் ஜெகன்நாதன்...

“தேங்யூ வெரி மச் சார்...” என்றான் அர்ஜுன் பணிவுடன்...

“எல்லாருமே சொன்னாங்க, நீ எவ்வளவு கஷ்டத்துல படிச்சேன்னு... ரியல்லி யூ ஆர் கிரேட்... தென், நான் உனக்கு ஒரு கிப்ட் பண்ணலாம்னு இருக்கேன்...” என்று புதிர் போட்டார் ஜெகன்நாதன்..

எல்லாரும், என்னவாக இருக்கும் என்று அவரை ஆவலோடு பார்த்தனர்...
“கிப்ட்ன்னா லைப் லாங் யூஸ்புல்லா இருக்கற மாதிரி இருக்கணும்.. உனக்கு அப்படி ஒரு கிப்ட்ட தான் கொடுக்கப் போறேன்... என்ன தெரியுமா..? உன்னோட ஹையர் ஸ்டடிஸ நான் ஸ்பான்சர் பண்ணலாம்னு இருக்கேன்..” என்று அவர் சொன்னதும், அனைவரும் கோரசாக கை தட்டினர்...

“சார், என்ன சொல்றிங்க..?” என்றான் அர்ஜுன் ஆச்சர்யத்தோடு...
“எஸ்... நான் சொல்ற காலேஜ்ல போய் நீ ஜாயின் பண்ணி படிச்சா போதும்... மீதி எல்லாம் நான் பாத்துக்கறேன்..” என்றார் ஜெகன்நாதன்..
அர்ஜுன் மனம் நெகிழ்ந்து, அவர் காலிலேயே விழுந்து விட்டான்.. அவன் அம்மாவோ அவருக்கு கையெடுத்து நன்றி கூறினார்.. கண்களில் கண்ணீரே வந்து விட்டது அவருக்கு... இரண்டொரு நாளில் தன்னை வந்து தன் வீட்டில் பார்க்கும் படி கூறி விட்டுச் சென்றார் ஜெகன்நாதன்...

அர்ஜுன் இதை எதிர்பார்க்கவில்லை.. கடவுள் அருள் தான் எல்லாமே என்று எண்ணினான்.. இதற்க்கிடையில் நண்பர்கள் அனைவரும் குதூகலத்தில் அங்கே அவனைத் தூக்கி கொண்டாடிக் கொண்டிருந்தனர்.... இன்னும் சில எதிர்பாரா சம்பவங்கள் அவன் வாழ்வில் நடக்கும் என்பதை அவன், அன்று அறிந்திருக்கவில்லை தான்...
 
மிகவும் அருமையான பதிவு,
ஆதிரை டியர்

வாவ் அர்ஜுன் யூனிவர்சிட்டி பர்ஸ்ட் வந்து சாதிச்சுட்டான்
ஆனால் அர்ஜுனுக்கு என்ன கஷ்டம்?
அர்ஜுனின் அப்பா இல்லையா?
இறந்து விட்டாரா?
பிரின்சிபால் பரவாயில்லை
ஹெல்ப் பண்ணுறார்
ஆனால் அவருக்கு பொண்ணு இருக்கோ?
அர்ஜுன் லைப்லே என்ன எதிர்பாராத சம்பவங்கள் நடக்கப் போகுது?
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
ஆதிரை டியர்

வாவ் அர்ஜுன் யூனிவர்சிட்டி பர்ஸ்ட் வந்து சாதிச்சுட்டான்
ஆனால் அர்ஜுனுக்கு என்ன கஷ்டம்?
அர்ஜுனின் அப்பா இல்லையா?
இறந்து விட்டாரா?
பிரின்சிபால் பரவாயில்லை
ஹெல்ப் பண்ணுறார்
ஆனால் அவருக்கு பொண்ணு இருக்கோ?
அர்ஜுன் லைப்லே என்ன எதிர்பாராத சம்பவங்கள் நடக்கப் போகுது?

ஆமா மேம், இனிமேல் தான் ஒவ்வொன்றாக தெரிய வரும்..
 
Top