Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 11

Advertisement

Aathirai

Well-known member
Member
(Episode-11)

ஒரு வழியாக பலவித மனப்போராட்டத்துக்குப் பிறகு எம்.சி.சி. எனப்படும் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜில் காலடி எடுத்து வைத்தாள் அஞ்சலி... அதுவும், தோழிகள் நால்வரும் ஒன்றாக சேர்ந்து வலது காலை எடுத்து வைத்தனர்... ஆங்காங்கே அமர்ந்திருக்கும் சீனியர்களைப் பார்த்து கொஞ்சம் பயமாக இருந்தது ஷாலினிக்கும், ரூபாவுக்கும்... ம்ம்.. இருக்கத்தானே செய்யும் முதன் முதலில் இந்த இருபாலர் படிக்கும் கல்லூரியில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள் அல்லவா...

அஞ்சலிக்கு சற்று பயம் இருந்தாலும், அவள் அதை எதையும் வெளிகாட்டிக்கொள்ளவில்லை.. மது ஒருத்தி தான் தைரியமாக வந்தாள்.. தனக்குத் தெரிந்த சீனியர் ஒருவரிடம் பேசச் சென்றவள், தன் தோழிகளை அழைத்தாள்...

“ஹே.. நான் சொன்னேன் இல்ல, இது பிரபு அண்ணா.. எங்க ஊர் தான்.. ஒரே ஸ்கூல்ல படிச்சோம்... இந்த அண்ணா சொல்லித் தான் இந்த காலேஜ்ல அப்ளை பண்ணலாம்னு சொன்னேன்..” என்று சொல்லி தன் தோழிகளை அறிமுகப்படுத்தினாள்..

“ஹலோ...” என்று சிம்பிளாக பேசினான் பிரபு... பேசும் விதத்திலே நல்ல பையனாகத் தெரிந்தான்... ஷாலினியும், ரூபாவும் அவனை நிமிர்ந்து பார்க்காமலேயே பதில் சொல்லிகொண்டிருந்தனர்.. பிரபுவிற்கே சிரிப்பு வந்துவிட்டது...

“இதோ பாருங்க மா... மது எனக்குத் தங்கச்சி மாதிரி.. அதே மாதிரி தான் நீங்களும்... உங்களுக்கு ஏதாவது ப்ராப்ளம்னா சொல்லுங்க, நான் சால்வ் பண்றேன்.. ப்ரீயா பேசுங்க... பயப்பட வேண்டாம்.. ஓகே வா...” என்று சொல்லி அவர்களிடம் இருந்து விடை பெற்றான் பிரபு...

“ஹும்ம்ம்... என்ன ஒரு ஆச்சர்யம்.!! இந்த காலத்துல இப்படி ஒரு பையனா மது.. என்னால நிஜமா நம்ப முடியல...” என்றாள் ரூபா...

“ம்ம்... ஆமா, கண்டிப்பா இந்த அண்ணா மாதிரி யாருமே இருக்க மாட்டங்க... நான் ஸ்கூல் படிக்கும் போது ஒரு பையன் என்கிட்ட ரொம்ப தொந்தரவு பண்ணான்... ஸ்கூல் பிரின்சிபல் வரைக்கும் போக வேண்டிய விஷயத்த, எந்த பிரச்னையும் இல்லாம இந்த அண்ணா தான் சால்வ் பண்ணாங்க..” என்றாள் மது...

“ஓ... அது தன்னே... நல்ல சேட்டான்... பாக்கும் போதே கொறச்சு எனிக்கு தெரிஞ்சு...” என்றாள் ஷாலினி தன் கொஞ்சும் மலையாளம் கலந்த தமிழில்...

“ம்ம்ம்... அப்போ இருந்து இந்த அண்ணா எனக்கு நல்ல பழக்கம்.. ஸ்கூல் முடிஞ்சு வேற காலேஜ் ஜாயின் பண்ணதுக்கு அப்பறமும் சம் டைம்ஸ் கால் பண்ணி பேசிப்போம்.. அப்போ தான் இந்த காலேஜ்ல அப்ளை பண்ணச் சொல்லி சொன்னாங்க... நம்ம லக், நாலு பேருக்குமே இங்கயே சீட் கிடைச்சிருச்சு..” என்று சொல்லி சிரித்தாள் மது...

கூடவே தோழிகள் மூவரும் சிரித்தனர்... சிரித்துக்கொண்டே வந்தவர்களை, ஒரு பெண்கள் கோஷ்டி அழைத்தது... திடீரென அவர்கள் அழைத்ததும் சற்று பயந்து தான் போயினர்...

“ஏய்... இங்க வாங்க... என்ன ஒரே கெக்க பெக்கேன்னு சிரிச்சுட்டே வரிங்க... பர்ஸ்ட் டே காலேஜ் வந்திருக்கோம்னு பயமே இல்லாம, என்ன தெனாவெட்டா சிரிப்பு வேண்டி கிடக்கு...” என்றாள் ஒருத்தி...

“ஏய்... இவளப் பார்த்தா தூள்ல வர சொர்ணாக்கா பொண்ணு மாதிரி தெரில..” என்றாள் ரூபா முனகியபடி... அவள் அப்படி சொன்னதும், மற்ற மூவருக்கும் சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது... திரும்பவும் சிரித்தனர்...

“ஏய்.. என்ன தைரியம்...? நாங்க பேசிட்டே இருக்கோம்... நீங்க பாட்டுக்கு சிரிச்சுட்டே இருக்கீங்க...” என்றாள் இன்னொருத்தி...

“இல்லைங்க அக்கா... நாங்க எதுவும் வேணும்னு சிரிக்கல...” என்றாள் மது..

“என்னது..!! அக்காவா..!! அப்படியெல்லாம் கூப்பிடக்கூடாதுமா தங்கச்சி... ஒழுங்கா, சீனியர்னு கூப்பிடு... இல்லன்னா எங்க இமேஜ் என்னாகறது...” என்று சிரித்தாள் கூட்டத்தில் உள்ள இன்னொருத்தி... கூடவே அனைவரும் சிரித்தனர்...

அவர்கள் எதுவும் பேசாமல் முழித்துக்கொண்டு நின்றனர்... இதை தூரத்தில் இருந்து கவனித்த பிரபு அவர்களிடம் வந்தான்...

“ஹலோ... என்ன தங்கங்களா, என்னோட தங்கச்சிகள கலாயிச்சுட்டு இருக்கீங்க போலிருக்கு...” என்றான் பிரபு...

“ஹே... பிரபு... இவங்க நாலு பேருமே உன்னோட தங்கச்சிகளா..?? நம்பவே முடியல...” என்றாள் ஒருத்தி கிண்டலாக...

“என்னப் பொறுத்தவரைக்கும் பொண்ணுங்க எல்லாருமே எனக்கு தங்கச்சி தானே... அதிலென்ன டபுட் உனக்கு...” என்றான் பிரபு...

“ஹும்ம்ம்... அது சரி... கரெக்ட் தான்... ஆனா, எங்க அனிதாவத் தவிர நீ யாரை வேணும்னாலும் தங்கச்சியா நெனச்சுக்கோ... இப்படி நாலு வருஷமா அவள நாய் மாதிரி சுத்த வைக்கறயே... கொஞ்சம் கருணை காட்டேன் பா...” என்றாள் ஒருத்தி கெஞ்சலாக...

இதைக் கேட்டதும் நால்வரும் பிரபுவைப் பார்த்தனர்... அவன் எதுவும் பேசவில்லை...

“இதுக்குத் தான் நான் உங்க கோஷ்டி பக்கமே வரது இல்ல... இருக்கட்டும்.. அவங்கள விட்ருங்க... ரொம்ப பயந்து போய் இருக்காங்க...” என்றான் பிரபு..

“சரி பிரபு... நாங்க அவங்கள விட்டறோம்... ஆனா, அதுக்கு பதிலா நீ எனக்கு ஒன்னு பண்ணனும்...” என்றாள் அனிதா...

“ஹே... நீ சொன்னதும் கேக்கறதுக்கு நான் ஒன்னும் உன் வீட்டு நாய் குட்டி இல்ல... நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ...” என்று முகத்தில் அடித்த மாதிரி கூறி விட்டு அவர்களை அழைத்துக் கொண்டு சென்றான் பிரபு...

அவன் செல்லும் திசையையே வெறித்துப் பார்த்தபடி மனதில் ஒன்றை நினைத்து சிரித்தாள் அனிதா...

“அண்ணா.. நான் ஒன்னு கேட்டா கோபப்பட மாட்டிங்களே...”என்றாள் மது...

“ம்ம்... தெரியும்.. நீ அவங்க சொன்னது உண்மையானு கேக்கப் போற அது தானே....??” என்றான் பிரபு...

“ம்ம்ம்...” என்றாள் மது...

“அவ ஒரு அடங்காபிடாரி... கொஞ்சம் வசதியான குடும்பம்... அதான், திமிரும் கூடவே பொறந்துருச்சு... என்னோட பி.எஸ்.ஸில இருந்தே ஒரே டார்ச்சர்... என்னை அவ பின்னாடி சுத்த வைக்கனும்னு நெனப்பு... ஆனா, எனக்கு அவளப் பிடிக்கவே பிடிக்காது.. நான் எங்க போனாலும் விட மாட்டா.... அதனால, இப்படிப் பண்றா...” என்றான் சலித்துக்கொண்டே...

“ஹும்ம்ம்... இப்படியும் பொண்ணுங்க இருக்கத்தானே செய்யறாங்க அண்ணா...” என்றாள் அஞ்சலி...

“நிஜம் தான் மா... சரி நான் உங்கள, உங்க கிளாஸ்கே கொண்டு போய் விட்டுட்டுப் போறேன்... இல்லன்னா யாரவது இப்படித்தான் கூப்ட்டு வைச்சு கலாய்ப்பாங்க...” என்று சொல்லி அவர்களை அவர்களது கிளாஸ் ரூம் வரை வந்து விட்டுச் சென்றான் பிரபு...

இதிலேயே பிரபுவின் குணம் நன்றாகத் தெரிந்தது... பிரபுவிடம் விடை பெற்று கிளாஸ் ரூமிற்க்குள் நுழைந்தனர்... ஏற்கனவே நிறைய பேர் அங்கே அவர்களைப் போலவே வந்திருந்தனர்...

உள்ளே இரண்டு அடி எடுத்து வைத்த அஞ்சலிக்குத் தான் பெரிய அதிர்ச்சி... அங்கே.... அது... அது... அவன் தானே.... அஞ்சலிக்குள் ஒரு கேள்விக்குறி...
 
Top