Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயம் கேட்கும் காதல் 15

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
இதயம் கேட்கும் காதல்…

பகுதி 15

அபிதா, சொன்னதை கேட்ட பின்பு மனம் ஒரளவு சமாதானம் அடைந்தாலும், இதழினியிடம் இது குறித்து பேசிட வேண்டும் என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தவன், சில நிமிடத்தில் தன்னிலைபடுத்தி கொண்டான். அதன் பின் நிச்சயதார்த்தத்திற்காக வர சொன்னது நியாபகம் வர, அவசரமாக அறையை விட்டு வெளியேற போனவன், அப்போது தான் சந்துரு நின்றிருந்த நிலையையே கவனித்தான்.

'என்னடா இது இப்படி ஒரு பரவசநிலையில நிக்கறான்?! சம்திங் ராங்…!!!' என்று மனதில் நினைத்தவன், அவனை நெருங்கி முதுகில் 'சட்..' டென ஒரு அடி கொடுக்க, அப்போது தான், அபியின் நினைவில் கனவுலகில் மிதந்து கொண்டிருந்த சந்துரு பூலோகம் திரும்ப, விழுந்த அடியின் தாக்கத்தால் முதுகை வருட கஷ்டப்பட்டவாறே,

'செழியா.. ஏன்டா?!' என்பதான பார்வை பார்க்க, "கனவு கண்டது போதும், அங்க கூப்பிடுறாங்க. அத முடுச்சிட்டு வந்து உன்னை கவனிக்கறேன்.. இப்ப வா.." என்ற படி முன்னே செல்ல, அவனை தொடர்ந்து, தனது கனவை கலைத்த, செழியனை மனதில் வறுத்தெடுத்த படி, பின்னால் சென்றான் சந்துரு.

நிச்சய பத்திரிக்கை வாசிக்க, துவங்கவும் மணமகனாய், தனது முழு உயரமும், கம்பிரமும் மின்ன, ஆணழகனாய் மேடை ஏறினான் செழியன்.

மேடையில், மெல்ல இதழினியின் அருகே வந்தததும், யாரும் அறியா வண்ணம், தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவளின் ரசனை பார்வையோடு, தன் பார்வையை கலந்தவன்.. சட்டென தன் ஒற்றை கண் சிமிட்டி, முத்தமிடுவது போல செய்கை காட்ட, அதிர்ச்சியிலும், வெக்கத்தாலும் முகம் சிவக்க தலைகவிழந்தாள் செழியனின் இதழினி.

இதழினிக்கோ, செழியனின் இந்த செயலை எதிர்பார்க்காததால் வந்த வெக்கம் ஒரு புறம், யாரும் பார்த்தால் என்ன நினைப்பார்களோ என்ற சிந்தனை ஒரு புறமென தவிக்க, அதே நேரம் இதுவரை மனதை அழுத்திய பாரம் சென்ற இடம் தெரியாது மறைந்ததால், ஏற்பட்ட ஆனந்தம் அவளின் அழகை மேலும் கூட்டிய அத்தருணம், நீங்கா ஓவியமாய் பதிவானது நிழல்படமாய்….

அதுவரை இருந்த குழப்பம் நீங்கியதாலும், இப்போதைய வெக்கத்தாலும், அவளின் முகம் காட்டும் வர்ண ஜாலத்தில், அவள் மேல் ஏற்கனவே பித்தாகி நின்றவன் நிலை இப்போது சொல்லவும் வேண்டுமோ.. மோன நிலையில் அவளை விழி வழி உள்வாங்கியபடி நின்றவனை, சந்துரு மற்றும் நண்பர்கள் குலாம் சேர்ந்து கலாய்க்க, அதன் விளைவால் மீண்டவனும்
வெக்கத்தில் முகம் சிவந்தான்.

மங்கள பத்திரிக்கை வாசித்து முடித்தவுடன் மோதிரம் மாற்றிக்கொள்ள சொன்ன நொடி, சிறு புன்னகையோடு, அவள் முன் ஒற்றை காலில் மண்டியிட்டு அமர்ந்தவன், தனது ஒரு கையில் மின்னும் வைர மோதிரத்தை அவளை நோக்கி நீட்டி, "வில் யூ மேரி மீ" என்றதும்..

அவனின் உயரம், கம்பீரம் தாண்டி, தன் காதலுக்காய், இத்தனை வருடம் காத்திருந்த அவனின் நேசத்தில் கண்கள், ஆனந்த கண்ணீர் வடிய.. அதற்கு மாறாய் இதழ்களில் புன்னகை சிந்த, வார்த்தை வெளிவராத நிலையில், தலையை, "ஆம். " என ஆட்டிய நேரம், அவளின் விரல் பற்றி தனது காதலின் பரிசாய் அந்த மோதிரத்தை அணிவித்தான், இதழினியின் இதயம் கவர்ந்தவன்.

அடுத்து அவளும் அவனுக்கு மோதிரம் அணிவிக்க.. அவளை நெருங்கி நின்றவன். "ஏன் லிப்ஸ்.. என்னை கல்யாணம் பண்ணறது அவ்வளவு கொடுமையா….வா.. இருக்கு.?????" என்றதும் புரியாது, அவனின் முகம் பார்த்து, விழித்தவளை நேருக்கு நேர் பார்த்தவன்,

"இல்ல... கண்ணுல இருந்து டேம் ஓப்பன் ஆகி, வாட்டர் பால்ஸ் கொட்டுதே.. அதான் டவுட்ல கேட்டேன் " என்று புன்னகையோடு குறும்பாய் கேட்க, தான் அழுகையோடு அவனுக்கு அளித்த சம்மதத்திற்கு கலாய்ப்பதை உணர்ந்தவள்.. மெல்ல அவனின் முகம் பார்த்து சிரிக்க…

"இது எவ்வளவு அழகா இருக்கு… அதவிட்டுட்டு டேமை ஓப்பன் பண்ணிட்டு.. ஏற்கனவே மண்டபம் புல்லாகி இருக்கு… நீ செய்யற வேலைக்கு இருக்கற தண்ணி பஞ்சத்துக்கு குடத்தை தூக்கிட்டு, ஊரே வந்திட போகுதும்மா…!" என்றபடி, சிரித்தவனை கண்டு,

இதுவரை இருந்த நிலை மாறி, உரிமையோடு தன்னவனை முறைக்க,
"லிப்ஸ், எல் எல் ஆர் போட்டதுமே இப்படி முறைக்கற.. நாளைக்கி ப்ராப்பரா லைசன்சே கிடச்சிடுமே… அப்ப என்னோட நிலைமை…" என்றதும், தான் செய்த செயல் நினைவில் எழ, "சாரி.. தெரியாம…." என்று தடுமாறி சொல்லி, சஞ்சலமும், கூச்சமும் கூட அவசரமாக தலை கவிழந்தவளை நெருங்கியவன்,

"இதழினி, இப்ப இந்த நிமிஷம் முதல், நம்ம வாழ்க்கையோட கடைசி நிமிஷம் வரை, சந்தோஷத்திற்காக கூட உன் கண் கலங்ககூடாது... அதே மாதிரி நான் எப்படி உன்கிட்ட உரிமையா எல்லாமே பேசறேனோ, அதே அளவு என்னை கண்டிக்கவும், தப்பு செஞ்சா தண்டக்கவும் கூட உனக்கு உரிமை இருக்கு.. பட் எதுவானாலும் நம்ம ஒண்ணா இருந்து தான் செய்யனும்.. பிரிவுங்கற பேச்சே வரக்கூடாது.

அப்படி நடந்தா, அது என் காதலோட ஆழத்தை நான், உனக்கு உணர்த்த தவறிட்டேன்னு அர்த்தம்" என்ற வார்த்தையில் இருந்த அழுத்தமும், சொன்ன தோணியும்,
 
Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
அவன் உரைந்ததை கடைசி வரை கடைபிடித்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தை இதழினியினுள் விதைக்க, அதை வெளிப்படுத்தும் விதமாய், ஆதரவாய், அவனின் கரம் பற்றி அவள் ஒப்புதலை அழுத்தமாய் பதித்தாள், அவளின் செழியனிடம்…

சரியாக அந்த நேரம்,
"கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு

பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு

பாருங்கடி பொண்ண பாருங்கடி

வெட்கத்தில் அவ கன்னம் சிவந்திருச்சு

ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு

அரைச்ச சந்தனமும் மணக்க

மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ

செவந்த குங்குமப்பூ மயக்க

தை மாசம் வந்துடுச்சு கால நேரம் சேந்துடுச்சு

ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு மேளச்சத்தம் கேட்டுடுச்சு

மேகம் கருத்துருச்சு மாரி மழை பெஞ்சுடுச்சு

மண்ணில் மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம் கூடிடுச்சு

தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே

தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே.

ஆர்கெஸ்ட்ரா மூலம்.. ஆரம்பமான பாடலுக்கு அபிதா.. வினிதா.. இருவரும் தங்களின் தோழர், தோழிகள் படை சூழ அழகாய் ஆடி கொண்டே மணமகளிடம் வந்து சேர்ந்தனர்.

அடுத்து அவர்கள், செழியன் இதழினியையும் சேர்ந்து ஆட சொல்ல, மறுப்பு சொல்ல நினைத்த இதழினியை, தன் ஒற்றை பார்வையால், சம்மதிக்க வைத்த செழியன், அவளின் கரம் பற்ற, பின்னணியில்,

"நீதானே. நீதானே..
என் நெஞ்சைத்தட்டும் சத்தம்.
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்.

என் மாலை வானம் அர்த்தம்.
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்.
இங்கும் நீயும் நானும் யுத்தம்..
இது கவிதையோ……

நீதானே. நீதானே
என் கண்கள் தேடும் இன்பம்.
உயிரின் திரையின் முன் பார் பிம்பம்.

நம் காதல்.
காற்றில் பற்றும்.
அது வானின்.
காதல் வெப்பம்.
நான் கையில்.
மாற்றிக்கொள்ள.
பொண்ணுன் கூந்தல் விழும்.


யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே
குழி மையல் உண்டாச்சே

யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே
அவள் மையம் கொண்டாச்சே.."

என அழகாய் ஆடி முடிக்க, கை தட்டலும், விசில் சத்தமும், ஆரவாரமும் என அந்த மண்டபத்தில் எழுந்த ஓசை அந்த விண்ணையே தொட்டு மீண்டது.

அனைத்து நிகழ்வுகளையும் கண்ட பெரியவர்கள் மனங்களில் இருந்த நிறைவு அவர்களின் கண்களில் நன்கு தெரிந்தது.

அதிலும் மதிவதனிக்கு, 'தான், தன் மகனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றி விட்டோம்..' என்ற நிறைவே, ஆனந்ததின் உச்சத்தை தொட்டது.

அவர்கள் அனைவருக்கும் இருந்த ஒரே குறை, இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது போன, தங்கள் மகள் ஜோதியை நினைத்து தான்.. இந்தியா வருவதற்காக ஏற்பாடான நேரத்தில் தான், அவர் மறுமுறை கரு உண்டாகி இருப்பது தெரிய, தன்னை முன்னிட்டு, செழியனின் விரும்பத்தையும், ஆசையும் தள்ளி போட விரும்பாத ஜோதி,

"எனக்காக மாற்றி வைக்க வேண்டாம். திருமணத்தை இப்போது இருக்கும் டெக்னாலஜி கொண்டு, நான் இங்கிருந்து பார்த்துக்கொள்கிறேன். எனது ஆசி எங்கிருந்தாலும், என் தம்பிக்கும், அவன் மனைவிக்கும் உண்டு" என்ற பின் மடமடவென வேலைகள் நடக்க துவங்கியது.

இங்கு நடப்பவை அனைத்தையும், நேரடியாக, அங்கிருந்து பார்த்த ஜோதிக்கும் மனம் அவ்வளவு நிறைவாய் இருந்தது.

ஆரம்பகட்ட கர்ப்பகால பிரச்சனையில், செழியனின் மாமாவும், அவளை தனியே விட்டு வரமுடியாது என்பதால், செழியன், தனது அக்கா, மாமாவை காணவும், தனது தேனிலவை கொண்டாடவும், சேர்ந்தே திட்டத்தை தீட்டி வைத்திருந்தான், அங்கே செல்வதன் மூலமாக….
 
Last edited:

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
ஆனந்தத்தை அள்ளி வழங்கும், அற்புதமான அந்த திருமண நாளும் நன்னாளாய் விடிய, செழியனின் இதழ்கள், புரோகிதர் சொன்ன மந்திரங்களை சொன்னாலும்.. கண்களோ, 'எப்போது தன்னவளை காண்போம்' என மணமகள் அறையையே பார்த்திருந்தது.

"மாப்பிள்ளை, சித்த நேரத்தில அவா வந்திடுவா. அதுவரை இங்க பார்த்து செய்யறேளா?!" என்றவரை, எதுவும் செய்ய முடியவில்லையே.. என்ற கடுப்போடு, வேறு வழியே இல்லாமல், அவர் சொன்ன படி செய்து கொண்டிருந்தான் செழியன்.

அவன் அருகே இருந்த சந்துருவின் பார்வையும் அவனவளுக்காக காத்திருந்தது.

முதன்முறை அபிதாவின், குரலை கேட்டே சிறு சலனத்துடன் இருந்தவன், நேரில் அவளின் படபட பேச்சில் மொத்தமாய் கவிழ்ந்து விட்டான். அதோடு, நேற்று செழியன் எடுத்து கொடுத்த லெஹெங்காவில், தேவதையாய் ஜொலித்த அபிதாவின் நடனத்தில், இனி திருமணம் என்று நடந்தால் அது அபியோடு தான் என்று உறுதியே எடுத்துவிட்டான் சந்துரு.

சந்துரு, எடுத்த தனது முடிவை, செழியனிடம் சொன்ன விதம், அப்போது நினைவுக்கு வர மெல்ல நகைத்துக்கொண்டான் சுற்றமும் மறந்து…

நேற்று ஆட்டம் பாட்டம் முடிந்து, அனைவரும் சேர்ந்து புகைபடம் எடுத்து கொண்டிருக்க, செழியனை நெருங்கிய சந்துரு,

"சகல, ஒரு ஹெல்ப்" என்றதும்..

செழியன், "என்ன சகலையா! ஏன்டா எப்பவும் மச்சான்னு தானே கூப்பிடுவ. இதென்ன புதுசா" என்று குழப்பத்தோடு கேட்க,

"அது வந்து சகல. நான் மச்சான்னு கூப்பிட்டா, உன்னோட மச்சினிச்சி, எனக்கு தங்கச்சி ஆகிடுவாளே" என்று சொல்லியவாறு, தனது சுண்டு விரல் வாயில் வைத்து, காலால் கோலம் போட்டவனை, ஒரு மார்க்கமாய் பார்த்தவனுக்கு, அவனின் செயலுக்கான காரணம் புரிந்தாலும்.. கிண்டலுக்காக..

"ஏன்டா, டைல்ஸ்ஸுல ஓட்ட போட ட்ரை பண்ற. பசிச்சா போய் சாப்பிடு, இப்படி விரல சப்பிட்டு நிக்ற" என்றதும்..

"டேய் செழியன். இது வெக்கம் டா" என்றவனை பார்த்து,

"த்தூ.. " என யாரும் அறிய வண்ணம் செய்தவன்,

"வெளிய சொல்லாத கேவலமா இருக்கு" என்றுவிட்டு..

"இந்த கல்யாணத்துக்கு, உங்க அப்பா ஓகே சொல்வாரா?!" என்றதும்,

"செழியா, நீ பொண்ணு எடுத்த இடத்தில பொண்ணு எடுக்க, எதுக்குடா தடா போட போறாரூ எங்க அப்பா. எப்பவும் நான் சொன்னா, கேட்கதவரூ, நீ சொன்னா மட்டும் சரிப்பா... சரிப்பா... நீ சொன்ன மாதிரி செய்யலாமுன்னு சொல்வாரூ. அதெப்படி ன்னு தான் எனக்கு தெரியலடா. இங்க பாரு, இப்ப அது மேட்டரே இல்ல, நீ இப்ப முடிவா என்ன சொல்ற.???" என்றதும்..

"ஓகே சகல. என் கல்யாணம் முடிஞ்சதும், மாமா கிட்ட பேசிட்டு நல்ல நாள் பார்த்திடலாம், சரி தானே." என்றதும் ..

மீண்டும்.. கையை வாயில் வைத்தவனை பார்த்தவன்.. "அடேய் மறுபடியும் குழி தோண்ட பார்த்தா, இதோட அபிவ மறந்திடு" என்றவனிடம், இனி அவ்வாறு செய்திடுவானா… சந்துரு.

அதை நினைத்த படி, நின்றவனை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல், இதழினி தன்னவன் கரம்பற்ற, அழகு தேவதையாய் மலர்மாலை சூடி வர, அவளுக்கு துணையாய், பட்டுபுடவையில் எளிமையாய் இருந்தாலும், அழகாய் தனது அக்காவின் கரம் பற்றி வந்தாள் அபிதா.

செழியன், சந்துரு இருவரும் தங்களின் துணையை ஆவலாய் பார்த்து ரசிக்க, அந்த நேரம் கரடியாய் இருந்தது புரோகிதரின் செய்கைகள். ஆனாலும் அவர் சொல்வதை செய்து தானே ஆக வேண்டும் வேறு வழியில்லையே என்ற நிலை.

நல்லநேரத்தில், தன்னருகே இருந்த தன் காதலிக்கு, மங்கள நாண் கொடுத்து, தன் வாழ்வின் சரிபாதியாய் மாற்றிக்கொண்டான் செழியன்.

அடுத்து வந்த அனைத்து விளையாட்டிலும், இருவரும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்க, இளையவர் பட்டாளம் இருவரையும் கேலி செய்தே ஒருவழியாக்கினர்.

அவர்கள் கேலியில், புன்னகையோடும், அழகாய் சிறு வெக்கத்தை காட்டும் முகத்தோடும், தன்னருகே இருந்த இதழினியை காண காண, தனது எண்ணம் செல்லும் பாதையை உணர்ந்தவனுக்கோ, பெரும் அவஸ்த்தையாய் இருந்தது செழியனுக்கு..

அதை உணராத இதழினியோ, மற்றவர் கிண்டலில் வந்த நாணத்தை மறைக்க, தன்னவனை நெருங்கி, அவனின் கைவளைவில் முகம் புதைக்க..
ஏற்கனவே தன்னுள் எழும் உணர்வுகளால், தாங்க முடியாது தவித்தவனுக்கு, இதழினியின் இந்த நெருக்கம் மேலும் தாபத்தை கூட்டினாலும், இருக்கும் இடமும், சூழலும் சதி செய்ய, யாரும் அறியாது அவளின் காதருகே குனிந்தவன்,

"லிப்ஸ், தயவு செஞ்சு கொஞ்சம் தள்ளி நில்லேன். ப்ளீஸ் " என்றதும்,

'ஏன் . !!!' என்று புரியாது அவனின் முகம் பார்த்தவளுக்கு, அவனின் கண்கள் சொன்ன செய்தி புரிய, அவசரமாய் இரு அடி விலகி நின்றவளுக்கு, மறுமுறை அவனை நெருங்கவே பதட்டமாய் இருந்தது.
 
Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
அவளின் அவசரமான விலகலில் மனம் சுனங்கினாலும் .. அவனின் பார்வைக்கான அர்த்தத்தை, நொடியில் புரிந்து கொண்ட தன்னவளை நினைத்து பெருமையாகவும் இருந்தது.

அனைத்துவிதமான சம்பிரதாயங்களும் முடிய, இதழினியை மனநிறைவோடு செழியனின் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர் அவளின் வீட்டினர்.

நேற்று போல இன்றும், அவர்கள் கலங்கிட கூடாது என செழியன் நேற்று இரவே அவர்களிடம்.. "நான் இப்ப உங்க குடும்பத்தில ஒருத்தனா மாற தான் வந்கிருக்கேனே ஒழிய, உங்ககிட்ட இருந்து உங்க அக்காவ பிரிக்க வரல. இதை தெளிவா நியாபகம் வச்சுக்கோங்க. அத புரிஞ்சிட்டீங்கன்னா, நாளைக்கு எங்கள மனசார வழியனுப்பி வைக்கனும். ஓகே தானே.." என பேசி, அவர்களை தெளிவுபடுத்தியிருந்தான்.

மாரியப்பனுக்கு, இனி தன் குடும்பத்திற்கு மூத்தமகனாய் எல்லாமுமாய், முன்நின்று பார்க்க, மருமகன் வடிவில் வந்த மகனை நினைத்து பெருமையில் திழைத்தார்.


********


ஹாய் ப்ரண்ட்ஸ் ரொம்ப ரொம்ப சாரி, சரியா யூடி கொடுக்க முடியல. அதுக்காகவே பெரிய யூடியோட வந்திருக்கேன். சீக்கிரமாவே அடுத்த யூடியோட வர்றேன். போன யூடிக்கு லைக், கமெண்ட்ஸ் கொடுத்த எல்லாருக்கும் தேங்க்ஸ்..
 
Advertisement

Advertisement

Top