Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 14

Advertisement

துமி

Well-known member
Member
அத்தியாயம் 14

சதுரங்கத்தில் மிக பாதுகாப்பாக ராஜா இருப்பார். இராணி சென்று அவருக்காக போரிடுவார். நிஜத்திலோ நேர் மாறாக, ராஜா களத்தில் இறங்கி போராட வேண்டி உள்ளது. நேர்மையான வழியில் மட்டும் அல்லாது சில தந்திரமான யுக்திகளையும் பயன்படுத்தி தான் ஒரு மன்னர் போராட வேண்டி உள்ளது‌.

விவேக்கிற்கு இராஜாதித்யனை கண்டதும் வெலவெலத்து விட்டது. ஒரு நாட்டின் மன்னருக்கு எதிராக துப்பாக்கியை நீட்டினால் என்ன ஆகும் என்பதை அவன் நன்கு அறிவான். அது இராஜ குடும்பத்து உறுப்பினர்களாகவே இருந்தாலும், இராஜ துரோக குற்றமாக கருதப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்படும்‌.

வேடன் விரித்த வலையில் விழுந்த மிருகத்தின் நிலையில் இருந்தான் விவேக். மெதுவாக துப்பாக்கியை கீழே இறக்கினான். இத்தனை விசுவாசமாய் இருந்தும், தனக்கே இப்படி ஒன்றை செய்து விட்டானே என்ற கோபம் அவன் கண்களில் எட்டிப் பார்த்து. அப்பா, அம்மா நினைவுக்கு வந்து கண்களை கலங்க வைத்தனர்.

இராஜாதித்யன் அழுத்தமான காலடிகளோடு விவேக்கை நோக்கி வந்தான். மரணம் நெருங்குவது போல் இருந்தது விவேக்கிற்கு. சரி என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று மனதளவில் தயாரானான்.

“என்ன விவேக் பயந்துட்டியா?” என்று புன்னகையுடன் கேட்டான் இராஜாதித்யன். பதிலுக்கு புன்னகைக்கவோ பதில் சொல்லவோ முடியவில்லை விவேக்கால்.

பொங்கி வரும் உணர்வுகளால் விவேக்கால் எதுவும் பேச முடியவில்லை.

நரகம் என்பதை என்ன என்று இதுவரை விவேக்கிற்கு தெரியாது. இன்று தெரிந்து கொண்டான். தெரிய வைத்திருந்தான் இராஜாதித்யன்.

விவேக் காட்டிற்குள் நுழைத்தது முதலாக அவன் செயல்கள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு கொண்டே தான் இருந்தது. குறிப்பாக இராஜாதித்யனுக்கு எதிராக அவன் துப்பாக்கியை தூக்கி நின்ற சில விநாடிகள் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் பதிவு செய்யப்பட்டு விட்டன.

“பயப்படாத… சும்மா ஒரு‌ சேப்டிக்கு தான் இப்படி செஞ்சேன். நாளை பின்ன நீயே எனக்கு எதிரா அரசியல் செய்ய கிளம்பிட கூடாதுல.” என்று விளக்கம் சொன்னான் இராஜாதித்யன்.

“சார் உங்களுக்கு என்‌ மேல நம்பிக்கை இல்லைனா நீங்க என்னை வேலையில வச்சிருக்க வேண்டிய அவசியமே இல்லையே! எதுக்கு சார்…?” அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை.

“விவேக் உன்னை எப்போ நான் நம்பாம போனேன்?” தன் கம்பீர குரலில் கேட்டான் இராஜாதித்யன்.

‘இதோ… இப்பொழுது தான்!’ என்று விவேக்கின் கண்கள் அவனை குற்றம் சாட்டின.

மர்மமாய் புன்னகைத்தான் இராஜாதித்யன்.

“விவேக் உன்னை மாதிரி ஒரு நம்பிக்கையான ஆள் தான் எனக்கு தேவை. அதுக்காக தான் உன்னை இத்தனை நாள் என் கண்காணிப்புலையே வச்சிருந்தேன். என் தங்கச்சிக்கும் கல்யாணம் செஞ்சி குடுக்க நினைச்சேன்.

உனக்கு தெரியாத ஒரு விசயம் நான் சொல்லவா விவேக். என்னோட இந்த பதவி எப்போ வேணா பறி போகலாம். அப்படி நடந்தா நான், என் அம்மா, பொற்செல்வி எல்லாரும் உயிரோட இருப்போமான்னு தெரியலை.” என்றான் இராஜாதித்யன்.

“சார்…!!!” என்று அதிர்ச்சியில் கையில் வைத்திருந்த துப்பாக்கியினை கீழே போட்டான் விவேக்.

ஒரு அரச பதவி என்று இருந்தால், அதற்கு ஆபத்து நாலாபக்கமும் இருந்து வரத்தானே செய்யும். அது எப்படி இவன் பதவி பறி போகும் என நினைத்தபடியே இருந்தான் விவேக்.

இந்த இடத்தில் விவேக் அதை வாய் விட்டு கேட்டிருக்கலாம்; அல்லது இராஜாதித்தயனே இன்னமும் விளக்கி இருக்கலாம். அப்படி மட்டும் நடந்திருந்தால், பின்னால் நேரப் போகும் சில அனர்த்தங்களை தடுத்திருப்பான் விவேக்.

“விவேக் நான் இனி என்ன சொல்ல போறேனோ அதை கவனமா கேட்டுக்கோ. ஏன்னா இதுக்கு அப்பறம் நீ என்னோட அசிஸ்டென்ட் டா இருந்த பழைய விவேக் இல்லை.” என்றவன் தொடர்ந்து பேசினான்.

இராஜாதித்யன் பேச பேச, வாய் வார்த்தைகளே இல்லாமல், தலையை கூட ஆட்ட தோன்றாமல் சிலை போல நின்றிருந்தான் விவேக்.

வாழ்வில் முதன்முறையாக அரச வேலைக்கு எழுதி போட்டதற்கு தன்னை தானே கடுமையாக சாடி கொண்டான் விவேக். டைம் மெஷின் போல எதாவது கிடைத்தால், தன்னுடைய கடந்த காலத்திற்கு சென்று, தன் தலையிலே நாலு போட்டு வீட்டிலே நிம்மதியாக இருக்குமாறு சொல்லுவிட்டு வந்துவிடுவான்.

இரவு மெல்லிய குளிரை கூட்டிக் கொண்டு வந்தது. வானத்தில் நிலா முழுதாய் ஆட்சி செய்தது. அரண்மனை முழுக்க பூக்காளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வண்ண வண்ண தோரணங்களிடையே மக்கள் கூட்டம் மிதந்துக் கொண்டிருந்தனர். இத்தனைக்கும் பணக்காரர்கள் கூட்டம் மட்டுமே அரண்மனைக்குள் இருந்தது.

மாபெரும் பணக்காரர்கள் என்ற வரிசையில் ஆதிரையனின் பெற்றோரும் அரண்மனைக்கு வந்திருந்தனர்.

தான்ய லட்சுமி தங்கசரிகைகளால் நெய்த பட்டுபுடவையினை கட்டி, வைரங்களால் தன்னை அலங்கரித்திருந்தார். தேவநாதனும் தனது அந்தஸ்தை நிரூப்பிப்பது போல விலை உயர்ந்த ஆடை மற்றும் கடிகாரத்தினை அணிந்து வந்திருந்தார்.

வம்படியாக தான்ய லட்சுமி ஆதிரையனையும் அங்கே இழுத்து வந்திருந்தார். மற்றவர்கள் போல அவனால் பகட்டாக உடுத்த முடியவில்லை. மருத்துவர் என்பவர் பலதரப்பட்ட சூழ்நிலையிலும் இருந்து வரும் நோயாளிகள் அணுகும்படி இருக்க வேண்டும். அத்தகைய காரணத்தாலே பெரும்பாலும் மருத்துவர்கள் கண்களுக்கு உறுத்தாத இயல்பான உடைகளே அணிவர். அப்படியே பழகி போன ஆதிரையனுக்கு பகட்டாக உடுத்த முடியவில்லை. அவனோடு பெரும் போராட்டம் நடத்தி, “எப்படியோ வந்து தொலை…” என்றிருந்தார் தான்ய லட்சுமி.

“ம்மா…” என்று ஆயிரத்து ஓராம் முறையாக தான்ய லட்சுமியை நச்சரித்துக் கொண்டிருந்தான் ஆதிரையன்.

“என்ன டா?” தான்ய லட்சுமி.

“வீட்டுக்கு போலாம் ம்மா…”

“இப்ப தானே டா வந்தோம். அதுக்குள்ள என்ன அவசரம்?”

“இங்க யாரையுமே எனக்கு தெரியலை ம்மா. எனக்கு ரொம்ப போர் அடிக்குது.”

“யாரையுமே தெரிய மாட்டேங்குதுனு தான் இங்க உன்னை கூட்டிட்டு வந்ததே. கிளம்பற வரை வாயை மூடிட்டு இருக்கனும்.” என்று‌ மிரட்டினார் தான்ய லட்சுமி.

விட்டால் ஓடிவிடுவான் என்று ஆதிரையனை தன்னோடு வைத்துக் கொண்டார் தான்யலட்சுமி. தேவநாதனோ தன்னுடைய தொழில் சகாக்களுடன் ஐக்கியமாகிவிட்டார்.

தான்ய லட்சுமியும் மற்ற கனவான் வீட்டு பெண்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அங்கே உபசரிக்கவென சுந்தரேஷ்வரியும் சற்று நேரத்தில் வந்தார்.

அனைவரையும் வரவேற்றவர் கண்ணில் ஆதிரையன் விழுந்தான். பார்ப்பதற்கு நல்ல அழகாய், வசீகரமாய் உள்ளான். தங்களுக்கு இணையான செல்வாக்கு உள்ள குடும்பம். இவனை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்திருந்தால் கூட சுந்தரேஷ்வரிக்கு மனம் சற்றே சமன்பட்டிருக்கும். என்ன சொல்ல அவர் மகள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்!

“உங்க பையன் என்ன பண்ணுறாங்க?” என்று சுந்தரேஷ்வரி சம்பிரதாயமாக கேட்டார்.

“ஒரே பிள்ளைனு அவன் இஷ்டத்துக்கு டாக்டருக்கு படிக்க வைக்கிறோம்.” என நீட்டி முழக்கி சொன்னார் தான்ய லட்சுமி.

“பரவாயில்லையே… அப்பாவோட பிசினை பாத்துக்கற ஐடியா இல்லையாப்பா?” என்று இம்முறை ஆதிரையனிடமே கேட்டார் சுந்தரேஷ்வரி.

திருத்தமாக இருப்பவனை காண காண, பொற்செல்வி இவனை அநியாயமாக இழந்து விட்டதாக, அபத்தமாக நினைத்தார் சுந்தரேஷ்வரிக்கு.

“இப்போதைக்கு அப்பாவே நல்லா பாத்துக்கறார் மேடம். இன்னும் நான் படிப்பையே முடிக்கலை. கொஞ்ச நாள் போயி அதை பார்ப்போம்.” என்றான் ஆதிரையன்.

“அத்தை மாப்பிள்ளை வந்துட்டு இருக்காராம். ஆரத்தி ரெடி பண்ணி எடுத்துட்டு வர சொன்னாங்க.” என்று சுந்தரேஷ்வரியின் முன்பு வந்து நின்றாள் சக்தி.

எப்படியும் சக்தியை பார்க்க வாய்ப்பு குறைவு என்பதால், அதுவும் அவள் இருக்கும் இடத்திலே தானும் இருந்துக் கொண்டு, அவளை பார்க்க முடியாமல் இருக்கும் அவஸ்தையால் தான், தன் அன்னையிடம் அங்கிருந்து செல்ல வேண்டும் என நச்சரித்துக் கொண்டிருந்தான் ஆதிரையன். ஆனால் இப்பொழுதோ அவனின் எண்ணங்களின் வண்ணமாய் அவள் வந்துக் கொண்டிருந்தாள்.

தூரத்தில் அவள் வரும் பொழுதே சுற்றி இருந்தவர்கள் சலசலக்க, திரும்பி பார்த்தான் ஆதிரையன்.

பட்டு தாவணி சரசரக்க, அழகான ஒப்பனையோடு, அங்கத்தில் தங்கம் மினுமினுக்க, தேவையின் சாயல்களை பரிசாக பெற்றுக் கொண்டு நடந்து வந்தாள் சக்தி.

பையனுக்கு மூச்சடைத்தது!

வந்தவள் சுந்தரேஷ்வரியிடம் சேதி சொல்வது போல சொல்லிவிட்டு, போகிற போக்கில் அவனுக்கும் ஒரு பார்வையை பரிசளித்துவிட்டு போனாள்.

எத்தனை யுகங்கள் ஆனாலும் சரி, ஆதிரையன் அவளின் இந்த ஒற்றை பார்வை தந்த உணர்வுகளை மறக்கவே மாட்டான்.

“என்ன டா பார்வை பலமா இருக்கு! நீ சொன்ன பொண்ணு அதானா?” என்று ஆதிரையனின் விலாவிலே இடித்தார் தன்யாலட்சுமி.

அப்பொழுது தான் ஸ்மரணையே வந்தது ஆதிரையனுக்கு. பக்கத்தில் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தாயின் நியாபகமும் தன்னை போல வந்தது.

“அம்மாவை பக்கத்துல வச்சிட்டே பாக்குறீயேடா?” என்று அவனை வாறினார் தான்யலட்சுமி.

“ம்மா…” என்று அலறினான் ஆதிரையன்.

“வந்ததுல அம்மா நொம்மானுட்டே இருக்கியே… அந்த பொண்ணை கூட்டிட்டு வந்து இன்ட்ரோ கொடுத்தா என்ன? அழகா லட்சணமா தான் இருக்கா! அவளும் டாக்டருக்கு தான் படிக்கலாமா? ஆமா அந்த பொண்ணு என்ன இராஜாவோட அம்மாவை அத்தைன்னு கூப்பிடுவது?” என்று அடுத்தடுத்து கேட்டார் தான்ய லட்சுமி.

“பொறுமையா ஒவ்வொரு கேள்வியா கேளும்மா…” என்று சிரித்தான் ஆதிரயைன்.

“சரி டா மவனே… நீ ஆன்னு பாத்தியோ அந்த பொண்ணை நினைச்சி தான் டெய்லி பைத்தியகாரனாட்டம் கட்டில்ல உருளறியா?” என்று கேட்டார் தான்ய லட்சுமி.

வெட்கம் கலந்த புன்னகையுடன் ஆம் என தலையசைத்தான் ஆதிரையன்.

“அந்த பொண்ணு என்ன பண்ணுறா?” அடுத்த கேள்வியை தொடுத்தார் தான்ய லட்சுமி.

“எம்பிஏ முடிச்சிருக்காம்மா… அப்பாக்கு அப்பறம் பிசினசை அவளே பாத்துக்கட்டும். செம்ம பிரில்லியன்ட் அவ…” என்றான் கண்கள் மிளிர‌.

“இன்னும் அந்த பொண்ணை எனக்கு இன்ட்ரோ கூட குடுக்கல. அதுக்குள்ள சொத்து மொத்தத்தையும் தூக்கி குடுக்க முடிவு பண்ணிட்டியாடா?” என்று அங்கலாய்த்தார் தான்ய லட்சுமி.

ஆதிரையனின் முகம் வெளிச்சமாய் இருந்தது.

“இப்பவே இப்படின்னா கல்யாணம்லாம் ஆச்சுன்னா, அம்மான்னு ஒருத்தி இருக்கறது நினைப்பில இருக்குமோ இருக்காதோ‌..‌.” என்று அவனை வம்பிளுத்தார் தான்யலட்சுமி.

“நீ என் செல்ல அம்மாவாச்சே… உன்னை எப்படி ம்மா மறப்பேன். எனக்கு குழந்தை பிறந்தா நீ தானே பாத்துக்கனும்” என்று சொல்லி தான்ய லட்சுமியை வெறுப்பேற்றினான் ஆதிரையன்‌.

சக்தியை பற்றி நீண்ட பேச்சு, அவள் யாரென்பதை தவிர்த்து சுற்றிக் கொண்டு சென்றது. கவனமில்லாமல் விட்ட சின்னஞ்சிறு விசயங்கள் பூதாகரமாய் மாறும் பொழுது, வலியின் அளவு தாங்கொணா!

ஆதிரையனை இங்கு கண்டதும் மெல்லிய படபடப்பு இதயமெங்கு விரவியது சக்திக்கு. ஆதிரையனை அவள் இங்கு எதிர் பார்க்கவே இல்லை. தன்னோடு பழகினாலும் அவனும் மிகப்பெரிய செல்வந்தன் என்பதை மறந்து போனதை எண்ணி தன்னை தானே குட்டிக் கொண்டாள் சக்தி.

ஆதிரையனை கண்ட மாத்திரம் அவனிடம் சென்று பேச வேண்டும் என்று அவள் நா துடிதுடித்து. அவன் பக்கம் செல்ல வேண்டும் என கால்கள் அடம்பிடித்தது. செய்த அலகாரத்தோடு எப்படியாவது அவனின் முன் சென்று நின்றுவிட வேண்டும் என்பது மட்டுமே எண்ணமும் முழுதாக இருக்க, அதற்கு தோதாக, சுந்தரேஷ்வரியை அழைத்து வருமாறு அவளிடம் சேதி சொல்லி அனுப்பினார்கள் யாரோ.

சுந்தரேஷ்வரியின் முன் சென்று நிற்பதா என்று மனம் சற்றே சுணங்கினாலும், ஆதிரையனின் முன்பு சென்று நிற்கும் எண்ணம் தான் பிரதானமாக இருந்தது. கால்கள் தன் போக்கில் எட்டு போட்டன.

ஆதிரையன் தனது வழக்கமான ஒரு பாக்கெட்டில் கையை வைத்துக் கொண்டு, மறுகையால் சிகையை கோதிக் கொண்டு பேசும் அழகை, இமை வெட்டாமல் இரசித்தாள் பெண்.

அவன் முன்பு வந்து நின்றவள், ஒரு நொடி தான் அவன் கண்ணை பார்த்தாள். அது பேசும் பாஷை அத்தனையும் அவளுக்கு எப்படியோ அத்துப்படி ஆகின.

மெல்ல விரிந்த அவன் கண்களும், அதைவிட அதிகம் கண்ணின் கருமணிகளும் அவளை சுருட்டிக் கொண்டன.

காதலில் அழகான நேரங்கள் மௌனங்களின் பரிபாஷைகளே! நயனங்களின் விழி வீச்சில் பாதிக்கப்பட்டவள், தனியே சென்று அமர்ந்து கொண்டாள். இனிய அதிர்வு உடல் முழுக்க! கொஞ்ச நேரம் அதை அப்படியே அனுபவித்தாள் சக்தி.

மாப்பிள்ளை ஊர்வலம் ஆரம்பித்தது. காட்டில் விவேக் ஒரு புலியினை வேட்டை ஆடி, அதை எடுத்துக் கொண்டு, அவனுக்கென அலங்கரிக்கப்பட்ட காரில் வந்தான். மனம் இராஜாதித்யன் பேசியதை சுற்றியே வட்டம் போட்டது. இது எப்படி சாத்தியம் என்றெல்லாம் அவனுக்கு தோணவில்லை. போகும் வரை போகட்டும், வாழும் வரை வாழுவோம் என்று முடிவோடு பயணித்தான் விவேக்.

அரண்மனையின் பாதையில் அவனது கார் நுழைந்ததுமே மேள தாளங்களோடு, இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட வெடிகளோடு அமர்க்களமாக விவேக் வரவேற்கப்பட்டான்.

மனதில் பல எண்ணங்கள் சுழன்றாலும், எல்லாத்தையும் மூட்டை கட்டிவிட்டு, இன்றைக்கு நடக்கும் வைபோகத்தை மட்டும் மனதில் நிறுத்தி முடிவு செய்தான் விவேக். முயன்று மற்ற எண்ணங்களை ஒதுக்கி‌ வைத்தாலும், திருமணத்தை பற்றிய உற்சாகம் துளி கூட அவன் முகத்தில் இல்லை.

எது எப்படி இருந்தாலும், மனதை ஒருநிலை படுத்தி, அரண்மனைக்கு ஏற்ற மணமகனாக, கம்பீரமாகவே நுழைந்தான் விவேக்!

தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுத்த ஜொலிப்பில் மிக அழகாக மிளிர்ந்தான் விவேக். அவனை புதிதாய் பார்ப்பது போல பார்த்தாள் பொற்செல்வி. சில நாள்களுக்கு முன்பு விவேக் அழகானவன் என்று யாரேனும் சொல்லி இருந்தால், அவர்களை பகடி செய்திருப்பாள் பொற்செல்வி. ஆனால், இன்று அவளின் இதயமே சொல்கிறதே எப்படி?
 
ஹலோ டோம்லிஸ் 🥹🥹🥹 இன்னைக்கு கொஞ்சம் நிறைய வேலை. சோ அவசர அவசரமா எபி டைப் பண்ணி போட்டுருக்கேன். ஸ்பெல்லிங் மிஸ்டேக்லாம் இருந்தா அட்ஜஸ்ட் கரோ டோலிஸ். நாளைக்கு எடிட் பண்ணிடறேன். இப்போ டாட்டா 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
 
சக்தி ஆதி இரண்டு பேரும் கண்ணுலே காதல் வளர்க்கிற மாதிரி சீன் வச்சிட்டு 🤩🤩🤩🤩🤩 தாங்க முடியாத வலின்னு ஒரு வார்த்தை சேர்த்துருக்கீங்களே 😕😕😕

ஆதி இன்னும் சக்தி யார் என்கிற உண்மை தெரியாமல் தான் இருக்கானா 🤗🤗🤗🤗

ராஜா எதிர் காலத்தில் ஏதோ பெரிய ஆபத்தில் சிக்க போறானா 🤔🤔🤔 ஆனாலும் இந்த ராஜ்ஜியம் இவனுக்கு உரிமை இல்லாதது தானே 😏😏😏😏

விவேக்குக்கு எதிரான ஆதாரத்தையும் ராஜா உருவாக்கி வைக்குறானே 🤭🤭🤭🤭

ஆதி வந்திருக்கிறதை ராஜா பார்த்தால் என்ன ரியாக்ஷன் கொடுப்பான் 😆 😝 😝 😝


ஆதி சக்தி லவ் சீன் படிச்சிட்டு எப்படி ராஜாவை ஹீரோவா ஏத்துக்க முடியும் 😣 😣 😣 😣 😣
 
Last edited:
அருமையான டீ பதிவு 😍 😍 😍 😍. சூப்பர். சொந்தமே இல்லாத இடத்துல பாயப்போட்டு படுத்துகிட்டு இந்த கூஜா விவேக்கை மொரட்டறது .
டேய் விவேக் இந்த கூஜா ஒன்டவந்த பிடாரி ஊர்பிடாரிய ஆட்டையப் போடப் பாக்குது.
அப்ப சக்திக்கு இதுவரை நடந்தது பத்தாதுன்னு இப்ப மனசையும் கலங்கடிக்கப் போறீங்க.
 
Lovely update dear
Yarum yarukum sonthamillai pola
Yov writer eh Ivan epudi raja anan
Aathi Kum sakthi yarunu triyala
Kadaisila ellarum Thani Thani ya odavida poraiya
Vivek ah mapilaiyakum marmam enna
Pirkalathula avdlavathu uiroda irukatum na
 
பாவம் ஆதி குறுக்க நிக்குற கௌசிக்கை பத்தி தெரியாம ப்யூச்சர் பிளான் எல்லாம் போடுறான்.... 😔😔😔😔

தான்யலக்ஷ்மி இவ்வளவு பேசுறீங்க பொண்ணு யாரு என்னன்னு விசாரிக்கிறது இல்லையா..... என்னவோ போங்க... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️


ராஜா ரொம்ப அலர்ட்டா தான் இருக்கான் விவேக்கையும் மிரட்டி வச்சுட்டான் தனக்கு எதிரா போகக் கூடாதுன்னு.....
 
Top