Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-20

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-20

வடபழனி குரு லாட்ஜ்.. மெனேஜர் ரூமில் இனியன் , அசோக் மற்றும் தீபக் இருந்தனர்... “எதுக்கு கூப்பிட்ட, கடைசியா அடிவாங்கினது மறந்து போச்சா...” இனியன் ஆரம்பிக்க..

“அதெல்லாம் ஞாபகம் இருக்கு... நீ ஏதோ புதுசா பிஸினஸ் செய்ய போறீயாமே கேள்விப்பட்டேன்..”

அவனை பார்த்து ம்ம் என்று தலையை அசைத்தான் இனியன்...

“பணம் ரெடிபண்ணிட்டிருக்கே கேள்விப்பட்டேன்.. அதுக்காக தான் கூப்பிட்டேன்..”

இவன் நல்லவன் இல்லையே தீடிரென்று என்ன பாசம் இனியன் தனக்குள் நினைக்க...

“அது விஷியமாதான்... எனக்கு ஒரு வேலை முடிக்கனும்.. நீ முடிச்சிக் கொடுத்தா ஐந்து லட்சம் தரேன்...”

“இனியா இவன் எதையிலோ கோர்த்து விட பார்க்கிறான்.. உங்கிட்டே நிறைய ஆளயிருக்கு எதுக்கு எங்களை கூப்பிட்ட..”

“இருக்காங்க.. அப்பாகிட்ட சொன்னா போது.. ஆனா இது பர்சனல் அதான் யாரும் நம்பமுடியில இனியா..”

அசோக் இனியனின் காதில் மெதுவாக, “ கழிட்டி விட்டான் போல..”

அது உங்களுக்கே தெரியும் நினைக்கிறேன்... சின்னதிரை நடிகை மோனலும் நானும் பழகினது... நான் அவளை உயிருக்கு உயிரா காதலிச்சேன்... ஆனா அவ கேரக்டர் வேற மாதிரியிருக்கு.. ஏற்கனவே மேரேஜ் ஆயிட்டு போல... தெலுங்குல இருந்து தமிழ் சிரியலுக்கு வந்தவ.. அதான் பேக் கிராவுன்ட் தெரியில... நாங்க இரண்டுபேரும் சேர்ந்திருந்த வீடியோவை வச்சி மிரட்டுறா... பணம் கேட்கிறா.. இல்ல சொத்து எதாவது எழுதி தர சொல்லுறா.. அப்பாவுக்கு தெரிஞ்சா கொண்ணுடுவாரு... அதான் உங்ககிட்ட ஹெல்ப் கேட்கிறேன்.

ம்ம்... உன்கிட்ட எவ்வளவு பணம் கேட்டா... -இனியன்

அது மூனு சி...

“மூன்று கோடி... மவனே எங்களுக்கு ஐந்து லட்சம் தர... எவ்வளவு ரிஸ்க் தெரியும்தானே... இல்லனா நீயே எடுத்திருப்பியே..” சிகரெட்டை பத்தவைத்த படி கேட்டான் இனியன்..

“சாரி இன்னும் பத்து லட்சம் சேர்த்து தரேன் அப்பாவுக்கு தெரியாமல் பார்த்துக்கனும்...”

“டீல், பணத்தை ரெடி செஞ்சிக்கோ... இன்னும் ஒரு வாரத்தில் உன்கிட்ட ஆதாரமிருக்கும்...”

இவர்கள் வெளியே வர...

இனியா வேணாம்டா எனக்கு பயமா இருக்கு...

“கடைசியா இந்த வேலையோட முடிச்சிடலாம் அசோக்... வெளியே வட்டி வாங்கிறதுக்கு இது பரவாயில்ல இவனுக்காக இல்லையின்னாலும் நம் குருநானாவுக்காக செய்யலாம்... எப்படி பிளாக்மெயில் செய்யறா...”

மச்சான் நாளைக்குள்ள அவளை பத்தி முழு டிடைல்ஸ் வேணும்... காலையிலிருந்து நைட் வரை என்ன செய்யறா , எங்க போறா அவளுடைய ஆக்டிவிடிஸ் எல்லாம் சேகரிச்சிட்டு வா...

“அசோக்கு.. தேனு வரதுக்குள்ள இந்த பிராஜக்ட் முடிச்சிடனும்டா.. அப்பறம் நான் பிஸி என் தேனுக்கூட...”

“சரிடா மச்சான்...”, இரவு முழுவதும் உட்காரந்து ப்ளான் போட ஆரம்பித்தார்கள்...

அங்கே தேனு தன் வீட்டிலிருந்து இனியனுக்கு போன் செய்ய... இனியன் சைலன்டில் போட்டிருந்தான்...

“முதல்ல என் ஹெர்ஸ்டைல் மாத்துனும் அசோக்கு... இந்த வடநாட்டு ஸ்டைல்ல ஸ்பா , ஹெர்ஸ்டைலிங் எங்கயிருக்கு பார்...”

சௌகார்பெட்ல இருக்கும்டா , அங்கதான் சேட்டு பசங்க அதிகம்.. சரிவா அங்க போலாம்.. தலைமுடியில் முன்னாடி லைட்டா ஸ்பைக் விட்டு கலரிங் , மீசை முழுசா மழிச்சிவிட்டான்.. காதில் சின்ன ரிங் மாதிரி ஸ்டட்.. மச்சான் எப்படிடா இருக்கேன்...

செமையா இருக்கடா அப்படியே வடநாட்டு பையன் மாதிரி... என்னடா உதட்டல லிப்ஸ்டிக் போடுற...

இது லிப்ஸ்டிக் இல்லடா லிப் பாம்... உதட்டை ஸப்டா வச்சிக்க.. உன்கூட சேர்ந்து தம் அடிச்சி பாருடா என் லிப்ஸை... தடுத்துபோயிருக்கு தேனுக்கு கஷ்டமா இருக்காது... அதான் சாப்டா மாத்துறேன்..

அசோக் தலையில் அடித்துக்கொண்டான்...

“சரி எல்லாம் ரெடியா...கையில் டெப்லெட் வச்சிருக்கீயா... “

“வச்சிருக்கேன் பாஸ்”...ஓகே... கட்டை விரலை உயர்த்தி காட்டினான்...

காலை 5.30 மணிக்கு மகாபலிபுரம் அருகேயுள்ள ரிசார்டில் தன் ஷீட்டிங்கை முடித்துவிட்டு காரில் வந்துக்கொண்டிருந்தாள் மோனல்.. அந்த ஈ.சி.யார் ரொட்டில் கார் பிரேக் டவுனாகி நிற்க...

“டிரைவர் என்னாச்சு...”

கார் திடீருன்னு நின்னுடுச்சு... இப்போதான் சர்விஸ் விட்டோம் என்னனு தெரியில..

இப்படி பாதியிலே நிற்குது ரோட்டும் சரியில்ல கால்டாக்ஸி ஏதாவது கிடைக்குமா கேளு என்றாள்...

பிளாக் பி.எம்.டபிள்யூ கார் அவர்களை தாண்டி செல்ல... சடாரென்று நின்னது... அதிலிருந்து இறங்கி வந்தான் அசோக்... “மேடம் என்னாச்சு கார் பிரேக் டவுன்னா” என்றான்..

“ஆமாங்க ஸார்... கொஞ்சம் லிப்ட் தாங்க , இங்க தனியா நிற்க பயமாயிருக்கு...”

இருங்க எங்க பாஸ்கிட்ட கேட்டு வரேன்...திரும்ப மோனலிடம் வந்தான் அசோக்.. எங்க பாஸ் உங்களை வரசொன்னார்.. வாங்க மேடம்..

“தாங்கஸ் சிட்டிக்குள்ள விட்டா போதும்.. நான் போயிடுவேன்... “டிரைவரிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்... அவள் அம்மாவிடம் போன் செய்து மம்மி கார் பிரேக் டவுன்.. வேற கார்ல லிப்ட் கேட்டு வரேன்..

பி,எம்,டபிள்யூ காரின் பின் சீட்டின் கதவை திறந்தவுடன் அப்படியே ஷாக்காகி நின்றாள்... பாஸ் இவங்கதான் ஹெல்ப் கேட்டது..

“ஹாய்...கம் இன்”, இனியன் சொல்ல... உள்ளே வந்து உட்கார்ந்தாள்.. தேங்கஸ் ஸார் ஐம் மோனல்... உங்களுக்கு தமிழ் தெரியுமா..

“உடனே அசோக் லைட்டா தெரியும் , இவங்க தூரத்து உறவு அவங்க பாட்டி சௌவுகார்பேட் தான், அவங்களை பார்க்க வந்து போயி தமிழ் கற்றுக்கிட்டார்... பட் இங்கிலீஷ் வெல் வர்ஸ்டு...”

ம்ம் ... உங்க பாஸ் பேச மாட்டாரா... மோனல் இனியனை பார்த்து வழிய...

“ஒய் நாட்... ஐ யம் தேவ்சிங்... ப்ரம் மும்பாய்... ஆட் கம்பெனி வச்சிருக்கேன், மாடலிங் கூட...”

“ஓ.. ஐ ஸி பார்த்தாவே தெரியுது... யு ஆர் ஸ்மார்ட். அதுவும் நீங்க சிரிச்சா உங்க தெற்றுபல் சைடுல இருக்கு பாருங்க.. அவ்வளவு வசீகரமாயிருக்கு...”

ம்ம்..அச்சா... இந்த தேனு ஒருமுறை கூட சொன்னதில்ல எருமை மாடு மனதில் தேனுவை தீட்டிக்கொண்டு.. மோனலை பார்த்து புன்னகைத்தான்...

அப்படியே எல்லோரையும் மயக்கிறீங்க..

ம்ம்... ஆச்சரியமாக மோனலை பார்க்க..

க்கும்..க்கும்..பாஸ் என்று அசோக் தன் தொண்டையை செருமினான்... கண்களால் இனியனை முறைக்க...

சுதாரித்துக் கொண்டான் இனியன்...

நீங்க எப்படி சென்னைக்கு...

நைட் ,ஒரு பேஷன் ஷோக்கு கெஸ்டா கூப்பிட்டாங்க அதான் பாஸ் அட்டன் செஞ்சாரு.. நாங்க தேடுற மாடல்ல கிடைக்கில..-அசோக்

என்னது மாடல் தேடுறீங்களா...

ம்ம் எங்க ஆட் கம்பெனியில தீபிகா , ஆலியா பட் இவங்களாம் எங்க கம்பெனியோட மாடல்தான் அசோக் எடுத்து விட.. இப்போ கூட ஒரு சௌத் சைட் மாடல் தேடுறோம் கிடைக்க மாட்டிறாங்க...

இனியன் தன் வலது கையை கண்ணத்தில் முட்டுக்கொடுத்து , மோனலை ரசித்த படி நீங்க கூட பார்க்க மாடல் போலதான் இருக்கீங்க... நீங்க ஆக்டரா...

ஹய்யோ , எப்படிங்க கண்டுபிடிச்சீங்க.. யூவார் வெரி ஸ்மார்ட்.. என்று அவன் கையை பிடித்தாள்...

சீரியல்ல ஆக்ட் செய்றேன்... நீங்க பார்த்ததில்ல..

நோ.. என்று உதட்டை பிதுக்கினான்...

நீங்க எங்க தங்கிருக்கீங்க மோனல் கேட்க... அதற்கு அசோக் சோழால இன்னும் த்ரீ டேஸ் இருப்போம்..

அப்ப எங்க வீட்டுக்கு ஒருநாள் லன்ச்க்கு வரனும்.. உங்க போன் நம்பர் சொல்லுங்க..

பாஸ் யார்கிட்டியும் பர்சனல் நம்பர் தரமாட்டாரு... என் நம்பர் நோட் செஞ்சிக்கோங்க.. தன் நம்பரை தர... ஓகே எங்க வீடு வந்திடுச்சு... வாங்களேன் காபி குடிச்சிட்டு போவீங்க...

நோ..நோ எங்க பாஸ் ஒன்லி ஹாட் டிரிங்க்ஸ் தான்..

ஓகே மோனல் ஸீ. யூ.. பை... இனியன் கூற..

பை ஸ்வீட் ஹார்ட் ஹன்ட் ஹான்ட்ஸம்... என்று கையை ஆட்டினாள்.. அவளை இறக்கிவிட்டு கார் அடுத்த தெருவை தான்டினதும்...

அசோக் திரும்பி ,ஏன்டா... இந்த மோனலை பார்த்து அப்படி ஜொள்ளு விடுற... நீ விட்ட ஜொள்ளுல காரே மிதக்குது... இருடா என் தங்கச்சி தேனுகிட்ட சொல்லுறேன்... போட்டோ பிடிச்சி வச்சிருக்கேன் தம்பி... நீ என்ன செய்யறன்னு அப்டேட் கொடுக்கதான் தேனு என்னை அப்பாயின்மென்ட் பண்ணிருக்கு...

போடா பெரிய தேனு... எவ்வளவு அழகா கொஞ்சறா இந்த மோனல்.. உன் தொங்கச்சி என்னை கொஞ்சிருக்காளா... என் பல்லை கூட நோட் பண்ணுறா பாரு... செக்ஸி லேடி...

அவ உன்னை மட்டும் கொஞ்சலடா... அதான் இந்த தீபக் விழுந்துகிடந்தான்... காரை வாடகை எடுத்த இடத்தில் விட்டுட்டு தன் பைக்கில் இருவரும் வீடுவந்து சேர்ந்தனர்.

அசோக்கு.. என் கனிப்பும் கரெக்டா இருந்தா நாளைக்குள் உனக்கு போன் வரும்டா... சோழா ஹோட்டல்ல தேவ்சிங் பேருல ரூம் புக் பண்ண சொன்னீயா உன் பிரன்ட் கிட்ட..

எல்லாம் சொல்லிட்டேன்.. அங்க நாம போக போறதில்லையே...

ஆனா மோனல் போவா... இனிமேதான் ஷார்ப்பா இருக்கனும்... வீட்டின் காலிங்பெல் அடிக்க கதவை திறந்தான் அசோக்..

யாருடா மச்சான்... இனியன் எட்டிப் பார்க்க

மாமா என்று சிவா தன் கண்கள் விரிய இனியனையே பார்த்தபடி நின்றிருந்தான்...

மாமா என்ன புது கெட்டப்பு யாரை ஏமாத்த...

எல்லாம் உங்கக்காவை தான்... சிவா தன் செல்லில், இனியனை போட்டோ எடுக்க.. இனியனிடம் ,இந்தாங்க அம்மா கொடுத்து அனுப்பிச்சாங்க... கையில் பலகாரம் தூக்கை கொடுத்தான்..

என்னடா இருக்கு... எல்லாம் உனக்கு பிடிச்ச பனியாரம், தேன்குழல், போளி முக்கியமா வடை ..இதை அக்கா போனவுடனே கொடுக்க சொன்னா..

தேனு வரலையாடா..

இல்ல மாமா.. இன்னும் இரண்டு நாள்ல வருவா... சும்மா ஹிந்திகாரன் மாதிரியிருக்க மாமா.. ஏன் மீசையெல்லாம் எடுத்திட்ட... எங்கனா சினிமாவுல நடிக்க போறீயா என்று பேசிக்கொண்டே போனில் போட்டோவை தன் அக்காவுக்கு அனுப்பினான்..

என்னடா செய்யுற..

ஒண்ணுமில்ல மாமா... நீ அக்காயில்லாம ஃபீல் பண்ணுறேன் அவ நினைச்சிட்டிருக்கா... ஆனா நீ என்ஜாய் செய்யறேன் போட்டோ எடுத்து அனுப்பிருக்கேன்.. லூஸூ உன்னை இன்னும் நம்புது பாரேன்..

அடிங்க எழுந்து போடா... தொலைச்சிடுவேன்... மீசையில்லாத பையனெல்லாம் பேச வந்துட்டான்...

அப்ப உங்களுக்கு எங்க மீசையிருக்கு... இதுல கலரிங் வேற.. சைட்ல என்ன மாமா ரென்டு கோடு.. காதில கம்மல் வேற இதில அசோக் மாமாவேற மாத்திருக்க... சீக்கு வந்த கோழி மாதிரி..

பாத்ரூம் போயிட்டு வெளியே வந்த அசோக்..டேய் என்னடா சொன்ன ,சிவா மேல விழுந்தான்...

-----சிக்க வைக்கிறாள்
 
Nirmala vandhachu ???
?????
 
Last edited:
Top