Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -13

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -13

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை இனியனுக்கும், நந்தினிக்கும் கல்யாணம், பெரிய வீட்டில் தடபுடலாக விருந்து தயாரானது... உறவினர்கள் அந்த ஊரிலுள்ளவர்கள் அனைவருக்கும் இங்கே தான் விருந்து..

சனிக்கிழமை காலையிலே ரேனு வந்திருக்கினாள்.. சிவா வரவில்லை, வரவேண்டாம் என்று கூறிவிட்டான் இனியன்.. நீ சக்திக்கு துனையா வீட்டிலே இரு.. இனியன் கண்டிப்பாக சொல்ல.. சிவாவால் மீற முடியவில்லை...

வாங்க அத்தை, அவர்களை அனைத்துக்கொண்டான் இனியன்..

இனியனின் முகத்தை தடவி, இனியா எப்படிடா இருக்க, அவன் கண்கள் கூறிய செய்தி புரிந்துக்கொண்டாள் ரேனு..

டேய் உன் மனசுக்கு எப்பவும் நல்லதே நடக்கும்... சாப்பிட்டு போய் உன் பொண்ணை பாருங்க அத்தை..

அதிர்ச்சியா மருமகனை பார்த்தாள், என்னடா சொல்லுற..

ம்ம் என்னை கட்டிக்க போறவ உனக்கு பொண்ணு முறைதானே..

ஓ.. அப்படி சொல்றீயா..

இருகைகளை விரித்து மாடியிலிருந்து பாட்டி என்று கத்திக்கொண்டே ஓடிவந்தான் பப்பு..

பப்பு பார்த்து போ என்று அவனுக்கு பின்னாடி நடந்துவந்தான் மோகன்..

பப்புவை தூக்கி முத்தமிட்டாள் ரேனு.. ஏன்டா நீ வந்து பிக்கப் செய்யலாமில்ல மோகனை கடித்துக்கொண்டாள்..

பாட்டி, மம்மியை பார்க்க போகலாம் வாங்க என்று கையை பிடித்து இழுத்தான் பப்பு...

இனியா புதுப்பெண்கிட்ட அப்படி பழக்கிட்டான் போல.. மோகனும், இனியனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்..

இப்ப எதுக்குடா இப்படி சிரிக்கிறீங்க..

ஆமாம் அத்தை நான் கட்டிக்க போறவளை பப்புக்கு ரொம்ப பிடிச்சிருக்காம்... மோகனை அருகில் உட்கார வைத்து இட்லியை பியத்து அவனுக்கு ஊட்டினாள்..

......

ரேணுவை ரெட்டி வீட்டிற்கு அழைத்து சென்றான் மோகன்... அங்கே துளசி வாங்க மதனி என்று கூப்பிட.. வந்த உறவினர்கள் ரேணுவிடம் பேசி ஐக்கியமானார்கள்.. பூவை எடுத்து வந்து நந்தினிக்கு சூடினாள் ரேணு..

அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டாள் நந்தினி... மாலை நேரம் மெகந்தி பங்ஷனுக்காக குடும்பத்தில் உள்ள அனைவரும் பிஸியாக இருந்தார்கள்... மூன்று நாட்களாக இனியன் அங்கு வருவதில்லை தேனு பேசியதே முட்களாக குத்திக்கொண்டிருந்தது...

ஐலா ரேணுவை பார்த்து வாங்க என்று சொல்லிவிட்டு ரெட்டியிடம் பேசினாள்...

ஐலா இவங்க கலெக்டர் தம்பியோட அத்தை, கொஞ்சம் கவனிச்சிகோடா..

சரிங்கப்பா..

பாட்டி அம்மாவ பார்த்தீங்களா பப்பு, ரேணுவை பார்த்து கேட்டான்..

பார்த்தேன்டா சொல்லுபோதே ஐலா வர.. ஹய்யா அம்மா வந்துட்டாங்க என்று ஐலாவின் மேலேறினான் பப்பு...

அவனை தழுவி முத்தமிட்டு கீழே இறக்கினாள், நீ போய் விளையாடு பப்பு அவனை அனுப்பிவிட்டு சுற்றும் முற்றும் திரும்பி பார்த்து, தன் தாயின் அருகில் வந்தாள்..

அம்மா என்று அழைக்கும்போதே ரேணுவிற்கு கண்கள் கலங்கிவிட்டது, வீட்டின் இளவரசியாக வளர்ந்தவளாயிற்றே... தன் பெண்ணை இன்னொரு வீட்டில் பார்க்கும் போது மனசு வலித்தது..

அம்மா அழாதே.. எதாவது கேட்டானா உன் மருமகன்..

இல்லை என்று தலையை ஆட்டினாள்..

ஹப்பா என்று பெருமூச்சு விட்டாள் ஐலாவான தேனு..

அவனுக்கு தெரியாது நினைக்கிறீயா தேனு, என்கிட்ட கேட்கல, ஏன்னா அவனுக்கு என்னை பற்றி நல்லாவே தெரியும்... இப்போ உனக்கு திருப்தியா தேனு, அங்க என் மாமன் பொண்ணு ரேவதியை அனுப்பி இனியனை மயக்க சொன்ன.. அதுமுடியல.. இப்போ நந்தினி.. அவனுக்கு தலையெழுத்து இரண்டாவது கல்யாணம் ஆச்சு நல்லாபடியா இருக்கனும்.

அம்மா...

வாயை மூடுடி.. என்னாச்சுன்னு கேட்டாலும் சொல்லமாட்டே.. இல்லைனா செத்துப்போயிடுவேன் மிரட்டுற... ஒரு கொலையை பண்ணிட்டேன் வேற சொன்னே.. எதுவும் எனக்கு புரியல..

இங்கபாருடி நீ உலகத்துல எந்த மூளைக்கு போனாலும் உன்னுடைய நிம்மதி என் மருமகன் இனியன் கிட்டதான் புரிஞ்சுகோ தேனு. மிரட்டியும் சொல்லிவிட்டாள், மன்றாடியும் சொல்லிவிட்டாள், ..

எதுவும் சொல்லாமல் விட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.. தேனு, சரிம்மா உன் மருமகன் நந்தினியை கல்யாணம் செஞ்சிட்டா, சந்தோஷமா இருப்பான்.. நீ ஏன் ஃபீல் செய்யற..

அவன் கட்டிப்பான் நினைக்கறீயா..

ம்ம்ம்.. நாளைக்கு கல்யாணம், ஏதாவது ஏடாகூடம் செஞ்சா ஊர்மக்கள் சும்மாயிருப்பாங்களா சொல்லு.. சரி கீழே போலாம் ரொம்ப நேரம் பேசிட்டிருந்தா சந்தேகம் வந்திடும்..

மெகந்தி பங்க்ஷன் தொடங்கியது, இனியன் ஷெர்வானியில் உள்ளே நுழைய நந்தினி பிரண்ட்ஸ் மற்றும் உறவுக்கார பெண்கள் நடனமாட தொடங்கினர்... பெரியவர்களுக்கு தான் இந்தமுறை பிடிக்கவில்லை.. சரி நந்தினி ஆசையாக கேட்டாளே என்று இந்த மெகந்தி பங்ஷனுக்கு ஓகே சொன்னார் ரெட்டி...

ரோஸ்நிற லெகங்காவில் நந்தினி ஜொலிக்க, பியூட்டிஷியன் பெண் ஒருத்தி அவளுக்கு மருதானி இட ஆரம்பித்தாள்.. உடனே கூட்டத்தில் சலசலப்பு.. மாப்பிள்ள வருகிறார் என்று...

....

இரவு பதினொரு மணிக்கு, காலையில் நடக்கும் கல்யாணத்திற்காக அங்கே பூக்களால் மேடையை அலகரித்துக்கொண்டிருந்தனர், அதை மேல் பார்வையிட்டு ரெட்டி நடந்துக்கொண்டிருக்க , அவரிடம் வந்தாள் ஐலா

என்னடா தூங்கலையா..

இல்லப்பா.. நாளைக்கு என்ன நடக்குமோன்னு பயமாயிருக்கு.. நம்ம நந்தினியையும், யாராவது கடத்திட்டு போயிட போறாங்க. நீங்க அவரை வாட்ச் பண்ணிட்டேதானே இருக்கீங்க..

ஆமான்டா.. சுற்றி ஆட்களை போட்டிருக்கேன்.. எங்கேயும் போகமுடியாது.. நாளைக்கு கல்யாணம் நடக்கும்... பயப்படாதே மகளே..

உங்களுக்கு அவரைபற்றி தெரியாதுப்பா... என்ன செய்யபோறாரோ தெரியல... ரொம்ப அமைதியா இருக்காரு..

நீ போய் தூங்குமா.. எல்லாம் நல்லதே நடக்கும்.. ஐலாவை அனுப்பிவிட்டு டேய் குமார் சீக்கிரம் வேலையாகட்டும்... பேசிட்டு இருக்காதே அவனை .

அந்த காவிரி ஆற்றங்கரையில் குற்றுயிருமா இருந்த ஐலாவை தூக்கிக்கொண்டு ஆஸ்பிட்டலில் சேர்த்தவராச்சே.. தனக்கு குழந்தை பாக்கியமேயில்லை என்று ஊரார் கூறுபோது மனவேதனை அதிகமாகும் துளசிக்கு.. அன்று அப்படிதான் வாங்க நாம்ம தமிழ்நாட்டிலுள்ள திருத்தலங்களுக்கு போயிட்டு வரலாம் என்று கேட்க.. அதற்கு ஒப்புக்கொண்டு இருவரும் மீனாட்சியை தரிசிட்டு திரும்பி வரும்போதுதான்... கார் பாலத்தின்மேல் பஞ்சராகி நின்றது.. டிரைவர் வேற டையரை மாற்றிக்கொண்டிருக்கும்போது.. காரின் கதவை திறந்து வெளியே வந்தார் ரெட்டி...

நேரமோ மாலை கடந்துபோகும் 6.30 மணி.. அந்த பாலத்தின் சுவற்றை பிடித்து கீழே பார்த்தார்.. முதலில் ஏதோ என்று நினைக்க உற்று பார்க்கும் போதுதான் தெரிந்தது.. யாரோ ஒருவர் தண்ணீரில் கரை ஒதுக்கியது.. அதுவும் பெண்போல் இருக்க..

டிரைவர் உடனே பாலத்திற்கு கீழே செல்லுமாறு கூறினார்.. துளசியும், ரெட்டியும் ஓடிச்சென்று பார்க்க, தேனுவை தூக்கி ,ஏங்க மூச்சுயிருக்கு.. சீக்கிரம் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகலாம்..

ஆண்டவன் தனக்கு கொடுத்த பெண்ணாகவே நினைத்தார்கள் தம்பதியர் இருவரும்...

இரவில் நெடுநேரம் தூக்கம் வரவில்லை தேனுவிற்கு, எல்லா கடவுளுக்கும் வேண்டுதல் வைத்தாள்.. எப்படியாவது நந்தினிக்கும், மாமாவுக்கும் கல்யாணம் ஆயிடனும்..

....

காலை விடியல் யாருக்கு சாதகமாக இருக்குமோ, விடிந்தும் விட்டது, சமையல் மும்முரமாக நடக்க, கிராம் என்பதால் ஆட்களின் கூச்சல் அதிகமாகவே இருந்தது..

மணப்பெண்ணுக்கு எண்ணெய் நலங்கு வைத்து, தலைகுளித்து ரெடியாகிக் கொண்டிருந்தாள்... தன் மகனுக்கு அழகாக பட்டுவேட்டி சட்டை போன்ற உடை அனிந்திருந்தாள்... சிகப்பு நிறப்பட்டில் தலைபின்னி பூச்சூடிருந்தாள் தேனு... துளசி அவளை பார்த்து..

தேவதை மாதிரியிருக்கடா.. என் கண்ணே பட்டுட்டும், அவளுக்கு திருஷ்டி சுற்றி, உங்கப்பா இந்த ஆரத்தை போட்டுவிட சொன்னார்... அவளுக்கு ஆரத்தை பூட்டி விட்டாள்.. அதற்கு மேட்சா தோடு, வளையலும் இருந்தது...

இவர்கள் கீழேயிறங்கி வருவதை ரெட்டி பார்த்து புரித்து போனார்... என் தங்கம், பப்புக்கும் செயின் போட்டுவிடும்மா என்றார்..

ஒவ்வொருத்தராக கல்யாணத்திற்கு வர ஆரம்பித்தார்கள்... மங்களவாத்தியம் இசைக்கப்பட்டது.. மேடையின் மேலே ரெட்டியும், துளசியும், அவருடைய தம்பி, தங்கை அனைவரும் இருந்தார்கள்..

பட்டுவேட்டியில் கழுத்தில் ஐந்துபவுன் தங்க சங்கலி அணிந்து கையில் பிரேஸ்லேட் கம்பீரமாக நடந்து வந்தான் இனியன்... ஏற்கனவே ஆணழகன் தான் இன்று கல்யாணம் வேற சொல்லவா வேண்டும். இனியனின் அலப்பறையை... கூடவே ஒரு பக்கம் அசோக்கும், மறுபக்கம் மோகன் அவனுக்கு பாடிகார்டு போல வந்தன..

மேடையின் படியேறும் போது தேனுவை பார்த்தான். ஒரு பார்வைதான் அதில் அனைத்தும் படம்பிடித்துக்கொண்டான் ரசனையோடு... பெண்ணவள் முகத்தில் எந்த சோகமும் இல்லை.. சாதாரணமாக தான் இருந்தாள்..

ஐயர் மந்திரங்கள் சொல்ல, பெண்ணை அழைத்து வாருங்கள் என்றார்.. பச்சை நிற பட்டில் மணப்பெண்ணாக நந்தினி நகையணிந்து கழுத்தில் மாலையிட்டு அவளை நான்கு பெண்கள் அழைத்துவந்தன.. தலைகுனிந்து மெல்ல நடந்துவந்தாள்... தூரத்திலிருந்த தேனுவின் மனமோ மௌனமாக இருந்தது.

தன்னவன், தன்னுயிருக்கு உயிரானவன், சிறுவயதிலிருந்தே மனதில் விரும்பியவன்.. அவனுடன் ஊடல், கூடல் இரண்டிலுமே கலந்தவள்... இன்னொருத்திக்கு கொடுக்க போறாள்... தன்னுயிர் பிரிந்து போவதுபோல் இருந்தது தேனுவிற்கு... கடவுளே என்னால தாங்கமுடியல..

சட்டென்று அவளுடைய மூளை அவளை மாற்றியது, தன் மாமன் சந்தோஷம் தான் முக்கியம்.. அதுக்காக எதுவும் செய்ய தான் தயார்... மனதை தேற்றிக் கொண்டாள்.. வந்தவர்களை வரவேற்க சென்றாள்.. அவள் பின்னாடியே சின்னாவும் நின்றான்.

ஐலா.. இந்த பட்டுபுடவையில நீ ரொம்ப அழகாயிருக்க சின்னா வழிய... இந்த ரோஸ் பூவை வச்சிக்கோ ஐலா என்று தலையில் வைத்துவிட்டான்.. சட்டென்று திரும்பி மேடையை பார்த்தாள்... இவன் பேசுவதை கலெக்டர் பார்த்தான் அவன் தோளை உரித்துவிடுவான்..

கெட்டிமேளம் கெட்டிமேளம் கூற...மங்கள வாத்தியம் இடைவிடாமல் ஒலித்தது...

தாலியை கையில் எடுத்தான் இனியன்...

நிறுத்துங்க என்று ஒருவன் எழுந்து கத்த.. அந்த மண்டபமே அமைதியானது... வாத்தியங்கள் நிறுத்த.. ஐயர் மந்திரத்தை நிறுத்த கையில் தாலியோட இருந்தான் இனியன்..

சாதாரண செக்குடு சட்டை போட்டு, கையில் ஒரு பேப்பரை காட்டினான்.. எனக்கும் நந்தினிக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு... சட்டபடி ரிஜிஸ்டர் மேரேஜ் செஞ்சிக்கிட்டோம் சொல்ல...

அப்படியே அதிர்ந்து நின்றார் ரெட்டி.. திரும்பி நந்தினியை பார்த்தார்.. அவரிஉ முகத்தை பார்க்கமுடியாமல் தான் தவறு செய்துவிட்டேன் என்று தலை கவிழ்ந்து நின்றாள்..

இதை கேட்டவுடன் சுவற்றில் சாய்ந்து சிலையாக நின்றாள் ஐலா...

அதற்குள் ரெட்டியின் தம்பி.. என் பொண்ணு அப்படிப்பட்டவ கிடையாது முதல்ல நீ எங்க ஜாதி ஆளா சொல்லு என்று அவனின் சட்டையை பிடித்தார்.. அதற்குள் உள்ளூர் போலீஸ் அங்கே வந்தார்கள்.. இந்த மைக்கல் தம்பி சொல்றது அனைத்தும் உண்மை எந்தவித கலாட்டாவும் செய்யாம அவருடன் அந்த பெண்ணை அணுப்பிவிடுங்க என்றார் சப் இன்ஸ்பெக்டர்..

நந்தினி கீழேயிறங்கி அனைவரையும் ஒரு முறை பார்த்தாள்.. எல்லோரும் வெட்டுவோம் குத்துவோம் என்ற ரீதியில் பார்த்தனர்... உடனை எஸ்கேப் ஆயிடு நந்தினி.. இல்ல இன்னைக்கு பலிகடா நீதான் என்று அவள் மனம் சொல்ல மைக்கலின் கையை பிடித்து நடந்தாள்..

ஸாரி ஸார்... பிரச்சனை ஆயிடுச்சு என்று சப்-இன்ஸ்பெக்டர் இனியனை பார்த்து மன்னிப்பு கேட்டார்... அவர்கள் சென்றவுடன் ரெட்டி குடும்பமே ஒப்பாரி வைத்தனர்..

ஒரு கையில் தாலியையும், மறுகையை கண்ணத்தில் வைத்துக்கொண்டு தன் அன்பு மனைவி தேனுவை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தான் இனியன்...

அங்கேயிருந்த உறவினர்கள் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர்... அசோக் இனியன் தோளை தொட்டு..

மச்சான் ஆரம்பிக்கவா என்றான்..

ம்ம் என்று... மோகனை பார்த்தான்.. சரிங்க மாமான்னு சொல்லி அந்த வீட்டின் பெரிய கேட்டை பூட்டினான்...

... உன்னில் சிக்க வைக்கிற

.....
 
Nirmala vandhachu ???
 
Top