Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் -17

Advertisement

lakshu

Well-known member
Member
எங்கேயோ பார்த்த மயக்கம் -17

விடியற்காலை சூரியன் மெல்ல தன் வருகையை நீரினால் ஆன இந்த உலகத்திற்கு உணர்த்திக் கொண்டிருந்தது.. குன்னூரின் மலையை தழுவிய பனிமேகங்களை காண தேவலோகம் போல் இருந்தது... மலர் தன் வாசலில் கோலம்போட்டு நிமிர...

அவளுக்கு பிடிக்குமே என்று இரண்டுமாதம் முன்பு... ஜீஜே கலர்கலரான ரோஜா செடிகள் வாங்கி வீட்டின் வெளிபுறத்தில் வைத்திருந்தான்...

அனைத்து செடிகளிலும் பூக்கள் பூத்திருந்தன... பல வண்ண ரோஜாக்கள் ..

சிறிதுநேரம் நின்று அதை ரசித்தாள்.. இன்று தலைவன் வருகிறான் , அவனை வரவேற்க பூத்ததோ..

வாக்கிங் முடிந்துவிட்டு திரும்பிய தாமஸ்..

மலர்... ஜீஜே போன் செய்தாரா.. இன்னையோடு ஒன்றரை மாதம் ஆயிடுச்சு... நான் ஆபிஸூக்கு போய் விசாரிக்கவா.. அவர் அட்ரஸ் கொடு மலர்..

அங்கிள் அவர் ரொம்ப பிஸியா இருப்பாரு நினைக்கிறேன்..

இவர்கள் பேசும்போதே வந்துவிட்டார் ஜானகி... என்ன நினைக்கிறேன், கழுத்தில தாலி கட்டிட்டு போனவன்தான் என்னாச்சுன்னு தெரியல...

நீ ஏதாவது தம்பிக்கிட்ட சண்டை போட்டியா கரெட்டாக ஜானகி கேட்க..

நிமிர்ந்து பார்க்காமல் தலை குனிந்தபடி... இல்ல பாட்டி... போன் பேசினாரு...

எங்களுக்கு நம்பிக்கையில்ல , நீ எங்க எதிரே பேசு மலர்..நாங்க பதினோரு மணிக்கா வரோம் சரியா என்று விடைபெற்றார்கள்...

.....

இந்த பாட்டி வேற, இப்படி விடாப்பிடியா இருக்கு... தனது மனதில் அவரை திட்டிக்கொண்டே உள்ளே சென்றாள் மலர்...

அன்று அவளுக்கு லீவ் என்பதால், காலையில் கோவிலுக்கு சென்று திரும்புகையில் அவள் பக்கத்தில் கார்வந்து நின்றது... சடனாக நிற்கவும் ஜீஜேவா என்று நினைத்தாள்... அவனை பார்க்கும் ஆர்வம் மனதில் ஒரு சிறிய இடத்தில் இருந்தது தான்...

மலர்... என்று டாக்டர் இறங்க..

ஆங்கிள் எப்படியிருக்கீங்க...

மலரின் கழுத்தில் இருந்த தாலியை பார்த்து... எப்படா கல்யாணமாச்சு... ஆங்கிள் கிட்ட சொல்லவேயில்ல, அவர் கோபித்துக்கொள்.

அங்கிள் ஸாரி அவசரமா நடந்துடுச்சு...

மாப்பிள்ளை என்ன செய்யறாரு, பெயரு என்ன..

அன்னைக்கு ஆக்ஸிடன்ட் ஹஸ்பிட்டல்ல சேர்த்தனே ஃபிரன்டு..

ஆமாம்.. ஜீஜே.. அவரு யாருன்னு சொல்லும்போதே டாக்டர் போன் அடிக்க... போனை அட்டன் செய்தார்... சீக்கிரமா ஆபரேஷன் தியேட்டர் ரெடி செய் நான் வந்துட்டே இருக்கேன்..

ஸாரிடா அவசர கேஸ்... நான் உடனே கிளம்பனும்..

சரி என்று மலர் தலையை ஆட்டினாள்..

காலை செய்த ரவை உப்புமாவை கையில் பிசைந்து கொண்டே சாப்பிடாமல் உட்கார்ந்திருந்தாள்... நமக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு மாதம் ஆயிடுச்சு.... இப்போ என்ன செய்யறது ஜீஜேவை கூப்பிட சொல்லுறாங்க... சிந்தனை பலமாக இருந்தது மலருக்கு, புதுசா இப்பதான் பிஸினஸ் ஆரம்பிச்சிருப்பான் இப்போ போய் அவனை டிஸ்டர்ப் செய்யக்கூடாது...

சரிதான் காலை சாப்பாடே 12 மணிக்குதான் சாப்பிடுறீயா மலர் வைதேகி திட்டியபடியே உள்ளே நுழைந்தார்.. அவருடன் ஜெஸி மற்றும் ஜானகியும் வந்தார்கள்...

சாரதா அக்கா வரலையா ஜெஸி என்று வைதேகி கேட்க...

இதோ பத்துநிமிஷத்தில வந்துடுறேன் சொன்னாங்க பா..

இந்த மலர் பொண்ணு ஏன் இப்படி மாறிடுச்சு...

வாங்க என்று மலர் கூப்பிட

மலர் இவ்வளவு லேட்டாவா சாப்பிடுவ..

புருஷனவிட்டு பிரிந்து இருக்கிறது கஷ்டம்தானே வைதேகி என்றார் ஜெஸி..

சரி ஜீஜேவுக்கு போனை போடு, அவளது மொபைலை எடுத்து தந்தார் ஜானகி...

இவர்களை மீறி எதுவும் பேசமுடியவில்லை மலருக்கு... இவர்கள்தானே யாருமில்லாமல் நின்றபோதும் தாயாக பார்த்துக்கொண்டார்கள்..

இவர்கள் சொல்லுவதை என்றுமே மீற மாட்டாள் மென்மலர்..

ஜானகி கொடுத்த செல்லை வாங்கி ஜீஜேவுக்கு டயல் செய்தாள்...

முதல் கால் முழு ரிங்கும் அடித்து முடித்தது...

போனை எடுக்கல பாட்டி...

திரும்பவும் கால் பண்ணு மலர்..

மறுபடியும் டயல் செய்தாள்.. போன் எடுக்கப்பட்டது... தயங்கியபடி ஹலோ என்றாள்..

ஹலோ என்று ஒரு பெண்ணின் குரல் ஜீஜேவின் போனிலிருந்து...

ஜீஜே இல்லையா மலர் கேட்க..

ஸார் போர்டு மீட்டீங்கல இருக்காரு.. நீங்க யாரு, அப்பாய்ன்மென்ட் வாங்கியிருக்கீங்களா மேடம்..

இல்ல... மலர் பேசினேன் சொல்லுங்க... போனை துண்டித்துவிட்டாள் மென்மலர்..

பேசிட்டேன் போதுமா பாட்டி, இப்போ என்னை நம்புறீங்களா..

இல்லடா மலர்... கல்யாணம் ஆயி ஒரு மாசம் மேல ஆயிடுச்சு.. தாலி பிரிச்சி கோர்க்கனும், அதுக்குதான் கூப்பிட சொன்னேன்.. என்ன சொன்னாரு தம்பி..

அவர் ரொம்ப பிஸி ஆன்ட்டி... கொஞ்ச நேரம் கழிச்சு பேசுறேன் சொன்னாரு..

ஹோட்டல் சோழாவில் மீட்டிங் முடிந்து , சாப்பிட உட்கார்ந்தான் ஜீஜே... தனது மொபைலை ஆன் செய்து பார்க்க... வந்த காலில் மலரின் நம்பர், அந்த நம்பரை ஒய்ப் என்று சேவ் செய்திருந்தான்..

ராக்கி மலர் போன் செய்திருக்கா, ஏன்டா எடுத்துட்டு வந்து கொடுக்கல...

அண்ணா... பி.ஏ. கிட்ட வச்சிட்டு ரெஸ்ட் ரூமிற்கு போனேன்..

லூஸூ நர்மதா அட்டன் செஞ்சாளா... ஏற்கனவே மலருக்கு என்மேல நல்ல நம்பிக்கை... போடா..

ஸாரி.. அண்ணா..உடனே போன் பண்ணி கேளுங்க..

டயல் செய்ய... மலரின் போன் சுவிட்ச் அப் என்று வந்தது... டேய் உடனே ப்ளைட்டை புக் செய், சாப்பிடாமல் ஏர்போர்ட்க்கு சென்றார்கள்...

......

இரண்டு நாட்கள் லீவ் என்று ஹரியும் வீட்டிற்கு வந்திருந்தான்...

மறுபடியும் மலருக்கு போன் செய்து பார்த்தான் ஜீஜே... அனைத்து வைக்கப்பட்டுள்ளது என்ற மெசேஜ் டோன் வந்தது...

ஷீட்... என்ன செய்யறா.. ஒரு போனை கூட அட்டன் செய்யமாட்டுறா.. இந்த அபிக்கு போனை போட்டா அவளும் எடுக்க மாட்டுறா... டென்ஷன் ஆனான் ஜீஜே...

ச்சே என்று அங்கிருந்த சீட்டில் ஓங்கி குத்த... அதிலிருந்த ஆணி அவன் சுண்டுவிரல் மற்றும் கை ஒரங்களில் கிழித்தது..

அந்த வலியை அவன் பொருட்படுத்தவில்லை, கர்சீப்பை எடுத்து கையில் கட்டிக்கொண்டான்... கோயம்பூத்தூர் ஏர்போர்ட்டில் வந்துறங்கினான்...

மணி ஏழானது குன்னூரை நோக்கி அவனது ப்ளாக் பி.ஏம்.டபூள்யூ கார் சீறிச்சென்றன...

அவன் காரை திறந்து இறங்கி நிற்க... ஜீஜே என்று அவனது மலர்தேவதை ஓடிவந்தாள்...

தன் இருக்கைகளை விரித்து நின்றான்...

“உயிரே… உயிரே…
வந்து என்னோடு கலந்துவிடு…
உயிரே… உயிரே…
என்னை உன்னோடு கலந்துவிடு…
நினைவே… நினைவே…
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு…
நிலவே… நிலவே…
இந்த விண்ணோடு கலந்துவிடு…
காதல் இருந்தால்…
எந்தன் கண்ணோடு கலந்துவிடு…”
காலம் தடுத்தால்…
என்னை மண்ணோடு கலந்துவிடு…

ஓடிவந்து ஒரு நிமிடம் அவன் முகத்தை பார்த்தாள்... ஜீஜே என்று அவனை அனைத்துக்கொண்டாள்..

அவளை ஜீஜே இறுக தழுவினான்... நிமிர்ந்து அவன் முகம் முழுக்க முத்தமிட்டாள்... ஜீஜே.. ஐ லவ் யூ.. இச்.. இச் என்ற முத்த மழை...

மகிழ்ச்சியில் அவனால் எதுவும் பேசமுடியாவில்லை அனுபவித்து நின்றான்...

குறுக்க ஒரு நாய் வர ராக்கி சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தினான்... கார் குலுங்கி நிற்க... கண்ணை திறந்தான் ஜீஜே.. ச்சே கனவா, தனது வாட்சை பார்த்தான் மணி ஏழானது..

அண்ணா இன்னும் 15 நிமிஷத்தில நேதாஜி காலனிக்கு போயிடலாம்...

ம்ம்... என்று தலைமூடியை கோதிவிட்டான்... ஏன் அவள் போன் எடுக்க மாட்றா என்ற கவலைதான் ஜீஜேவுக்கு..

கார் நேதாஜி காலனிக்குள் நுழைந்தது... காரின் சத்தம் கேட்டு... அங்கிருக்கும் சிறுவாண்டுகள் காரின் பின்னாடியே ஓடிவந்தனர்...

ஏய் ஜீஜே மாமா வந்துட்டாரு... அவர்கள் போடும் சத்தத்தில் அபியும் ஹரியுமே வெளியே வந்தார்கள்..

மாமா... வந்துட்டாரு அக்கா என்று மலரிடம் தெரிவித்தாள் அபி..

அவன் கையில் கோர்ட்டை மடித்து, வாசலில் நின்றான், தன்னவளை தேடினான்.. கிச்சனிலிருந்து வெளியே வந்தவள் ஜீஜேவை பார்த்து அப்படியே சுவற்றில் சாய்ந்து நின்றாள்.. கண்கள் கலங்கின..

அவள் கண்களை மட்டுமே பார்த்தான்... அழறா நம்ம வந்தது பிடிக்கல போல.. சுற்றி காலனி ஆட்கள் சூழ்ந்தனர்... தம்பி நல்லாயிருக்கீயா என்று ஜானகி அவனின் கையை பிடித்து கேட்டார்..

நல்லாயிருக்கேன் பாட்டி நீங்க...

ம்ம்... உள்ளே வந்து உட்காருப்பா... தாமஸ் ஜீஜேவுக்கு ஜூஸ் கொடுத்தார்...

எல்லாம் ரெடியா அங்கிள்...

நைட்டு வேலையெல்லாம் ஸ்டார்ட் பண்ணிடுவாங்க ஜீஜே... நீங்க ரேஸ்ட் எடுங்க...

கிளம்புங்க எல்லோரும் நாளைக் காலையில பேசிக்கலாம்... ரொம்ப தூரம் பயணம் செஞ்சு வந்திருக்காரு... ஒய்வு எடுக்கட்டும்.. நாளைக்கு வேற பங்க்ஷன் இருக்கு நடேசன் சொன்னவுடன் அனைவரும் கலைந்து அவர் அவர்வீட்டுக்கு சென்றார்கள்...

அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை மலர்... சோபாவில் அவன்மட்டும் உட்கார்ந்திருந்தான்...

மாமா... சாப்பிடலாம் வாங்க ,ஹரி அழைக்க

ம்ம்... நான் ப்ரஷ் ஷப் ஆயிட்டு வரேன் ஹரி என்று தனது ரூமிற்கு சென்றான்.. அவன்விட்டு சென்றபோது எப்படியிருந்ததோ அதேபோல் சுத்தமாக வைத்திருந்தாள்... டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தான்..

குளித்துவிட்டு தனது இடுப்பில் டவலை கட்டிக்கொண்டு வெளியே வர... டெபிளில் மேல் அவனது ஷார்ட்ஸ் மற்றும் டீ ஷர்ட் எடுத்துவைத்திருந்தாள்...

இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.. என்கிட்ட பேசமாட்டாளாம்.. பொண்டாட்டி செய்ற வேலையெல்லாம் செய்வா..

டைனிங் டெபிளில் சமைத்த ஐடங்களை எடுத்துவைத்தாள் மலர்... மாமா சாப்பிட வாங்க என்ற அபி ..

நீ பேசாத எத்தனை முறை போன் போட்டேன் நீ எடுக்கவேயில்லை... எவ்வளவு டென்ஷன் தெரியுமா.. உங்க அக்காவும் எடுக்கமாட்டுறா... எதுக்கு போன் செஞ்சாளாம்..

அவனருகே மெதுவா பேசினாள் அபி... அக்கா போன் எடுக்காதனால தானே உடனே புறப்பட்டு நேரே வந்தீங்க... புரியுதா... ஏன் உங்க காலை அட்டன் அவ செய்யலையின்னு..

இவர்கள் பேசும்போது அவனுக்கு பிடித்த ரவா இட்லி, சாப்பாத்தியும் சிக்கன் கிரேவியையும் எடுத்து வந்தாள் மலர்...

பார்த்திங்களா... எல்லாம் உங்களுக்கு பிடிச்ச டிஷ்ஷூ...

மலரின் முகத்தையே பார்த்தான்... அவள் நிமிர்ந்து ஜீஜேவை பார்க்கவில்லை... எனக்கு சாப்பாடு வேணாம் என்றான்..

ஹரி மாமாவ சாப்பிட சொல்லு என்று மறைமுகமாக கட்டளையிட்டாள் மலர்..

இல்ல வேணாம் சொல்லுடா... எனக்கு கையில்ல சின்னதா அவன் வார்த்தையை முடிக்கவில்லை.. அப்போழுதுதான் ஜீஜேவின் கையை பார்த்தாள், கர்சீப் சுற்றி கட்டியிருந்தான்..

பதறிபோய் உன் கையில என்னாச்சு ஜீஜே... அவன் கையை பற்றினாள்.. ஸ்ஸ் என்றான்..

அவளை பார்த்து முறைத்தான்... கர்சீப்பை கழுற்றினாள்... அந்த ஆணி நீட்டாக கிழித்திருந்தது...

அபி, ஹரி நீங்க சாப்பிடுங்க... நான் கொஞ்சநேரம் பிறகு சாப்பிடுறேன்..

செல்பிலிருந்து ஆயின்மென்டை எடுத்து அந்த காயத்தில் போட்டாள்... எப்படி இந்தமாதிரி காயம் வந்தது..

அதுக்கு காரணம் நீதான்... போன் போட்டா எடுக்கனும்.. மதியம் இரண்டு மணிக்குதான் பார்த்தேன்.. அப்பயிருந்த டென்ஷன்ல... சேரை ஒங்கி குத்தினேன் அணி சொறுகிடுச்சு...

விடு... காலையிலிருந்து சாப்பிடல ரொம்ப பசிக்குது...

----மயக்கம்..

Nirmala vandhachu ???
 
Top