Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் இமைக்குள், தேன் மொட்டு கோலங்கள்

Advertisement

rifa

Member
Member
என் இமைக்குள், எழுத்தாளர் சரண்யா ஹேமாவின் "தேன் மொட்டு கோலங்கள்"

பல கதைகள் முடுவுறும் இடத்தில் ஆராம்பமாகிறது இந்தக் கதை.
இப்படியான உறவுகள், இப்படியான நபர்கள் இணைய என்னாகும் எனும் கற்பனை, கதை முடிய வாசகரின் கற்பனையாகவே இருக்கும்.
இங்கு திருமணத்தின் பின்னும் என்னவெல்லாம் ஆகியிருக்கும் என்பதை அழகாய் எழுத்தாளர் கைவண்ணத்தில் சிறப்பாய் கூறியுள்ளார் .

மிஸ்டர் சொக்கா ?வை கதை முழுதும் ஆட்சி செய்த மதுரா என மொத்தக்கதையும் கட்டிப்போட்டது.

இருவரிடையான காதல், நேசத்தின் பிணை எப்படி குடும்பத்தை முழுதாய் பிணைக்கிறது...?
ஒரு ஆண் மகனாய் கணவனாயும், குடும்பத்தலைவனாயும் பொறுப்பாய் நடு நிலையாய் இருக்க குடும்பம் எப்போதும் மகிழ்வாய் இருக்கும் என்பது நிஜம் தான்...

அன்பும் பாசமும் முக்கியமாய் இருக்க எந்த பிரச்சினையும் குடும்பத்தில் நிலைக்காது. சமாளித்து விடலாம்... ?

ஜகா, காந்தி பாட்டியின் உரையாடல்கள் மிக சுவாரசியமாய் அடுத்து என்ன பேசுவார்கள் என சிரிக்க ரசிக்க... அதனோடு மதுரா சொல்லும் amazon வார்த்தைகள் ? amazing ?
அடடா அவர்களின் மொழி வடிவம் அத்தனை அழகாய்...
மொழியில் என்ன வரப்போகிறது...

இயல்பாய் இருப்பது மனதிற்கு இதமானவர்களிடமே... ?

எழில்மணி அவர் செயல்கள் சிரிக்கவும் சிந்திக்கவும்
பின்னே மருதுவோடு ?...
அருமை... ?

அனைத்து கதாபாத்திரங்களும் அதனிடம் அழகாய் நிரப்பி
இறுதியாய் கொஞ்சம் எமை பயம் கொள்ளச் செய்து மரத்திற்கு வேரின்றி எப்படி என கதையை நிறைவாய் கொடுத்திருக்கிறார்...

"நாதமாய் யாழ் மீட்ட
சிக்கிக்கொண்டாள் மதுரயாழினி...

மயங்கி மயக்க
மதுரமாய் சொக்கிப் போக சுவர்க்கமானான் சொக்கநாதன்...

சொல்லோ பல வண்ணம் கோர்த்து மதுரம்மண் மணக்க
மயக்கிட சொக்கிப்போட்டார் எழுத்தாளர்..."
வாழ்த்துக்கள் எழுத்தாளறே?

அன்புடன், இமையி...
 
Last edited:
ரொம்ப ரொம்ப சந்தோஷம் இமையி ?????

அழகான விமர்சனம் கவிதை ????

மனமார்ந்த நன்றிகள் ??????????
 
Top