Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 20

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 20

அத்தியாயம்: 20

அந்த டில்லி ரயில் நிலையத்தில் நான் இறங்கிய நடை மேடையில் தொலைந்து போன ஒரு குழந்தை போல் நின்று கொண்டு, எஃஸிட்; வெளிவழி, புரத்து; பாஹர்; என எனக்குத் தெரிந்த மொழியிலெல்லாம் கேட்டுப் பார்த்தேன், பல நல்ல சமாரித்தன்கள் உதவ முன் வந்தார்கள்! ஆனால் என் பொல்லாத நேரம் அவர்கள் பேசியது ஒரு எழுத்துக் கூட எனக்குப் புரியவில்லை! நான் கேட்டது அவர்களுக்கும் புரியவில்லை. ஒரு பாஷை என்பது எவ்வளவு முக்கியம் என்று அன்றுதான் புரிந்து கொண்டேன்.

யாருக்கோ நான் கேட்டது புரிந்திருக்க வேண்டும், அவர் என் கழுத்தைத் திருப்பி அருகிலிருந்த மேம் பாலத்தைக் காட்டினார். அதில் அம்புக் குறியோடு ஹிந்தியில் எழுதியிருந்ததை நான் எழுத்துக் கூட்டி ‘நிக்காஸ் துவார்’ என்று படிக்க அவர் ‘அச்சா’ என்று பெரிதாகத் தலையாட்டிவிட்டுச் சென்றார்!

நான் என் இரண்டு பெட்டிகளையும் இழுக்கத் தயாரான நிலையில் எனக்குப் பின்னால் கிளி கொஞ்சும் சிரிப்பு சப்தம் கேட்க, நான் திரும்பிப் பார்க்க அங்கே ஈரோடு மஞ்சளை உடம்பெல்லாம் உரசிப் பூசியவள் போல்; மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தில், நவநாகரிக உடை அணிந்த ஓர் பெண் என்னைப் பார்த்துச் சிரித்தார். பின்னொரு நாளில் நான் தெரிந்து கொண்டேன் அவள் ஒரு பஞ்சாபி பெண் என்று!

அந்த மஞ்சள் நிற அழகியின் முகத்தில், இரண்டு கறுப்பு வண்டுகள் இறக்கை விரித்துப் பறக்க ஆய்த்தமாகிக் கொண்டிருந்தன! என்னைப் பார்த்து கண் அடிப்பது போல் அதில் ஒரு கறுப்புவண்டை மட்டும் அவள் இமைகளுக்குள் மறைத்து விட்டு சிரிக்க நான் அதிர்ந்து போனேன், அந்த விநாடி நானும் அந்தப் பெண்ணும் மட்டுமே அந்த மிகப் பெரிய சந்தைக்கடையில் இருப்பது போன்றதொரு ப்ரமை எனக்குத் தோன்ற அவளை விழி விரித்துப் பார்த்தேன்.

அவள் முகத்தைப் பார்த்து என் மனம் துள்ளுவதை மறைக்க கீழே பார்க்கலாம் என்றால் அவள் உடை முளங்காலுக்குக் கீழே இறங்கவே இல்லை! அது இன்னும் ஆபத்தாக எனக்குத் தோன்ற மறுபடியும் அவள் முகத்தை என் கண்களில் தோன்றிய ஆயிரம் கேள்விக்குறிகளோடு நான் பார்க்க, அவளின் தேனூறும் செவ்விதழ் அழகான ஆங்கிலப் உச்சரிப்போடு அசையத் தொடங்கியது! ஆங்கிலத்தை உச்சரித்த்தால் அந்த தேனூறும் செவ்விதழ்கள் அழகு பெற்றதா? இல்லை அந்த செவிதழ்களால் ஆங்கிலம் அலங்கரிக்கப்பட்டதா? எது பிழையான பதில் என்று எனக்குத் தெரியவில்லை!

அவள் நாவின் சுழற்சியில் அப்படியொரு சுத்தமான ஆங்கில உச்சரிப்பு! நல்ல படித்த பெண்ணாய் இருக்க வேண்டும்! முதலில் அவள் பேசுவது எதுவும் காதில் கேட்காமல் அவளின் அசையும் அந்த செவிதழ்களையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன் “ஹே! மிஸ்டர்!” என்று அதட்டிய பின்னர்தான் நான் கனவுலகிலிருந்து இறங்கி வந்தேன்.

அதன் பிறகு நாங்கள் பேசியது முழுவதும் ஆங்கில மொழியில்தான்.

“இந்த ரயில்வே சந்திப்பைவிட்டு வெளியே போய்விட்டால் ஒரு ஓலா புக் பண்ணி நொய்டாவிலிருக்கும் என்னோட வொர்க் ப்ளேஸ் போயிருவேன்!” ‘அழகியே!’ என்பதை மனதிற்குள் சேர்த்துக் கொண்டேன். அந்த நொடி ‘எந்த டாக்சியும் புக்கிங்காக வேண்டாம்!’ என்றுதான், அவளிடம் மயங்கிய என் மனம் கூறியது.

‘ஏன் இவகூட இந்த ரயிலடியிலயே மெத்தை விரிச்சுக் குடும்பம் நடத்தலாம்கிறியா?’ என்று நங்கென்று என் மூளையிடமிருந்து கொட்டு விழ, நான் திரு திருவென்று ஆடு திருடிய கள்வனைப் போல் அவளைப் பார்க்க,

“பாஷை, திக்கு, திசை என்று எதுவும் தெரியாத ஊரில் நீ ஒரு ஒலா புக் பண்ணி நொய்டாவிற்குப் போகப்போறியா? உனக்குத் தெரியுமா இன்னைக்கு ஓலா, ஊபர், ஃபாஸ்ட் ட்ராக்னு எல்லா கால் டாக்சிக்காரங்களும் கூட்டணி போட்டு வேலை நிறுத்தம் பண்றாங்கனு, ஆட்டோ புடிச்செல்லாம் நீ நொய்டா போக முடியாது! எந்த ஆட்டோக்காரனோட மீட்டரும் இன்னைக்கு ஒர்க் பண்ணாது! ஆட்டோ சார்ஜா உன் சொத்தையே எழுதிக் கேட்பான் அவன். இதுக்குத்தான் எல்லா பாஷையும் கத்துக்கணும்னு சொல்றது!”

“அம்மணிக்குத் தமிழ் தெரியுமா?!” நான் சிரிக்காமல் கிண்டலாய்க் கேட்க,

“தமிழ்நாட்டுப் பசங்க குசும்பன்கள்னு கேள்விப்பட்டிருக்கேன்! என் பின்னாடி ஒரு நாய்குட்டி மாதிரி வாலாட்டிக்கிட்டே வா!” என்று போனா போகிறதென்று என்னுடைய குழந்தை ட்ராலியை அவள் இழுத்துக் கொள்ள, நான் அவள் பின்னாடி உண்மையான நன்றியுள்ள நாய்போல ஓடினேன். அவள் தெனாவெட்டா தன் வெளிர் மஞ்சள்நிறக் கால்களின் ஆடுதசைகள் தெரிய அதை மூட வேண்டும் என்ற அக்கறை சிறிதுமின்றி கவர்ச்சியுடன் நடந்து முன்னே செல்ல ஒரு விதமான பயத்துடனும் மயக்கத்துடனும் அவளைப் பின் தொடர்ந்தேன் நான்.

‘ஆனாலும் ஒரு பக்கம் இவள் எப்படிப்பட்ட பெண்ணோ? என்னைக் கடத்திவிடுவாளோ? பாலியல் வன்முறையில் ஈடுபடுவாளோ?’ என்ற பயம் என்னைப் பிராண்டி எடுக்கத் தொடங்கியது. இவள் உதவியுடன் முதலில் இந்த குழப்ப ரயிலடியிலிருந்து வெளியே சென்றுவிடலாம்’ என்ற ஒரே குறிக்கோளுடன் அவளைப் பின் தொடர்ந்த நான், மெல்ல மெல்ல அந்தப் புதை குழிக்குள் தலை குப்புற கவிழ்ந்துவிடுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை!”

அவள் தோளிலிருந்து காதலன் போல் தொங்கிக் கொண்டிருந்த ஒரு குட்டி டம்பப்பையை காற்றில் ஆட்டிக் கொண்டே என் மனதைக் கலைத்தவள்;

பல நடைமேடைகளை மேம்பாலங்களின் உதவியுடன் தாவிக் கடந்து, பல படிகளில் அனாயசமாக ஏறி, மறுபுறம் இறங்கியவளோடு நானும் இறங்க; பலவகையான வியர்வை நாற்றங்களையும் கதம்ப வாடைகளையும் கடந்து ஒருவழியாக மூச்சு முட்ட வெளியே வந்து, சுதந்திரக் காற்றை சுவாசிக்கலாமென நினைத்தால் அங்கே ஒரே எந்திரங்களின் நாற்றம்.

அந்த மஞ்சள் அழகி கூறியது உண்மைதான் போலும்! பல ரக வாடகைக்கார்கள் மூச்சுக்கூட விடாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்க, “நொய்டா சலோ?” என்று ஒரு டாக்சிக்காரனிடம் நான் கேட்க, “அவன் இல்லை!” என்று பெரிதாகத் தலையாட்டினான்.

“என் மேல் நம்பிக்கை இருந்தால் வா! பக்கத்தில்தான் டில்லி மெட்ரோ ஸ்டேஷன். உன்னைப் பத்திரமா நொய்டா கூட்டிப் போறேன் வா!” என்று அவள் அழைக்க, எனக்கு அப்பாடாவென்றிருந்தது!

நான் பிறந்ததிலிருந்து என் ஊனோடும் உயிரோடும் உறவாடியவை ரயில்வே ஸ்டேஷன்கள்தானே, நொய்டாவில் போய் இறங்கியவுடன் இவளை கழட்டி விட்டுவிடலாம் என்று துணிந்து அவள் பின்னால் என் நாய்க் குட்டிப் பயணத்தைத் தொடர்ந்தேன்.

“கழட்டிவிடுற மூஞ்சப்பாரு!” என்று என் உள் மனம் கெக்கொலி கொட்டிச் சிரித்தது! ஏன்னா என் மனம் அவள் முகத்தை மறுபடியும் மறுபடியும் பார்க்கச் சொல்லித் தூண்டிக் கொண்டே இருந்தது!

மெட்ரோ ரயிலடியும் நான் நினைத்தது போலில்லாமல் என்னைக் கலங்கடித்தது! ஊதா வண்ணக் கோடுகள், மஞ்சள் வண்ணக் கோடுகள், பச்சை வண்ணக் கோடுகள், சிவப்பு வண்ணக் கோடுகள், வயலட் வண்ணக் கோடுகள், ஆரஞ்சு வண்ணக்கோடுகள், ஃபேஸ் 1, ஃபேஸ் 2 ஃபேஸ் 3 ஃபேஸ் 4 என்று அவள் காற்றில் படம் வரைந்து கொண்டே போக அம்மா வைக்கும் காய்கறி குருமா போல நான் சுத்தமாகக் குழம்பிப் போய்விட்டேன்.

டில்லி மெட்ரோ ஸ்டேஷனுக்கு வயதாகி விட்டதென்றாலும்; கிழவிக்கு மேக்கப்போட்டது போல பளபளவேன்று, திறந்து மூடும் குட்டிக் கதவுகளோடு பளிச்சென்றுதான் இருந்தது! ராஜிவ்காந்தி சௌக்கிலிருந்து ஊதாவண்ணக் கோடுகளில் சென்று நொய்டா சிட்டி சென்டர் செல்வதற்கான ரயிலைப் பிடிக்க வேண்டுமென்பதை அவள் பேச்சிலிருந்து நான் சுருக்கமாகப் புரிந்து கொண்டேன், நொய்டாவிலிருந்து நியூடில்லி வர நினைத்தால் த்வாரக் வந்து ரயில் பிடித்து ராஜிவ் காந்தி சவுக்கில் இறங்கி மஞ்சள் கோட்டில் நடக்க வேண்டுமென்று டில்லி திரும்பி வருவதற்கான ஒரு டிப்சும் கொடுத்தாள்..

“அம்மா தாயே இப்போதைக்கு இது போதும்!” என்று கை எடுத்துக் கும்பிடாமல் நான்கூற இருவரும் மெட்ரோ ரயிலில் பயணிக்கத் தொடங்கினோம்.

அவள் அழகில் மயங்கினேனா; அவள் அன்பில் மயங்கினேனா; இல்லை அந்த உதவும் கரத்தில் மயங்கினேனா; அவள் ஆங்கில உச்சரிப்பில் மயங்கினேனா தெரியவில்லை!? ஆனால் முதல் பார்வையிலேயே என் மனசு,

‘ஆஹா! பத்திக்கிச்சு! பத்திக்கிச்சு!’ என்று பாட ஆரம்பித்துவிட்டது.

நொய்டாவில் கல்யாணமாகாத ஆண்களும், பெண்களும் அதிகம் தங்கும் செக்டர் 59 ல் ரூம் எடுத்துத் தங்கியிருப்பதாகக் கூறினாள். நான் தங்குவதற்கு இடம் கிடைக்கும் வரை, என் அலுவலகமே நொய்டா எலெக்ட்ரானிக் சிட்டி, செக்டர் 61 ல் ஒரு ஹோட்டல் அறை புக் பண்ணிக் கொடுத்திருந்தது.

செக்டர் 32 ல் இறங்கி மறுபடியும் பேருந்தில் ஏற ஓடினோம். நல்ல வேளை அரைகுறை உடையில் வந்த தேவதைப் பெண் வழிகாட்டி இருக்கவில்லை என்றால் அன்று நான் வழி தவறிய ஒரு ஆட்டுக்குட்டி போல் ஒரு வேலை வழி தவறியிருக்கலாம். ஆனால் நான் வாழ்க்கையில் வழி தவறாமல் இருந்திருப்பேன்.

“உங்க ரொமான்சுக்கு சீக்கிரம் வாங்க சார்! உங்க குட்டிப் பொண்ணு கண் முழிக்கிறதுக்குள்ள நீங்க உங்க கதையை முடிக்கணும்.” என்று தாமரை இடை புக,

“இந்தக் குழந்தை மீதும் எனக்கு அளவுக்கதிகமான அன்பு இருக்கு தாமரை, ஆனால் என் நெஞ்சோடு அணைச்சிருந்த அந்தக் குழந்தைச் செல்லத்தை நான் தொலைச்சிட்டேன் போலிருக்கு! எல்லா உண்மைகளூம் அந்த டாக்டரம்மாவுக்கு மட்டும்தான் தெரியும்.”

“வேண்டாம் உங்கள் மனதை எதிர் மறை எண்ணங்களில் அலையவிடாம நேராக் கதைக்கு வாங்க!”

“நான் என்ன சொல்ல? எங்க கதையில் நிறைய ரொமான்டிக் தருணங்களும் உண்டு. கண்ணீரை வரவழைக்கும் தருணங்களும் உண்டு! ஒரு வரிக் கதையா சொல்லணும்னா அது ஒரு ‘துன்பியல் கதை’

“இருபத்து மூன்று வயதில் நம் மனம் முதிர்ச்சியடைந்து விடும், நம் வாழ்க்கையில் மிகச் சிறந்த முடிவுகளை எடுப்போம், காதல் கத்தரிக்காய் என்றெல்லாம் ஏமாற மாட்டோம்னு சொன்னேனே? அதெல்லாம் சுத்த கம்பக்!”

காதலில் விழுந்தால் நமக்குக் கண்ணு மண்ணு எதுவும் தெரியாது! முதலில் கவர்ச்சியிலும், சிரிப்பிலும், பேச்சிலும்தான் ஒரு பெண் நம் கண்களில் விழுந்து. நம் மனதிற்குள் பனிச்சாரலாய் நுழைகிறாள் என்பதுதான் உண்மை! முதலில் என் மனம் அவள் அழகிலும் சிரிப்பிலும் மயங்கியது!

அவள் யார்? எப்படிப்பட்டவள்? நம் உணர்வுகள், கலாச்சாரம், வாழ்க்கை முறை, பண்பாடு, குடும்பத்திற்கெல்லாம் ஒத்துப் போவாளா! என்று நான் ஆராய்ந்திருக்க வேண்டும்! ம்…கூம்…நான் எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை.

“அப்படியெல்லாம் சிந்தித்து வருவதற்குப் பேர் காதலே இல்லை கௌதம்!”

'ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா,,,
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடுவந்தேன்
உன்னைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்
அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன்
உன்னை வேறு கைகளில் தர மாட்டேன்
நான் தர மாட்டேன், நான் தர மாட்டேன்!”


என்று நம் மனம் ஊ,,,ல,,,லா பாடுமே அப்பவே அந்தப் புதைகுழிக்குள் மாட்டிக்கிறோம்! அந்தக் கள்ளத்தனம் மிகுந்த காதல் மனம் முட்டையிலிருந்து, முட்டைபுழு, கூட்டுப்புழு பருவத்தையெல்லாம் தாண்டாமல் நேரடியா ஒரு வண்ணமிகு வண்ணத்துப் பூச்சியா சிறகடிக்கத் தொடங்கிவிடும். அப்படி வரும் காதல் சிலசமயம் மழை பெய்து முடித்தவுடன் புற்றிற்குள்ளிருந்து வரும் ஆண் ஈசல்கள், தன் ராணியோடு இணைந்தபின் வந்த அன்றே இறந்துவிடுமே அதுபோல் அந்தப் பெண்ணைத் துய்த்தவுடன் இறந்துவிடும் காதல்களும் உண்டு காதலர்களும் உண்டு!” என்று இடை புகுந்தாள் தாமரை!

“யா! என் காதல் இதயமும் தாறுமாறாகத் துடிக்கத் தொடங்கியது! உடனே அவளை உன் கரங்களில் அள்ளி காதல் முத்தமிடு; காதல் செய்; அவள் உன் கரங்களில் கண்டிப்பாய் வளைந்து விடுவாள்! அவள் கண்களிலும் காதல் மழை பொழிகிறது! என்று மனம் துடிக்கத் தொடங்கியது.

இதுவும் ஒருவகையான போதைதான். ‘மது, மாது, மாத்திரைகள் போன்ற எந்த போதை வஸ்த்துக்களையும் தொடக் கூடாது’ என்று காந்திஜியிடம் சத்தியம் வாங்கியது போல, என் தாய் தந்தையர் என்னிடம் சத்தியம் வாங்கவில்லை என்றாலும், அந்த மாரல் வேல்யூசை ஊட்டி ஊட்டி என்னை வளர்த்துள்ளார்கள் என்பதால் அவளை என்னவளாய்த் திருமணம் செய்து கொண்டு காதலிக்கவே நான் விழைந்தேன்

ஆனால் எனக்குள் ஒரு அவசரம்! இவளை என் காதல் சாம்ராஜியத்தில் இருந்து யாரும் கடத்திவிடுவார்களோ என்ற ஒரு பயம். ஆங்கில மொழி மட்டும் தான் எங்களுக்கிடையிலிருந்த ஒரே இணைப்புப் பாலம்! அது இருவருக்குமே தாய்மொழி போல் எங்கள் நாவில் சர்வசாதாரணமாய் வளைந்தது

என்னை ஹோட்டல் அறையில் இறக்கிவிடவள்,

‘பை’ என்று சொல்லிவிட்டு கிளம்ப,

“உங்க பேரைக் கூடச் சொல்லாம பை சொல்லப் போறிங்களா?” என்று அந்தத் தேவதையின் கண்களொடு உரையாடிக் கொண்டே நான் கேட்க,

“நான் சிந்து, உங்க பேர் கௌதமா?” என்ற அவளின் கேள்வியில் நான் சுத்தமா அதிர்ந்து போனேன்.

“உ,,,ங்,,,க,,,ளு,,,க்கு எப்படி!?”

“எப்படித் தெரியும்னு கேட்கிறீங்களா? தோ உங்க பெட்டியில் கௌதம சித்தார்த்தன், சென்னைனு எழுதி ஒட்டியிருக்கீங்களே!

அது முன்னெச்சரிக்கயாக எங்க வீட்டு தாபாலாபிசர் “உன்னை டில்லிக்கு பத்திரமா ரெஜிஸ்டர் போஸ்ட் பண்ணப்போறோம்!” என்று சொல்லிக் கொண்டே எழுதியது. நல்ல வேளை அதில் என் பயோடேட்டா இல்லை!

“ஓகே சிந்து! ‘அந்தப் பெயர் அப்பொழுதே என் நாவில் சுவையாக வழுவிச் சென்றது!’ இவளை எக்காரணம் கொண்டும் என் வாழ்க்கையிலிருந்து நழுவ விடக் கூடாது என்று என் மூளை எனக்கு ஆர்டர் போட,

“வாங்க சிந்து ஹோட்டலில் செக்கின் செய்துவிட்டு, நம்மைப் பற்றிய அறிமுகங்களைத் தொடரலாம்!” என் வாழ்க்கையை விட்டு ஒரு வழிப்போக்கன் போல் பிரிந்து செல்ல நினத்தவளை என் வாழ்க்கைக்குள் கட்டி இழுத்து வந்தேன்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தோம் என் மனதிற்குள் குற்றால நீர் வீழ்ச்சியின் சாரல் மழை. இந்த அழகு தேவதை எனக்கு சொந்தமாக மாட்டாளா! அவளை கைகளில் அள்ளி முத்தமிட என் இதயம் துடித்தது! நாடித் துடிப்போ இரண்டு மடங்கு கூடியது!

அடிக்கடி தாரா, ‘ஒரு டாக்டரா மனதில் தோன்றும் இன்ப போதைகளைப் பற்றி என்னிடம் விரிவாப் பேசியிருக்கா!

“நம் மனதில் தோன்றும் இன்பக் கிளர்ச்சியின் போது டோபோமைன் எனப்படும் பொருள் நம் மூளையில் அளவுக்கதிகமாகக் கொட்டப்படும். அதன் விளைவாக மூளையில் ரிவார்ட் பாயிண்ட்ஸ் பரிசாகக் கிடைக்கும். அந்த சில நொடி இன்பத்திற்காக இந்த மனம் மூச்சு முட்டக் கிடந்து அலையும்!” என்று;

அது அவ்வளவும் உண்மையானது! அவ்வளவு அருகாமையில் ஒரு பெண்ணை அதுவும் எந்தவிதமான தளைகளுமற்ற ஒரு அழகுப் பெண்ணை என் கைகள் தொட்டுவிடும் தூரத்தில் பார்க்கிறேன். என் பேச்சிளர் விரதம் முடிந்துவிடுமோ என்ற பயம் என்னைச் சூழத் தொடங்கியது!

என்னோட தந்தை விஸ்வம் என் தலையில் நங்கென்று கொட்டினார்!

‘ஒரு பெண்ணை அவளே விரும்பி வந்தாலும், திருமணம் செய்யாமல் மனதால் கூடத் துய்க்கக் கூடாது! அது மஹா பாவம்! அவளும் தன்னை மறந்து உணர்ச்சிகள் தூண்டப்பட்ட நிலையிலிருப்பாள், ஆனால் அனைத்தும் முடிந்தபின் அந்த நிகழ்வானது ஆணுக்கு ஒரு புத்தகத்தில் ஒரே ஒரு பக்கம் மட்டும் எழுதப்படும் கிளுகிளு ரொமான்டிக் கதை, படித்து சுவைத்து விட்டுக் கசக்கித் தூக்கி எறிந்துவிடலாம். நேரம் கிடைக்கும் பொழுது, அவற்றை ஞாபகத்தில் கொறித்து, சுவைத்து மகிழலாம்,

ஆனால் பெண்ணுக்கு அந்த ஒரு நாள் அவளுடைய வாழ்நாள் சரித்திரம். அவளால் அதிலிருந்து மீண்டு வெளியே வரவே முடியாது, ஏன் உன் உயிர் அவள் கற்பத்தில்கூட ஜனிக்கலாம், அதனால் எந்தப் பெண்ணையும் நீ வாழ்க்கையில் ஏமாற்றாதே! அந்தப் பாவம் ஏழேழு ஜென்மத்திற்கும் உன்னைத் தொடர்ந்து வரும்!”

“ஐ மிஸ் யுவர் டாட் கௌதம்!” என்று இடை புகுந்தாள் தாமரை!

“ஞாபகத்தில் புரண்ட விசுவின் அந்த அறிவுரைகளால் என்னுள் தோன்றி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த ஆண்மையின் ஹார்மோன்கள் புஸ்ஸென்று அணைந்து போனது!

‘நேரான பாதையில் சென்று இவளை உன்னவளாக்கிக் கொள்’ என்று புத்தி கூறியதை என் மனம் ஏற்றுக் கொண்டதென்பதை நான் புரிந்து கொண்டேன்.

“என்ன கௌதம் ஒண்ணுமே பேசமாட்டேன்றிங்க!” என்று கேட்டுக் கொண்டே சிந்து படக்கென்று என் விரல்களைப் பற்றிக்கொள்ள எனக்குள் மின்சாரம் பாய்ந்தது! நல்ல வேளை அந்த மின்சார வீச்சில் நான் சாம்பலாகாமல் விழித்துக் கொண்டேன். அவள் புரிந்து கொள்ளாத வண்ணம் என் விரல்களை அவள் விரலிலிருந்து மென்மையாக விடுவித்துக் கொண்டு, எதிரிலிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்ட நான், என் உணர்வுகளைப் பஸ்பமாக்கிய அந்த லேசர் விழிகளைப் பார்த்துப் பேசத் தொடங்கினேன்.

“எனக்கு உன்னோட அழகான லேசர் கண்கள் ரொம்பப் பிடிச்சிருக்கு, அதைப் பார்த்துக் கிட்டே இப்பப் பேசப் போறேன்!” என்று சொல்லிவிட்டு எந்தவித இடையூறுகளுமின்றி அந்த விழிகளைத் தரிசித்தேன். அதில் எந்த பொய்மையும் எனக்குத் தெரியவில்லை”

“காதல் பார்வைக்கு அதெல்லாம் தெரியாது கௌதம்!” இது தாமரையின் கூற்று.

“சிந்து நான் உங்கக் கிட்ட உண்மை பேசணும்னா, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! பட்,,,,நாம முதலில் ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் தெரிஞ்சுக்குவோம்1”

“வாட்? பட்,,,!? ‘ஆனால்’ என்ற வார்த்தையெல்லாம் காதலில் கிடையாது! வா,,,உன் கரங்களில் என்னை அள்ளிக்க; யார் வேணாம்னு சொன்னது! என் அழகை ஆராதிச்சா மட்டும் போதாது; அதை நீ உண்மையான காதலோடு அனுபவிக்கணும். எனக்குக் கூட உன்னுடைய நீண்ட ஆண்மையின் கரங்களில் ஊஞ்சாலாடத் தோணுது!” அவள் இதழ்கள் உதிர்த்த வார்த்தைகளில் நான் அரண்டு போனேன்.

‘ஒரு பெண், ஒரே நாள் அதுவும் சில மணி நேரப்பழக்கத்தில் இப்படிக் கூற முடியுமா!?” அந்த இடத்தில் தான், மூளை இருந்த இன்பக் கிளர்ச்சியில் ‘அவள் எப்படிப்பட்டவள்’ என்பதை ஆய்வு செய்ய என் மூளை மறந்து போனது!

“நான் கூறப் போகும் இந்த வாழ்க்கைச் சரித்திரம், இது போன்ற இன்பப் போதையில் தங்களை இழக்கின்ற வாலிபர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமைய வேண்டும் என்று விளைகிறேன் தாமரை! எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நினைப்பவர்கள் இருக்கலாம். ஆனால் என்னைப்போல் ஒரு வரையறைக்குள், சுயக்கட்டுப்பாடு, சுய ஒழுக்கத்தோடு வாழ நினைப்பவர்கள், தங்கள் குடும்பம், பெற்றோர்களை உயிராய் நேசிப்பவர்கள், கண் மூடித்தனமாய் காதலில் விழாமல் கண் திறந்து ஒரு முறைக்கு பத்துத் தடவை யோசிக்க வேண்டும்.

‘சரி கதைக்கு வருவோம்! முதலில் என்னிடம் ஜஸ்ட் விளையாடுகிறாள்!’ என்று நினைத்துக் கொண்ட நான், என்னைப் பற்றிய ஒரு இன்ட்ரோவுடன் உரையாடலைத் துவக்கினேன்.

“நான் கணினி மென்பொருள் துறையில் டெவலப்பர், இந்த எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் போறியாளானா வேலைக்குச் சேரப் போறேன்; என் தாய் மொழி தமிழ்; சொந்த ஊர் கோவை; இந்த ஊர் எனக்குப் புதுசுPhoto_024 EKKUM.png!” என்று கூறி, அவள் பதிலுக்காகக் காத்திருக்க அவள் தன் உதடு பிரித்துப் நான் சற்றும் எதிர்பாராத பதில்களைக் கூறத் தொடங்கினாள். தொடரும்
 
Top