Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 27

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 27

அத்தியாயம் 27

“சரி நீ உன் சிந்துவை எப்பப் பார்க்கப் போற? என்று அவள் படக்கென்று கேள்வியால் அடிக்க, தன்னை நிலைப்படுத்திக் கொள்ள சில வினாடிகள் எடுத்துத் தன் துக்கத்தை மென்று முழுங்கியவன்,

“இல்ல தாரா, அவளைப் பார்க்க முடியாது! அவள் உயிரோடு இல்லை. அவளை எரியூட்டிவிட்டுத்தான் நான் சென்னைக்கு என் தாயைச் சந்திக்கக் கிளம்பி வந்தேன்! சிந்து என் வாழ்க்கையிலிருந்து பறந்து போனதை என் தாயிடம் கூடக் கூறவில்லை!” அவன் உணர்வுகளற்ற குரலில் பதில்கூற,

“கௌதம், உன் மனைவி சிந்து என்ற உண்மையும், உன் குழந்தை பவி என்ற உண்மையும், இருவருமே இறந்துவிட்டார்கள் என்ற உண்மையும் உன்னைக் காப்பாற்றிய அன்றே எனக்குத் தெரியும்!” என்று கூறி அவனை அதிர்ச்சியின் எல்லையில் நிறுத்தினாள்.

காப்பாற்றப் பட்ட உன் உடம்பிலிருந்து கிடைத்தது இரண்டு பொருட்கள். ஒன்று உன்னோட உயிரான உன் மகள் பவி, உயிரற்ற சடலமாய் என் கைகளில் கிடைத்தாள். மற்றொன்று ஒரு அரை ஏ4 ஷீட் பேப்பர்,

அதிலிருந்த எழுத்துக்கள் அழியாமல் ஒரு பிளாஸ்டிக் பையில் பத்திரப்படுத்தப்பட்டு உன்னுடைய ஜீன்ஸ்பேன்டின் முன்னாலிருந்த பாக்கெட்டில் வைத்திருந்தாய். நீ அந்தக் குழியில் தலையில் அடிபட்டு உன் சுரணை இழந்து மல்லாந்து கிடக்க உன்னைத் தன் கரங்களால் இறுக்கிக் கொண்டு உன் மார்பின் மேல் குப்புறக் கிடந்தது உன் குழந்தை! அந்த A4 ஷீட் பேப்பரை உன் மேல் கவிழ்ந்து கிடந்த குழந்தை காப்பாற்றி இருந்தது. அவன் கண்களில் மேகங்கள் வெடித்துச் சிதற; இடி மின்னல் மழை என் அனைத்தும் ஒரே நேரத்தில் நடந்தது!

“ஸோ என் உயிருக்குயிரான பவியை நான் இழந்துவிட்டேன்! அவனை அவன் மகளுக்காக துக்கம் கொண்டாட சில வினாடிகள் அனுமதித்தவள், அவன் முகத்தை நிமிர்த்தி, அதில் வழிந்த கண்ணீரை தன் கரங்கொண்டு துடைத்து விட்டாள்.

“எனக்கு உயிர் கொடுத்த இந்த தேவதை, எனக்குப் பதிலா என் குழந்தையைக் காப்பாற்றி இருக்கலாமே!?” அவன் தானாகவே வழிந்த கண்ணிரை அடக்க முடியாமல் அவள் மடியில் கவிழ்ந்துபடுத்து தன் முகத்தை அதற்குள் புதைத்துக் கொண்டான்.

“ஐயோ!!! என்னைக் காப்பாற்றாமல் அந்தக் குழிக்குள்ளேயே என்னைப் புதைத்திருக்கலாமே தாரா!” என்று கூறி அவன் உடல் குலுங்க,

அவனைத் தன் மடியிலேயே புரட்டிப் போட்டவள், “அப்ப நான் இந்த ராஜ குமாரனை இழந்திருப்பேனே?" என்று அவன் கன்னத்தோடு கன்னம் இழைத்து, அவன் கன்னத்தில் வடிந்த கண்ணீரைத் தன் கண்ணீர் வைத்துத் துடைத்து விட்டாள்.

"அந்தக் குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் போனதால்தான் உன்னைக் காப்பாற்ற என் குழந்தையை உனக்குத் தாரை வார்த்துக் கொடுத்தேன்!"

“அதுக்கு ரொம்பப் பெரிய மனசு வேணும் தாரா! நான் வேண்டிய அளவு அழுது முடித்துவிட்டேன்! இனிமேல் அழக்கூட என் கண்களில் கண்ணீர் இல்லை!

“கௌதம், நீ எப்ப உன்னோட குழந்தை பவி உயிரோடு இல்லை, உன் கையிலிருப்பது வேறொரு குழந்தைனு கண்டுபுடிச்ச!?”

“ரயில் பயணத்தில் சிந்துவைப் பற்றிய ஞாபகங்கள் என் மூளையில் குவியத் தொடங்கிய பொழுது என்னுடைய ஒரு வயது குழந்தை பவியும் என் மனம் முழுவதையும் நிறைத்தாள். ஒரு தாய்க்கு மட்டும் இல்லை, ஒரு தந்தைக்கும் தன் குழந்தை யாரென்று தெரியும். அதிலும் நான் இழந்த என் மகள் பவி எனக்கு ரொம்ப, ரொம்ப ஸ்பெஷலான பொண்ணு! நான் என் மனைவியுடன் வாழ்ந்திருந்தாலும் அவளோடு மனதளவில் ஒரு அனாதை போல்தான் வாழ்ந்திருக்கேன். அந்தத் தனிமையைப் போக்கியவள் என் அற்புத மகள்தான்.

நான் என் கண்களில் பார்த்த என் குழந்தை பவி வேறு, என் கையிலிருந்த குழந்தை வேறு!” என்று என் சிந்துவைப் பற்றிய நினைவுகள் திரும்பியவுடனேயே எனக்குத் தெரிந்துவிட்டது! ஏன்னா என் மகள் வளர்ந்து வாலிப வயதை அடைஞ்சிருந்தா அவ என் சிந்துவின் மறுபிறப்பா இருந்திருப்பா!

இப்ப இருக்கும் நம் குழந்தை பவியிடம் உன் ஜாடை உண்டென்றாலும் யாராலும் அவ்வளவு எளிதா கண்டு பிடிக்க முடியாது!!! ஆனால் என் பவி அப்படியே என் சிந்து ஜாடை!" என்று பெருமூச்செறிந்தவன்,

அந்தத் துண்டுப் பேப்பரில் இருந்த நான்கு வரிகள்தான் முதலும் முடியுமா என் மனைவி எனக்கு எழுதிய கடிதம். கணக்கில்லாமல் போதை மாத்திரைகளை முழுங்கி அவள் முற்றிலும் மயங்குவதற்கு முன்னால்,,,,

‘நான் போய் வருகிறேன் கௌதம்! இன்னும் சிறிது நேரத்தில் என் மூளையின் இயக்கங்கள் நின்றுவிடும்! நான் உனக்குச் சற்றும் பொருத்தம் இல்லாதவள், அதிகம் பாவங்கள் புரிந்தவள்! அதற்காக நம் குழந்தையைத் தண்டித்து அவளை அனாதையாக்கி விடாதே! அவளை உடனே உன் தாயிடம் அழைத்துச் சென்றுவிடு! இப்படிக்கு சிந்து!”
இதுதானே அந்தப் பேப்பரிலிருந்த வரிகள்! அப்ப உனக்கு என் மனைவி, குழந்தை, பற்றிய பல உண்மைகள் முன்பே தெரிஞ்சிருக்கு! அப்பவே நீ அந்த உண்மைகளை என்னிடம் உடைச்சுச் சொல்லியிருக்கலாமே!”

“அஸ் அ டாக்டர் எனக்கும் நிறைய பொறுப்புகள் உண்டு கௌதம்! அன்று நீ இருந்த சூழலில் இப்படி உச்சகட்டச் சோகச் செய்திகளை உன் இதயமும் மூளையும் தாங்கியிருக்காது! அதனாலதான் அனைத்து உண்மைகளையும் என் இதயமெனும் லாக்கரில் போட்டுப் பூட்டி வச்சேன்.

“உன் சிந்துவின் கதையை எப்ப ஷேர் பண்ணப் போற!”

“அது ஒரு பெரிய ட்ராஜிக் கதைடா அது என்னோடவே மடிந்து போகட்டும்!!!”

“ஆனால் எனக்கு உன் சிந்துவைப் பத்தித் தெரிஞ்சுக்கலைனா என் மண்டையே வெடிச்சிரும்! கடைசியா சோகத்துக்கப்புறம் சுகமான ஐஸ்க்ரீமும், டெசர்ட்ஸ்மா உன் தோழி தாமரை கதையும் கேட்கிறேன். அதுக்கு முன்னாடி உனக்கு சாப்பிட எதுவும் ஆர்டர் பண்ணவா? நீ வந்ததுல இருந்து ஒண்ணுமே சாப்பிடலை!”

“உன்னையும், அம்மாவையும் பார்த்ததுல என் மனசும், வயிறும் ஃபுல்லா நிறஞ்சு போயிருச்சு! வாயேன் அம்மாவை ஒரு நிமிஷம் பார்த்துவிட்டு வந்துறலாம். என் அம்மா எனக்காக இந்த ஒரு வருஷமும் எவ்வளவு வேதனைகளோடும் எதிர்பார்ப்புகளோடும் காத்திருந்தாங்கனு உனக்கு இந்நேரம் தெரிஞ்சிருக்கும், ஆமா நீயும் அம்மாவும் எப்படி மீட் பண்ணுனீங்க? அவங்களை நீ தேடிப் போனியா? இல்லை அம்மா உன்னைத் தேடி வந்தாங்களா???

“ஒரு நேரத்தில் ஒரு கேள்விதான் கேட்கலாம்”

“என் மூளைக்குள்ள ஓராயிரம் கேள்விகள் பதில் தேடி அலையுதே தாரா!”

“கண்டிப்பா உன் எல்லாக் கேள்விக்கும் பதில் சொல்லாம உன்னைவிட்டுப் போகமாட்டேன்! இப்ப உன் மூளையை கேள்வி மோடிலிருந்து ரெஸ்ட் மோடுக்கு மாத்து!

“ஏன்டி எப்பப் பார்த்தாலும் பிரிவைப் பத்தியே பேசுற? உனக்கு நான் வேணாமா???”

“பார்த்தியா அடுத்த கேள்வி??? ம்,,, என்னடா சொன்ன?” என்று எழுந்து நின்றவள், “யாருடா என்னை வேண்டாம்னு உதறித் தள்ளிவிட்டு ரயிலேறி ஓடியது? ம்,,,,” என்று பலம் கொண்ட மட்டும் அவன் நெஞ்சில் குத்த அவன் அவள் கரங்களைப் பிடித்து அதில் முத்தமிட்டான்!

“என் சிந்துவைப் பத்தி நீ முன்னாடியே சொல்லி இருந்தா,,, இவ்வளவு,,, என்று கௌதம் இழுக்க,

“சொல்லி இருந்தா இவ்வளவு ப்ரச்சனைகள் இல்லைனு சொல்ல வர்றியா? நான் சொல்லியிருந்தா அந்த உண்மைகளில் தலையும், இல்லாம வாலும் இல்லாம உன் மூளையில் ஏற்படும் திடீர் குலுக்கலில் உன் மூளை ஸ்தம்பிச்சு வெறும் காலிஃப்ளவர் மூளைதான் உனக்கு மிஞ்சி இருந்திருக்கும்!” அவன் அவள் கரங்களில் முத்தமிட்டுக் கொண்டே சிரித்தான்.

“உனக்குத் தெரியுமா? உனக்கு முன்னால் நான் சிரித்துக் கொண்டிருந்தாலும் என் மனம் இன்னும் அழுது கொண்டேதான் இருக்கு! உன் மாளிகையில் உள்ள மரக்கிளையில் கூடு கட்டக் கூட தகுதி இல்லாதவன் நான்.

ஒரு பழைய பாடலில் நடிகர் எம்.ஜி.ஆர் பாடுவாரே?

‘ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு,
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு!
பாதையிலே வெகு தூரம், பயணம் போகின்ற நேரம்
காதலையா மனம் தேடும்?!


அன்று அந்தப் பாடலின் மன நிலையில்தான் நான் என் தாயை சந்திக்க வந்தேன், ஆனால் நீ என்னை உன் கைகளில் ஏந்தி, அனைத்து உண்மைகள் தெரிந்திரும், என்னை ஒரு குழந்தையாய் உன் மடியில் தாங்கி, என்னை இந்த ஒரு வருடமும் சிரிக்க வச்சிருக்க தாரா!” என்று தன் கரங்களை நீட்டி அவளை வா வென்றழைக்க,

“பொறு சித்தார்த்தா! உன் மனைவி சிந்து உயிருடன் இல்லை என்று தெரிந்துதான் உன்னோடு நான் நெருங்கிப் பழகினேன். ஆனால் திருமணம் திருமணம்னு நான் அடிக்கடி கூறியதெல்லாம் மூடியிருந்த உன் ஞாபகங்களைத் திறந்து அவற்றை மறுபடியும் உன் மூளையில் எழுதுவதற்காகத்தான்

காதல் கல்யாணம்கிற வார்த்தையை அடிக்கடி கூறியது மறந்து போன உன் உணர்வு நாரம்புகளைத் தூண்டிவிடத்தான்!”

“அப்ப உன் அன்பு, பாசம், காதல், அனைத்துமே நாடகமா?” கோபத்திலும் ஆத்திரத்திலும், தான் ஏமாற்றப்பட்டோம் என்ற உண்மையிலும் அவன் தள்ளாட, அவன் உடம்பு நடுங்கத் தொடங்கியது! அவன் தன் கரங்களை அவளிடமிருந்து வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு அந்த மெத்தையில் தொப்பென்று விழுந்தான்.

"பொறு! பொறுடா! உடனே கப்பலேறி வெகுதூரம் பயணம் போகாதே!" என்று புன்னகையுடன் கூறியவள்,

“பீ காம், உன் மனதை அமைதிப்படுத்து! ஆனால் என் அன்பும், பாசமும், காதலும் நாடகம் இல்லை! நானே கதை வசனம் எழுதி நடித்த நாடகத்தில் நானே தலை கீழாய் கவிழ்ந்து போனேன். இந்த நிமிடம் என் கண்களையும் மனதையும் நிறைத்துள்ளது உன் முகம் மட்டும்தான்! உன் இதயத்தொடு கை கோர்த்துள்ள என் இதயத்தை என்னால் இனி எந்தக் காலமும் பிரிக்க முடியாது! பட் பிஃபோர் தேட் யூ மஸ்ட் நோ மை ஸ்டோரி!” என்று சொல்லிவிட்டு அவன் கண்களை உறுதியுடன் பார்த்தாள் தாரா!

“எனக்கும் ஒரு இறந்த காலம் உண்டு!” என்று அவனை ஏறிட்டுப் பார்த்தவளின் உதடுகள் துடிக்க, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவள் உடம்பு நடுங்குவதை அவன் புரிந்து கொண்டான்.

“பல நாட்களா உன்னிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள நினைத்த கதை ஒண்ணு இருக்கு! என்று கூறிவிட்டு அவன் முகத்தை அவள் ஏறிட்டுப் பார்க்க,

“வேண்டாம் டாக்டரம்மா, உங்க மனசை வருத்தி நீங்க ஒண்ணும் இப்பக் கதை புணைய வேண்டாம்” உங்க மனசு எப்ப நார்மலா ஃபீல் பண்ணுதோ அப்ப உங்க கதையை நான் கேட்டுக்கிறேன்!

நோஓஓஓஓ,,,, வென்று அவள் கத்த, யெஸ்ஸ்ஸ்ஸ் என்று கத்தியவன், அவளைத் தன் கண்களுக்குள் நிறைத்துக் கொண்டே,

“தாரா நீ இப்ப என் கைகளுக்குள் வா! அப்பத்தான் அடுத்த வார்த்தை பேசுவேன்!” என்று அவன் கூற, நின்று கொண்டிருந்தவள் மெல்ல நகர்ந்து சென்று அவன் மடியில் ஓர் மலர் குவியலாய் விழுந்தாள்.

மல்லாந்து அவன் மடியில் கிடந்தவளின் கண்களில் காதலோடு முத்தமிட்டவன்,

“ஒரு முறை நான் காதலில் தோற்றுவிட்டேன், இந்த வினாடி உனக்காகத் துடிக்கும் இந்த இதயம்தான் இன்று நிதர்சனமான உண்மை! நீ உன் கடந்த காலத்தைப் பற்றி என்ன கதை வேணாக் கூறு, அதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை! நீ இப்ப என் கூட வா! என் தாயிடம் பேசப் போறேன் முதலில் நம் திருமணம். நாம் இருவருமே மனதால் இணைந்தவர்கள்! திருமணத்தில் இணைந்த பின் உன் கதையைக் கூறு, நான் சாவகாசமா கேட்டுக்கிறேன்,,,,

“இல்லை கௌதம்,,,!” என்று அவள் பதில் கூற வாயைத் திறக்க,

“நோ!” என்று தன் முத்தத்தால் அவளுடைய இதழ்களை மூடியவன், நான் என் அம்மாக்கிட்டப் பேசிக்கிறேன், ஏதாவது இல்லைனு வாயைத் திறந்த,,,அம்மா இருக்காங்கனும் பார்க்க மாட்டேன், அவங்க முன்னாடியே என் இதழ்களால் உன் இதழ்களை லாக் செய்வேன்! என்று கூறிக் கொண்டே அவளைத் தன் கைகளில் இறுக்கிப் பிணைத்துக் கொண்டு அறையின் சாவியைக் கையில் எடுத்தவன் தன் தாயை சந்திக்கச் சென்றான்.

தாராவிற்கு கௌதமின் உறுதி பற்றித் தெரியும், ‘செஞ்சாலும் செய்வான், எதுக்குமே பயப்படாத கேடி!’ என்று அவள் இதயம் கூற, அவள் மூளையும் அதை ஆமோதித்துச் சிரித்தது

கௌதமும் தாராவும் அந்த அறைக்குள் நுழைந்த பொழுது கற்பகம் கட்டிலில் அமர்ந்திருக்க, பவி அவளருகில் தூங்கிக் கொண்டிருந்தது. கை கோர்த்துக் கொண்டு வந்த மகனையும், தாராவையும் ஜோடியாகப் பார்த்தவள்,

“என்னப்பா கௌதம் ரூம்ல வச்சே திருமணத்தை முடிச்சிட்டீங்களா?” என்ற அதிர்ச்சிக் கேள்வியைக் கேட்டார். கௌதம் சிரித்துக் கொண்டே அம்மா அருகில் வந்தமர்ந்தவன், நான் உன் மடியில படுத்துக்கவாமா!” என்று கேட்க,

“அதுதான் உன்னைத் தன் மடியில் தாங்கிக் கோள்ள தாரா என்ற பெயரில் ஒரு மடி தயாரா இருக்கேப்பா!” என்று கூறி மகனை வாஞ்சையுடன் பார்த்தவள்,

“உனக்கு ஞாபகம் இருக்கா, நீ டில்லி வேலைக்கு கிளம்புறதுக்கு முதல் நாள், தபாலாபிசையும், கோவை ரயில்வே சந்திப்பையும் இணைக்கும் அந்த இரும்பு மேம்பாலத்தில் உன் அப்பா மடியில் படுத்துக் கொண்டு ஏங்கி ஏங்கி சிறு குழந்தை மாதிரி அழுதியே!?”

“அழதடா, என் செல்லப் பையன் எப்பவும் கண் கலங்கக்கூடாதுன்னு!” அப்பா அதட்ட, “என்னால முடியலப்பா! சுதந்திரமா இந்த உலகை சுத்தி வரணும்னு ஒரு பக்கம் ஆசை இருந்தாலும், என்னோட ஒரே உலகமா இருந்த உங்க ரெண்டு பேரையும் பிரிஞ்சு போறது எனக்கு ரொம்ப வலிக்குது! நான் சொல்லாமலே என் கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டுது! எனக்கு என்னோட பிரிவைக் காட்டிலும் என்னோட பிரிவால நீங்க ரெண்டு பேரும் உடைஞ்சு போயிருவிங்களோன்னு தான் ரொம்பப் பயமா இருக்கு! அம்மா இந்தப் பாலத்தைப் போல ஒரு இரும்பு மனுஷி, ஆனால் நீங்க அப்படி இல்லை!

‘நான் வலுவானவன்ற மாதிரி தங்க முலாம் பூசப்பட்ட பயந்தாங்கொள்ளி நீங்க! உணர்வுகளை உள்ளுக்குள்ளேயே போட்டு அமுத்தி சிமன்ட் பூசி வச்சிருக்கீங்க! அதுல வெடிப்புகள் வராமப் பார்த்துக்குங்கப்பா!” இதுதான் ஆணி அறைஞ்ச மாதிரி நீ சொன்ன வார்த்தைகள்!

“நீ அன்னைக்கு சொன்னது அத்தனையும் சத்திய வாக்கு கௌதம், உன் பிரிவைத் தாங்கும் மனவலிமை உன் அப்பாவிடம் அன்று இல்லை!” தாய் மகன் இருவர் கண்களிலும் கண்ணீர் கட்டத் தொடங்கியது!

“இனிமேல் கண்ணீரும் இல்லை உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் இல்லை!” என்று கூறி, அவர்களைத் தரைத் தளத்திற்கு இழுத்து வர தாரா நினைக்க,

அவர்கள் மூவரின் பேச்சு சப்தத்தில் முழித்துக் கொண்டது குழந்தை.

“ஹை அப்பா! நீ எங்க போன?” என்று அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் பவி. அதோடு நிறுத்திக் கொள்ளாமல், ரயில் ஆன்ட்டி காணும் என்று குழந்தை கைகளை விரிக்க,

“தாராம்மா, ரயில் ஆன்ட்டி பார்க்கப் போலாமா” என்று கேட்டது!!!

“கடந்த ரெண்டு நாளும் என்னையும் அவளையும் தாமரைதான் கண்ணுங் கருத்துமா கவனிச்சுக்கிட்டாங்க, அவளை இன்னொரு தாரான்னு சொல்லலாம்!” என்று அவன் கூற, “ஏய்!” என்று கத்திய தாரா,

“உன்வாழ்க்கையில் ஒரு தாராதான் இருக்கமுடியும்!” என்றாள் உறுதியுடன்,

“சரிம்மா தாயே, பட் அந்த ஸ்நேகிதியும் என் மனதில் நீங்கா இடம் பிடித்தவள்தான்!” என்று அவளிடம் கூறியவன்,

“அம்மா உன்கிட்ட உன் மகன் நிறையப் பேச வேண்டியிருக்கு, ஆனால் அதுக்கு முன்னால எனக்கு நொய்டாவில் கொஞ்சம் வேலை இருக்கு! அதை முடிச்சிட்டு சீக்கிரமே இந்த ஊரைவிட்டுக் கிளம்பனும்!”

“அப்ப உன் மனைவி சிந்து!” ‘அது ஒரு வார்த்தையில் சொல்லக்கூடிய கதையா? எப்படி தன் தாயிடம் தன் துன்பியல் கதையைக் கூறப் போகிறானென்று அவனுக்குப் புரியவில்லை! ஆனால் அவனுக்குப் பதிலாகத் தாரா பதில் கூறி கௌதமைக் காப்பாற்றினாள்

“நீங்க உங்க பையனை நல்லாவே கணிச்சிருக்கீங்க அத்தை. நீங்க சொன்ன மாதிரி, அவங்களோட கல்யாண வாழ்க்கை சிறக்கவில்லை! அதெல்லாம் நிதானமாப் பேசுவோம் அத்தை” என்று தாரா கூற, கற்பகம் தன்னுடைய பல சோகங்களோடு அந்த சோகத்தையும் மென்று முழுங்கினாள்.

அந்த இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்றியவளை கௌதம் நன்றியோடு பார்க்க, “நீங்க எங்ககூட வர்றிங்களா அத்தை! அப்படியே டில்லியை சுத்திப் பார்த்துவிட்டு வரலாம்?” என்று அங்கிருந்த நிலமையை சகஜமாக்க முயன்றாள் தாரா “இல்லமா நானும் செல்லப் பாப்பாவும் இங்க அறையிலேயே இருக்கோம்!

“ம்,,,கூம்,,,!!!” நானு நானு!” என்று பவி குதிக்க,

“இல்லடா செல்லம்! என்னை விடவும், தாராம்மாவை விடவும் பாட்டி ரொம்ப நல்லாக் கதை சொல்வாங்க, பாட்டுப் பாடுவாங்க! அப்பா உனக்குக் கூறிய கதை எல்லாம் பாட்டி எனக்குக் கூறிய கதைதான், நீ இப்பக் கதை கேட்க பாட்டி கூட இருக்கப் போறியா? இல்லை ஊர் சுத்த எங்க கூட வரப் போறியா?” என்று பவிக்கு கௌதம் ரெண்டு சாய்ஸ் குடுக்க, குழந்தை மனசுக்குள்ளேயே பிங்கி பிங்கி பாங்கி போட்டதோ என்னவோ? பெரிய யோசைனையில் ஆழ்ந்து போனது!

“பாட்டி, எனக்கு, அம்மா யானை, அதோட காணமப் போன குட்டியானை கதை சொல்வியா?” என்று அவர் மடியில் பவி ஏறி அமர்ந்து கொள்ள,

“ஓகே! நீ கிளம்பி வா தாரா, நானும், அம்மாவும் என்னோட ரூமில் இருக்கோம், என்று கௌதம் கூற, பவியைத் தூக்கிக் கொண்டு, கற்பகம் முன்னால் நடக்க, அவன் சற்றே நடையைத் தளர்த்தி அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்,

“தாங்க்ஸ் தாரா அம்மாவுக்கு எப்படி பதில் சொல்றதுங்கிற பெரிய இக்கட்டிலிருந்து என்னைக் காப்பாத்தீட்ட,!” என்றவன்,

“அப்படியே அவுட்டிங் பிளானையும் அப்ரூவ் பண்ணிட்ட போல” என்றவன், சிறிது நிறுத்தி, அவளை தலை முதல் கால்வரை ஆராய்ந்தவன்,

“ஆனால் என்னோட கண்ணம்மா இப்படி சன்னியாசினி கலரில் ட்ரெஸ் போடாம, நல்ல அடர் சிவப்பு வண்ணத்தில் ஆடை உடுத்திட்டு வா!” என்று கூறியதைக் கேட்டவுடன், அவள் முகம் ரோஜாவின் அடர் சிவப்பு வண்ணத்தில் சிவந்து போனது,

“ஓகே! ஓகே! உன் உடம்பில் ஒட்டுத் துணிகூட இல்லாம, இந்த நாணச் சிவப்பு ட்ரெஸ் ஓகே!” என்று கூறிவிட்டு அவன் சிரிக்க,

“யாருடா? யாருடா? உன் கண்ணம்மா? ஏய் ரௌடி, இன்னைக்கு என் மேக்கப்பில் நீ செத்தடா!” என்று கூறி அவனை ஆழ்ந்து நோக்கினாள்

“அம்மாவுக்கு பாப்பாவுக்கும் ரூம் சர்விஸ்லயே சாப்பாடு ஆர்டர் பண்ணிறவா?” என்று அவள் கேட்க,

“அப்ப என்னை பட்டினி போடப் போறியாடா!? ஏற்கனவே பயங்கர பசியில இருக்கேன், நீ என் கண் முன்னால வந்திராத, வந்தா நீ காலி, அப்படியே கடுச்சுத் திண்ணாலும் தின்றுவேன்” என்ற கௌதமின் பேச்சில் நீரோடை போல் சலசலத்தவள்,

“ரெண்டே நாளில் நர மாமிசம் சாப்பிடுற அளவுக்கு நீ ரொம்பக் கெட்டுப் போயிட்ட!? நீ போ நான் வர்றேன்; இன்னைக்கு லன்ச் அவுட்டிங்க் இருக்கு!” என்று தாரா கூற,,,

அவனுக்குச் சுருக்கென்று இதயத்தில் வலித்தது! அப்படி முள்ளாய் குத்தியது சிந்து பற்றிய ஞாபகங்கள்தான்.

‘இது அவள் அடிக்கடி கூறும் வார்த்தைகள்! அந்த வலிகளோடு அவன் வாழப் பழகிக்கணும்!’

தாரா குளியலரைக்குச் செல்ல கௌதம் தன் தாயோடும் பவியோடும் தன் அறைக்குத் திரும்பினான். தொடரும்IMG-EKKUM WA0002.jpg

 
@டெய்சி ஜோசப்ராஜ் டியர்
இப்போ கௌதம் கூட இருக்கும் குழந்தை அவனுடைய குழந்தை இல்லைன்னு ஒரு வழியா confirm பண்ணிட்டீங்க
ஆனால் இந்த பவி தாராவின் குழந்தைன்னு அடுத்த குண்டு போட்டுட்டீங்களே, டெய்சி டியர்
தாராவின் முன்கதையை சீக்கிரமா வந்து சொல்லுங்க
 
Last edited:
Neenga trainla varum pothe intha kuyanthai Gowtham udayathu illanu sollitinga, Konjam kalatta Konjam pasam Konjam kathalnu oru kalavaya iruku intha episode, Gowtham ivvalavu romaticana manusanu ippathan theriyuthu, athalayum Avan appa kuda antha bridge vasanam kandippa parattanum
 
@டெய்சி ஜோசப்ராஜ் டியர்
இப்போ கௌதம் கூட இருக்கும் குழந்தை அவனுடைய குழந்தை இல்லைன்னு ஒரு வழியா confirm பண்ணிட்டீங்க
ஆனால் இந்த பவி தாராவின் குழந்தைன்னு அடுத்த குண்டு போட்டுட்டீங்களே, டெய்சி டியர்
தாராவின் முன்கதையை சீக்கிரமா வந்து சொல்லுங்க
தாராவின் ஃப்ளாஷ்பேக்கோடுதான் இந்தக் கதையே முடியும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஸிஸ்
 
Top