Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 34

Advertisement

அருமையான நிறைவான முடிவு மேம், போதைகளால் ஒவ்வொருத்தரின் வாழ்வு சீரழிவைதை அழகாக உங்கள் கதையின் மூலம் சொல்லியிருக்கீங்க, நீங்கள் போட்டியில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் மேம்.
உங்கள் கருத்துரைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி கரோலின் மா
 
என் கண்களில் காண்பது உன் முகமே அத்தியாயம் 34

வாசக நண்பர்களே! இன்று இந்தக் கதையின் இறுதி அத்தியாயம் பதியப் போகிறேன். இந்த நாவலைப் பதியத் தொடங்கிய நாளிலிருந்து என் கதையைத் தொடர்ந்து படித்து எனக்கு லவ்ஸ், லைக்ஸ், கமன்ட்ஸ் போட்டு என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கும், இனிமேல் புதிதாகப் படிக்கப் போகிறவர்களுக்கும், என் கதையைப் படித்துவிட்டு, மௌனமாய் கடந்து சென்றவர்கள் அனைவருக்கும் என் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும், உங்களின் அழகான ஆழமான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.

அத்தியாயம் 34
ஆனால் என் மேல் படிப்பு முடிந்து நான் சென்னை வந்த பின் சந்தோஷ் பற்றிக் கேட்ட எந்த விஷயமும் எனக்கு நல்லதாகப்படவில்லை. என்னைப் பிரிந்த பின் அவிழ்த்து விட்ட காளை போல் ஊர் சுற்றித் திரிந்து, 24 மணி நேரமும் போதையிலும் மயக்கத்திலும் கிடப்பதாய் கேள்விப்பட்டேன். அவனைக் காப்பதாய் நினைத்து திரும்பவும் நானே சென்று, ஒருநாள் அவன் வலையில் விழுந்தேன்.

சந்தோஷின் போதையைத் தெளிவித்து, அவனை முழு மனிதனாக்கி, மறுபடியும் அவன் போதையில் விழ நானே காரணமாகிவிட்டேனே என்ற குற்ற உணர்வு என் மனதை ஆக்கிரமிக்கத் தொடங்கியது!

அவன் தன் டாக்டர் படிப்பில் பல அரியர்ஸ் வைத்திருந்தாலும், பெற்றோர் தங்கள் ஜமின் சொத்திலிருந்து அள்ளிக் கொடுத்த காசிலிருந்து, ஆடம்பர பங்களா வாங்கி, அதன் கீழ் தளத்தில் ஒரு பெரிய உணவு விடுதியை அமைத்துக் கொண்டு மது, போதை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று கேள்விப்பட்டேன். ஆனாலும் அவனை உடனே சென்று பார்க்க என் மனம் ஒப்பவில்லை. அவனைப் பற்றி நினைத்தாலே எனக்குள் ஒரு விதமான பயமும் ஆற்றாமையும் என்னை மென்று தின்று கொண்டிருந்தது!

நான் சென்னையில் இரண்டு வருடங்கள் ஒரு நரம்பியல் நிபுணராக ஒரு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்துவிட்டு இதே ஊரில் வேறொரு ஏரியாவிற்கு, இப்ப வேலை பார்க்கும் இதே ஆஸ்பத்திரிக்கு என் டாக்டர் தொழிலை மாற்றிக் கொண்டு சென்றிருந்தேன். நான் என்னதான் என் டாக்டர் தொழிலில் முன்னேறிச் சென்று கொண்டிருந்தாலும் போதை பற்றிய என் ஆராய்ச்சியை நிறுத்தவில்லை.

அப்பொழுதுதான் ஒரு நண்பன் மூலம் சந்தோஷ் வாழ்க்கை பற்றி மேலும் தெரிந்து கொண்டேன். அதுவரையிலும் அவனை முற்றிலுமாய் மறந்திருந்த நான் அவனைப் பற்றி நினைக்கத் தொடங்கினேன். இருபத்தாறு வயதிலிருந்த எனக்கு அப்பொழுதுதான் ஒரு மெச்சூரிட்டி வரத் தொடங்கி இருந்தது!

குடி போதையைவிட்டு வெளியே வந்தவன் மறுபடியும் தடம் மாறி உள்ளே சென்றால் அவன் உடம்பு அதை எப்படி எதிர்கொள்ளும் என்று எனக்குத் தெரியும்! அந்தப் போதையிலேயே மயங்கிக் கிடக்கும் அவன் உடம்பிற்குள் உள்ள அனைத்து உறுப்புகளும் அழுகிக் கொண்டிருக்கும்!

ஒருநாள் அவனுடைய தலைமை செயலகமான மூளை படக்கென்று ஸ்டக்காகி நின்று போக, அனைத்து வேலைகளும் நிறுத்தப்பட்டு, ஒரு உயிரில்லாத காலிப்ஃப்ளவர் போல் அவன் மூளை செயலிழந்து போகும். அத்தோடு அவனுடைய அனைத்து உறுப்புகளும் இறந்துவிடும். இதயம் முதலில் செயலிழக்குமா, இல்லை மூளை முதலில் செயலிழக்குமா என்று நமக்குத் தெரியாது? ஏற்கனவே அவனுடைய பல உள்ளுறுப்புகள் சரி செய்யவே முடியாத அளவுக்குக் கெட்டுப் போயிருக்கும்! எதுவானாலும் பாதிப்பு ஒன்றுதான்.

‘அந்த வாலிபவயதில்; காதல் போதையில் எதையோ தவறாகப் பேசிவிட்டான், அவனை மன்னித்துவிடலாம்’ என்றுதான் அன்று அவனைப் பார்க்கச் சென்றேன். அவனை இனி சாவுத்தொட்டிலிலிருந்து காப்பாற்ற முடியுமா என்று கூட எனக்குத் தெரியவில்லை! ஆனாலும் ஒரு மனுஷியாக என் குற்ற உணர்வுகளிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ள, ஒரு டாக்டரா என் கடமை உணர்வுகள் மேலிட, என்னிடம் அபரிமிதமாயிருந்த இரக்க உணர்வுகளும் என் பிடரியைப் பிடித்து உந்தித் தள்ள; அவனிருந்த உணவு விடுதியின் முகவரி கேட்டு அவன் வீட்டிற்குச் சென்றேன். அது ஒரு ரம்யமான இளங்காலைப் பொழுது! அன்றுதான் அவன் வாழ்க்கையின் இறுதி நாளென்று எனக்குத் தெரியாது! ஒரு சிப்பந்தி என்னை அதிசயமாய் பார்த்துவிட்டு,

“ஐயா அபரிமிதமான குடி போதையில தன் உணர்வே இல்லாமக் கிடக்கிறார்மா வீட்டுக்குச் செய்தி அனுப்பி இருக்கேன்! வந்திருவாங்கனு நினைக்கிறேன்!” என்று கூறிவிட்டு, மேலே செல்லும் வழி கூறினான்.

மிகப் பெரிய ஹாலோடு சேர்ந்த பெரிய படுக்கை அறை! அதிலிருந்த மெத்தையில் அவன் அலங்கோலமாய்க் கிடந்தான். கையிலிருந்த பாட்டில் கீழே உருண்டு கிடக்க, மதுவின் வாடை அந்த அறை முழுவதும் வியாபித்திருந்தது. ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு மேலிருக்கும் அவனைப் பார்த்து. எனக்குக் குடலைப் புரட்டியது! அவன் வாய் எதையோ பினாத்திக் கொண்டிருந்தது.

அதில் ‘தாரா’ என்ற பெயர் என் காதில் தெளிவாய் விழ எனக்குத் தூக்கி வாரிப் போட்டது!

‘வேண்டாம் ஓடிவிடு’ என்று என்னோட அறிவு எவ்வளவோ எச்சரித்தும் பைத்தியக்காரி போல் அவனிடம் சென்றேன். இரவில் போதையோடு தூங்கி விழித்ததில் இப்பொழுது அவன் போதை சற்றே தெளிந்திருந்தது. என்னைப் பார்த்தவுடன் தன் தலையைக் உலுக்கி, நான் யாரென்பதை மனதில் கொண்டு வந்து தன் நினைவுகளைத் தேடத் துவங்கினான். அவனும் மாறி இருந்தான் நானும் மாறியிருந்தேன்.

அவனிடம் அந்தப் போதைப் பழக்கம் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் ஒர் அழகான ராஜகுமாரனாய் இந்த உலகை வலம் வந்து, ஒரு அருமையான பெண்ணைத் திருமணம் செய்து, அன்பான மனைவி குழந்தைகள் என்று அவன் வாழ்க்கையின் சொர்க்கத்தை அனுபவித்திருப்பான்…

ஆனால் அவனோ போதையில் சிவந்த கண்களும்; பீரினால் உப்பிய கன்னங்களும், எந்தவித நடமாட்டங்களுமின்றி சற்றே தொப்பை விழுந்த வயிறுமாய், அவன் தன் நீண்ட நெடிய உருவம் சுருங்கி; கூனல் விழுந்து, செவ செவ வென்று போதையில் சிவந்த கன்னங்களோடும் கட்டிலில் கிடந்தான் அவன்.

நான் யாரென்று தெரிந்து கொண்டவுடன், இரண்டு கண்களிலும் ஒரு ஒளி வெள்ளம் நிறைவதை நான் பார்த்தேன். அது அணையப் போகும் விளக்கின் ஒளி என்று எனக்கு அப்பொழுது தெரியாது!

“ஹே! தாரா நீயா? என்னைத் தேடி வந்துட்டியா?! எனக்குத் தெரியும் நீ என்னைத் தேடிவருவாய் என்று. உன்னால் என்னை மறக்க முடியாதுனு சத்தியமா நம்பினேன்; பாரு என் நம்பிக்கை பலிச்சிருச்சு, உன்னைப் பார்க்காமலே செத்துப் போயிருவேனோனு ஒவ்வொரு நாளும் சூரியனின் வரவை பயத்துடந்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளை வந்துட்ட!”

அவன் காய்ந்து சருகாய் போயிருந்த தன் உதடுகளைத் தன் நாவினால் ஈரப்படுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தான். நீ அன்று பார்த்ததைவிட இன்னும் அழகா இருக்க தாரா!”

‘போதையோடு அவன் கண்கள் என் உடம்பை மேய்ந்ததில், நான் சேலை உடுத்தி இருந்தும் அவன் முன்னால் உடையில்லாமல் நிற்பது போல் எனக்குத் தோன்றியது! அவன் பேச்சு வேறு திசையில் பயணிப்பதை உணர்ந்த என்னுடைய உடம்பு நடுங்கத் தொடங்கியது!

“உனக்கு குடிக்கத் தண்ணீர் வேணுமா சந்தோஷ்?”

“அந்த ஃப்ரிட்ஜில் ஜில்லுனவாட்டர் இருக்கும் கொஞ்சம் எடுத்துக் கொடேன்”

“இந்த மாதிரி நேரத்தில் ஜில்லுனு தண்ணி குடிக்கக் கூடாது! வேறு நார்மல் தண்ணி இருக்கா!?”

“சும்மா குடு தாரா, அப்பத்தான் எரியும் இந்த உணவுக்குழலும், வயிறும், மற்ற குடல் உறுப்புகளும் கொஞ்சம் குளிர்ச்சி அடையும். எனக்கு இப்ப வாய் முதல் இறுதித் துவாரம் வரை அனைத்தும் திகுத் திகுனு தீப்பிடிச்ச எரியிற மாதிரி இருக்கு! என் சாவுக்கு மிக அருகில் வந்துவிட்டேனு நினைக்கிறேன்.”

“அப்படி எல்லாம் பேசாத சந்தோஷ்! உன்னை நான் ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்ற முயற்சி செய்றேன்!”

“என்னைக் காப்பாத்தணும்னா என் உடலுக்குள்ள இருக்க அனைத்து உறுப்புகளையும் நீ ட்ரான்ஸ்பிளான்ட் பண்ண வேண்டி இருக்கும். அப்பத்தான் நான் ஒரு குழந்தையா மறுபடியும் பிறக்க முடியும், அந்தக் குழந்தையின் விழிகளில் நீ என் முகத்தைப் பார்ப்ப!”

“என்னடா சம்பந்தமே இல்லாம உளறிக் கொட்டுற,?”

“நான் இப்ப உளறலை தாரா, என் போதை தெளிந்து ரொம்பத் தெளிவா இருக்கேன்,,,நான் பேசினது என்னனு உனக்கே ஒரு நாள் புரியும் என்றவனின் நாக்கு “தண்ணீர், தண்ணீர் என்று குளறத் தொடங்கியது!

நான் உடனே ஒரு வாயகன்ற பாட்டிலை எடுத்து அதன் மூடியைக் கழட்டிவிட்டு அவனிடம் ஓடினேன். அவன் என் கையிலிருந்த பாட்டிலை வாங்கியவன், எட்டி அவனுடைய ஒரு கையால் என்னுடைய கரங்களைை இறுக்கிப் பிடித்துத் தன் கரத்தில் சிறை செய்து கொண்டே தண்ணீர் பாட்டிலை சரிக்க, அவனுடைய திறந்திருந்த வாயைத் தண்ணீர் நனைத்தது.

அதோடு நிறுத்தாமல் என்னையும் சேர்த்து அவன் இழுக்க, நான் சற்றும் எதிர்பாராமல் என் நிலை தடுமாறியதில், நானும் அவன் மேல் சரிய, அந்த பாட்டில் நீர் எங்கள் இருவரையும் ஒரு சேர நனைத்துவிட்டு அது கீழே உருண்டு போனது!. அவன் செய்த அந்த கொடூரமான செயலில் என் உடல் நனைந்து நான் நிலைகுலைந்து போயிருக்க, அவன் மேல் கொட்டிய நீர் அவன் போதையை மேலும் தெளிவித்திருக்க வேண்டும். அவனுக்குள் ஒளிந்திருந்த மிருகம் படக்கென்று விழித்துக் கொண்டு வெளியே வந்தது!

அவன் எத்தனை நாளாய் இத்தனை பலத்தையும் தன் டஉடம்பில் சேமித்து வைத்திருந்தானோ தெரியவில்லை, ஒரே செயலில் என்னை இறுக்கிப் பிடித்துக் கொண்டே, என் சேலையை உறுவியவன், நான் அவன் பிடியிலிருந்து தப்பிவிடாமல்; என்னை முற்றிலுமாக ஆக்கிரமித்து, ஒரு வெறியோடு என்னைக் கலைத்துப் போடத் துவங்கினான். நான் கதறக் கதற என்னை கற்பழித்தான்! நான் எவ்வளவு கத்தி புரண்டு அழுது தவித்தும் என்னால் என்னை அந்த மூர்க்கனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை! அவனுக்கு வேண்டியது என் உடம்பு, அவனுடைய மிருகத்தனமான வெறி அடங்கும் வரை என் கண்களில் தீக்ககங்குளுடன் காத்திருந்தேன். அவன் என் கண்களைப் பார்த்திருந்தால் அந்த நிமிடமே எரிந்து சாம்பலாகியிருப்பான்!

எல்லாம் முடிந்து அவன் மூச்சுத் திணறத் தொடங்கியது! அவன் உடம்பின் ஒவ்வொரு பாகமும் நடுங்கத் தொடங்கியது! மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க என்னைப் பார்த்தவன், படுத்த நிலையிலேயே இன்னும் தன்னுடைய ஒரு கரத்தின் மிருகபலத்தால் என்னை அவனிடமிருந்து தப்பிக்க விடாமல் இறுக்கிக் கொண்டவன், தன் மற்றொரு கரத்தால் எதற்காகவோ அருகிலிருந்த மேஜை ட்ராயரைத் திறந்தான். அவன் என்ன செய்யப் போகிறானோ என்ற தவிப்போடு நான் தப்பிக்கும் வழிதேடி அலைபாய்ந்து கொண்டிருக்க; அவனோ தாலியோடு கோர்க்கப்பட்டிருந்த ஒரு செயினை ட்ராயரிலிருந்து உருவி எடுத்தான்.

அப்பொழுது அவன் கண்களிலிருந்து கரகரவென்று கண்ணீர் கொட்டத் துவங்கியது! அதே அழுகுரலில் என்னை அழைத்தவன், திக்கித் திணறி பேசத் தொடங்கினான்.

“தாரா, இடை புகுந்து எதுவும் பேசாத! நான் என் வாழ்க்கையின் இறுதி நிமிடங்களில் இருக்கிறேன். என்னோட நாடித் துடிப்பையும் இதயத் துடிப்பையும் செக் பண்ணாமலேயே அந்தத் துடிப்புகள் அடங்கிக் கொண்டிருப்பது உனக்குத் தெரியும்.

இது என் மரண வாக்குமூலம். “நீ என் வாழ்வில் வந்த தேவதை! நான் விழுந்து கிடந்த பள்ளத்திலிருந்து, எவ்வளவோ சாகசங்கள் செய்து என்னைத் தூக்கிவிட்டாய்! ஆனால் நம் படிப்பு முடிந்தவுடன், என்னை வேண்டாத ஒரு புழு போல் தூக்கி எறிந்துவிட்டு சென்றுவிட்டாய். நான் மறுபடியும் குடிக்கத் தொடங்கினால் அந்த போதைக்கு அடிமையாகிவிடுவேன் என்று தெரிந்தும் செத்துப் போயிருவேன்னு தெரிஞ்சும் குடிச்சு என்னை அழிச்சுக்கிட்டேன்.

ஏன் தெரியுமா? நான் என்னை மறந்தால்தான் உன்னை மறக்க முடியும் என்பதால்தான். எனக்கு இதைத் தவிர வேறு வழியே தெரியலை! உனக்காகத்தான் இத்தனை நாளும் காத்திருந்தேன். நீ ஒருநாள் என்னைத் தேடிவருவ, அந்த நாள் என் வாழ்க்கையின் இறுதி நாளாய் இருக்கும் என்றுதான் என் பலத்தை எல்லாம் சேர்த்து வைத்துக் காத்திருந்தேன். இதுநாள்வரை நான் பல பெண்களொடு வாழ்வது போல் நாடகமாடினேனே தவிர ஒரு பெண்ணையும் நான் தொட்டதில்லை!

என் உயிர் பிரிவதற்கு முன் எனக்கு ஒரே ஒரு ஆசை, நீ என்னை கணவனாய் ஏற்றுக் கொண்டு உன் கழுத்தில் தாலி கட்ட அனுமதிக்கணும்! இந்தக் குடிகாரனையும் ஒரு தூய்மையான அன்புகொண்டு ஒரு பெண் நேசித்தாள்னு நீ பிரிஞ்சு போனப்புறம் புரிஞ்சுக்கிட்டேன். உனக்கு நான் கட்டும் தாலியோடு உன்னை ஒருமுறை பார்த்தால் போதும், அதுக்கப்புறம் நான் செத்துப் போயிருவேன், நீ அந்தத் தாலியைக் கழட்டி போட்டுட்டு யாரை வேணாலும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு! தாரா, உன் உயிர் நண்பனுக்காக இந்த ஒரு வரத்தை மட்டும் கொடுப்பியா?

அவனுடைய மூச்சு மேலும் சீர்கெடத் தொடங்கியது! ‘அவன் கோரிக்கையை ஏற்பதா? வேண்டாமா?’ என்று இருதலைக் கொள்ளி எறும்பாய் நான் தவிச்சுப் போனேன். சாகப்போகும் ஒரு உயிரின் கடைசி ஆசை??? அவனருகிலமர்ந்து அவனுடைய தோய்ந்து போன கரங்களோடு என் கழுத்தில் அவன் அணிவித்த திருமாங்கல்யத்தை வாங்கிக் கொண்டேன்.

அவன் கண்கள் சொருக, என்னைப் பார்த்து மந்தகாசமாய்ச் சிரித்தான். அவ்வளவுதான் அவன் கண்கள் குத்திட்டு நிற்க; அவன் உடம்பிலிருந்த தோல்கள் பல இடங்களில் வெடித்து அதிலிருந்து ரத்தம் கசிந்து உரையத் தொடங்கியது.

அவ்வளவுதான் கௌதம் என் வாழ்க்கையின் ஒரு மிகப் பெரிய அத்தியாயம் முடிவு பெற்றது!” இப்பொழுது கௌதம் கண்களில் நீர் திரண்டிருந்தது!

“இன்று எனக்குக் கண்கள் உடைப்பெடுத்துக் கண்ணீர் கொட்டுகிறது ஆனால் அன்று ஒரு சொட்டுக் கண்ணீர் கூட அவனுக்காக வரவில்லை. கலைந்து கிடந்த என்னை சரிசெய்து கொண்ட நான், நிலை குத்தியிருந்த அவன் விழிகளை மூடி, அவனை நேராகப்படுக்க வைத்து, அவன் உடைகளை சரி செய்து கொண்டிருக்கும் பொழுதே மாடிப் படிகளில் பலர் வரும் சப்தம் கேட்டது!

அவனுடைய பெற்றோரும் இன்னும் சில உறவினர்களும் அங்கே காட்சி அளித்தார்கள். நல்ல வேளையாக எங்க இருவரோட அலங்கோலத்தையும் நான் ஓர் அளவிற்கு சரி செய்திருந்தேன்.

“நீ யாருமா? இங்க என்ன செய்ற? என் பையன் ஏன் இப்படி ஆடாமல் அசையாமல் கிடக்கிறான்?!” என்று என்னைக் கேள்வி கேட்டவர் அதுவரையில் ஒரு முறைகூட நான் கண்ணால் கண்டிராத சந்தோஷின் தந்தை!

“நான் டாக்டர் தாரா! உங்க புள்ளை அளவுக்கதிகமாக் குடிச்சு அப்படியே அந்த குடி போதையிலேயே செத்துப் போயிட்டாரு!” சந்தோஷின் தந்தையும் குடித்திருந்தார்! ஆனால் ஒரு அளவோடு இருந்திருக்க வேண்டும்! ஏனென்றால் அவர் நடையிலோ, பேச்சிலோ எந்தவொரு தள்ளாட்டமும் இல்லை!

“ஓ! நீதான் அந்த டாக்டர் தாராவா? என் பிள்ளை உனக்காகத்தான் உயிர் வாழ்றதா பலமுறை சொல்லி இருக்கான்!” அவனுடைய அப்பா பேசி முடிக்கும் முன் அம்மா இடை புகுந்தார்!

“சந்தோஷ் தாலிகட்டிய மனைவியாடி நீ! உனக்கு அறிவிருக்காடி? நான் தவமா தவமிருந்து பெத்த பிள்ளை செத்துப் போய்க் கிடக்கிறான் நீ கல்லு மாதிரி, அலங்கரித்த சிலை மாதிரி அப்படியே நிக்கிற?”

அவரின் அம்மாவின் கூச்சலோடு அந்தக் கூட்டம் முழுவதும் அவன் உயிரற்ற உடம்பின் மேல் விழுந்து புரண்டு அழத் தொடங்க, சிறிது நேரத்தில் அங்கே மேலும் மேலும் கூட்டம் கூடத் தொடங்கியது.!

நான் எல்லோராலும் ஒரு கொலைக் குற்றவாளி போல் நடுவில் நிறுத்தப்பட்டு கொலைக் களத்திற்கு இழுத்துச் செல்லப்படும் ஆடு போல சந்தோஷின் உடலோடு மாயவரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டேன்!

“நோ தாரா! நிறுத்து!” என்று கூச்சலிட்டான் கௌதம்.

“நீ இதுக்கும் மேல ஒண்ணும் சொல்ல வேணாம், ஏற்கனவே உனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சொல்லிட்ட,, மறுபடியும் ரிப்பீட் பண்ணாத, அதைத் தாங்கும் மனவலிமை எனக்கு இல்லை!”

"இல்லை ஏன் மனதிலிருக்கும் அனைத்தையும் உன் மடியில் கொட்டினால்தான் என் மனம் சாந்தியடையும்" என்றவள் தொடர்ந்தாள்!

அவ்வளவுதான் என் தலையில் தண்ணீர் ஊற்றி, என்னைத் தலை முழுக வைத்தார்கள்.. மருதாணியால் அலங்கரிக்கப்பட்டு, பொன் வளையல்கள் பூட்டப்படுவதற்குப் பதிலாக, கை நிறைய கண்ணாடி வளையல்களை அடுக்கி, அவற்றை ஒன்றோடொன்று மோதி உடைத்தார்கள்; நெற்றியில் செந்தூரம் இடுவதற்குப் பதிலாக அவற்றைப் பலர் கூடி அழித்துவிட்டார்கள்! கூந்தல் நிறைய மல்லிகை மலரைச் சூடி இனி உனக்கு இவை சொந்தமில்லை என்று அவற்றை சிறிது கூட இரக்கமின்றி பிய்த்தெறிந்தார்கள், அந்த மலருக்கும், அதைச் சூடிய அவளுக்கும், வலிக்கும் என்பதை அவர்கள் உணரவில்லை!

எவை எல்லாம் என் வாழ்க்கையில் நடந்திருக்க வேண்டுமோ அவை எல்லாம் நடக்காமல், நடக்கக் கூடாததெல்லாம் நடந்து முடிந்துவிட்டது! அவனுடைய அழுக்கு அந்தத் தலை முழுக்கோடு அடித்துச் செல்லப்பட்டதென்று நினைத்தேன்! நடு இரவில், பெண்கள் கூடி, ஒப்பாரியோடு என் தாலியைப் பாலில் போடச் சொல்லி வாங்கிக் கொண்டார்கள். தாலி கோர்க்கப்பட்டிருந்த அந்தக் கனத்த செயினை அங்கிருந்த பாலிற்குள் போட்டுவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் ஊர் வந்து சேர்ந்தேன். என் பெற்றோரும் அண்ணனும் மட்டுமே மொபைலில் நான் அனுப்பிய செய்தி பார்த்து அடித்துப் பிடித்துக் கொண்டு மாயவரம் வந்தார்கள். எனக்கு இழைக்கப்பட்டக் கொடுமைகள் எதையும் அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை!

என் கண்ணீரை இறுக்கிக் கட்டிவிட்டு, நடந்ததை அவர்களிடம் கூறினேன். என் மனம் சாந்தி அடைய என்னை அவர்களோடு அழைத்துச் சென்றார்கள். என் உறவினர் யாருக்கும் என் கதை தெரியாது!. எனக்கு மறுபடியும் திருமணம் என்று ஒன்று நடந்தால்தானே, என் கடந்தகாலம் அலசப்படும்! உன்னைச் சந்திக்கும் வரை காதல், திருமணம், என்னும் வார்த்தைகளையே என் மூளையில் கெட்ட வார்த்தைகள் என்று பதிந்து வைத்திருந்தேன்.

பின்னர் ஒரு வாரத்திலேயே சென்னை வந்த நான், அடுத்த ஐம்பதாவது நாளே என் வயிற்றில் அவன் கரு வளர்வதைப் புரிந்து கொண்டேன். ஒரு தவறும் புரியாத அந்தக் கருவை அழிக்க எனக்கு மனம் வரவில்லை.

அதற்குமேல் என்னால் சென்னையில் இருக்க முடியாமல். கோவையில் இருந்த என் தோழி டாக்டர் சரளாவிடம் சென்றேன். என் கதைகேட்டு, ஆறுதலோடு என்னை அரவணைத்துக் கொண்டாள் அவள். கோவைக்கருகே அவளுக்குச் சொந்தமான மருத்துவமனையில் ஒரு நியூரோ சர்ஜனாக வேலை செய்து கொண்டே என் அபிச் செல்லத்தை பெற்றெடுத்தேன்.

அங்கிருந்துதான் ஈரோடு சென்ற நான், திரும்பிவரும் வழியில் உன்னைக் காப்பாற்ற வந்து, அந்த ஆஸ்பத்திரியிலேயே சில நாட்கள் இருந்து பின்னர் டிஸ்சார்ஜ் பண்ணி, உன்னை சென்னைக்குக் கூட்டி வந்து எனக்கு மிகவும் பழக்கமான மருத்துவமனையில் சேர்த்தேன். அங்குதான் உன்னைக் காப்பாற்ற என் ஒரு வயது நிரம்பிய என் குழந்தையை உனக்குத் தாரை வார்த்துக் கொடுத்தேன்.

உன்னை நான் அந்தக் குழிக்குள்ளிருந்து காப்பாற்றிய கதையை இன்னொரு நாள் சொல்றேன், இப்படியே உட்கார்ந்திருந்தா நாம எப்பத் தூங்குறதாம்?”

“துங்குறதா?!” என்று கண்களை அகல விரித்தவன், அப்ப என்னோட தாரா மேடத்திற்கு என் மேல் உள்ள கோபமெல்லாம் போயிருச்சாக்கும்!” என்று அவள் உள்ளங்கையை ஆராய்ந்து கொண்டே, கேட்டவன்,

“உனக்குத் தெரியுமா தாரா, உன் உள்ளங்கையில் உள்ள ரேகைகளும் என் கையில் உள்ள ரேகைகளும் எப்படி ஒண்ணோடு ஒண்ணாப் பின்னிப் பிணைஞ்சிருக்குனு!?”

‘நான் மனைவியை இழந்தவன்’ நீயோ கணவன் என்ற பெயரில் ஒருத்தனை இழந்திருக்க; ரெண்டுபேரோட வாழ்க்கையுமே போதைக்கு அடிமையானவர்களால் அழிக்கப்பட்டிருக்கு. உன்னோட கணவனும் என்னோட மனைவியும் போதையிலேயே செத்துப் போனவுங்க. போதையால் எத்தனை உயிர்கள் அழிக்கப்படுதுனு இந்த உலகம் எப்பப் புரிஞ்சுக்கப் போகுதோ அப்ப இந்த உலகமே சொர்க்கமாகிவிடும்!

நம்ம ரெண்டு பேரின் வாழ்க்கையுமே இந்தப் போதை என்னும் பூதாகரப் பேயால் நாசப்படுத்தப்பட்டிருக்கு! நீ குடிகாரர்களை வச்சு செய்யும் இந்த ‘ஜெனிடிக்கல் கரக்ஷன்’ என்கிற ஆராய்ச்சிக்கு நான் முழு ஒத்துழைப்பும் கொடுக்கப் போறேன்.

என்னோட அம்மா, உன்னை என் மனைவி சிந்துவோட இடத்தில உட்கார வச்சுட்டாங்க. இப்ப நாம ரெண்டு பேரும் ஒரே குழந்தையால் பிணைக்கப் பட்டிருக்கோம். அங்க வீட்டில் தர்ஷியோடு பெரிய காமடி சீனே ஓடிக்கிட்டிருக்கு. அதைப் பத்தி எல்லாம் நாம ஊருக்குப் போற வழியில பேசுவோம். இப்ப நீ உனக்குள்ள இருக்க கோபம், தாபம், சோகம், அனைத்தையும் குளிச்சுத் தலை முழுகிவிட்டு; என்னோட காதல் மனைவியா என்கிட்ட வரப்போற!” என்றவன்,

'நெஞ்சம் மறப்பதில்லை! அது தன் நினைவை இழக்கவில்லை!
நான் காத்திருந்தேன், உன்னைப் பார்த்திருந்தேன்!
கண்களும் மூடவில்லை; என் கண்களும் மூடவில்லை!
காலங்கள் தோறும் உன் மடி தேடி கலங்கும் என் மனமே!
வரும் காற்றினிலும், பெரும் கனவினிலும்,
நான் காண்பது உன் முகமே!'


என்று பாட்டுப் பாடிகொண்டே, தன் மனைவியை அள்ளிச் சென்று ரெஸ்ட் ரூமில் விட்டு வந்தான் கௌதம். மறுநாள் இருவரும் கிளம்பி அதே சென்னையிலிருந்து கோவை செல்லும் பகல் நேர விரைவு வண்டியான இன்டர்சிட்டி எஃஸ்ப்ரெஸில் ஏசி இரண்டடுக்குப் பெட்டியில் பயணம் செய்ய,

“பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்”


என்ற பாடல் வரிகளொடு அவர்களின் ‘வாழ்க்கைப் பயணத்தை’ அந்த ஓடும் ரயிலில் தொடங்க சடக், டடக், சடக் என்று அந்த ரயில் ஓடத் துவங்கியது.

இந்த அத்தியாயத்துடன்

‘டெய்சி ஜோசப்ராஜின் ‘என் கண்களில் காண்பது உன் முகமே’

என்ற நாவல் முற்றுப் பெறுகிறது.View attachment 942
Love Romance மட்டும் கதை களமாக இல்லாமல் புதுவிதமான உங்கள் கதை மிகவும் அருமை.
 
Top