Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஏகாந்த பொழுதும் காதலும் Final

Advertisement

கார்த்திகா கார்த்திகேயன் சிஸ்டர் எழுதிய "ஏகாந்த பொழுதும் காதலும்"
சுஜி வெண்ணிலா மைதிலி உயிர் நண்பிகள் மூவரும் 🥰 சுஜி..அம்மா அப்பா அண்ணன்கள் என பாசமான குடும்பம்.. பிள்ளைகளின் படிப்பிற்கு அதிகமாக செலவு செய்வதால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில்.. வெண்ணிலா.. அப்பா அம்மா அண்ணன்கள் அக்கா என்ற பெரிய குடும்பத்தில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வைத்திருக்கும் உயர் நிலையில் உள்ளவர்கள் பொருளாதாரத்தில்.. மைதிலி.. அப்பா மட்டுமே அதுவும் சந்தேகம் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு கையாலாக இருக்கும் ஒரு நபர்😔 இவரிடம் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என ஏங்கிக் கொண்டிருக்கிறாள்😔😔😔நண்பர்கள் என்ற நிலையில் இருந்து உறவுமுறை என்ற அடுத்த கட்டத்திற்கு செல்கிறார்கள்.. ஒருவர் மனதில் இருக்கும் காதல் அவர்களுக்கு தெரிவதற்கு முன்பே நண்பர்களுக்கு தெரிந்து விடுகிறது 🥰 அதை வெற்றி பெற செய்ய அவர்களுக்கு தெரியாமலேயே மற்றவர்கள் உதவுகிறார்கள்.. 👏
சுஜி அப்படி வெண்ணிலாவிற்கு அண்ணி ஆகிறாள்.. இவளின் கணவன் புவியரசன் வெண்ணிலாவின் மூத்த சகோதரன். திருமணத்தில் நாட்டம் இல்லாமல் இருக்கும் இவன்.. படிப்பின் காரணமாக விருப்பம் இல்லாமல் திருமணம் முடிக்கிறான் சுஜியை 😔 அவளிடம் பேசாமல் அம்மா அக்கா தம்பி மனைவியால் அவளுக்கு துயரம் ஏற்படும் போதும் அதை தட்டி கேட்காமல் கண்டும் காணாமல் செல்கிறான் 😔 இதில் மனது துயரப்படும் சுஜி யின் துயரங்கள் களையப்பட்டதா என்பது கதையில்..
சுஜியை அவள் மனம் கவர்ந்தவனிடம் சேர்த்து வைக்க எடுக்கும் முயற்சியில் சுஜியின் அண்ணன் மதன் காதல் சொல்கிறான் மைதிலியிடம் ரவுடி தந்தையை மீறி இவர்கள் காதல் வெற்றி பெற்றதா என்பது கதை..
சிறு வயதிலிருந்து தன் வீட்டில் வளரும் மாமன் பரணியின் மீது அளவு கடந்த காதல் வெண்ணிலாவிற்கு.. எதற்காகவோ இவளை மறுக்கிறான் பரணி.. இவனின் மறுப்பை மீது இவனை கை பிடித்தாலா வெண்ணிலா என்பதும் கதையில்.. புவியின் தந்தை பாரிவேந்தன் நியாயவாதி அருமையான கதாபாத்திரம் 👏👏 மனைவியிடம் பேசாமல் இருப்பதற்கு காரணம் புவியின் தயக்கம் மட்டுமே.. அவனை சரி செய்து கொள்ள அவன் எடுக்கும் முயற்சிகள் அருமை 👏👏 மனைவியின் மீது பாசமாகத்தான் இருக்கிறான் ஆனால் அதை வெளிப்படுத்த தெரியவில்லை 😔 மனைவியை தன் வீட்டினர் முன்பு உயர்வாக காட்ட இவன் மெனக்கிடுவதும் சிறப்பு 👏🥰 வேறொரு கதையின் சாயலாக இந்த கதை இருப்பதாக நான் ஒரு குரூப்பில் பார்த்தேன் எனக்கு அப்படி தெரியவில்லை நாயகன் நாயகி இடம் பேசாமல் இருக்கிறான் அது மட்டுமே ஒற்றுமையாக இருந்தது மற்றபடி இரண்டு கதையும் வெவ்வேறு தான்
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவுமே நகர்ந்தது கதை 🥰👏👏
Good luck dear 🥰❤️💐
Keep rocking 🌹🥰💐
இந்த எழுத்தாளரை யாராவது டாக் செய்யுங்கள் 🥰
 
Top