Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-16

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -16

நளனோடு கோபித்துக்கொண்டிருந்த ஸ்வப்னா அன்று காலையில் வேறு எங்கும் சென்றிருக்கவில்லை. கோவிலுக்குத் தான் சென்றிருந்தாள். கோவிலில் அவளுக்கு ஆச்சர்யம் காத்து இருந்தது.

அவள் பிரார்த்தனை முடிந்து சிறிது நேரம் கோவிலில் அமர்ந்திருந்தாள். அவள் தோளை யாரோ தொட்டார்கள். திரும்பினாள்.

"அத்தை...." மகேஸ்வரி நின்றுக்கொண்டிருந்தார். அவர் கண்கள் மகனைத் தேடின.

"அவன் வரலயா.....?"

"இல்ல.. வீட்ல..." என்று அமைதியாக இருந்தாள்.

" மாமா நல்லா இருக்காரா அத்தை?" எதாவது பேச வேண்டுமே என்றதுக்காக பேசி வைத்தாள் ஸ்வப்னா.

"ம்.." மகேஸ்வரியிடம் இருந்து அது மட்டும் தான் பதிலாய் வந்தது.

அடுத்து என்ன கேட்பது? 'சஞ்சு எப்படி இருக்கானு கேட்போமா..?.ஐயோ... நேற்று தானே அவ கூட பேசினேன். வேற என்னக் கேட்பது...' என ஸ்வப்னா தடுமாறினாள்.

"மத்தியானம் அவனை நான் வீட்டுக்கு வரச்சொன்னதா சொல்லு....." என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

அவளோ அதிர்ச்சியில் உறைந்துப் போய் நின்றாள். சந்தோஷமிகுதியில் அவனுக்கு போன் செய்து விடயத்தை சொல்லலாம் என்று யோசித்தவள், அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டு மார்க்கெட் சென்று சில காய்கறிகளை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினாள். அதற்குள் அவளை காணாமல் நளன் ஒரு கலாட்டா பண்ணி வைத்திருந்தான். வீட்டுக்கு வந்தவள் அவனை ஒரு இடத்துக்கு போகனும் என்று கிளப்பிக்கூட்டிக்கொண்டு போக அவனுக்கு ஆச்சர்யம்.

அவளோடு சந்தோஷமாக அவன் கிளம்பினான்.

"ஸ்வப்பு! நீ ரெடியா?"

"நான் வரேன்.. ஆனா பாதியில் இறங்கிக்குவேன் நளா..."

"ஏன்டி....? முதல்ல எங்க போறம்னு சொல்லு.." என்றான்.

" அது... எனக்கு கொஞ்சம் தலைவலியா இருக்கு..... நான் அம்மா வீட்ல இருக்கேன்.."

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீ நல்லாத் தானே இருக்க... நீ கிளம்பு. எங்கடீ போகனும்..?"

"உங்க அம்மா வீட்டுக்கு.. " என்று சொன்னவள், காலையில் மகேஸ்வரியை கோவிலில் கண்டதையும் அவர் வர சொன்னதையும் சொன்னாள்.

" ஆ.. அம்மா காலையில கால் பண்ணினாங்க. நான் உன்னை தேடுற அவசரத்துல அப்புறம் பேசுறேனு வைச்சிட்டேன்.."

"அடப்பாவி.. இன்னைக்கு போய் அவங்களை கடுப்பாக்கியிருக்கியே.." என்றாள் ஸ்வப்னா.

" ஏன்..? இன்னைக்கு என்ன? "

" சுத்தம்.. நீயெல்லாம்.. உங்க அம்மாவுக்கு .. நோ..நோ.. என் மாமியார்க்கு பர்த்டே டா கண்ணா.."

"ஐயையோ.. மறந்துட்டேனே.."

" ம்.. நல்ல பிள்ளை.. நீ.." என்று அவள் சிரித்தாள்.

" அம்மாவுக்காகவா கோவிலுக்கு போன..?" என்று கேட்டான் நளன்.

" ம்.."

"மாமியார் மேல அவ்வளவு பாசமா மருமகளே.."

" டேய்.. வம்பிழுக்காதே.." என்று செல்லமாய் அவன் தோளில் அடி போட்டாள்.

" சரி.. நீயும் வா.. அம்மாவைப் பார்த்துட்டு வெளிய எங்கயாச்சும் போயிட்டு வரலாம்..." என அவளை ஒருவழியாக சம்மதிக்க வைத்து கிளப்பிக்கொண்டு வந்து சேர்ந்தான் அம்மாவின் வீட்டுக்கு.

அங்குதான் ஆரம்பமாகியது பிரச்சனை.

"நான் வரச்சொன்னது உன்னை மட்டும் தான்.. " என்று குண்டைத்தூக்கிப் போட்டார் மகேஸ்வரி. அவனோ அதிர்ச்சியாகி வாசலிலேயே நின்றுப்போனான்.

ஆரோக்கியராஜ் லைப்ரரிக்கு கிளம்பி போய் அரைமணித்தியாலம் கடந்திருந்தது. நளன் அவளை ஆசையாக அழைத்துக்கொண்டு சென்றான். ஆனால் அம்மா இப்படி நடந்துக்கொள்வார் என அவன் எதிர்ப்பார்க்கவேயில்லை.

"என்னம்மா... கூப்பிட்டு வச்சி அசிங்கப்படுத்துறிங்களா? இதெல்லாம் நல்லா இல்லைம்மா....."

ஸ்வப்னா என்ன நடக்கிறதென்றுத் தெரியாமல் நின்றுக்கொண்டிருந்தாள். அப்போது தான் ' அவனை மத்தியானம் வரச் சொல்லு..' என்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. இருவரையும் அழைக்கவில்லையே என்று உணர்ந்தாள்.

மகேஸ்வரி அந்தப்பக்கமாய் திரும்பிக்கொண்டார்.

"இத பாருங்க அம்மா... உங்களுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்புத்தான். அதுக்காக நீங்க இவளை இப்படி இன்சல்ட் பண்றதை என்னால தாங்கிக்க முடியாது... நான் மட்டும் எப்படி உள்ள வருவேனு நீங்க நினைக்கலாம்.. " என்று சொல்லிவிட்டு அம்மாவை கோபமாக பார்த்தான்.

அவனுக்கு எக்கச்சக்கமாய் கோபம் வந்து தொலைத்தது.

" நான் உன்னை மட்டும் தான் வரச் சொன்னேன்.. அவளை இல்ல.." அப்போதும் மகேஸ்வரி தன் வார்த்தைகளில் உறுதியாக நின்றார்.

நளன் கோபம் கொண்டவனாக ஸ்வப்னாவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடந்து காருக்கு வந்தான்.

"என்னை மட்டுமா வரச் சொன்னாங்க..?" அவளைப் பார்த்து கோட்டான்.

"அது... அவனை வரச் சொல்லுனு சொன்னாங்க. என்னை கூப்பிடலத் தான். அதான் நளா நான் வரலனு சொன்னேன். நீதான் கேட்கல... "

"லூசு .. நீ வேற.. நான் வேறயா....? உனக்கு மரியாதை இல்லாத இடத்துல எனக்கு என்ன வேலை....? இத்தனை நாளாச்சு.. அம்மா புரிஞ்சுக்குவாங்கனு நான் தப்பு கணக்குப் போட்டுட்டேன்... அம்மா ஏன் இப்படி ஆகிட்டாங்க...." என நொந்துப்போனான்.

"நளா.. அத்தை இவ்வளவு கோபமா இருக்கதுக்கு நான் தானே காரணம்.. அவங்களுக்கு என்னை கண்டாலே ஆகல.. நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதால தான் இத்தனையும்...."

" இப்ப என்ன சொல்ற...? உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா..... இன்னொரு தடவை இப்படி பேசாத. அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும்...."

" இல்ல நளா.. அம்மாவையும் பிள்ளையையும் பிரிச்சிட்டமேனு தான் எனக்கு வருத்தமா இருக்கு...

"லூசுத்தனமா பேசாத... "

"இல்ல நளா.. இத்தனை வருஷமா உன்னை கைக்குள்ளயே வச்சி வளர்த்திருக்காங்க. அவங்க மனசு கஷ்டப்படுற மாதிரி நம்ம வேற கல்யாணம் பண்ணிக்கிட்டோமா.. அதுல அவங்க கோபம் கூடிருச்சி.... அவங்களால அதை ஏற்றுக்கமுடியல... அதான் அதை இப்படி காட்டுறாங்க.. எந்த அம்மாவும் தன் பையன் தன்னை விட்டுட்டுப் போக கூடாதுனு தான் நினைப்பாங்க. நீ என்னனா ரெடியா வீடு பார்த்து, எல்லாம் பண்ணி வச்சிருக்க...."

" நான் பண்ணினதுல எங்கடி தப்பு இருக்கு. எனக்குனு இப்படித்தான் வாழனும்னு ஆசை இருக்காதா?? என் வீடு, என் பொண்டாட்டி, என் பசங்கனு... இருக்க ஆசை இருக்காதா? பசங்க வளர்ந்த பிறகு பெற்றவங்க பிள்ளைகள் கையை கொஞ்சம் விடனும். அப்பத்தான் பிள்ளைகளால எதையாச்சும் கத்துக்கமுடியும். நிறைய அடிப்பட வேண்டி இருக்கும் தான், ஆனா அப்பத்தான் அனுபவம் கிடைக்கும். அதுக்காக பெற்றவங்களை அப்படியே விடனும்னு எல்லாம் நான் சொல்லல. அவங்களுக்கு செய்யவேண்டிய விடயங்களில் எந்த குறையும் வைக்க மாட்டேன். என் கடமையை நிறைவேற்றுவேன். அவங்களுக்கும் நமக்கும் ஒரு சின்ன இடைவெளி இருக்கனும்னு நான் ஃபீல் பண்றேன். அதுனால பாசம் எந்த விதத்துலயும் குறை ஏற்படாது...."

" என்னவோ நிறைய பேசுற.. என் மண்டையில ஒன்னும் ஏறமாட்டிக்குது. " என்றாள் ஸ்வப்னா.

"ஹூம்.. உன்னை.. நான் ஏதாச்சும் சீரியசா பேசினா உனக்கு மண்டையில ஏறாதே... " என்றான்.

"சரி.. அதை விடு.. வீட்டுக்கு போவோம்.." என்று அவள் சொல்ல இருவரும் கிளம்பினர். அன்றைய சண்டே சண்டையில் ஆரம்பமாகியதால் ஸ்வப்னாவால் இயல்பாக இருக்க முடியவில்லை. மனதை எதுவோ வருத்திக் கொண்டு இருந்தது.

அன்று மாலை ஆரோக்கியராஜ் வீட்டில் கத்திக்கொண்டிருந்தார்.

" உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு மகேஸ். ஏன் இத்தனை பிடிவாதமா இருக்க. அது நம்ம பையன். இன்னைக்கு அவன் வாரானு நீ சொன்னப்ப உன்னை நம்பி நான் வெளிய போயிட்டேன் பாரு.. அதுதான் பெரிய தப்பு. ஏன் அவங்களை அசிங்கப்படுத்தி அனுப்புன.. அது நம்ம பையன்டி.. அவன் மனைவி நமக்கு மருமகள். நாளைக்கு நீயோ நானோ உடம்புக்கு முடியாம படுத்தா அவங்கத் தான் வந்து பார்ப்பாங்க. கட்டி போன உன் பொண்ணு வந்து நாள்முழுக்க இங்கயே கிடக்க மாட்டா.. அதை மனசுல வச்சிக்க.. அவ்வளவுதான் சொல்வேன்...." என கோபமாக பேசிவிட்டுச் சென்றார். அந்த வார்த்தைகள் உண்மையாகப் போவது தெரியாமல்.
 
Nirmala vandhachu ???
 
Top