Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-6

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -6

"சஞ்சு ரெடியாகிட்டாளாம்மா...?" என்றபடி மாடியிலிருந்து இறங்கி வந்த நளன் வேஷ்டி சட்டையில் அத்தனை கம்பீரமாய் இருந்தான். உண்மையில் ஒரு ஹீரோ போல இருந்தான்.

"ஸ்வப்னா ரெடி பண்றாப்பா.. அவங்க எங்க வந்துக்கிட்டு இருக்காங்கனு கேளுப்பா...." பலகார தட்டுக்களை தயார் செய்தபடியே கேட்டார் மகேஸ்வரி.

"ம்.. சரிம்மா.. " என்று சொல்லிவிட்டு தங்கையின் அறைக் கதவைத் தட்டினான்.

"ஸ்வப்னா... சீக்கரம் ரெடி பண்ணு. அவங்க வந்திடுவாங்க..." என்று குரல் கொடுத்து விட்டு நகர முற்பட்டவன் திறந்த கதவின் வாசலில் 'அவன் தேவதை' தெரியவும் அப்படியே சொக்கிப் போய் நின்றான்.

மயில் வண்ண சாப்ட் சில்க் புடவையில், தலை நிறைய மல்லிகைப் பூவோடு, சாதாரண அலங்காரத்தில் அவள் கொள்ளை அழகோடு இருந்தாள். அவளை கண்காளாலேயே பருகித் தீர்த்தான்.

"என்ன வேணும்...? " என்று அவன் முன்னே சொடக்குப் போட்டாள்.

"ஹூம்.. அது.. சஞ்சு ரெடியா...?" என உள்ளே எட்டிப் பார்த்தான். ஆனால் அவன் கண்கள் அவளை மறுபடியும் பார்க்கச் சொல்லியது.

அவன் தங்கை ஏற்கனவே அழகுதான் என்றாலும் ஸ்வப்னா அவளை இன்னும் அழகாய் மிளிரச்செய்திருந்தாள்.

ஆரஞ்சு வண்ண பட்டுப்புடவையில், நீண்ட கூந்தலை பின்னலிட்டு, பூச்சரம் சொருகி, பொருத்தமான அணிகலன்களை பூட்டி அவன் தங்கை அழகுடன் இருந்தாள். அவள் முகத்தில் வெட்கமும், கூச்சமும் போட்டிப் போட்டுக்கொண்டு கிடந்தன.

"அட.. ஸ்வப்னா.. இங்க பாரேன்.. சஞ்சு வெட்கப்படுறா...."

"போங்க அண்ணா....."

"இங்கப்பாரு.. மரியாதையெல்லாம் கூடுது..." என்று சொல்லிச் சிரித்தான் நளன்.

"சஞ்சு! மாப்பிள்ளையை போட்டோல பார்த்து பிடிச்சிருக்குனு சொல்லிட்ட.. நீ நேர்ல பேசிப் பாரு.. டேக் யு ஆர் ஓன் டைம். அதுக்கு பிறகு உன் லைப்க்கு ஒத்துப்போறவரானு யோசிச்சு முடிவு சொல்லு, ஓகே...." என்றான் அண்ணனாய்.

"சரி அண்ணா..." என்றாள் தங்கை. இப்போது அவளிடத்தில் அடக்கம் எல்லாம் தானாய் வந்து சேர்ந்திருந்தது.

சஞ்சனாவின் படிப்பு முடிந்த கையோடு அவன் பார்த்த மாப்பிள்ளைப் பற்றி தந்தையிடம் சொல்லி அடுத்தடுத்த காய்களையும் அவன் நகர்த்த தொடங்கி விட்டான். அது நல்லபடியாக இன்று தங்கையின் பெண்பார்க்கும் படலத்தில் வந்து நிற்கின்றது.

மாப்பிள்ளை வீட்டினர் வந்து அமர்ந்து, சம்பிரதாய விசாரிப்புக்களின் பின் பெண்ணை வரச்சொல்லி பார்த்தார்கள்.

பெரியவர்கள் மனம் திருப்தியாக தலையாட்ட ஆரோக்கியராஜ் குடும்பத்திற்கு திருப்தியாக இருந்தது.

மாப்பிள்ளை பெண்ணிடம் தனியே பேசி, இருவரும் சந்தோஷமுகங்களோடு திரும்பி வந்து, சஞ்சனா சம்மதமாய் தலையாட்டவும் கையோடு நிச்சயமும் செய்துக்கொண்டனர் இரு குடும்பத்தாரும்.

ஸ்வப்னா மட்டும் சஞ்சுவின் அறையை விட்டு வெளியே வரவேயில்லை. நளன் அதை கவனித்துவிட்டு யோசனையோடு இருந்தான்.

நேரம் கழித்து உணவு பறிமாறும் போது மட்டும் உதவிக்கு வந்தாள். பெரிதாக யார் கண்ணிலும் படாமல் சமையலறையிலேயே உதவி செய்துக் கொண்டு இருந்தாள். அனைவரும் கிளம்பிச் சென்றதும் ஸ்வப்னா சஞ்சுவைப் போட்டு குழப்பிக்கொண்டிருந்தாள்.

"என்ன மேடம்.. மாப்பிள்ளை சார் பெயரென்ன....? ஆ... ஆதித்தன். அவர் என்ன சொன்னார்...? "

"சும்மா.. போ ஸ்வப்னா...." என்று சஞ்சு சிணுங்கிக்கொண்டிருந்தாள்.

நளன் உள்ளே வந்தான்.

"சஞ்சு எல்லாம் ஓகே தானே.. உனக்கு பூரண சம்மதம் தானே.. ?" என்றான்.

"ம்..ம்..." என்று சம்மதமாய் தலையாட்டினாள்.

"நளா.. சஞ்சு வெட்கப்படுறாளாம்....." என்று தன் பங்குக்கு ஸ்வப்னாவும் சீண்டினாள்.

சஞ்சனா அவளை பொய்யாய் அடிக்கத் துரத்தினாள்.

அவளிடமிருந்து தப்பித்த ஸ்வப்னா தன் கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

"என்னம்மா கிளம்பிட்டியா..?" என்றபடி வந்தார் ஆரோக்கியராஜ்.

"ஆமாம் மாமா... "

"மழை வரும் போல இருக்கு. இரு நளனை விட்டுட்டு வரச் சொல்றேன்."

அவள் அவசரமாய் மறுத்தாள்.

"வேண்டாம் மாமா.. நானே போய்க்கிறேன்....."

"நீ சும்மா இரு..." என்று சொல்லிவிட்டு நளனை அழைத்து கட்டளையிட்டார். அவன் அந்த சந்தோஷமான தருணத்தை தவிர்க்க விரும்பாமல் அவளை கொண்டு விட்டு விட்டு வர ஒத்துக்கொண்டான்.

காரில் போகும் போது தான் கேட்டான்.

"கொஞ்ச நேரம் எங்கடி காணாமல் போயிட்ட...?"

அவள் பதில் சொல்லவில்லை. ஆனால் அவள் முகம் வாடியது.

மகேஸ்வரி சொன்ன வார்த்தைகள் காதில் ஒலித்தது.

"மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரும் போது முன்னால வராத... அப்புறம் நீ யாரு.. உனக்கு ஏன் இன்னும் கல்யாணம் முடியல.. அம்மா யாரு... உங்க அப்பா யாருனு கேட்பாங்க...."

அந்த வார்த்தையில் அவள் அடிப்பட்டுப் போனாள். அதனால் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள்.

"என்னடி சொல்லு..."

"ஒன்னுமில்ல...."

"என்கிட்டயே மறைக்கிறியா? அதான் உன் கண்னே காட்டிக்கொடுக்குதே.. நீ ஏதோ மறைக்கிறனு... சொல்லு..." என்றான்.

அவன் விடாபிடியாய்க் கேட்கவும் நடந்ததை சொன்னாள். அவன் காதுகள் சூடேறின.

"விடு நளா.. அதை மறந்திடு..."

" ஸாரிடி.. நீ அதையெல்லாம் காதுல போட்டுக்காத.. அம்மா அப்படித்தான்...."

"சரி நளா..."

"ஹேய் கொஞ்சம் சிரிடி.. உன்னை இப்படி பார்த்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்."

"ஈ...."என்று பல்லைக் காட்டினாள்.

"இதுக்கு நீ சிரிக்காமலேயே இருந்திருக்கலாம்..." என்று சிரித்தான் அவன்.

"சரி அப்ப ஐஸ்கிறீம் வாங்கிக் கொடு..."

"சும்மா போ.. நீ நாலு ஐந்து சாப்பிடுவ... வேணும்னா ஒரு காபி வாங்கித் தாரேன்..."

"வேணாம்.. "

"சரி.... அப்ப வேற ஒன்னு தரட்டா..?" என்று கண் சிமிட்டினான்.

"டேய்.. கள்ளா...." என்று செல்ல அடி போட்டாள்.

அதற்குள் வீடு வந்துவிட்டது. அப்போது..
 
Nirmala vandhachu ???
 
Top