Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -35

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் -35

சம்யு வீட்டில் ..
கிளம்ப மனமேயில்லாமல் கிளம்பிக் கொண்டிருந்தாள் அம்ரிதா. ரஞ்சித்தின் ஒவ்வொரு சொல்லும் செயலும் அவளது நினைவடுக்குகளில் இருந்து கண்முன் ரீபிளே ஆகிக் கொண்டிருக்க .. அவனை மறந்தால் தானே நினைப்பதற்கு என்ற நிலை தான்.

விழிகள் எந்நேரமும் கண்ணீரை சிந்தி விடாமல் தடுக்க முயன்று கொண்டிருக்க மனமோ தன்னவனையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

பழைய வேலையை விட்டு விட்டதால் இப்போது வேறு நிறுவனத்தில் நேர்முக தேர்வு ! அதற்காக கிளம்பிக் கொண்டிருந்தாள்.

தனுஜா பெண்ணின் நிலை எண்ணி.. அவளுக்கு துணையாக விடுப்பில் இருக்க ..மோகன் அம்ருவை அழைத்து செல்ல தயாராகி இருந்தார்.

"மோஹி .. சம்யு காலையிலேயே ஒரு வேலைன்னு சொல்லிட்டு போனா ..இன்னும் வரலையே . கொஞ்சம் போன் பண்ணுங்க " எனவும் அவளது அலைபேசிக்கு அழைத்தவர் போன் அருகே அடிப்பதை பார்த்து "வந்துட்டா போலருக்கு " என்று சொல்லவும் ப்ரித்வியும் சம்யுவும் வாசலில் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.

சம்யுவுடன் ப்ரித்வி நிற்பதை பார்த்தவருக்கு ஒன்றும் புரியவில்லை.

தனுஜாவும் யார் என்று எட்டிப் பார்க்க ..அவரும் அவனை எதிர்பார்க்கவில்லை.

இருந்தும் வாசலில் நிற்பவரை வரவேற்காமல் இருக்க முடியாது என்பதால் "வாங்க ..உள்ள வாங்க " என்று அழைத்தார்.
எங்கோ பார்த்தபடி நின்ற மோகன் " இப்போ இவர் எதுக்கு வந்திருக்கார்?" என்றார் சுவரை பார்த்தபடி .

"சாரி மாமா .." என்று ப்ரித்வி ஏதோ சொல்ல வர .."நான் உங்களுக்கு மாமா இல்லை . யாரோ ஒருத்தர்தான் . அதுதான் உங்க அண்ணன் என் பொண்ணை வேண்டானுட்டாரே . அப்புறம் என்ன மாமா ?" என்றார் கோபமாக .

எப்படி தன் பெண்ணை வேண்டாம் என்று சொல்லலாம் என்ற கோபம் அவரிடம். தன் பெண்ணும் சேர்ந்து தான் வேண்டாமென்றாள் என்பதை வசதியாக மறந்துவிட ..

"நான் எங்க அண்ணனோட மாமாங்கறதுக்காக அப்படி கூப்பிடலை. உங்க பொண்ணை நான் கல்யாணம் பண்ணியிருக்கேன். அதுக்காக தான் அப்படி கூப்பிட்டேன்" எனவும் ஒரு கணம் அங்கு ஊசி விழுந்தால் கூட கேட்குமளவு நிசப்தம் நிறைந்திருந்தது .
"ரெண்டு பெரும் லவ் பண்றோம்.. நடக்கிறதையெல்லாம் பார்த்தால், எங்க கல்யாணம் தானா நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அதனால் நாங்களா பண்ணிக்கிட்டோம் "

சம்யுவை அவர்அப்படியா என்பது போல் நோக்க , அவள் அவனை ஒட்டி நின்று ஆம் என்பது போல் தலையசைக்க .. வேகமாக அருகே வந்தவர் அவளை அடிக்க கை ஓங்கியபடி அருகில் வந்தார்.

சட்டென்று அவளை தனக்கு பின்னால் தள்ளியவன் " என் மனைவி மேல் கை வைக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது" என்று கணீர் குரலில் சொல்ல, ஓங்கிய அவரது கை அப்படியே நின்றுவிட்டது.

தன மனைவியிடம் பாய்ந்தவர் .. " பாருடி ..உன் பொண்ண .கல்யாணமே பண்ணிட்டு வந்திருக்கா . அக்கா வாழ்க்கை இப்போ கேள்விக்குறியா இருக்கு. அதுக்குள்ள இவளுக்கு என்ன கல்யாணம்?" என்று கத்த தாயின் விழிகளோ பெண்ணின் முகத்தையே படித்துக் கொண்டிருந்தது.

அதில் திருமண பெண்ணின் சந்தோஷமோ, குடும்பத்தை மீறி செய்த பதட்டமோ, தவிப்போ எதுவும் இல்லை.. ஒரு அழுத்தமும், தீர்மானமும் நிறைந்த பார்வை மட்டுமே அவளிடம்..
அதை கண்டுகொண்டவருக்கு, மகள் ஏதோ ஒரு முடிவோடு தான் இருக்கிறாள் என்று புரிந்துவிட ..

உள்ளே சென்று ஆரத்தி கரைத்து வந்தவர் "உள்ளே வாங்க'" என்று அவர்களை அழைக்க .. "ஆரத்தி ஒண்ணுதான் இப்போ உன் பொண்ணுக்கு கேடா ?" மோகன் கத்த.." அவ நம்ம பொண்ணு . தப்பா முடிவெடுக்க மாட்டா " என்று தனுஜா கூறவும் சம்யுவுக்கு கண்ணை கரித்துக் கொண்டு வந்தது.

உள்ளே வந்தவர்களை சோபாவில் அமரவைத்தவர் மேலும் கீழுமாக பெண்ணை ஆராய்ந்தவர்.. "தாலி எங்கம்மா ?" என்று நிதானமாக கேட்க .. சம்யுவுக்கோ திணறல்!

"எனக்கு தாலி மேலெல்லாம் நம்பிக்கையில்லை அத்தை. அதனால் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்." என்றான் ப்ரித்வி.

"சாமியை நம்பாம சட்டத்தை நம்பறீங்க . பரவாயில்லை " என்றவர் ஆரத்தி தட்டை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

அம்ரு தூர தள்ளி நிற்பதை பார்த்தவள், அவள் அருகே செல்ல .."நீ எடுத்த முடிவு சரிதானா சம்யு? ரஞ்சித் மாதிரியே இவனும் உன்னை வேண்டான்னுட்டா என்ன செய்வே ? தாலி கூட கட்டலை ."
"என் ப்ரித்வியை பத்தி எனக்கு நல்லா தெரியும் அக்கா . எங்க காதலுக்கு தாலியும் மேளமும் தேவையில்லை. ரஞ்சித் அத்தானை பத்தி நீ இன்னும் தப்பாவே நினைக்கிற . அவர் உன்னை உயிருக்குயிரா காதலிக்கிறார். இப்பவும்! நீயும் அப்படித்தான்னு தெரியும். உப்பு பெறாத விஷயங்களுக்காக நீங்க ரெண்டு பெரும் சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க "

"எது உப்பு பெறாத விஷயம் ? அவன் என்னை சந்தேகப்பட்டான் சம்யு "

" காதல்ல அதுக்கு பெயர் போஸ்சஸிவ்நெஸ் அக்கா . நம்மள விரும்பறவங்க போஸ்சஸிவ்வா இருக்கறதும் ஒரு வரம்தான் "

தனுஜா பாலும் பழமும் எடுத்து வந்து தர அதை உண்டவர்கள் எழுந்து கொள்ள .." உங்க வீட்ல தெரியுமா ?" என்றார் அன்னை.

"இல்லை அத்தை! இனிதான் அங்கே போகணும். பொண்ணை காணோமேன்னு நீங்க கவலை படுவீங்களே.. அதுதான் முதல்ல இங்க வந்தோம்"

"பொண்ணை முழுசா திருடிட்டு ...எங்க கவலையை பத்தி நீங்க கவலைப்படுறீங்க . ரொம்ப நல்லா இருக்கு " குத்தலாக மோகன் சொல்ல ..
"எங்கண்ணனை மாதிரி பறிகொடுத்திட்டு நிக்கிறதுக்கு ..திருடறது எவ்வளவோ மேல்" என்றவன் அம்ருவை நோக்கி "ஒவ்வொரு நிமிஷமும் அவன் எப்படி துடிச்சிக்கிட்டு இருக்கான்னு எனக்கு மட்டுந்தான் தெரியும் " என்றபடி சம்யுவை அழைத்து கிளம்பினான்.

ப்ரித்வியை கண்டதும் ரஞ்சித்தின் நினைவு மேலோங்கிவிட .. அப்படியே அமர்ந்துவிட்டாள் அம்ரிதா.

அவன் இன்னும் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறானா என்ற கேள்வி சுற்றி சுற்றி வந்தது.

ஒரு வகையில் அது மனதிற்கு இதம் தர ..தந்தை அழைத்ததும் எழுந்து சென்றாள். அந்த சிறு நிம்மதியுடன் நேர்முகத்தேர்வை முடிக்க ..வேலையில் எப்போதும் கில்லி தானே .. இந்த வேலையும் எந்த சிரமமும் இன்றி கிடைத்துவிட .. அவளுக்கு மெல்ல புரிய தொடங்கியது அவளது ஊக்கமே அவன்தான் என்பது.

ப்ரித்வி வீட்டில்..

காலை எட்டுமணி .

வழக்கமாக வேலைக்காரம்மா ஆறு மணிக்கு வந்துவிடுவார். இன்று அவர் விடுமுறை எடுத்திருக்க கதவு திறக்கப்படாமல் இருந்தது.
அழைப்பு மணியின் ஒலி விடாமல் ஒலிக்க.. சத்யா எழுந்து வந்தார். கதவை திறந்தவருக்கு ஆயிரம் வோல்ட் மின்சாரம் தாக்கியது போல் இருந்தது.

அவர் முன்னே மாலையும் கழுத்துமாக நின்றிருந்தனர் ப்ரித்வியும் சம்யுவும்.
அவருக்கு சற்று நேரம் ஒன்றுமே புரியவில்லை.

சரியாக அந்நேரம் சமையல் வேலை செய்யும் சந்தியா உள்ளே நுழைய .." சந்தியாக்கா .. ஆரத்தி கரைச்சு கொண்டுவாங்க " என்று ஆணையிட்டான் ப்ரித்வி.

தாயின் விழிகள் கோபத்தோடு ஏறிட்டு பார்க்க ..அதனை நிதானமாக எதிர்கொண்டான் ப்ரித்வி.
சத்யாவுக்கோ உள்ளுக்குள் தீப்பற்றியதை போல் இருந்தது.
சம்யுக்தாவை பார்க்க ..அவளும் அந்நேரம் இவரை தான் பார்த்திருந்தாள் விழிகளில் ஆராய்ச்சியோடு.

அதிர்ந்து ஹால் சோபாவில் அமர்ந்திருந்தவர் சந்தியா ஆரத்தி எடுப்பதை விழி எடுக்காமல் நோக்க .. சம்யுவின் தோளை அணைத்தபடி ப்ரித்வி வீட்டினுள் நுழைய .. சட்டென கால்கள் தரைதட்டியது போல் நனவுக்கு வந்து சேர்ந்தார் சத்யபாமா .

"நில்லுடா " என்றவரது உயர்ந்த குரலில் நவனீயும் எழுந்து வர .. அவருக்கும் சற்று அதிர்ச்சிதான்.

ஏற்கனவே ரஞ்சித் அம்ரு திருமணத்தை சரிப்படுத்துவது எப்படி என்று மூளையை கசக்கிக் கொண்டிருக்க ..இப்போது புதிதாக ஒரு பிரச்சினை வேறு முளைப்பதை பார்த்தவர் ஒரு புறம் வருந்தினாலும் மறுபுறம் மகனுக்காக உள்ளம் சந்தோஷப்பட்டது.

மூத்த மகனின் வாழ்வு கேள்விக்கு குறியாயிருக்க ... இளைய மகன் வாழ்வாவது மலர்ந்தால் நிம்மதிதான் .

" எங்க சம்மதமெல்லாம் உனக்கு தேவையே இல்லையா ? கல்யாணமே பண்ணிட்டு வந்திருக்க "
"அம்மா ..உங்களுக்காக பாத்து பாத்துதான் அண்ணன் வாழ்க்கை இப்போ கேள்விக்குறியா இருக்கு. நானும் உங்க சம்மதத்துக்காக காத்திருந்தால் என் காதலை பறிகொடுக்க வேண்டியது தான்." என்றவன் ..

"சாரிப்பா.. மன்னிச்சிடுங்க . உங்க கிட்ட சொல்ல கூடாதுன்னு இல்லை. ஆனால் உங்களுக்கும் அம்மாவுக்கும் கருத்து வேறுபாடு வந்துடுமேன்னு தான் நானா இந்த முடிவு எடுத்தேன்" என்றவன் எதுவும் பேசாமல் நின்றிருந்த ரஞ்சித்திடம் சென்றவன் ..' சாரிண்ணா " என்று சொல்ல " உனக்கு சந்தோஷம்னா எனக்கு ஓகே தான்" என்றவன் சம்யுவை நோக்கி " நீயாவது உன் அக்கா மாதிரி இல்லாமல் என் தம்பியை மட்டும் முக்கியமா நினை" என்றவன் உள்ளே தன்னறைக்கு சென்றுவிட ..

சம்யுவை அழைத்துக் கொண்டு பூஜையறைக்கு சென்றவன் " எனக்கு சாமிமேலெல்லாம் நம்பிக்கை இல்லை. உனக்கு இருந்தால் விளக்கேத்து " எனவும் விளக்கேற்றி சாமி கும்பிட்டவள், "தெய்வமே .. இதே வீட்டில் நானும் என் தமக்கையும் ஒற்றுமையான மருமகள்களாக வாழவேண்டும் என்று வேண்டி கொண்டாள்.
 
Top