Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா!-11

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -11

சுவர்க்கோழி மணி இரண்டு ஆகிவிட்டது என்று கூவி நேரத்தை அறிவித்தது.
மித்ரா உறக்கமின்றி குறுக்கும் நெடுக்குமாய் அந்த அறைக்குள்ளேயே நடந்துக்கொண்டிருந்தாள். அப்படி நடந்ததில் கால்களில் லேசாக வலி எடுத்தது தான் மிச்சம். அவள் காதுகளுக்குள் நவிலனின் வார்த்தைகளே ஒலித்துக்கொண்டிருந்தன.

அவளோடு அவள் வீட்டிற்கு காரில் திரும்பிக்கொண்டிருந்த வேளை இயல்பாய் பேசிக்கொண்டு வந்தவன், அவள் இறக்கிவிட்டு " தேங்க்ஸ் சீ யூ.." என்ற போது " மறுபடியும் எப்போ சந்திக்கலாம்..?" என்று கேட்டது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்குப் பிறகோ அவள் பதில் சொல்லும் முன் அவன் திடுமென அந்தக்கேள்வியைக் கேட்டான்.

"என்னை கல்யாணம் செஞ்சிக்கிறிங்களா மித்ரா...?"

அவள் அதிர்ச்சியின் விளிம்பிற்குச் சென்றாள்.

"எ..என்ன...." என்று கேட்டாள். நட்ட நடு ரோட்டில் சரி அவளது அத்தை வீட்டு வாசலில் நின்று கேட்கும் கேள்வியா இது? ஏதாவது ரொமாண்டிக்காக ஒரு இடத்தில் செம்ம செட்டப்பில் கையில் ஒரு ஒற்றை ரோஜாவைக் கொடுத்தாவது கேட்டிருக்க வேண்டிய கேள்வி தான். ஆனால் நம்ம கதாநாயகன் இப்படித்தான். அவனுக்கு டிராமா போல வாழ்வதில் இஷ்டம் இல்லை. மனசுக்கு பட்டதை பேசுவான். செய்வான். அப்படித்தான் சங்கமித்ராவிடமும் இந்தக் கேள்வியை கேட்டான்.

அவள் அதிர்ச்சியில் கண்களை கூட அசைக்காமல் நின்று கொண்டு இருந்தாள். அவளது கால்கள் நடுக்கத்திற்கு உட்பட்டன.

"எதுக்கு இவ்வளவு ஷாக்? கல்யாணம் பண்ணிக்கிறிங்களானு தானே கேட்டேன்...."

" ஆர் யூ மேட்..?" கத்தினாள் மித்ரா.

" யா.. ஐ ஆம் மேட் அபௌட் யூ.. சொல்லுங்க.. என்னை கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு இஷ்டமா..?" விடாப்பிடியாக கேட்டான் ஹீரோ.

" இது என்ன தடாலடியான கேள்வி நவிலன்..? நடுரோட்ல..?"

" ஆமாமல்ல.. அப்ப வாங்க வீட்டுக்குள்ள உட்கார்ந்து பேசுவோம்..' என்று காரிலிருந்து இறங்கி மங்களாதேவியின் வீட்டுக்குள் செல்ல ஆயத்தமானான். அவன் கையைப் பிடித்து நிறுத்தினாள் மித்ரா. அவளது கைகளிலேயே ஒரு உஷ்ணம் தெறித்தது.

" என்ன கேள்வி கேட்டுடேனு இந்த கோவம் மித்ரா..?"

"உங்களுக்கு வேணும்னா அது சாதாரணமான கேள்வியா இருக்கலாம். எனக்கு அப்படியில்லை மிஸ்டர்..." என்று உஷ்ணம் தெறிக்கப் பேசினாள்.

"சரி.. புரியுது. நான் இப்படி திடீர்னு கேட்டிருக்க கூடாது தான்... மித்ரா.. உங்களை பார்த்ததும் காதல்னு எல்லாம் பொய் சொல்ல மாட்டேன். உங்க கூட பழக பழகத் தான் எனக்கு உங்க மேல நிறைய மதிப்பு வந்துச்சு. அது காதலாவும் மாறிடுச்சி... உங்க மேல எப்ப காதல் வந்துச்சுனு எனக்கு தெரியல.. என் கூட என் லைப்ல நீங்க இருந்தா எனக்கு சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்கும்னு தோணுச்சு. அதனால தான் கல்யாணம் பண்ணிக்கிறிங்களானு கேட்டேன். உங்க பதில் என்னனு...."

"நோ....! இதுதான் என்னோட பதில்...."

அவன் முகம் சுருங்கி அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

"எதனால.... எடுத்ததும் முடியாதுனு சொல்றிங்க..? கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க மித்ரா. ப்ளீஸ்.." அவன் அவ்வளவு இறங்கி பேசுவான் என்று அவனே யோசித்திருக்க மாட்டான். ஆனால் இறங்கி வந்தான். அவனுடைய காதலுக்காக.

"இதுல யோசிக்க ஒன்னும் இல்ல நவிலன்.... எனக்கு கல்யாணமே வேண்டாம்....." என்று சம்பந்தமேயில்லாமல் விசும்பி விசுப்பி அழுகத்தொடங்கினாள்.

அவன் என்ன செய்வது என்று தெரியாமல் பதட்டமாகி காருக்குள்ளிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து திறந்து கொடுத்து, அவள் குடித்து சற்று அமைதியானதும் அவளே பேசட்டும் என்று காத்திருந்தான்.

அவள் சொல்லத்தொடங்கினாள். கேட்க கேட்க அவளைப் பற்றி எதுவுமே தெரியாமல் லவ் ஃப்ரபோஸ் செய்தது எத்தனை குற்றம் என்று புரிந்தது. ஆனாலும் அவன் விடுவதாயில்லை.

" உங்க மனசு புரியுது மித்ரா. அதுக்காக எல்லாரும் கெட்டவங்களா இருப்பாங்களா? ஒருத்தன் செய்த தப்புக்காக மொத்த ஆண் வர்க்கத்தையும் வெறுப்பது சினிமாத்தனமா இருக்கு. பீ ப்ராக்டிகல். "

" நான் நல்லா யோசிச்சு தான் சொல்றேன் நவிலன். எனக்கு யாரையும் கல்யாணம் பண்ணிக்கிறதுல இஷ்டம் இல்ல..."

" என்னை கூடவா?" அந்த கேள்வியை கேட்க அவன் தகுதியானவன் தான்.

அவள் தடுமாறினாள். நவிலன் மீது அவளுக்கும் ஒரு ஈர்ப்பு இருந்தது என்னவோ உண்மை தான். ஆனால் திருமணம்.. வாழ்க்கை என்று யோசிக்கும் போது ஏதோ ஒரு பயம் வந்து அவளை அழுத்தியது. ஏதோ ஒரு இருள் கவ்வுவதாக உணர்ந்தாள்.

" யோசிங்க மித்ரா.. உங்களோட எல்லா கேள்விகளுக்கும் விடை உங்ககிட்ட தான் இருக்கு. ஆனா நான் உங்களை லவ் பண்ணிகிட்டே தான் இருப்பேன். உங்க பதிலை யோசிச்சு சொல்லுங்க.. நான் காத்திருப்பேன்.."

அவளது பதிலை எதிர்பாராமல் அவன் சென்று விட்டான். வீட்டுக்குள் வந்து அறைக்குள் நுழைந்த மித்ராவை மங்களா விநோதமாக பார்த்தார். இரவு உணவைக் கூட தவிர்த்துவிட்டு அறையிலேயே முடங்கி கிடந்த அவளுக்கு மதுபாலாவின் நினைவு வந்தது.

மித்ராவுக்கு மூத்தவள் மதுபாலா. நல்ல அழகி. குணத்திலும் அழகிதான் அவள். மதுபாலாவும் சங்கமித்ராவும் ஒரே அச்சில் வார்த்தவர்கள் போல இருப்பார்கள். அவளுக்கு கொஞ்சம் பூசினாற் போல உடம்பு. அவ்வளவு தான் வித்தியாசம். நல்லபடியாக படிப்பை முடித்துவிட்டு பொழுது போக வேண்டும் என்பதற்காய் என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான் விதி அவளை டிரைவிங் கற்றுக்கொள்ள தூண்டியது.

மிகவும் சிரமப்பட்டு ஐராவதத்திடம் அனுமதி வாங்கி டிரைவிங் கற்றுக்கொள்ள வகுப்புக்கு செல்ல ஆரம்பித்தாள்.

" என்னக்கா.. இன்னைக்கு ரொம்ப லேட்டா வாற? க்ளாஸ் முடிய லேட்டோ..?" காலேஜிலிருந்து திரும்பிய மித்ரா அக்காவைப் பார்த்து கேட்டாள்.

" இன்னைக்கு பீச் ரோட்டில ரெண்டு ரவுண்டு எக்ஸ்ட்ராவா வண்டி ஓட்ட பழகினோம். அதான் லேட்டாச்சு.."

" நீ கார் தானே ஓட்ட கத்துக்கிற? பைக் இல்லையே.." என்று கேட்டாள் சின்னவள். அந்த கேள்வியில் திக்கி தினறினாள் மதுபாலா.

" என்..என்ன.. சொல்ற மித்ரா..?"

" இல்ல...அந்த எக்ஸ்ட்ரா ரெண்டு ரவுண்டு கார்லயா? பைக்லயானு கேட்டேன்..?"

" என்ன சொல்ற.. எனக்கு ஒன்னும் புரியல.." தரையைப் பார்த்துக்கொண்டு பேசினாள்.

" அக்கா..! நீ ஒருத்தனோட பைக்ல போனதை நான் பார்த்தேன்.."

" அது.. நான் இல்ல.. வேற யாரையாவது பார்த்திருப்ப.." சமாளிக்க முயன்றாள் மதுபாலா.

" அக்கா..! போதும்.. நடிக்காத.. உன் முகமே காட்டிக்கொடுக்குது.."

அதற்கு மேல் தாமத்திக்காமல் சின்னவளின் கைகளைப் பிடித்தாள் அக்கா.

" மித்து.. மித்து.. ப்ளீஸ்டீ.. யார்கிட்டயும் சொல்லாத.. "

" சரி யார் அது சொல்லு..?"

" அவர்.. அவர்.. பேரு லக்ஷ்மிகாந்த். "

" இதெல்லாம் எத்தனை நாளா நடக்குது?"

" இப்பதான்.. ஒரு ஆறு மாசமா.."

" எப்படி பழக்கம்..?"

" காலேஜ்ல இருந்து பழக்கம்.."

" ஓ..."

" ஹேய் மித்து.. ப்ளீஸ்டீ.. வீட்ல யாருக்கும் தெரிய வேணாம். "

" வீட்டுக்கு இவ்வளவு பயம் இருந்தா எதுக்கு லவ் பண்ற?"

" என்னடீ நீயும் படுத்தி எடுக்குற..? நம்ம அப்பா எவ்வளவு கண்டிப்புனு ஊருக்கே தெரியும். வீட்டை விட்டு வெளியவே போக விட மாட்டார். வெளிய போறதுக்காக தான்.."

" டிரைவிங் படிக்கிறேனு அடம் புடிச்சியாக்கும்.."

" ஆமா டீ.. " என அசடு வழிய நின்றாள்.

" ஓஹோ.. கதை அப்படி போகுதா..?" எப்படிப்பட்டவர் உன் லக்ஷ்மிகாந்த்?"

உடனே பாய்ந்து தங்கையின் கையைப் பிடித்து கொண்டு " அவர் ரொம்ப நல்லவர் டீ.."

" இரு. இரு.. முதல்ல கையை எடு.. அங்கேயே நில்லு. பக்கத்துல வாறது இல்ல..முழு விபரமும் சொல்லு.." என்று கால் மேல் கால் போட்டு கொண்டு கேட்டாள் மித்ரா.

தங்கை தன்னை சீண்டுகிறாள் என்று தெரிந்ததும் அதை கண்டுக்கொள்ளாமல் தனக்கு பேச ஒரு ஆள் கிடைத்தது என்ற சந்தோஷத்தில் மிதந்த மதுபாலா தங்கள் காதலைப் பற்றி கதை கதையாக சொன்னாள் மித்ராவிடம்.

இப்படியாக இவர்களது காதல் வளர்ந்து கொண்டிருந்த அந்த சமயத்தில் தான் அது நடந்தது. ஓரிரு வாரங்கள் கழித்த நிலையில், மித்ரா வருணோடு ஊர் சுற்றிவிட்டு திரும்பிய போது மதுபாலா அறையில் அமர்ந்து தலையை குனிந்து அழுதுக்கொண்டு இருந்தாள்.

" என்னாச்சு மது..?" என்று அவளை நிமிர்த்திய மித்ரா அதிர்ந்தாள். மதுபாலாவின் கன்னங்கள் விரல் தழும்புகளால் சிவந்திருந்தன.

" என்னாச்சுக்கா..?"

எதுவுமே பேச முடியாது அழுத மதுபாலா தங்கையை கட்டிக்கொண்டு அழுதாள். அவள் அழுது ஓயட்டும் என்று காத்திருந்த தங்கைக்கு பதில் அளித்தாள்.

" அம்மா தான் அடிச்சாங்க.."

" ஏன்டீ..?"

அமைதியாக இருந்தாள் மதுபாலா.

" சொல்லித்தொலையேன்.."

" என்னையும் லக்ஷ்மிகாந்தையும் அம்மா பஸ்ல ஒன்னா கண்டுட்டாங்க.."

" என்னது..?"

" நாங்க ரெண்டு பேரும் பஸ்ல உட்கார்ந்து பேசிக்கிட்டே போய்கிட்டு இருந்தோமா.. அப்ப அம்மா பஸ்ல ஏறுனாங்க.. சித்தி வீட்டுக்கு போயிட்டு வந்துருக்காங்க.. எனக்கு உடனே என்ன செய்றதுனு தெரியல.. உடனே அந்த ஸ்டாப்லயே அவரு கூட இறங்கிட்டேன்.. ஈவினிங் தான் வீட்டுக்கு வந்தேன். அம்மா .."

" லூசு.. ஒன்னா கை பிடிச்சிக்கிட்டு பஸ்ல போனா இப்படி அடி வாங்காம என்ன பண்ணுவ.. நான் தான் கவனமா இருங்கனு சொன்னேன்ல.."

மதுபாலா அழுது கொண்டு இருந்தாள். அந்த நேரம் அறைக்குள் நுழைந்தார் பாமா.

" சொய்றதையும் செஞ்சிட்டு அழுகையைப் பாரு.. யாருடீ உனக்கு இவ்வளவு தைரியம் தந்தது..?" அந்த இடத்தில் மித்ரா அமைதியாக இருந்தாள்.

" என் கண்ல பட்டதால அடியோட தப்பிச்ச.. உங்க அப்பா கண்ல பட்டு இருந்தனா வெட்டி போட்டிருப்பாருடீ.. இதுக்கு தான் ஆடிக்கிட்டு க்ளாஸ் போனியா..? இனிமே வீட்டை விட்டு வெளிய கால் வச்சி பாரேன்.. அப்புறம் இருக்கு உனக்கு.. நானே உன் காலை வெட்டுவேன்.. அவன் யாரோ என்னமோ.. அவன் கையை பிடிச்சிக்கிட்டு.. கருமம்.. கருமம்.. " தலையிலடித்துக்கொண்டார் பாமா.

" ம்மா.. இப்ப என்ன ஆச்சுன்னு..." பேசத் துவங்கிய மித்ராவின் மீது அடுத்து பாய ஆரம்பித்தார்.

" வாயை மூடு. அடுத்து நீ.. இந்த மாதிரி எதாவது ஏடாகூடமாக செய்தா அப்புறம் நானே கொன்று போட்டுடுவேன். நீ படிக்கிற வேலையை மட்டும் பாரு.. அடக்க ஒழுக்கமா வீட்ல இருக்க வழியை பாரு மது.. " பாமா இவ்வளவு பொல்லாதவராக பேசி மகள்கள் கண்டதே இல்லை. அதனால் அப்போதைக்கு அமைதியானார்கள்.

ஆனாலும் அதெல்லாம் ரொம்ப நாட்களுக்கு நீடிக்கவில்லை. சினிமா பாணியில் ஒரு சம்பவம் நடக்கவிருந்தது. அதற்கு முழு ஏற்பாட்டையும் செய்தவள் சங்கமித்ரா. இது எதுவுமே தெரியாது மூக்குக் கண்ணாடியை ரிப்பேர் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருந்தார் ஐராவதம்.

அன்று வெள்ளிக்கிழமை. மித்ராவின் பிறந்தநாள். குளித்து புத்தாடை அணிந்தாள்.

" அம்மா..! நானும் அக்காவும் கோவிலுக்கு போயிட்டு வாரோம்.."

" ம்.. சரி சரி.. போனமா சாமி கும்பிட்டோமா வந்தோமானு இருக்கனும்.." என்று போக முதலே கட்டளையிட்டார் அம்மா.

" சீக்கிரம் வாக்கா.. வெள்ளிக்கிழமைனால அம்மானை பார்க்க கூட்டம் அலைமோதும்.." என்று துப்பட்டாவை சரி செய்து கொண்டே மித்ரா சொன்னது தான் பிழையாகிப்போனது.

" சரிம்மா..!" என்று பவ்யமாக விடைகொடுத்த மித்ரா மதுபாலைவை அழைத்துக்கொண்டு வாசலை தாண்டினாள்.

" நில்லு டீ.. எந்த கோயிலுக்கு போறிங்க..?" என்று பாமா கேட்க, " முருகன் கோயிலுக்கு.." என்று முந்திக்கொண்டு சொன்னாள் மித்ரா. அப்போது அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை பாமா.

சகோதரிகள் இருவரும் நேராக ஆட்டோவில் சென்று இறங்கினார்கள் அம்மன் கோவிலில். அங்கு அவர்களுக்காக நண்பர்கள் சூழ தயாராய் நின்றான் லக்ஷ்மிகாந்த்.

" லேட்டாகிடுச்சா..?" அவனைப் பார்த்து சிரித்தவாறே கேட்டாள் மதுபாலா.

" அதெல்லாம் இல்ல.. போய் புடவை மாற்றிட்டு வா.." என்று அவளுக்காக தயாராய் வைத்திருந்த புடவையை கொடுக்க அவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

" இதோப்பாருங்க மிஸ்டர் லக்ஷ்மிகாந்த்.."

" உங்க அக்காவை கல்யாணம் செஞ்சிக்க போறேன் மித்ரா.. இனியாவது கொஞ்சம் மரியாதையா பேசலாமே.." என்று அவன் பாவமாய் கேட்டான்.

" அது யோசிக்கனும்.. எங்க அக்காவை ரொம்ப ரிஸ்க் எடுத்து கூட்டிகிட்டு வந்துருக்கேன். கல்யாணத்து அப்புறம் அவளை நல்லபடியா பார்த்துக்கனும்.. சரியா.. அப்புறம் நான் வந்து நின்று சண்டை போடுவேன்.."

" சரி.. சரி.. நல்லா பார்த்துக்கிறேன்.. இப்ப முகூர்த்ததுக்கு நேராமாச்சு.. போய் உங்க அக்காவை கூட்டிகிட்டு வா.. இல்லனா நாளைக்கு வரை மேக் அப் செய்வா.." என்று அவன் கிண்டல் செய்ய, அது உண்மை என்பதை உணர்ந்து அக்காவை அழைக்கப்போனாள் மித்ரா.

அதே சமயம் வீட்டில் சகோதரிகளுடைய அறையை சுத்தம் செய்ய உள்ளே வந்து பாமாவின் கண்களில் அந்த கடிதம் பட்டுத் தொலைத்தது. எப்போதும் ஏதாவது ஏடாகூடமாக செய்வதே வேலை மதுபாலாவுக்கு. பாசமிகு தாய், தந்தையரைப் பிரியப் போகிறோம் என்ற வருத்தத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு போயிருந்தாள் மகராசி.


அன்புள்ள அம்மா, அப்பாவுக்கு,

என்னுடைய வாழ்க்கையை தேடி போகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். மறந்துவிடுங்கள்.

இப்படிக்கு அன்பின் மதுபாலா
.


கடிதத்தை படித்த பாமாவோ தலை சுற்றி கீழே விழாமல் இருந்தது ஆச்சர்யம். சற்றும் தாமதிக்காமல் ஐராவத்தை போனில் தொடர்பு கொண்டு விஷயத்தை சுருக்கமாக சொன்னவர் அவரை அம்மன் கோவிலுக்கு செல்லுமாறு கூறிவிட்டு, தான் முருகன் கோயிலுக்கு சென்றார். கிளம்பும் போது மகள்கள் பேசிக்கொண்டது காதில் விழுந்ததாலேயே இந்த ஏற்பாடு. நிச்சயமாக ஏதோ ஒரு கோவிலில் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் முருகன் சன்னதியில் மகளை தேடிய பாமாவுக்கு ஏமாற்றம் காத்திருக்க, ஐராவதத்திற்கு வெற்றி காத்திருந்தது.

மணக்கோலத்தில் மகள் ஒருத்தனுடன் நிற்பதை கண்டதும் நேரே சென்று அவள் கன்னத்தில் ஒரே அடி அடித்தார். அத்தனை பேரும் கலங்கிப் போக , ஐராவதம் மூளையோடு அழைத்து வந்திருந்த அவருடைய மாமன் மச்சான்மார்கள் லக்ஷ்மிகாந்த்தை பிரித்து மேய, மதுபாலா தரதரவென இழுத்துச்செல்லப்பட்டாள். நண்பர்கள் நமக்கு ஏன் வம்பு என ஒதுங்கிக் கொண்டார்கள்.

செய்வதறியாது திகைத்த மித்ரா அவர்கள் பின்னாடியே ஆட்டோ பிடித்துதான் செல்ல வேண்டியிருந்தது.

மொத்தத்தில் அந்த கல்யாணம் நின்று போனது. வீட்டில் கச்சேரி ஆரம்பமானது.


ஆட்டம் தொடரும் ❤️?

 
Nice epi dear.
Yedo Navi ippadi oru jet speed ethir parkalae, athukkum oru dhill venum. Nee kalaki monae.
Authore, romba bayam, kuzhappam, ethir paaratha athirchi ellam nadakkum pol nammada kai hot aavathu chill aagidum.( we are warm blooded mammals.)
Yedi, nee ivalavu periya kaariyam ellam seythu irrukira???
First lover nallavana??ethuvum theriyaathu kalyanam katti anuputha???
Nambuna ammaku betrayal??? This is too bad girls.
Ayra sir,innoru veetu payana adi podurathu romba thavarana seyal.
 
Nice epi dear.
Yedo Navi ippadi oru jet speed ethir parkalae, athukkum oru dhill venum. Nee kalaki monae.
Authore, romba bayam, kuzhappam, ethir paaratha athirchi ellam nadakkum pol nammada kai hot aavathu chill aagidum.( we are warm blooded mammals.)
Yedi, nee ivalavu periya kaariyam ellam seythu irrukira???
First lover nallavana??ethuvum theriyaathu kalyanam katti anuputha???
Nambuna ammaku betrayal??? This is too bad girls.
Ayra sir,innoru veetu payana adi podurathu romba thavarana seyal.
டென்ஷன், கோவம் வந்தா எனக்கு உடம்பெல்லாம் சூடாகிரும். இதற்கு கை விதி விலக்கில்லேயே Leenu?
 
தங்கச்சி பாசம்னா சும்மாவா? அதான்.
Irunthalum oru ammava ennala accept panna mudiyala ?‍?parents ah convince panna help panni irukkalam.pasangaluk kaaga parents evulo thiyagam pandranga. Idumathiri pasanga marriage pannikitangana avanga patta kastam yellam onnum illama poidum. Appa or amma yaru konjam porumasalinu therinji avangakitta porumaya yeduthu solli puriyavainga. Parents um pavam thana. Yella parents um pasangaluku ethiri illa. Ippolam pasanga than parents ah control pandranga.
 
Last edited:
டென்ஷன், கோவம் வந்தா எனக்கு உடம்பெல்லாம் சூடாகிரும். இதற்கு கை விதி விலக்கில்லேயே Leenu?
No,no hands and feet exceptional, face will become pale. but hands will b chill if you want check with any doctor or person from medical field.
 
Top