Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா!-8

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -8


சங்கமித்ரா பெட்டி படுக்கையோடு சந்தியாவின் வீட்டு வாசலில் வந்து நின்றாள். மன்னிக்க. பெட்டியோடு மட்டும் தான். அவளைக் கண்டதும் சந்தியா ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள். ஆனால் கௌதமியின் மனம் மட்டும் சலனப்பட்டது. ' இந்தப் பொண்ணு ஏன்தான் இப்படி இருக்காளோ..'

" என் தங்கம்.. சொன்னபடியே வந்துட்ட.. " என்று மித்ராவின் கன்னத்தை கிள்ளிய சந்தியாவுக்கு அன்று மெகந்தி ஃபங்ஷன். இப்போதெல்லாம் இது ஒரு கலாச்சாரமாக போய்விட்டது. வட இந்தியர்களைப் போல மெகந்தி போட ஒரு விழா, மஞ்சள் பூச ஒரு விழா என்று விதவிதமாய் விழாக்களுக்கு பஞ்சமில்லை. அவர்கள் இருவரையுமே பார்த்துக்கொண்டு இருந்த கௌதமியை நோக்கி நடந்து போனாள் மித்ரா.

" என்ன ஆன்ட்டி.. நான் வந்தது உங்களுக்கு சந்தோஷம் இல்லை போலவே.."

" உன் கன்னத்துலயே ரெண்டு போடனும்.. நான் அப்படி சொன்னேனா..?"

" உங்க லுக்கு சொல்லுதே.." என்று வம்புக்கு இழுத்தாள் சங்கமித்ரா.

" இது உன் வீடு டா.. நீ எப்ப வேணும்னாலும் வரலாம் போகலாம். ஆனா இப்ப நீ உங்க வீட்ல சண்டை போட்டுகிட்டு வந்திருக்கனு எனக்குத் தெரியும்.. அதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு.."

" அதுக்குள்ள எங்க அம்மா ஓதியிருப்பாங்களே.." என்று பாமாவை நினைத்து கோபப்பட்டாள் மித்ரா.

" பின்ன.. நீ பாட்டுக்கு பெட்டியை தூக்கிட்டு வந்துட்ட.. பெத்த தாய்க்கு நீ எங்க போவனு ஒரு பதட்டம் இருக்காதா..?"

" நான் வேற எங்க போகப் போறேன். அத்தை வீட்டுக்கு போவேன். இல்லனா இங்க வருவேன். சந்தியா கல்யாணத்துக்கு ரெண்டு நாள் தானே இருக்கு. இங்கேயே வந்தா அவகூட இருக்கலாம்னு வந்தேன். உங்களுக்கு பிடிகாகலனா சொல்லுங்க நான் போயிருறேன்.."

" உனக்கு நிஜமாவே அடி தான் போடனும்.. உன்கூட பிறகு பேசுறேன்.. போ உள்ள போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா.." என்று அவளை அனுப்பினார் கௌதமி.

' இந்த பொண்ணை என்ன பண்றது.. யாராவது ஒருத்தன் இவ மனசை மாற்றி அடக்க வராமலா போயிடப் போறான்..' என்று யோசித்தவாறே அங்கிருந்து நகர்ந்தார் கௌதமி.

ஹலோ ஹலோ.. எதுல முடிச்சிங்க எங்க கொண்டு போறிங்க. அப்புறம் லிஃப்ட்க்குள்ள என்னாச்சு என்று கேட்பவர்களுக்கு. வாங்க லிஃப்ட்க்குள்ள போவோம்.

மூடச் சென்ற லிஃப்ட் கதவை தடுத்து உள்ளே நுழைந்தவன் நவிலன் தான். அவனைக் கண்டதும் அந்த தாடிக்காரன் சப்தமின்றி பத்தாவது தளத்திலேயே இறங்கிக் கொண்டான். அப்போது தான் மித்ரா பெருமூச்சொன்றை நிம்மதியாய் விட்டாள்.

" என்ன மித்ரா அவரைப் பார்த்து பயந்துட்டிங்களா?" என்று கேட்டான் நவிலன்.

" ம்.. லைட்டா.." என்று உண்மையைச் சொன்னாள் மித்ரா.

" அப்போ அப்படி ஒரு அறை விட்டிங்க.. நான் கூட கராத்தே ஏதும் கத்து வச்சிருப்பிங்க. லிஃப்ட்க்குள்ள அவன் காலினு இல்ல நினைச்சேன்.."

அவனை மித்ரா முறைத்தாள்.

" சரி. சரி.. கூல் டவுன். சும்மா வம்பிழுத்தேன். இருந்தாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி தான்.."

" ஏன் அப்படி சொல்றிங்க நவிலன்.."

" ஒருத்தனை கைநீட்டி அடிக்க தில்லு வேணும் மித்ரா.."

" தப்பு செஞ்சா அடிப்பேன் நவிலன்."

' அப்ப நமக்கு அடி கன்பார்ம் நவிலா..' என்று தனக்கே சொல்லிக்கொண்டான் நவிலன்.

" என்னாச்சு நவிலன்.. என்ன யோசனை?"

" நத்திங்.. இந்த நேரத்துல ஸ்கூட்டிலயா போகப்போறிங்க...?"
இதற்கு மித்ரா அமைதியாக இருந்தாள்.

" என்ன மித்ரா.. என்னாச்சு?"

" நான் ஸ்கூட்டி ஓட்டுறதையே விட்டுட்டேன் நவிலன்.." அவள் அப்படி சொன்னதும் பயங்கரமாய் சிரிக்க ஆரம்பித்தான் நவிலன்.

" பார்த்திங்களா.. நீங்க சிரிக்கிறிங்க.." என்று வருத்தப்பட்டாள்.

" ஹேய்.. ஸாரி ஸாரி.. நான் சிரிக்கல.. " அப்படிச் சொன்னாலும் அவனால் சிரிப்பை அடக்க முடியாமல் இருந்தது.

" வாங்க நான் ட்ராப் பண்றேன்.." என்ற போது அவர்கள் கீழ்தளத்தில் இருந்தார்கள்.

" உங்களுக்கு ஏன் சிரமம்.. நான் டாக்ஸில போய்க்கிறேன்.." என்றாள்.

" டைம் என்னனு பாருங்க மித்ரா.. பன்னிரண்டு மணி ஆகப்போகுது.. உங்களை நான் ஒன்னும் கடிச்சி தின்னுட மாட்டேன்.. டாக்ஸில போறதை விட என் கூட வாறது சேஃப் தான். பயப்படாம வாங்க.. "

அவன் அவ்வளவு சொன்னபோது அவளால் மறுக்க முடியவில்லை. அவனோடு சென்றாள்.

" உங்களை பார்ட்டில காணோம்னு தேடப்போறாங்க நவிலன்.." என்றாள்.

" அட நீங்க வேற.. அங்க யாருக்கும் என்னை தெரியாது. நானே எப்படி தப்பிச்சு வரலாம்னு இருந்தேன்.. அப்ப தான் நீங்க கிளம்புறதை கண்டேன். பின்னாடியே அவனையும் கண்டேன். மனசுக்கு என்னவோ மாதிரி இருந்திச்சு. அதான் ஓடி வந்தேன். பார்த்தா நம்ம ஜான்சி ராணி கண்ல லேசா பயம்.." என்று நிறுத்தினான்.

" ஓ.. எனக்கு பெயரும் வச்சிட்டிங்களா..?"

" பெயர் நல்லா தானே இருக்கு.." என்று சந்தேகம் வெளியிட்டான்.

" ம்..ம்.. நல்லாத்தான் இருக்கு.. " என்று அவளும் சிரிக்க அவள் இயல்பாக இருக்கிறாள் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டான். இல்லையென்றால் அடி விழுமே. அவர்கள் அப்படியே பொதுவாக பேசிக்கொண்டு போனார்கள். அவளை அவனது ஃளாட்டின் முன் இறக்கிவிட்டான்.

" உங்களது உதவிக்கு நன்றி நவிலன்.."

" அது என் கடமை ராணி.. "

சங்கமித்ரா தலை சாய்த்து அவனைப் பார்த்தாள்.

" ஜான்சி ராணிக்கு மரியாதை கொடுக்கனும்ல..." அவன் சொல்ல அவள் சிரித்தாள்.

" தேங்க்யூ நவிலன். குட் நைட்.. "

" குட் நைட் மித்ரா... சேஃப்பா போங்க.."

தலையாட்டுதலுடன் அவள் லிஃப்ட்டுக்குள் சென்று அது உயர்ந்த பின்னே அவன் கிளம்பினான். இந்த காட்சியை மகளை எதிர்ப்பார்த்து பால்கனியிலேயே தவம் கிடந்த ஐராவதம் கண்டார். அச்சமயம் எதுவும் சொல்லாமல் அடுத்த நாள் தன்னுடைய வேலையை காட்டினார்.

மித்ரா ஆபிஸிலிருந்து வந்த போது வாசலில் மூன்று ஜோடி செருப்புகள் கிடந்தன. அப்போதே அவள் ஊகித்திருக்க வேண்டும். அன்றைய வேலை மிகுதியில் அதை பெரிதாக கண்டுகொள்ளாது உள்ளே நுழைந்தாள். சோஃபாவில் வலுக்கை தலையோடு ஐராவதத்தின் வயதை ஒத்த ஒரு வேஷ்டி கட்டிய ஆசாமி. அவருக்கு அருகில் அரிசி மூட்டைக்கு கை கால் முளைத்தது போல ஒரு வட்ட பொட்டு இட்ட பெண்மணி. அவருக்கும் அடுத்ததாய் மிலிட்டரி மீசையோடு ஒருத்தன். டீப்பாவில் பழத்தட்டு. புரிந்து போனது மித்ராவுக்கு. எதுவுமே சொல்லாமல் அவர்களை கடந்து தனது அறைக்குப் போனாள். அவளுக்குத் தெரியும் அடுத்து அவளை ஃபாலோ செய்து பாமா வருவார் என்று. வந்தார்.

" மித்ரா..!"

" என்னது..?" கத்தினாள் மித்ரா.

" உஷ்.. மெதுவாடீ.. கத்தாதே.."

" கத்துவேன்.. என்ன விஷயம்?"

" இதப்பாரு.. உன்னை பொண்ணு பார்க்க வந்திருக்காங்க. உனக்கு பிடிக்கலனாலும் பரவாயில்ல. வந்து முகத்தை காட்டிட்டு காபியை கொடுத்துட்டு போ.."

" என்னம்மா நீங்க.. இப்படி வாறவங்க போறவங்களுக்கெல்லாம் வந்து காபி கொடுக்கத்தான் என்னை பெத்துவிட்டிங்களா..?"

" கத்தாதடீ.. உங்கப்பா காதுல கேட்க போகுது.."

" கேட்கட்டுமே... எனக்கென்ன ..இதென்ன மாசாமாசம் ஒரு கூத்து.. நான் தான் சொல்லிட்டேன்ல இந்த பொண்ணு பார்க்கிற வேலையெல்லாம் வேணாம்னு.. அப்புறம் ஏன் என்னை இம்சை பண்றிங்க..?"

" யாருடீ இம்சை பண்றது. நீயும் உங்கப்பாவும் சேர்ந்துகிட்டு என்னைத்தான் இம்சை பண்றிங்க.. "

" ஓ.. நான் உங்களுக்கு இப்ப இம்சைதான்ல.. " என்றவள் தனது அலுமாரியைத் திறந்து உடைகளை பையினுள் திணிக்கத்தொடங்கினாள்.

" ஏய்.. என்னடீ பண்ற..?" என்று பாமா உள்ளே பதறிக்கொண்டிருக்கையில் வெளியே அவளை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை மிக்சர் கொறித்துக்கொண்டு இருந்தான்.

அவசியமான துணிகளை அப்போதைக்கு உள்ளே துணித்த மித்ரா ஹாலுக்கு வந்தாள். அவளை கையில் காபி கப்புகளோடு எதிர்ப்பார்த்த ஐராவதம் உள்ளிட்ட நால்வரும் அதிர்ந்தார்கள்.

" என்ன மித்ரா இது..?" அடிக்குரலில் உறுமினார் ஐராவதம். அவரை கணக்கெடுக்காமல் பெண் பார்க்கும் படலத்தில் தலைகாட்டிய மூவரையும் பார்த்து சொன்னாள்.

" மன்னிக்கனும். எனக்கு இந்த பொண்ணு பார்க்கிற சமாச்சாரத்துலயே விருப்பம் இல்லை. உங்க நேரத்தை வீணாக்கியதுக்காக மறுபடியும் மன்னிப்பு கேட்டுக்கிறேன். மறக்காம அம்மா போடுற காபியை குடிச்சிட்டு கிளம்புங்க.. "

" மித்ரா.. நில்லு.." என்று ஐராவதம் வரவும் அவள் நின்று அவரை ஒரு பார்வை பார்த்தாள். அந்த பார்வையில் இருந்த அனல் அவரை எரித்தது. அதன் பின்பே அவள் கிளம்பி நேராக சந்தியாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.


இப்போது மெகந்தி ஃபங்ஷன்க்கு வாருங்கள். ஆடலும் பாடலுமாய் பெண்கள் குதூகலித்துக்கொண்டு இருந்தார்கள். விஜயகாந்த் வெறும் பூக்களை மட்டுமே கொண்டு வந்து கொட்டி அலங்காரம் செய்ய சொல்லி இருந்தார். பின்னணியில் சினிமா பாடல்கள் சப்தமாய் ஒலித்துக்கொண்டு இருந்தது. பெண்கள் கலர் கலராய் ஜொலித்தார்கள். அவர்கள் கைகளில் மருதாணி போடும் ஆர்டிஸ்ட்கள் கடினமான டிசைன்களையும் அசால்ட்டாக போட்டுக்கொண்டு இருந்தார்கள். அவர்களினூடே மித்ராவும் சென்று அமர்ந்து தன் கையை நீட்டினாள்.
அவள் தேர்ந்தெடுத்த ஒரு டிசைனை போட்டுக்கொண்டிருக்கையில் மித்ராவுக்கு ஒரு போன் கால் வந்தது. ஆபிஸிலிருந்து மதன். அவனோடு பேசிக்கொண்டிருந்தவள் மெகந்தி போட்ட பெண் கேட்ட கேள்வியை கவனிக்கவில்லை.

" ஏதாவது பெயர் போடனுமா டிசைன் நடுவில?"

மதனோடு அந்த ஃபர்னிச்சர் விளம்பரம் பற்றி பேசிக்கொண்டு இருந்தவள் அவன் கேட்ட ஏதோ ஒரு கேள்விக்கு ஹீரோவின் பெயரைச் சொன்னாள். அதை தன்னிடம் சொன்னதாக நினைத்துக்கொண்டு அந்த பெயரையே எழுதினாள் மெகந்தி போட்ட பெண். நீண்ட நேரம் போனில் பேசிக்கொண்டிருந்தவள் அந்த பெயரைப் பார்த்ததும் அதிர்ந்தாள்.

'நவிலன்'

" ஐயோ.. " என அவள் கத்த மொத்த கூட்டமும் அவளைத்தான் திரும்பிப் பார்த்தது. அங்கிருந்து எழும்பி ஓடலானாள் சங்கமித்ரா.

சந்தியா அவளுக்கென்று ஒதுக்கியிருந்த அறைக்குச் சென்று, கதவை காலால் மூடிவிட்டு பார்த்தவள் அதிர்ந்தாள். டிசைனுக்கு நடுவே நவிலனின் பெயர். அந்த மெகந்தி போட்ட பெண்ணை திட்டிக்கொண்டே அவனது பெயரை மட்டும் அழித்துப் பார்த்தாள். அது அதற்குள் சிவந்து போக மாட்டேன் என்றது. அந்தப் பெண் மீது எக்கச்சக்கமாய் கோபம் வந்தது. எவ்வளவு கவனயீனமாக இருக்கிறார்கள். இவளும் தான்.

சட்டென இவளுக்கு ஒரு ஐடியா உதயமாகியது. இந்த டிசைனுக்கு மேலேயே வேறு ஒரு டிசைனைப் போட்டு மறைத்தாள் என்ன? அவளுடைய க்ரியேட்டிவ் மூளை வேலை செய்ய மீண்டும் மெகந்தி போட்ட இடத்துக்கு வந்தாள். வரும் போது சந்தியாவின் தந்தை விஜயகாந்தை திட்டிக்கொண்டே வந்தாள்.

' காசு இருக்குங்கறதுக்காக கார்டன்லயா செட்டு போட்ட மாதிரி ஏற்பாடு பண்ணுவார்.. ரூம்க்கும் கார்டனுக்கும் எவ்வளவு தூரமா இருக்கு..' அவள் திட்டிக்கொண்டே போய் பார்த்தால் அதுவரை மெகந்தி போட்டுக்கொண்டு இருந்த நான்கு பெண்களும் தங்களது வேலைகளை முடித்துவிட்டு ஜூட் விட்டிருந்தார்கள்.

" எங்க அந்த மெகந்தி போட்ட லேடி..?"

" அவங்க அப்பவே போயாச்சே.." என்ற பதில் தான் கிடைத்தது.

" என்னது..? போயாச்சா..?" அதிர்ந்த மித்ராவின் வலது கையின் நடுவே நவிலனின் பெயர் அவளைப் பார்த்து சிரித்தது.

" மித்ரா..! என் கை அழகா இருக்கா..? எங்க உன் கையை காட்டு.." என்று அருகில் வந்தாள் சந்தியா.

' கையை காட்டுவதா..? ஆளை விடு தாயே..' என்று எண்ணிய மித்ரா அவளிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசிக்கும் போது தான் அடுத்த சம்பவம் நடந்தது.

நவிலன் அங்கே வந்து கொண்டு இருந்தான்.

' இவன் எங்கே இங்கே..' என்ற கேள்வியோடு அவனைப் பார்த்தாள் மித்ரா. சந்தியாவின் அண்ணண் என்றால் அந்த வீட்டில் அவன் தென்படத்தானே வேண்டும். கல்யாண வீட்டில் உறவினர்கள் இருப்பார்கள் தானே.

" ஹாய் அண்ணா..! மெகந்தி ஃபங்ஷன்ல உங்களுக்கு என்ன வேலை..?" வம்பு பேசினாள் சந்தியா.

" ம்.. உன் கைல மருதாணி எப்படி சிவந்திருக்குனு பார்க்க வந்தேன்.." என்றான் அவன்.

" நான் காட்ட மாட்டேன்ப்பா.. இதோ மித்ராவும் மருதாணி வச்சிருக்கா.. வேணும்னா அவ கை சிவந்திருக்கானு பாருங்க.." என்று நகர்ந்து விட்டாள் சந்தியா. சேட்டைக்காரி. அவளுக்கு இவர்களுக்கிடையில் எதுவோ ஒன்று ஓடுகிறது என்று தெரிந்திருந்தது. அதற்கேற்றாற்போல் சந்தர்ப்பத்தை வேறு அமைத்துக்கொடுத்துவிட்டு நழுவினாள்.

" ஹாய் மித்ரா.."

" ஹா...ஹா..ஹாய்.."

" என்னாச்சு... ஏன் இப்படி டென்ஷனா இருக்கிங்க..?"

" ஒ..ஒன்..ஒன்னுமில்ல.." என்ற மித்ராவுக்கு தவறியும் தன்னுடைய கையை அவனுக்கு காட்டிவிட கூடாது என்று தோன்றியது. அப்படி அவன் மட்டும் பார்த்தால் தன்னைப் பற்றி என்ன நினைப்பான் என்ற பெருங்கவலை எழுந்தது.

அந்த இடத்தில் ஒரு கவிதை வந்தது அவனுக்கு.

'நீ மருதாணி இட்டிருப்பதோ கைகளில்
ஆனால் சிவந்திருப்பதென்னவோ
உன் கன்னங்கள்..
ஏனடீ பெண்ணே !'



"மித்ரா.. எந்த உலகத்துக்கு போயிட்டிங்க..?"
அவள் பதில் எதுவும் சொல்லாமல் ஓடினாள். அவள் ஓடிய திசையையே பார்த்தவன் சொன்னான்.

" பட்டாம்பூச்சி சிறகு விரித்து ஓடுகிறது.." சொல்லிவிட்டு தன் தலையை தானே தட்டிக்கொண்டு வெட்கப்பட்டான்.

அவளிடம் தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்து அங்கிருந்து நகர்ந்தான்.


ஆட்டம் தொடரும் ❤️?

 
Nice epi dear.
Note the point your honour " thappu seyuthengil adi poduven" sooo... b careful hero sir,pinnalil adi vaangaathu correct ah husband jolly seyanum ketto.
Ayra sir, vazhuka manda,arisi mootta,murukku meesai ellam instant ah kai vasam vachu irrukeenga pola?? Irrunthalum unga plan oothi moodi irrucha???
Per ellam oru matter ah Sangi???? vidu,vidu parthukalam.
 
Nice epi dear.
Note the point your honour " thappu seyuthengil adi poduven" sooo... b careful hero sir,pinnalil adi vaangaathu correct ah husband jolly seyanum ketto.
Ayra sir, vazhuka manda,arisi mootta,murukku meesai ellam instant ah kai vasam vachu irrukeenga pola?? Irrunthalum unga plan oothi moodi irrucha???
Per ellam oru matter ah Sangi???? vidu,vidu parthukalam.
Thank you for your lovely review ?.
 
Top