Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் 26

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 26

"தம்பி தான்....."

"பாப்பா தான்....."

"தம்பி....."

"பாப்பா....."

பிள்ளைகள் அனைவரும் இரு குழுவாக பிரிந்து நின்று தங்கள் சண்டையை தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்க, அவர்களை எவ்வாறு சமாதானம் செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்க விஷ்வா நின்று கொண்டு இருந்தான்.

பல தாெழில்களை திறம்பட நடத்தும் விஸ்வா தற்பாேது குழந்தைகள் முன் நிற்கும் அப்பாவி தோற்றத்தில் தன்னை மறந்து சிரித்தபடி கனலி மாடிப்படியில் இறங்கி வந்தாள்.

கனலி சிரிப்பு சத்தத்தில் நிமிர்ந்து பார்த்த விஸ்வா தன் காதல் மனைவியுடன் கனவுலகில் அவள் நிறை மாத கற்பினி என்பதை மறந்து டூயட் பாட செல்ல நினைக்க, தன்னருகில் கேட்ட பிள்ளைகளின் சத்தம்

'அப்படியெல்லாம் உன்ன தனியா டூயட் பாட நாங்கள் விட்டுடுவோமா..!' என்று இவ்வுலகத்திற்கு இழுத்து வந்தது.

'என் பாெண்டாட்டிய ரசிக்க விட மாட்டாங்களே.' என்று சலித்துக் கொண்டு பிள்ளைகளை சமாதானம் செய்ய களத்தில் குதித்தான்.

"இப்போ எதுக்கு தேவையில்லாம சண்டை போடுறீங்க. யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்து போக வேண்டியதுதானே." என்று பெரிய மனிதன் தோரணையில் கூற

"விஸ்வா உனக்கு ஒன்னும் தெரியாது தேவை இல்லாமல் நீ இதில் தலையிடாதே." என்று வழக்கம்போல கிருபா விஸ்வாவிற்கு பல்பு ஒன்றை வழங்க, அவனோ இனி தன் மகளிடம் தன் பேச்சு எடுபடாது என்று மகனை மலை இறக்க முயற்சி செய்தான்.

"இந்திரா நீ இப்பாே அப்பா சொல்றத கேட்க்கபாேறியா.... இல்லயா...!"

எப்பொழுதும் இரு குழுவாக பிரிந்து சண்டை நடந்தால், சமாதான கொடியை முதலில் பறக்கவிடும் இந்திரஜித் இன்று

"எப்பவும் நான் மட்டும்தான் விட்டுக்கொடுத்து போகணுமா.... என்னால இந்த விஷயத்தில் விட்டுக்கொடுத்து போக முடியாது." என்று தான் சமாதானமாக விரும்பவில்லை என்பதை உறுதிபடுத்தினார்.

முன்புபோல இப்பொழுதும் பிள்ளைகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகளும் சண்டைகளும் வருவது அடிக்கடி நிகழும் ஒன்றாக இருந்தாலும், இப்பொழுதெல்லாம் கனலி விஷ்வா இருவரும் கவலைப்படுவது இல்லை.

அவர்கள் கவலைப் படாததற்கு ஒரே காரணம் கிருபாவின் "லி" அணியில் ரூபா தீபா இருவரும் இடம்பெற்று கிருபா கொள்கைகளை தீவிரமாக பரப்பும் செயலாளர்களாக மாறி தங்கள் அணியின் வெற்றிக்காக பாடுபடுவதும்,

இந்திரஜித் "ஜித்" அணியில் அபராஜித் திட்ட ஆலோசகராக இணைந்து லி அணியை முறியடிக்கும் வீர அணியாக இருப்பது மட்டுமே.

இரு அணிகளும் முட்டி கொள்வதற்கு பெரிதாக எந்த காரணமும் இருக்க தேவையில்லை.

காலையில் எழுந்து காபி குடிப்பதா..!
அல்லது பால் அருந்துவதா....! என்பதில் ஆரம்பித்து, இரவு குட் நைட் சொல்லி உறங்கச் செல்வதற்கு முன்பு வரை ஏதாவது ஒரு காரணத்திற்காக இரு அணிகளும் மோதிக் கொள்ளும்.

அவ்வாறு மோதிக்கொள்ளும் சமயங்களில் எல்லாம் பெரும்பாலும் மாட்டிக்கொள்வது விஸ்வாவாகத்தான் இருக்கும்.

கனலி இப்படிப்பட்ட அபாயகரமான சூழ்நிலை நிலவும் பொழுது முடிந்தவரை பிரச்சனைக்கு காரணம்... ஏன்?
எதற்கு?
எப்படி?
எதனால்?
யாரால்? என அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரிந்த பின்பே வந்து தீர்ப்பு கூறி இரு அணியும் சமாதானம் செய்வாள்.

இன்றும் இரு அணிகளும் தங்கள் வார்த்தைப் போரை தீவிரமாக நடத்திக் கொண்டிருக்க கனலி பார்வையாளராக இருந்து தன் கேள்விக்கான விடைகளை பிள்ளைகளை விசாரிக்காமலேயே பெற்றுக் கொண்டு இருந்தாள்.

பிரிவ்ஜா'வில் இருந்த ஐந்து நாட்களும் தங்கள் உலகில் தங்களுக்கான மகிழ்ச்சியை திகட்ட திகட்ட அனுபவித்த காதல் ஜாேடிகளை அவர்களை பிள்ளைகளிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு மீண்டும் சென்னைக்கு இழுத்து வந்தது.

வந்தவர்களுக்கு காத்திருந்தது ஒற்றுமையுடன் நின்றுகொண்டிருந்த 5 பிள்ளைகளே.

கிருபா இருபுறமும் தீபா ரூபா நிற்க, மறுபுறம் அபி தோள்களில் கையை போட்டு சிரித்த வண்ணம் இந்திரா நின்று கொண்டு இருந்தான்.

'நேற்று இல்லாத மாற்றம் என்னது...! என்ற ரீதியில் கனலி விஸ்வா இருவரும் நினைத்துக்கொண்டிருக்க புன்னகை முகமாக வரவேற்றது இனியன் மாலினி ஜோடி.

ஒரே கல்லூரியில் படித்து தங்கள் நட்பு பயிரை வளர்த்த இனியன் மாலினி, விஸ்வா கனலி வரவேற்பு நிகழ்ச்சியில் தாங்கள் இனி உறவினர்கள் என்பதை அறிந்து கொண்டதும் மேலும் அவர்கள் நட்பு வளர்ந்தது.


இனியன் மீண்டும் தன் படிப்பில் மூழ்கி இருந்தாலும் அவ்வப்போது இங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் மாலினி மூலம் கேட்டுக் கொள்ள தவறியது இல்லை.

அதனால் தன் படிப்பு முடிந்த கையோடு யாரிடமும் தான் வருவதை முன் அறிவிக்காமல் வந்து சேர்ந்தான்.

அவன் வந்து சேர்ந்த அன்று கனலி விஸ்வா இருவரும் பிரிவ்ஜா சென்றிருந்ததால் இனியன் வந்திருந்த விஷயம் தெரியாது.

வந்தவன் நேராக மாலினியை சென்று சந்தித்து பேசினான். பிள்ளைகள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே தன் தமக்கை அவள் கணவனுடன் சந்தோஷமாக வாழ முடியும் என்பதால் இனியன் ஒரு சிறு வெடியை பிள்ளைகளிடையே கொளுத்தி போட்டான்.

அவன் கொளுத்திப் போட்ட வெடியும் தவறாமல் சரியான இடத்தில் வெடித்தது. மாலினியுடன் பேசி விட்டு நேராக கனலி வீட்டிற்கு வந்த இனியன் தன் பெரியம்மாவிடம் பேசிவிட்டு,பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட ஆரம்பித்தான்.

விளையாட்டின் ஊடே அடுத்த வருடம் விஸ்வா மீண்டும் பெங்களூர் சென்று விட்டால் இனி பிள்ளைகளால் அவனை சந்திக்க முடியாது என்று கூறிவிட, சில நாட்களாக தந்தையாக தங்களுக்கான அனைத்தையும் செய்த ஒருவனை இனி பார்க்க முடியாதா என்ற கவலையில் இந்திரா ரூபா தீபா மூவரும் ஆழ்ந்தனர்.

அதேசமயம் மாலினி கிருபா அபி இருவரிடமும் மீண்டும் விஸ்வா பெங்களூர் செல்ல முடிவெடுத்துவிட்டால் இனி கனலியை காண முடியாது என்று கூறிவிட, அம்மாவின் பாசத்திற்காக இருவரும் ஏங்க ஆரம்பித்தனர்.

தம்தம் பாட்டிகளிடம் "அப்பா வேண்டும்..... அம்மா வேண்டும்......" என்று கேட்டு பேரப்பிள்ளைகள் நச்சரிக்க ஆரம்பிக்க, சொல்லிவைத்தாற்போல பூரணி திலகவதி இருவரும்

"உங்களுக்கு தான் அந்த பசங்களை புடிக்காதே.... அப்புறம் எப்படி உங்க அப்பா அம்மா ரெண்டுபேரும் கூடவும் இருக்கமுடியும்." என்று பிள்ளைகளின் பிரச்சனையில் உயிர் நாடியை சரியாக பிடித்து கேள்வி கேட்க,

பிள்ளைகள் தங்களுக்குப் பிடித்த அப்பா அம்மா இருவரும் ஒன்றாக தங்களுடன் இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தங்களுக்கு பிடிக்காத எதிரணியுடன் கைகோர்க்க தயாராகினர்.

பிள்ளைகள் வாயிலிருந்து சம்மதம் என்ற ஒரு வார்த்தை வந்த அடுத்த நொடி மூவரின் அனைத்து உடைமைகளையும் விஸ்வா வீட்டிற்கு மாற்றியிருந்தார் திலகவதி.

இனியன் மாலினி இருவரும் பிள்ளைகள் அனைவரையும் ஒன்றாக அழைத்துக்கொண்டு சென்னையில் இருக்கும் தீம் பார்க், பீச், பூங்கா என அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்ல, பிள்ளைகளுக்கு இயல்பாக இருக்கும் கருத்து ஒற்றுமை அவர்களை இரண்டு நாட்களிலேயே இணைத்து விட்டது.

பிள்ளைகளின் கருத்து ஒன்றுபட்டாலும் அவர்களுக்குள் மேலும் எதுவும் கருத்து வேறுபாடு வராமல் இருக்க முடிந்த அளவு விஸ்வா கனலி இருவரும் தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தனர்.

இப்பொழுதெல்லாம் பார்பி கதை சொல்லும் கிருபா அக்காவை தீபா ரூபா இருவருக்கும் மிகவும் பிடித்துவிட்டது.

அதேபோன்று ஸ்கேட்டிங் கிரிக்கெட் என தன்னுடன் இணைந்து விளையாடும் இந்திரா அண்ணனை அபிக்கு பிடித்துவிட்டது.

அன்று காலையில் எழும் பொழுது சிறு கலக்கத்துடன் எழுந்த கனலி தன் மனதில் எழுந்த சந்தேகம் உண்மையா என்பதை உறுதி செய்வதற்காகவே விஸ்வாவுடன் மருத்துவமனைக்கு வந்திருந்தாள்.

வரும் வழியில் எல்லாம் விஸ்வாவிற்கு அர்ச்சனை செய்வதற்கும் தவறவில்லை.

விஸ்வா நடத்திய நாடகத்தை நம்பி கனலி அவனுடன் பிரிவ்ஜா சென்றதன் விளைவு இப்பொழுது கனலி கலக்கத்துடன் மருத்துவமனையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மருத்துவரின் வாயிலிருந்து வரும் ஒரு வார்த்தைக்காக காத்திருந்தாள்.

எங்கே தான் ஒரு தாயாக நடக்க தவறி விட்டாேமாே, இந்த உலகம் தனக்கு 'இவள் சித்தி தானே' என்ற பட்டத்து தந்து விடுமாே என்ற பயம்
பயம்.....!
பயம்......!

"மேடம் உங்க ரிப்போர்ட் எல்லாமே வந்துருச்சு... உங்கள டாக்டர் உள்ள வர சொல்றாங்க." என்று நர்ஸ் அழைத்து விட்டு சென்றுவிட்டார்.

அதுவரை தன் கணவனை பார்வையால் விலக்கி நிறுத்திய கனலி தன் அருகில் வந்த கணவனின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொள்ள, அவள் கைகளின் நடுக்கத்தை உணர்ந்து ஆதரவாக அவளைத் தன் தோளோடு அணைத்தபடி அந்த மகப்பேறு மருத்துவரின் அறைக்குள் நுழைந்தான்.

"கங்கிராட்ஸ் மிஸ்டர் அண்ட் மிஸஸ் விஸ்வஜித் ரிப்போர்ட் பாசிட்டிவா தான் இருக்கு. இனிமேல் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்." என

கனலி தாய்மை அடைந்திருப்பதை உறுதி செய்துவிட்டு இனி எவ்வாறெல்லாம் நடக்கவேண்டும் என்ற வழிமுறைகளை அந்த மகப்பேறு நல மருத்துவர் விளக்க ஆரம்பித்தார்.

அனைத்து ஆலோசனைகளையும் கேட்டுவிட்டு வீட்டிற்கு புறப்படும் வரை கனலி எதுவும் பேசவில்லை.

காரில் மீண்டும் மௌனமே ஆட்சி செய்ய அதை சிறிதும் விரும்பாமல் விரும்பாத விஸ்வா ஒரு மரத்தடியில் தன் ஆடி காரை நிறுத்திவிட்டு

"சோ இப்ப நீ என்ன முடிவு பண்ணி இருக்க." என்று உணர்ச்சி துடைத்து குரலில் கேட்க, கனலி மீண்டும் கலக்கமான ஒரு பார்வையை தன் கனவனை நோக்கி செலுத்தினாள்.

தான் இனியும் மௌனமாக இருந்தால் கனலி முட்டாள்தனம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பதால் வரவழைத்துக் கொண்ட கடுமையுடன் பேச பேச ஆரம்பித்தான்.

"சொல்லு கனலி என்ன பண்ண முடிவு பண்ணிருக்க."

எதுவும் பேசாமல் கனலி மௌனமாக அமர்ந்திருக்க, அவள் முகத்தை தன் புறம் திருப்பிய விஸ்வா

"நீதான் பிரச்சனை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ஒரு தீர்வு கண்டு பிடிச்சு தயாராக வச்சிருக்கியே.....
அதையே இப்போதும் செயல்படுத்த வேண்டியது தானே." என்று ஆக்ரோஷமாக கேட்க

'இவன் என்ன தீர்வு பற்றிப் பேசுகின்றான்.' என்று புரியாமல் கனலி மலங்க மலங்க விழித்தாள்.

"இப்படி புரியாத மாதிரி பார்த்தால் எல்லாம் சரியாகிவிடுமா கனலி. முதல் தடவை உன் அம்மாவா...! நானா...! என்று குழப்பம் வரும் பொழுது, அம்மாதான்னு நீ முடிவு பண்ணி என்னை விட்டுட்டு போயிட்ட.

இரண்டாவது தடவை பிள்ளைகளா....!புருஷனானா...! என்று வரும்பொழுது பிள்ளைகள் தான் உனக்கு பெருசாபாேச்சு.

பிரச்சனையை சமாளிக்க அவங்களுக்கு கூட்டிக்கொண்டு வெளியே போயிட்ட. இப்போ கூட உனக்கு குழப்பம்.....!

வயத்தில் இருக்கின்ற குழந்தையா...! வெளியே நிற்கிற குழந்தைகளா...!என்று மனதுக்குள் ஒரு குழப்பம்." என்று தன் பேச்சிற்கு ஒரு இடைவெளிவிட்டு நிறுத்திய விஸ்வா

"வெரி சிம்பிள் கனலி.... பேசாமல் நீ அபார்ஷன் பண்ணிக்க." என்று சிறிதும் கோபம் குறையாத குரலில் கூற, கனலி வெகுண்டு எழுந்தால் அதே ஆத்திரத்தில் கனலி பேச ஆரம்பிப்பதற்கு முன்பு அவளை தடுத்து நிறுத்திய விஸ்வா தனிந்த குரலில்

"எங்க பாட்டி கூட பொறந்தவங்க 12 பேரு. அவங்க அப்பா அம்மா பதிமூணாவதா ஒரு குழந்தை பிறக்கும் பொழுது இந்த ஊர் உலகம் என்ன சொல்லும் என்று நினைச்சு கவலைப் படலை.

அவர்களுடைய விருப்பம் அவங்க பெத்தாங்க, வளர்த்தாங்க. அவங்களை யாரும் கேள்வி கேட்கல, கேட்கவும் முடியாது.

அப்படி இருக்கும் பொழுது நமக்கு பிறக்கப் போகிற பிள்ளைகளைப் பற்றி யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை." என்று தளர்வாக விஸ்வா பேசி முடிக்க கனலி ஒரு பெருமூச்சுடன்

"ஓகே விஜி இந்த விஷயத்துல நான் உன்னுடைய பேச்சை மட்டும் கேட்கிறேன். எனக்கு இந்த உலகத்திலேயே ரொம்ப முக்கியமானவன் நீ மட்டும் தான்.

ஏன்னாென்றால் உனக்கும் எனக்குமான ஒரு உறவு மட்டும்தான் பிரிந்து இருந்தாலும் விரிசல் விழாமல் இருக்கும்.

உன்னை நான் முக்கியமா நினைக்கிறதால் மத்தவங்கள என்னால விட்டுக் கொடுத்தது முடியாது." என்று மிகத் தெளிவாக பேசினாலும் அவள் குரலில் ஒரு நடுக்கம் இருப்பதை உணரவே செய்தான்.

பள்ளி முடிந்து வீடு திரும்பிய பிள்ளைகள் அனைவரிடமும் அன்று நடந்த அனைத்தையும் கேட்டு முடித்துவிட்டு விஸ்வா விளையாட்டின் ஊடே

"ரொம்ப நல்ல பிள்ளைகளாய் இருந்தால் கடவுள் மிகப் பெரிய கிப்ட் கொடுப்பார்." என்று பேச ஆரம்பிக்க அவன் பேச்சில் இடையில் புகுந்த அபராஜித்

"அப்படின்னா நாங்க நல்ல பிள்ளைங்க இல்லையா." என்று கேட்க

"நீங்க நல்ல பிள்ளை இல்லைன்னு யாரு சொன்னா." என்று கனலி விளக்க முற்பட ரூபா

"அப்படின்னா எதுக்கு கடவுள் எங்களுக்கு இன்னும் பெரிய கிப்ட் கொடுக்கவே இல்லை." என்று வருத்தத்துடன் கேட்டாள்.

அவளை தூக்கி தன் மடியில் அமர்த்திக்கொண்டு விஸ்வா

"அப்பா சொல்லி முடிக்கிற வரைக்கும் பொறுமையா கேட்கணும். இப்படி வருத்தமா பேசினா அப்பாவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.
உங்கள நல்ல பிள்ளை இல்லைன்னு யாரு சொன்னா."

"அப்படின்னா எதுக்கு எங்களுக்கு கடவுள் இன்னும் ஏன் கிப்ட் கொடுக்கல." என்று தீபா கேட்க அவளையும் தன் அருகில் அமர வைத்துக்கொண்டு

"நீங்க எல்லோரும் ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளைகள், புதுசா ஸ்கூல் சேர்ந்ததுக்கு அப்புறம் மூணு பேரும் சேட்டை எல்லாம் பண்றதே இல்ல.

எல்லாரும் ஒன்னா விளையாண்டும் பாேது சண்டை போடுவது கிடையாது. அப்போ கடவுள் உங்களுக்கு என்ன கிப்ட் கொடுக்கலாம்னு ரொம்ப யோசிச்சாரு.

இன்னைக்கு தான் எங்க கிட்ட உங்களுக்கு என்ன கிப்ட் கொடுக்க போறேன்னு சொன்னாரு."

"என்ன கிப்ட்....!" என்று அனைவரும் ஆர்வமாக கேட்க

"நீங்க எல்லாரும் பாத்துக்க உங்களுக்கு ஒரு குட்டி பாப்பா இந்த வீட்டுக்கு வர போகுது.

அந்தக் குட்டிப் பாப்பாவுக்கு இந்திரா தான் ஸ்கேட்டிங் சொல்லிக் கொடுக்கணும்.
கிருபா தான் கதையெல்லாம் சொல்லிக் கொடுக்கணும்.
அபி குட்டி தான் சைக்கிளிங் சொல்லித் தரணும்.
அப்புறம் தீபா ரூபா ரெண்டு பேரும்தான் ஸ்கூலுக்கு பத்திரமாக போயிட்டு பாடம் எல்லாம் சொல்லிக் கொடுக்கணும்." என்று

வரப்போகும் குழந்தை பிள்ளைகளுக்காக கொடுக்கப்பட்ட பரிசு என்றும், அதை எவ்வாறு மற்றவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் பிள்ளைகளுக்கு புரியுமாறு அவர்கள் மனதில் பதிய வைத்தான்.

அன்றிலிருந்து குட்டி பாப்பா எப்போ வீட்டுக்கு வரும்? நான் இதெல்லாம் பாப்பாவுக்கு சொல்லிக் கொடுப்பேன், என்று எதிர்காலத்தில் செய்யப்போகும் வேலைகளை தங்களுக்குள் பேசிக் கொள்வது என்பது பிள்ளைகளின் ஒரு தினசரி வழக்கமாக மாறிவிட்டது.

அதன் ஒரு படியாக இன்று பிறக்கப் போவது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்ற பட்டிமன்றம் ஆரம்பிது இரு அணிகளுக்கும் இடையில் சண்டையாக தோன்றியது.

"லி" அணியினர் பிறக்கப்பாேவது பெண் குழந்தை என்றும், "ஜித்" அணியினர் பிறக்கப்பாேவது ஆண் குழந்தை என்றும் சண்டையிட்டுக்காெள்ள இடையில் விஸ்வா மாட்டிக்காெண்டான்.

அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டே இருந்த கனலி பிள்ளைகளின் கவனத்தை தன் புறம் திருப்பி

"அப்பா அன்னைக்கு உங்க கிட்ட என்ன சொன்னாங்க....!
நீங்க எல்லாரும் நல்ல பிள்ளைகளாய் இருந்தால் மட்டும் தான் கடவுள் உங்களுக்கு கிப்ட் சீக்கிரம் கொடுப்பாங்க.
நீங்க எல்லாரும் சேட்டை பண்ண உங்களுக்கு கிப்ட் லேட்டா தான் கொடுப்பாங்க." என்று கூட பிள்ளைகள் அனைவரும் ஒரே நேரத்தில் தங்கள் சமாதான கொடியை பறக்க விட்டனர்.

அனைவரும் விளையாட சென்றதும் கனலி தன் அறைக்கு வர, அவள் பின்னே உள்ளே வந்த விஸ்வா அவள் பின்புறம் வந்து அணைத்துக்கொண்டான்.

விஸ்வா கைகள் இரண்டும் கனலி மேடிட்ட வயிற்றின் மீது இருக்க உள்ளே இருக்கும் சிசு

"என் அம்மாவே தொடாதே..!" என்பதுபோல உதைக்க ஆரம்பித்தது.

கனலி முன்புறம் வந்து மண்டியிட்டு அவள் வயிற்றுக்கு நேரே தன் முகத்தை கொண்டு வந்த விஷ்வா

"நீ உதைச்சா என்னுடைய பொண்டாட்டிய நான் கட்டிபிடிக்க மாட்டேனா." என் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையுடன் சண்டைக்குத் தயாராக அவன் தலைமுடியை கலைத்து விட்ட கனலி

"சின்னப்புள்ளை மாதிரி இது என்ன விஜி எழுந்திரு." அவனை எழுப்ப நினைக்க அவனும்

"என் பிள்ளை கிட்ட பேசினா உனக்கு என்னடி பொறாமை." என்று குழந்தைத்தனமாக கேட்டு வைக்க

"எனக்கு ஒன்னும் பொறாமையில்லை சாமி.... நீ முதல வெளியே போ நான் டிரஸ் மாத்தணும்." என்று விஷ்வாவை அறையை விட்டு வெளியே துரத்த நினைக்க, அவளோ சட்டமாக நான் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

அவன் அமர்ந்திருக்கும் தோரணையோ நான் வெளியே செல்ல மாட்டேன் என்பதை உணர்த்த கனலி மாற்று துணியுடன் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

"வடை பாேச்சே..." என்ற ரீதியில் விழித்த விஸ்வாவும், குளியலறைக்குள் சென்று கனலியும் தங்கள் துணையை நினைத்து சிரித்துக் கொண்டனர்.

ஏழாவது மாதம் வளைகாப்பு நடத்த வேண்டும் என்று திலகவதி கூற அதற்கு ஒத்துக்கொண்ட விஸ்வா கனலியை தன் தாய் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கவில்லை.

எவ்வளவு கூறியும் விஸ்வா தனது பிடியில் உறுதியாக நிற்க வேறு வழியில்லாமல் திலகவதி தான் இறங்கி வர வேண்டியதாக இருந்தது.

பிரசவத்திற்கு சில தினங்கள் முன்பு வந்து தன் மகளை கவனித்துக்கொள்ள மகளின் புகுந்த வீட்டிற்கு வந்து சேர்ந்த திலகவதிக்கு தான் வரவில்லை என்றாலும்கூட மகளை கவனித்துக் கொள்வதற்கு ஆள் இருப்பதை பார்த்து மனநிறைவு அடைந்தார்.

"அம்மா இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க...."
"ம்மா ஜூஸ் குடிச்சா தான் குட்டி பாப்பா நல்ல ஹெல்தியா இருக்கும்...."

"மாத்திரை சாப்பிடுங்க மா...."

"பால் குடிக்கணும் மா...."

"வாங்க மா வாக்கிங் போயிட்டு வரலாம்....."

பிள்ளைகள் அனைவரும் தாங்கள் தான் பெரியவர்கள் பாேன்றும், கனலி ஒன்றும் தெரியாத குழந்தை போன்றும் அவளை கவனித்துக் கொள்ள,பெரியவர்கள் அனைவரும் இதில் தலையிடாமல் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

பிரசவத்திற்கு என்று டாக்டர் குறித்துக் கொடுத்த நாளுக்கு மூன்று தினங்களுக்கு முன்பே கனலிக்கு வலி வந்து விட விஸ்வா கனலியை தன் காரிலும், கைகளிலும் ஏந்திக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்.

காலையில் மருத்துவமனை வந்துசேர்ந்த கனலியையும், வெளியே காத்திருப்பவர்களையும், பெண் மருத்துவரையும், நரஸ் அனைவரையும் பல மணி நேரத்திற்கு அழ விட்டு, மாலை 4 மணிக்கு பிள்ளைகளுக்கான அந்த கடவுளின் பரிசு கடவுள் விஷ்வா கையில் வந்து சேர்ந்தது.

இனி இனிய நிஜத்துடன்....!

ஹலோ ஃபிரண்ட்ஸ் இதுவரைக்கும் என்னுடைய கதைக்கு தாெடர்ந்து ஆதரவு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
இன்னும் ஒரே ஒரு எப்பி மட்டும்தான் இருக்கு. அதையும் விரைவில் தந்து விடுவேன்.
கனலி விஸ்வா இருவருக்கும் பிறந்த குழந்தை ஆண் குழந்தையா.....!
பெண் குழந்தையா.....!
ஆண் குழந்தையாக இருந்தால் என்ன பெயர் வைக்கலாம்?
பெண் குழந்தையாக இருந்தால் என்ன பெயர் வைக்கலாம்?
(இது நேயர் விருப்பம்.)

உங்களுக்கு பிடிச்ச பெயரை எனக்கு அனுப்பி வையுங்க. சீட்டு குலுக்கி போட்டு அதில் வர பெயரை குழந்தைக்கு வச்சிடலாம்.
பட் குழந்தை பெயர் லி/ஜித் ல தான் முடியனும்
 
Last edited:
கிருபாலி ரூபாலி தீபாலி மூணு பொம்பளைப் பிள்ளைகள் இருக்காங்க
ஆனால் இந்திரஜித் அபராஜித் ன்னு ஆம்பளை பசங்க இரண்டு பேர்தான் இருக்காங்க
ஸோ கனலிக்கு பையன் பிறந்தால்தான் கணக்கு டேலியாகும்
பையன் பேரு யோசிச்சு சொல்லுறேன்,
செசிலி டியர்
 
Last edited:
ப்பூ....இதை கன்ஃபார்ம் பன்ன தான் ஹாஸ்பிட்டல்ல வெயிட் பன்னாங்களா...என் கற்பனைக்குதிரை எங்கெங்கோ ஓடிடுச்சு....

3 பொண்ணு இருக்காங்களே....ஸோ இன்னொன்னு பையன் வரட்டும்...

பையன் பேர்???????மஹேந்திரஜித்....இதான் தோனுச்சு
 
கிருபாலி ரூபாலி தீபாலி மூணு பொம்பளைப் பிள்ளைகள் இருக்காங்க
ஆனால் இந்திரஜித் அபராஜித் ன்னு ஆம்பளை பசங்க இரண்டு பேர்தான் இருக்காங்க
ஸோ கனலிக்கு பையன் பிறந்தால்தான் கணக்கு டேலியாகும்
பையன் பேரு யோசிச்சு சொல்லுறேன், செசிலி டியர்
ஆமாம் பானுமா பையன் தான் வரனும் ???
 
Top