Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 1 (1)

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
ஹாய் ப்ரென்ஸ் என்னுடைய முதல் பதிவை நான் தந்திருக்கிறேன் படிச்சிட்டு உங்கள் கருத்தை பதிவு பண்ணுங்க



கண் விழித்தேன் உன் நினைவில்
-- செசிலி வியாகப்பன்


அத்தியாயம் 1


சென்னை மாநகரின் நடுவில் உயர்ந்து நிற்கும் அந்த ஆறு மாடி அலுவலகத்தில் மூன்றாவது தளத்தில் நடைபெறும் அசிஸ்டன்ட் மேனேஜர் பதவிக்காக நடைபெறும் நேர்முகத் தேர்வில் அமர்ந்திருந்தாள் கனலி. கனலியின் சான்றிதழ்களை சரிபார்த்த பின், தேர்வுக் குழுவினர் கேட்ட அனைத்து கேள்விக்கு சலிக்காமல் அவள் அளித்த பதிலில் திருப்தியுற்ற மேனேஜர் மற்றும் இரு தேர்வுக் குழு உறுப்பினர்களும் தங்களுக்குள் பேசி முடித்து, கனலி இந்தப் பதவிக்கு தகுதியானவள் என்பதை முடிவு செய்துவிட்டு

"வெல்கம் டு தி கிரேட் VK குரூப் ஆஃப் கம்பெனிஸ். மிஸஸ் கனலி யூ கேன் ஜாயின் வித் தி கம்பெனி மண்டே ஆன்வட்ஸ். அப்பாயின்மென்ட் ஆர்டர் உங்களுடைய மெயில் ஐடிக்கு வந்துரும். நெக்ஸ்ட் மண்டேல இருந்து நீங்க வேலையை ஜாய்ன் பண்ணிக்கலாம்."

"தேங்க்யூ சார்."

வேலை கிடைத்த மகிழ்ச்சியில் வெளியே வந்த கனலி ஆச்சரியமே, தான் கேள்விப்பட்ட வரையில் VK குரூப் ஆஃப் கம்பெனியில் சுலபமாக வேலை கிடைக்காது என பலர் கூற கேள்விப்பட்டிருக்கிறாள்.

ஆனால் அதை பொய்ப்பிக்கும் வகையில் திங்கள் கிழமையிலிருந்து VK குரூப் ஆஃப் கம்பெனியின் அசிஸ்டன்ட் மேனேஜர் ஆக பதவியேற்க போவதை நினைத்து மகிழ்ச்சியுடன் சிறு கர்வமும் எட்டிப்பார்த்தது. கடந்த சில வருடங்களாக சில எதிர்பார்ப்புகளால் ஏமாற்றமடைந்த கனலிக்கு இங்கு வேலை கிடைத்தது ஆனந்த ஆச்சரியமாகவே இருந்தது.

இதை கனலி அதிர்ஷ்டம் என்று கூட சொல்லலாம் விகே குரூப் ஆப் கம்பெனிகளில் எல்லாம் எளிதில் ஒருவருக்கு வேலை கிடைத்து விடாது. திறமை இருந்தாலும் சில பல காரணங்களினால் இங்கு வேலை கிடைப்பது அரிதாக இருக்க கனலிக்கு அந்த பெரிய கம்பெனியில் வேலை கிடைத்தது வேலை கிடைத்தது.

கனலி பார்த்தால் 27 வயது என்று யாராலும் கூற முடியாத தோற்றம். பெண்களிலே நான்தான் பெரியவள் என்பது போல அவள் உயரம், தெளிவான கண்களை உருத்தாத அழகு முகம் அனைவரையும் ஈர்க்கும், ஆனால் அதற்கு அழகு சேர்ப்பது போல இருக்கும் தீட்சண்யம் நிறைந்த கண்களும் 'என்னை விட்டு விலகியே இரு' என்பதுபோல அனைவரையும், குறிப்பாக ஆண்களை தன்னிடமிருந்து இரண்டு அடி தள்ளியே நிறுத்தக் கூடியதாக இருந்தது.

கனலி பற்றி அறியாதவர்களுக்கு அவள் ஒரு திமிர் பிடித்தவள், தலைக்கனம் நிறைந்தவள், ஆணவம் பிடித்தவள், பிறரை மதிக்க தெரியாதவள். ஆனால் கனலி உண்மையான குணத்தை அறிந்தவர்கள் சிலரே.

கனலியின் தந்தை கருணாகரன் ஒரு விவசாயி. அவர் தனக்கு இருக்கும் நிலத்தில் சாகுபடி செய்வது, வயல் வரப்பு மாடு கன்று என்று நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருந்தவர். அவரது மனைவி திலகவதி.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும், வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற கனவு திலகவதி என்றுமே உண்டு. அதேசமயம் சாதி இன பாகுபாடு அதிகம் பார்ப்பவர்.

தனக்கு ஒரு விவசாயி உடன் திருமணம் நடக்கும் என அவர் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. அதுவும் விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தம்பி குடும்பத்திற்கும் சேர்த்து செலவு செய்வது என்பது திலகவதிக்கு கணவரிடம் பிடிக்காத ஒன்று

தன் மனைவிக்கு பிடிக்கவில்லை என்றாலும் கருணாகரன் தன் பிள்ளைகளான கார்த்திக், கமலி, கனலி என மூவருக்கும் செய்வது போலவே, தன் தம்பி தினகரன் பிள்ளைகளான யாழினி, இனியன் இருவருக்குமே செய்துவந்தார்.

அவர்களின் குடும்ப மகிழ்ச்சி அந்த விபத்து நடக்கும் வரையிலேயே. திருப்பதி சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில் ஏற்பட்ட அந்த கோர விபத்தில் கருணாகரன், தினகரனை பழி வாங்கியது. மற்றவர்கள் காயத்துடன் தப்பித்தாலும் குடும்பத்தின் மகிழ்ச்சி அத்தோடு அழிந்து போனது.

புதிய வேலை கிடைத்த மகிழ்ச்சியுடன் வீடு வந்த கனலி வரவேற்றது பறந்து வந்து அவள் காலடியில் விழுந்த புத்தகமே. குனிந்து புத்தகத்தை கையில் எடுத்த கனலி வீட்டினுள் செல்ல,


"சொன்ன பேச்ச ஒழுங்கா கேளுங்க, இல்ல அம்மா வந்ததும் நீ பண்ற சேட்டையை எல்லாம் சொல்லிடுவேன்." என நான்கு வயது தங்கை ரூபாலியை ஒன்பது வயது அண்ணன் இந்திரஜித் மிரட்டிக் கொண்டு இருக்க அந்த சின்ன சீட்டு ரூபா

"நீ என்ன சொன்னாலும் நான் உன் பேச்சை கேட்க மாட்டேன் போ." இனி என்ன கூறினாலும் தன் பேச்சைக் கேட்கப் போவது இல்லை என்பதை உணர்ந்த இந்திரஜித், ரூபாலியின் இரட்டையான தீபாலியிடம் திரும்பி

"தீபா நீயாவது நான் சொல்றதை கேளு."

"கேட்க மாட்டேன், கேட்க மாட்டேன், கேட்க மாட்டேன், நீ என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்."

"ரெண்டு பேரும் நான் சொல்றதை கேட்டா மட்டும் தான் சுட்டி டிவி வைப்பேன்."

"நீ முதல்ல சுட்டி டிவி வையி, அப்பதான் உன் பேச்சைக் கேட்பேன்."

"இவ்வளவு நேரம் அந்த டிவியில் தானே டிராகன் பூஸ்டர் பாத்துக்கிட்டு இருந்த, கொஞ்ச நேரம் ஹோம் வொர்க் எழுது. அப்புறமா நான் சுட்டி டிவி வைக்கிறேன்." அண்ணன் பேச்சில் புகுந்த ரூபா

"ஹோம் வொர்க் எழுதி முடிக்கும் முன்னே வருத்தப்படாத கரடி சங்கம் முடிந்துவிடும்."

"நீங்க ரெண்டு பேரும் இப்போ ஹோம்வொர்க் எழுதாம இருந்தா, அம்மா வந்து திட்டும்போது எல்லாரும் சேர்ந்து தான் வருத்தப்பட வேண்டியது இருக்கும்."

"ப்ளீஸ் அண்ணா கொஞ்ச நேரம் ஒன்லி 30 மினிட்ஸ் வருத்தப்படாத கரடி சங்கம் முடிஞ்சதுக்கு அப்புறமா உட்கார்ந்து நாங்க எல்லாம் ஹோம் வொர்க் எல்லாம் எழுதிடுவோம்." என இரட்டையர்கள் இருவரும் பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு கெஞ்ச, எப்பாேதும் பாேல மனமிரங்கிய இந்திரஜித்

"சரி இன்னைக்கு மட்டும் தான் நாளைக்கும் இதே மாதிரி அடம் பிடிக்கக்கூடாது."

"சரி சரி." என தலையை உருட்டி ஆட்டிவிட்டு சமத்துப் பிள்ளைகளாக சோபாவில் சென்று இருவரும் அமர்ந்துகொண்டு,

"அண்ணா நேரம் ஆயிடுச்சு சீக்கிரம் வந்து டிவியை ஆன் பண்ணு." என்று கூற, செல்ப் மீது உயரத்தில் இருந்த டிவி ரிமோட்டை எடுத்து சுட்டி டிவி வைத்துவிட்டு, தங்கை தூக்கி எறிந்த புத்தகத்தை எடுக்க வாசலை நோக்கி திரும்பிய இந்திரஜித், புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு நிற்கும் கனலி பார்த்து மனதுக்குள்

'ஐயாே அம்மா, இதுக ரெண்டும் சாென்ன கேக்காம அடம்பிடிக்க வேண்டியது, இப்பாே நானும் சேர்ந்து மாட்டிக்கிட்டேன்.'

பரிதாபமாக முழித்த மகனை கண்டுகொள்ளாமல் வீட்டிற்குள் வந்த கனலி நேராக சென்று டிவியை அணைத்துவிட்டு இரட்டையர்களை பார்க்க, கனலி வரவை எதிர்பார்க்காத இரட்டையர்கள்,

'அச்சச்சாே அம்மா' என்றபடி வேகமாக சென்று அண்ணனின் இருபுறமும் நின்று கொள்ள இந்திரஜித்,

"அம்மா பாப்பா ரெண்டு பேரும் இவ்வளவு நேரம் படிச்சிகிட்டு தான் இருந்தாங்க, இப்பதான் டிவி பார்க்க ஆரம்பிச்சாங்க." தங்கைகளுக்கு ஆதரவாக பேசும் இந்திரஜித்தை ஒரு முறை கூர்ந்து நோக்கிய கனலி

"இந்திரா எப்போ இருந்து என்கிட்ட பொய் சொல்ல ஆரம்பிச்சே."

"அம்மா நான்..." பேச ஆரம்பித்த இந்திரஜித்தை கை உயர்த்தி தடுத்த கனலி

"தப்பை மறைக்க நினைக்கின்றதும் தப்புதான். நீ இவங்க பண்ற தப்ப மறைக்கிறது மட்டுமில்லாமல் என்கிட்ட பொய் வேற சொல்ல ஆரம்பிச்சுட்ட."

"நான் வேணும்னு உங்ககிட்ட பொய் சொல்லலமா, நீங்க பாப்பா ரெண்டு பேரையும் திட்ட கூடாதுன்னுதான் நான் உண்மைய சொல்லல சாரிமா." அண்ணனின் கவலை நிறைந்த குரலை கேட்ட இரட்டையர்கள் இருவரும் முன்வந்து

"அண்ணா படிக்க தான் சொன்னாங்க, நாங்க தான் டிவி பாக்கணும்னு சொன்னோம் சாரிமா." என இரு கைகளையும் காதைப் பிடித்துக்கொண்டு மன்னிப்பு கேட்க, பிள்ளைகளிடம் வந்த கனலி

"நானும் உங்ககிட்ட கோபமா பேசி இருக்கக் கூடாது சாரி. அதே மாதிரி இனி நீங்க படிச்சு முடிச்சிட்டு தான் டிவி பார்க்கனும் ஓகே வா."

"ஓகே ஓகே மா." என்று பிள்ளைகள் வாக்குறுதி அளிக்க, மூவரையும் அழைத்துக் கொண்டு பூஜை அறைக்கு சென்று, கை கூப்பி,

"அப்பா நீங்க தான் என்னையும், என் பிள்ளைகளையும் பாத்துக்கனும்." என வேண்டிவிட்டு, பிள்ளைகளை டைனிங் டேபிளில் அமரவைத்து கொண்டுவந்திருந்த இனிப்புகளை தர,

"அம்மா இன்னிக்கு உனக்கு ஹாப்பி பர்த்டே இல்ல தானே, அப்புறம் எதுக்கு தாத்தாவை கூம்பிட்டு எங்க எல்லாருக்கும் ஸ்வீட் எல்லாம் தரீங்க."

"அம்மாவுக்கு இன்னைக்கு ஒரு பெரிய கம்பெனில வேலை கிடைச்சிருக்கு. முன் வேலை பார்த்த கம்பெனில குறைய தான் சம்பளம், ஆனா இனி நான் வேலை பார்க்க பாேற கம்பெனில சம்பளமும் நிறைய கிடைக்கும்."

"ஐ ஜாலி அப்படின்னா நான் என் பிறந்த நாளுக்கு கேட்ட பார்பி டால் எனக்கு வாங்கி தருவீங்களா."

"சம்பளம் வந்ததும் ரூபா குட்டிக்கு நான் கன்டிப்பா வாங்கி தரேன்."

"தீபா அன்னைக்கு பிரியா வைச்சுருக்க மாதிரி கிச்சன் செட் கேட்டா தான அத வாங்கி தருவீங்களா."

"நீ சாெல்லிட்ட தான என் தீபா செல்லதுக்கும் வாங்கித்தரேன்."

"அண்ணனுக்கு ஸ்கேட்டிங் போர்ட் வாங்கி தருவீங்களா, அப்புறம் ஸ்கேட்டிங் க்ளாஸ்ல சேக்கலாமா."

"ஓகே டன் குட்டி மா."

அனைத்யைும் கேட்டபடி வந்த திலகவதி

"புது வே லை யா கனலி...!
இனி நீ குறைஞ்ச சம்பளத்தில் கஷ்டபட வேண்டாம். உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்து விட்ட அது பாேதும் எனக்கு."

"இந்திரா இரண்டு பேரையும் உள்ள கூட்டிக்கிட்டு பாேய் ஹாேம் ஒர்க் செய்ய வை." பிள்ளைகள் சென்றதும் தாயிடம் திரும்பி

"எது மா எனக்கு நல்ல வாழ்க்கை."

"எவ்வளவு நாள் தான் இந்த குழந்தைங்க மட்டும் உன் வாழ்க்கைனு இருக்க பாேற. உனக்குன்னு உன் வாழ்க்கைக்கு ஒரு துணை வேண்டாமா? இந்திரா அப்பாவ இன்னைக்கு காேவில்ல பாத்தேன்மா, நீ என்ன முடிவு பண்ணிருக்க."

"நான் இன்னைக்கு என்னாேட வாழ்க்கையில துணை இல்லாம நிக்க காரணம் யாரு மா? நீங்களும் தான." மகளின் குற்றச் சாட்டில் கண் கலங்கிய திலகம்

"அம்மாடி கனலி என்ன வார்த்தை சாெல்லிட்ட." தாயின் கண்ணீர் மனதை தாெட்டலும், இதுவரை அனுபவித்த வேதனை வார்த்தைகளாக வெளி வந்தது.

"என்னமா உண்மைய சாென்ன வலிக்குதா, எனக்கு கூட அன்னைக்கு வலிச்சுது மா, எல்லா பாெண்ணுங்க மாதிரியும் எனக்கும் கனவு இருந்துச்சுமா, இப்பாே அது மாெத்தமா இல்லாமா பாேனதுக்கும், இன்னைக்கு என் வாழ்க்கை இப்படி இருக்குறதுக்கும் காரணம் நீங்க தான். இனி என் வாழ்க்கை மாறாம இருக்கவும் காரணம் நீங்க தான்."

"நான் பண்ண தப்பு உன் வாழ்க்கையை இப்படி ஆக்கும்னு நான் நினைக்கல கனலி. தெரிஞ்சிருந்த நான் அன்னைக்கு அப்படி பேசிருக்க மாட்டேன்." தாயின் கண்ணீர் கண்ணில் பட்டாலும் கனலி கருத்தில்லை படவில்லை

"நான் கூட நினைக்கல மா என் வாழ்க்கை இப்படி ஆகும்னு. இது உனக்கு மட்டும் இல்ல, உன்னால நான் பண்ண தப்புக்கு எனக்கான தண்டனையும் கூட." தாயிடம் பேச்சை நிறுத்தி தன் அறைக்கு வந்த கனலி மனது மட்டும் பேசிக்காெண்டு இருந்தது.

வருடங்கள் உருண்டு ஓடின பின்னும் அன்று தான் செய்த தவறு மட்டும் இன்று கனலியின் முன் பூதாகரமாக நின்றது. தாயின் குணமறிந்த நான் எவ்வாறு அப்படி ஒரு தவறு இளைத்தேன்.

கொஞ்சம் நிதானமாக செயல்பட்டிருக்க வேண்டும். தான் இவ்வாறு நினைப்பது காலம் கடந்து செயல் என்பதை புரிந்துகொண்ட கனலி, தன் கையை விட்டு சென்ற உறவின் அருமையை நினைத்து நெடுநேரம் அழுத கனலி கண்ணாடி முன் வந்து நிற்க, ஒரு கரம் கனலி கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்து,

'My sweet heart நீ எதுக்காக இப்பாே அழுதுகிட்டே இருக்க, ஐயம் ஆல்வேஸ் வித் யூ.' என கூற

"நீ எப்பவும் இப்படி தான் சொல்ற. ஆனா நான் உன்னை தொட்ட நீ என்னை விட்டு மறைந்து போயிடுவ."

'என்னோட உருவம் மறைந்து போகலாம். ஆனால் என்னுடைய நினைவு உன் மனச விட்டு என்னைக்கு மறைந்து போகாது.'

"அது என்னவோ உண்மைதான். நான் தினமும் கண் விழிக்கும்போது உன்னோட ஞாபகம் மட்டும்தான் எனக்கு இருக்கும். அதே மாதிரி கண்ணை மூடினாலும் என் ஞாபகம் உன்னோடுதான் எனக்கு தெரியும்."

"Because you love me that much.," காதல் என்ற வார்த்தையை கேட்டதும்

"இல்ல நான் உன்னை காதலிக்கவில்லை ஒருவேளை நான் உன்னை உண்மையாக காதலித்து இருந்தால் அன்னைக்கு அப்படி நடந்திருக்க மாட்டேன். நீயும் என்னை விட்டு போயிருக்க மாட்ட.

"நான் உன்ன விட்டுட்டு போனாலும் என்னோட நினைவ உன்கிட்ட விட்டுட்டு தான் போய் இருக்கேன்."

நிழல் உருவத்தின் கனிவான பேச்சில் மேலும் கலங்கிய கனலி ஆதரவாய் தோளில் சாய அந்தோ பரிதாபம் கண்ணெதிரில் இவ்வளவு நேரம் ஆறுதல் கூறிய உருவம் மாயமாய் மறைந்தது. நிதர்சனத்தை உணர்ந்த கனலி முகத்தை கழுவிவிட்டு பிள்ளைகளை பார்க்க வெளியில் சென்றாள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 
Last edited:
உங்களுடைய "கண் விழித்தேன்
உன் நினைவில்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
செசிலி வியாகப்பன் டியர்
 
Last edited:
வாவ் சூப்பர்
பின்னாடி JMD யா ஆகப் போற கம்பெனிக்கு இப்போ அசிஸ்டன்ட் மேனேஜரா கனலி ஜாயின் பண்ணப் போறாளா?
 
Last edited:
உங்களுடைய "கண் விழித்தேன்
உன் நினைவில்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
செசிலி வியாகப்பன் டியர்
Thank you dr
 
Top