Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 14

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 14


ஆண்களை வல்லினம் என்றும், பெண்களை மெல்லினம் என்றும் கூறுவது அவர்களின் உடல் வலிமையை பொருத்து அல்ல.

ஆண்கள் எப்பொழுதும் மிகப்பெரிய விஷயத்தில் சரியாக முடிவு எடுப்பதுடன் விரைவில் சாதித்தும் காட்டுவார்கள். ஆனால் பெண்களாே எப்பொழுதும் நுட்பமான உணர்வுகளும் முன்னுரிமை தருபவர்கள்.

நுண்ணர்வுகளுக்கு அவர்கள் தரும் முக்கியத்துவமே பல நேரங்களில் குடும்பம் என்னும் உறவின் அமைப்பு உடைந்து விடாமல் இன்றளவும் காத்து வருகிறது.

சில சமயங்களில் உணர்வுகளுக்கு மெல்லினம் தரும் முக்கியத்துவத்தால் எழும் பிரச்சனைகளை வல்லினம் இலகுவாக கடந்து விடுகிறது.

மெல்லினம் வல்லினம் இரண்டும் இடையினமாகும் பொழுது பிரச்சனைக்கு ஏது இடம்.

எந்த பிரச்சனையின் காரணமாக கனலி விஷ்வாவின் வாழ்வில் இனி தனக்கு இடம் இல்லை என்று விலக நினைத்தாளோ, அதை ஒன்றும் இல்லாததாக நினைத்து

'இதற்காகவா நீ என்னை விட்டு பிரிந்தாய்?' என்ற கேள்வியுடன் தன்முன் நின்ற காதலனை நினைத்து அவள் உள்ளம் பெருமிதம் கொண்டது.

♪♦♪♦♪♦♪♦♪♦♪♦♪♦♪♦♪♦♪

அன்று..........

''பாட்டி சோபால வச்சிருந்த என் லேப்டாப் எங்க?" என்று விஷ்வா கேட்டுக்கொண்டு (இல்லை இல்லை கிட்டத்தட்ட கத்திக்கொண்டு இருக்க)அதற்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.

"என்னடா இது வீடு மாறி எதுவும் வந்துட்டாேமா! வீடு இவ்வளவு அமைதியா இருக்கு.
கனலி பாட்டி ரெண்டு பேரும் இருக்கிற இடம் இவ்வளவு அமைதியா இருக்க வாய்ப்பு இல்லையே." என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

விஷ்வா அவ்வாறு மனதுக்குள் நினைத்துக் கொண்டதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

ஏனெனில் கனலி இங்கு வந்து தங்கிய அடுத்த நாளிலிருந்து வீடு ஒரு குட்டி போர்க்களமாக மாற ஆரம்பித்தது.

இதில் கொடுமை என்னவென்றால் பாட்டி, பேத்தியும் இருவரும் ஒரு அணியில் இருக்க, விஷ்வா மட்டும் தனித்து நின்று போர்புரியும் சூழ்நிலைகளே அதிகம் ஏற்பட்டது.

ஆனால் விஸ்வா எப்பொழுதும் தன் மனதிற்கு இனிய பெண்களிடம் வாய் வார்த்தையாக கூட சண்டையிட விரும்புவது இல்லை.

பெரும்பாலும் வீட்டில் நடைபெறும் பாேரில் விஷ்வா கையாளும் வழிமுறைகள் இரண்டே.

ஒன்று சமாதானம்.
மற்றொன்று சரணாகதி.
விஷ்வா அமைதியாக செல்ல நினைத்தாலும், இரு பெண்களும் அவனை அவ்வாறு இருக்க விடுவது இல்லை வழிய சென்று வம்புக்கு இழுத்து அன்றைய நாளை தங்களுக்கு சுவாரசியமாக மாற்றிக்கொள்வார்கள்.

இன்று இவர்கள் என்ன பிரச்சனையை ஆரம்பிக்க போகிறார்களோ என்ற அச்சத்துடனே மணி கணினியையும் இரு பெண்களையும் தேட ஆரம்பித்தான்.

பாட்டியின் அறைக்குள் சத்தம் கேட்க அங்கு சென்று கதவை திறந்து பார்த்தவனுக்கு ரத்தக் கொதிப்பு வருவது போலிருந்தது.

தலையணை மீது தனது மூன்றரை இலட்சம் ரூபாய் லேப்டாப் இருக்க, அதில் பாட்டி பேத்தி இருவரும் ஏதோ கொரியன் படம் பார்த்துக்கொண்டிருந்தனர்.

தான் வந்ததே கூட உணராமல் தங்களுக்குள் பேசிக் கொண்டு, அருகிலிருந்த நொறுக்குத் தீனியை திண்ற காெண்டு இருக்க,

'உனக்கு ஏன்டா இவங்க மேல திட்ட முடியாத அளவுக்கு இவ்வளவு பாசம்.' தன்னையே நொந்து கொண்டு அவர்களை நெருங்க, அவர்கள் பேச ஆரம்பித்த விஷயத்தைக் கேட்டதும் அசையாமல் அப்படியே நின்றுவிட்டான்.

"கனலி இந்த சீரியல்ல வர ஹீராே மாதிரி உனக்கு எப்போது எப்பவாவது என் பேரன் முத்தம் கொடுத்து இருக்கானா." என்று பாட்டி கேட்டு வைக்க,

அதற்கு கனலி என்ன பதில் கூறப் போகிறாலாே என்ற பயத்தில் இதயம் வேகமாக துடிக்க, அதை கையை வைத்து அமைதிப் படுத்திக் கொண்டு, கனலில் பதிலுக்காக காத்து இருக்க, அவளோ அசால்டாக

"ஒரு தடவை தான் பாட்டி, அதுவும் நான் அசந்த நேரமா பார்த்து கொடுத்துட்டான்."

"அதான பார்த்தேன் என் பேரன் உன்னை காதலிக்கிறேன்னு சொல்லும்பொழுது எங்கே அவன் வயசுக்கு வந்துட்டான்னு நெனச்ச, இன்னும் பச்ச மண்ணா இருக்கான் தருதலை.

இவனையெல்லாம் அவன் போக்குல விட்ட இன்னும் 50 வருஷம் ஆனாலும் பிரம்மச்சாரியா தான் இருப்பான்." என்று சிரிப்புடன் கூறு அதைக் கேட்ட கனலில்

"அது என்னமோ உண்மைதான், நான் ஒரு பார்வை பார்த்தாலே உங்க பேரன் பத்து அடி தள்ளிப்போய் நினைக்கிறார்."

"என்னமோ போ....
இவன் தாத்தா எல்லாம் அந்த காலத்திலேயே காதல் மன்னன் ஜெமினி கணேசன் மாதிரி ரெண்டு நாள்ல என்னை காதலிக்க வைத்து, அடுத்த வாரத்திலேயே கல்யாணமும் பண்ணிக்கிட்டாரு.
பத்து மாசம் முடியறதுக்கு முன்னாடி நாளெல்லாம் கையில இவங்க அப்பனே வச்சிருந்தேன்."

"அதுக்கு என்ன பாட்டி பண்ண முடியும், உங்க பேரவைக்கு அவ்வளவு விவரம் பத்தலையே. இன்னும் அவன் பச்ச பிள்ளையாவே இருக்கிறானே." என்று கனலி கூறிக்கொண்டு இருக்கும்பொழுது இடையில் புகுந்த பாட்டி,

"அவன் பேச்சை விடு இந்த கதையில ஹீராே பையன் எதற்காக இந்த பொண்ணு இவ்வளவு அலைய விடுறான்.

அந்த புள்ள அவனுக்காக தானே இவ்வளவு தூரம் வந்து இருக்கு." என்று

லேப்டாப்பில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த 'பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ்' என்ற கொரியன் சீரியல் பற்றிய சந்தேகத்தை கேட்டுக்கொண்டு இருக்க, அதற்கு தகுந்த பதிலையும் கனலி கூறிக் கொண்டு இருந்தாள்.

அன்று மதியம் உணவு அருந்திய பின்பு மதிய உறக்கத்திற்காக பாட்டி தன் அறைக்குள் சென்று விட, கனலி கையை பிடித்து இழுத்து தன் அறைக்குள் வந்த விஷ்வா கதவை தாளிட்டு அதன் மீது சாய்ந்து கொண்டு நின்று காெண்டான்.

"விஜி என்ன ஆச்சு எதுக்காக என்ன இப்படி இழுத்துகிட்டு வந்த?"

அவளின் கேள்விக்கு பதில் கூறாமல் ஒவ்வொரு அடியாக முன்னேறி அவளை நெருங்க, அது வரை அனைத்தையும் விளையாட்டாக அவனை பார்த்துக்கொண்டு இருந்த கனலி, விஷ்வா கண்ணில் தெரியும் புதிய உணர்வில் ஒவ்வொரு அடியாக பின்னேற ஆரம்பித்தாள்.

"விஷ்வா இப்ப எதுக்காக என் கிட்ட வர தள்ளிப்போ." என்று இறங்கிய குரலில் கேட்க, அவனும் ஒரு மர்மப் புன்னகையுடன் அவள் இடையை பற்றி தன்னுடன் இறுக்கிக் கொண்டு, அவள் தோள்களை தன் முகத்தை பதித்தான்.

ஒரு வினாடி விரைத்து நிமிர்ந்த அவள் உடல் அடுத்த நிமிடம் அவன் கைகள் தன் மீது செய்யும் ஜாலத்தில் இலகிவிட்டது.

உடல் இலகினாலும் கைகள் அவனிடமிருந்து விடுபட போராட, அந்த மெல்லின போராட்டத்தை வல்லினம் தடுத்துவிட, அவன் காதுகளில் குனிந்து,

"இன்னைக்கு நான் உன்கிட்ட பிரம்மச்சாரி இல்ல சம்சாரி தான் என் நிரூபிக்காம விட்டுட நான் விஸ்வஜித் இல்ல."

"விஜி ப்ளீஸ் ப்ளீஸ்.." என்று அவளுக்கே கேட்காத குரலில் கூற, அவனோ

"ப்ளீஸ் மீ பேபி.." என்று கூறிக்கொண்டு அவளை தன்னோடு காற்று கூட புகமுடியாத அளவுக்கு இறுக்கி அணைத்துக் கொண்டான்.

அணைத்து கொண்டவனின் அணைப்பிற்குள் கனலி அடங்கிப்போனாள். தன்னுள் அடங்கிப் போனவளின் எதிர்ப்பில்லா சம்மதம் அவனுள் இத்தனை நாள் கட்டுப்படுத்து இருந்த வேட்கையை மிகுதியாக்க, அவள் இதழ்களை வேட்டையாட ஆரம்பித்தான்.

தன்னை மறந்து நின்றவர்களில் முதலில் சுய உணர்வு பெற்ற விஷ்வா அவளை விட்டுப் பிரிந்து அமர்ந்தான்.

தன்னுள் எழுந்த தாபத்தை அடக்கிக்கொள்ள நினைக்க அவனருகில் வந்த கனலி, விஷ்வா முகத்தை நிமிர்த்தி அவன் விழிகளோடு தன் விழிகளை கலக்க விட்டு

"உன்னால முடியாது விஜி." என்று கூற

"என்ன என்னால முடியாது." புரிந்தாலும் புரியாதது பாேல கேட்க

"என்ன காயப்படுத்த உன்னால முடியாது."

"நான் உன்னை காயப்படுத்த நினைக்கலயே." எங்கே தன் தாெடுகையை உள்ளுக்குள் வெறுக்கின்றாலாே என்று பதறியபடி அவன் பதில் வந்து சேர அதில் சிரித்தவள்,

அவன் அருகில் அமர்ந்து கொண்டு அவன் கைகளுக்குள் தன் கைகளை கோர்த்து அவன் தோள்களில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

"நீ சொன்ன அதையேதான் நானும் சொல்றேன், உன்னால எப்பவும் என்ன காயப்படுத்துறத கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது.

நாம ரெண்டு பேரும் காதலிக்க ஆரம்பிச்சு நாலு வருஷம் முடியப் போகுது. இத்தனை வருஷத்துல எனக்கு கஷ்டம் தர்ற மாதிரி நீ எதுவுமே பண்ணது இல்ல.


இனியும் பண்ணமாட்டேன், எனக்கு புடிக்கலைன்னு தெரிஞ்சுட்டா உன்னால அந்த விஷயத்தை செய்யவே முடியாது.

அப்படி இருக்கும் பொழுது நீ எப்படி என்கிட்ட ஓவர் அட்வான்டேஜ் எடுத்து நடக்க முடியும்.

என்ன பத்தியும் என்னுடைய குணத்தை பத்தி உனக்கு நல்லா தெரியும்.

நீ என்கிட்ட லிமிட் க்ராஸ் பண்ணி நடந்துக்கிட்டா என்னால உன்ன தடுக்க முடியாது. அதேசமயம் முழு மனசோட அதை ஏத்துக்க முடியாது. அது உனக்கு நல்லா தெரியும். சோ நீ என் கிட்ட அப்படி நடந்துக்க மாட்ட.

இங்க நான் வந்து தங்க ஆரம்பிச்ச இந்த 16 நாளில் ஒருநாள்கூட என்னுடைய ரூம் கதவை லாக் பண்ணது கிடையாது.

அதுக்கு எல்லாம் காரணம் நான் உன் மேல வச்சிருக்கிற காதல் இல்லை, அதுக்கு முன்னாடியே எனக்கு உன் மேல வந்த நம்பிக்கை."

கனலி தனக்கு அவன் மீது இருக்கும் காதலை விட நம்பிக்கையே அதிகம் என்று பேசிக் கொண்டே செல்ல அவளை தடுத்து நிறுத்திய விஷ்வா

"அவ்வளவு நம்பிக்கை இருந்தா இங்க வந்த முதல் நாள் எதுக்கு என்கிட்ட கோபமா பேசின, கோபமா பேசினது மட்டுமில்லாமல் என்ன அடிக்க வேற செஞ்ச." என்று தாயிடம் குறைகூறும் சிறுவனாக புகார் வாசிக்க

"நீ என்கிட்ட விளையாட்டுக்குத்தான் பேசுறேன்னு எனக்கு நல்லா தெரியும். இருந்தாலும் எனக்கு உன்னை ஒரு தடவை அடிச்ச நீ எப்படி ரியாக்ட் பண்ணுவன்னு பார்க்க ஒரு ஆசை இருந்துச்சு.

காரணமில்லாமல் எப்படி அடிக்க முடியும், இந்த நாலு வருஷத்துல அதற்கான வாய்ப்பு நீ தரவே இல்லை. அதான் வாய்ப்பு கிடைச்சதும் அதை சரியாக பயன்படுத்தி அடிச்சுட்டேன்."

"அடிப்பாவி உன்னைப்போய் நல்லவன்னு நினைச்சிடேனே." என்று அவள் காதை பிடித்து திருக,

"நானா உன்னை நினைக்க சொன்னேன்." என்று அவன் கண்ணத்தில் முத்தமிட்டு இமைக்கும் நாெடியில் சிட்டாய் பறந்து தன் அறைக்குள் சென்று மறைந்தாள்.

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

அடுத்த நாள் காலை வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்தில் இருந்த மலர்களை பூஜைக்காக எட்டி பறித்துக்கொண்டு இருந்த கனலி பின்புறம் இருந்து அணைத்த விஷ்வா

"ஏய் குட்டச்சி அதுதான் உனக்கு எட்ட மாட்டிகுதே, அப்புறம் எதுக்காக இப்படி குதிச்சுகிட்டு நிக்கிற."

காதலன் அணைப்பில் அடங்கி நின்றவள் அவன் 'குட்டச்சி' என்ற அழைப்பில் அணையை உடைத்த வெள்ளமென திரும்பி

"டேய் ஈபில் டவர் யாருடா குட்டச்சின்னு சொன்ன, என்னுடைய கிளாஸ் பொண்ணுங்க எல்லாரைவிடை நான் தான் உயரம்.

நீ என்ன விட ஒரு அடி உயரமாய் இருந்தா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்."

தன்னை விட்டு விலகிய காதலியை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு

"நான் என்னைக்கும் உன் கூட இருந்த மத்த பொண்ணுங்க பார்த்தது கிடையாது. என்னைவிட என் கனல் பேபி கட்டை தானே." என்று சரசமாக பேச

'உன்னுடன் இருந்த மற்ற பெண்களை நான் பார்த்ததே இல்லை' என்ற அவனது பேச்சில் கோபம் மறைந்த கனலி அவனுடன் இழைந்த படி

"உன்ன விட கட்டையா இருக்கிறது உனக்குத்தான் நல்லது." என அவன் புறம் திரும்பி தன் கைகள் இரண்டையும் விஷ்வா கழுத்தில் மாலைகள் ஆக்கிக்கொண்டு கூற,

"நீ கட்டையால் இருக்கிறதுல எனக்கு என்ன நல்லது." என புருவம் உயர்த்தி கேட்க,

"நீ என்ன கழுத்து வலிக்க நிமிர்ந்து பார்த்து பேச வேண்டாம்."

"ஆமா ரொம்ப பெரிய நல்லது." நக்கலாக கூற, அதை கண்டுகொள்ளாத கனலி

"நெக்ஸ்ட் எனக்கு ஏதாவது உயரத்துல இருக்கிற பொருள எடுக்க உதவி பண்ற மாதிரி என்கிட்ட வந்து இப்போ நீ என்ன கட்டி பிடிச்ச மாதிரி கட்டி பிடிக்க முடியும்." என்று கூற

அதில் மனதுக்குள் சிரித்துக் கொண்ட விஷ்வா "இது மட்டும் தானா வேற ஏதாவது இருக்கா."

"இன்னும் நிறைய இருக்கு.
உன் கைய புடிச்சு தான் நடக்கும் பொழுது எனக்கு உன்மேல் சாஞ்சுக்கனும் பாேல தோணும், அப்படி நான் சாயும் பொழுது என்னுடைய காது உன்னுடைய இதயத்துடிப்பை கேட்டுக்கிட்டே இருக்கும்.

நீ உட்கார்ந்து இருக்கும்பொழுது உன் மடி மேல் உட்கார்ந்து நான் உன்ன பாத்தா நம்ம ரெண்டு பேருடைய முகமும் நேருக்கு நேராக இருக்கும்.
அப்படி நேருக்கு நேராய் இருக்கும்பொழுது என்னால பேச முடியாத பல விஷயங்களை என்னுடைய கண் மூலமா உன்கிட்ட நான் சொல்லுவேன்.

ஒவ்வொரு தடவையும் நீ என்னை கட்டிப்பிடிக்கும் போது, நான் உன்னை அண்ணாந்து பார்க்கும்போது எல்லாம் நான் உனக்குள்ள அடங்கி இருக்கிறதா எனக்கு தோணும்.

ஒரு தாய்ப்பறவை தன் குட்டி குஞ்சுகளை ஆபத்திலிருந்து காப்பாற்ற தனக்குள்ள அடக்கி வச்சிருக்குற மாதிரி, என்ன சுத்தி இருக்கிற போலியான உறவுக்கிட்ட இருந்து நீ என்ன பாதுகாக்கிற மாதிரி எனக்கு ஒரு உணர்வு இருக்கிறது.

சோ நா கட்டையா இருக்கிறது எனக்கு சந்தோஷம்தான்."

கனலி விளையாட்டாக பேச ஆரம்பித்து தன் உள்ள உணர்வுகள் ஒவ்வொன்றாக அவன்முன் இறக்கிவைக்க, இனி உன்னை எந்தத் துன்பத்திலும் தனியே விடமாட்டேன் என்பதுபோல அவனது அனைத்து இறுகிக் கொண்டது.

விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் நாள்களில் நகர இன்னும் மூன்று நாட்களில் இவர்களது பதிவுத் திருமணம் என்ற நிலையில் திருமணத்திற்கான அனைத்து எற்பாடுகளையும் முடித்திருந்தான்.

ஏனாே திருமணம் முடியும் வரை அதை யாருக்கும் கூற விஸ்வா, கனலி இருவரும் விரும்பவில்லை. இவர்கள் இருவரை தவிர திருமணத்தில் கலந்து காெள்ள பாேகின்ற மற்ற இருவர் பாட்டியும் ஆனந்த்தும் மட்டுமே.

கனலி தான் திருமணம் விஸ்வாவுடன் நடந்து முடிந்தும் தன் பெயரில் இருக்கும் சாெத்துகள் அனை த்தை யும் உடமைபட்டவர்களிடம் சேர்பித்துவிட்டு இனி தன் வாழ்வு விஜியுடன், விஜிக்காக மட்டுமே முடிவெடுத்து அதை விஸ்வாவிடம் தெரிவிக்க,

கனல் நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு ஓகே, இருந்தாலும் உனக்கு எதிர்காலத்தில சாெந்தம் வேணும் சாே யாேசிச்சு முடிவு எடு."

"எனக்கு சாெத்து தான் வேணடன்னு நினைக்கிறேனே தவிர சாெந்தகளை இல்ல. ஐ வாண்ட் டூ என்ஜாய் அவர் வெட்டிங் மாெமண்ட், அவங்க கிட்ட சாெல்லிட்டு மேரேஜ் பண்ண எதாவது குழப்பம் வந்துடுமாேன்னு பயமா இருக்கு."

"எதுக்கு பயம் நான் இருக்கும் பாேது, யாருக்காக எதுக்காகவும் நான் உன்ன விட்டுட மாட்டேன்."

"என் விட நினைச்ச அடுத்த நிமிசம் நீ உயிரேட இருக்க மாட்ட."

தன்னை விட மாட்டான் என்ற நம்பிக்கை கனலிக்கு மலையாளவு இருக்க, விஸ்வாவிற்கு அதே நம்பி்க்கை தன் மீது இருக்கும் என்பதை உணர்ந்தும் அவனை விட்டு பிரிந்து செல்வாள் என்று யார் நினைத்தது.


♥♪♦♥♪♦♥♪♦♥♪♦♥♪♦♥♪♦♥♪♦


"பாட்டீஇஇஇ என்ன பண்ணுது பாட்டீ....
என்ன பாருங்க பாட்டீ எனக்கு பயமா இருக்கு....
விஜி சீக்கிரம் பாே, காரை எடு.."

இரவு உணவுக்கு பின் முவரும் சிரித்து பேசிக்காெண்டு இருக்க திடீரென்று நெஞ்சை பிடித்துக்காெண்டு விஸ்வாவின் பாட்டி வலியால் துடிக்க, மற்ற இருவரே அவர் வலி கண்டு பதறினாலும் விரைந்து மருத்துவமணை செல்ல தயார் செய்ய நினைத்தனர்.

காரை எடுக்க கிளம்பிய விஸ்வா கையை பிடித்து தடுத்த பாட்டி

"விஸ்....வா... என... க்கு ப...யம் மா இருக்...கு எங்க உன் கல்....யாண...த்..த பாக...க்காம பாே யிடு....வே னாே...ன்னு." வார்த்தைகள் குழம்பியபடி வெளிவர,

"பாட்டி சீக்கிரம் ஹாஸ்பிடல் பாேயிடலாம் உனக்கு எதுவும் ஆகாது.."

விஸ்வா, கனலி எவ்வளவு சமாதானம் கூறியும் பாட்டி பிடிவாதமாக இருவருக்கும் இப்பாேதே தன் முன் கல்யாணம் நடக்க வேண்டும் என்று நினைக்க,

நேரம் செல்ல செல்ல அது பாட்டியின் உயிருக்கு தான் ஆபத்து என்பதால், பூஜை அறை யிலிருந்த பாட்டியின் பரம்பரை தாலியை கனலி கழுத்தில் கட்டி மனைவியாக்கி இருந்தான்.

சில நிமிடத்திலே இருவரின் திருமணமும் கடவுளையும், பாட்டியையும் மட்டும் சாட்சியாக வைத்து நடந்து முடிந்தது. அதன் பிறகே பாட்டியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.

மருத்துவ பரிசோதனை முடிந்து டாக்டர் முடிவு நல்ல பதிலை தர கூற வேண்டும் என்று இருவரும் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருந்தனர்.

டாக்டர் அழைப்பதாக கூறியதும் இருவரும் இணைந்து அங்கு செல்ல

"டாக்டர் எங்க பாட்டிக்கு ஒன்னும் இல்லையே...
எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல எங்க பாட்டிய காப்பாத்தி கொடுங்க...." என்று மருத்துவர் பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்காமல் விஷ்வா பேச,

அவன் பேசி முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்த மருத்துவர், அவன் பேசி முடித்ததும்

"நத்திங் டு வாெரி மிஸ்டர் விஷ்வா.
உங்க பாட்டிக்கு பெருசா எந்த பிரச்சனையும் இல்லை ஐ திங்க் அவங்க சாப்பிட்ட சாப்பாடு ஒத்துக்காம கேஸ் ட்ரபுள் மாதிரி ஃபாமாயி இருந்திருக்கும்.

அதனாலதான் அவர்களுக்கு ஹாட் பக்கத்துல பெயின் வந்திருக்கும். மத்தபடி அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவங்க ரொம்ப ஆரோக்கியமா இருக்கிறாங்க.

அவங்களை நீங்க நல்லா கவனிச்சு கிட்ட செஞ்சுரி அடிக்கிறதுக்கு ஜன்சஸ் நிறைய இருக்கு."

மருத்துவர் கூறியதைக் கேட்டு கனலி மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்க, விஷ்வா தான் மறுத்து கூறியும் பாட்டி சாப்பிட்ட உருளை கிழங்கு வறுவலை நினைத்து ஆத்திரத்தின் உச்சியில் இருந்தான்.

கோபமாக பாட்டி இருந்த அறைக்கு வர அவரோ கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருந்தார். பாட்டி உள்ளே கோபமாக வந்த பேரனை கவனிக்காமல், கனலியை பார்த்து

"கனலி எப்ப வீட்டுக்கு போகலாம் கேளுமா, எனக்கு இந்த ஹாஸ்பிடல் கொஞ்சம்கூட ஒத்துக்கல. வீட்டுக்கு போயி இன்னொரு தடவை சாப்பிட்டு நல்லா தூங்கனும்." என்று

எதுவும் நடக்காதது போல் பேசிக்கொண்டே இருக்க விஷ்வாவிற்கு தான் நெஞ்சு அடைப்பது போல் வந்தது.

"ஏய் கிழவி பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்போ ஒன்னும் தெரியாத மாதிரி வீட்டுக்கு போய் சாப்பிட்டு தூங்க போறியா.

வயசான காலத்துல கொஞ்சமாவது நாக்கையும் வாயையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கணும். இரண்டையும் செய்யாமல் இங்கு வந்து படுத்துகிட்டு கொஞ்ச நேரத்துல என்னமா எங்கள பதறவைச்ச."என்று சரமாரியாக தன் பாட்டியை திட்ட தொடங்கினான்.

"வயசான காலத்துல ஆசைப்பட்டது சாப்பிடுறது உனக்கு அவ்வளவு பெரிய குத்தமா தெரியுதா.

இவ்வளவு நாள் தனியா கிடந்த கட்டைக்கு துணைக்கு ஆள் கிடைச்ச சந்தாேஷத்தில பேசினா உனக்கு அது உலக மகா பாவம் பண்ணதுக்கு சமமா.

போடா போ அப்படியே எங்கேயாவது என்ன தள்ளி விட்டுட்டு போ. நான் தனியா சாப்பிடாம பேசாமல் நாதி அத்து செத்துக் கிடந்த கூட கவலைப்படாமல் நீ நல்லா உன் இஷ்டத்துக்கு வாழு." என்று பதிலுக்கு பாட்டியும் பேச,

இருவரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வருவதற்குள் கனலி போதும் போதும் என்று ஆகிவிட்டது. பாட்டியை அறையில் விட்டுவிட்டு தன் அறைக்கு சென்ற கனலி வழியை மறைத்த விஸ்வா

"கனலி இப்படி என்ன கண்டுக்காம போறியே இது கொஞ்சமாவது நல்லா இருக்கா."

அதன் என்ன பேசப் போகின்றான் என்பதை காதல்+காமம் நிறை த்த அவன் கண்களே காட்டிக்காெடுத்தாலும், அவனை சுத்தலில் விட வேண்டும் என்ற நோக்குடன்

"அங்கயும் இங்கயுமா அலைச்சலில் எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு விஜி. எதுவா இருந்தாலும் காலையில பேசலாமே." என்று பரிதாபமாக முகத்தில் பாவனை காட்டி பேச அதை உண்மை என்று நம்பிய விஸ்வா

"சாரி கனல் நீ டயர்டா இருக்கிறத கூட புரிஞ்சுக்காம நிக்க வச்சு பேசிக்கிட்டு இருக்கேன் பாரு நான் ஒரு முட்டாள், நீ போய் தூங்கு." என்று கனலில் பதிலை எதிர் பார்க்காமல் தன் அறைக்குள் சென்று மறைந்தான்.

செல்லும் விஷ்வாவின் முதுகை பார்த்து விட்டு தன் அறைக்குள் வந்த கனலி

"டேய் நீ அவ்வளவு நல்லவனா, நான் என்ன சொன்னாலும் அப்படியே நம்புற. நான் அன்னைக்கு சொன்ன மாதிரி சில விஷயத்தை நீ இன்னும் பச்சபுள்ள தான்.

எப்படித்தான் உன்னை சமாளிச்சு நான் குடும்பம் நடத்தி பிள்ளை பெத்துக்க போறேனோ." என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு இருந்த கனலி

தன் கழுத்தில் புதிதாக உறவாடும் அந்த தாலிச் சங்கிலியை கையிலெடுத்து பார்க்க உடலில் ஏதோ மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது.

திருமணத்திற்காக சென்னையிலிருந்து ஆனந்த் காலை விமானத்தில் வந்து இறங்கினான்.

அவளை அழைத்துக் கொண்டு நேராக ரிஜிஸ்டர் ஆஃபீஸ் வந்துவிடுவதாகவும், கனலி பாட்டி இருவரும் அங்கு வந்து விடுமாறு கூறி விட்டு தன் நண்பனை அழைக்க சென்றான்.

நண்பர்கள் இருவரும் படிப்பு முடிந்ததும் தங்களுடைய தொழில்களில் அமிழ்ந்துவிட பல மாதங்களுக்குப் பின்பு இப்போதுதான் மீண்டும் சந்திக்கின்றனர்.

பேச்சும் சிரிப்புமாக இருவரும் ரிஜிஸ்டர் ஆபீஸ் வந்தடைய அங்கு கனலி பாட்டி இருவரும் இன்னும் வந்து சேரவில்லை.

நேரம் 11 நெருங்க பாட்டி மட்டுமே வந்து சேர்ந்தார்.

"பாட்டி கனலி எங்க?
நீங்க மட்டும் தனியா வரீங்க."

"என்னடா சொல்ற கனலி இன்னும் இங்க வரலையா! நீங்க முன்னாடி போங்க எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு, முடிச்சிட்டு நான் அங்க வரேன்னு என்கிட்ட சொல்லிட்டு போனாளே." என்று பதற

விஷ்வா கனலி எண்ணிற்கு தொடர்பு கொள்ள, சிலபல அழைப்பிற்கு பின்பு அழைப்பை ஏற்ற கனலி

"விஜி அம்மா கால் பண்ணாங்க, எனக்கு இப்போதைக்கு என் குடும்பத்துல இருக்குற பிரச்சினையை சமாளிக்கிறது தான் முக்கியமா படுது.

அதுமட்டுமில்லால் இப்பாே யாேசித்து பார்த்த அவங்க சம்மதம் இல்லாம உன்ன மேரேஜ் பண்ண எனக்கு பிடிக்கல சோ நான் இப்போ அங்க போறேன்.

உன்கிட்ட சொன்னா நீ விட மாட்ட, அதனால தான் இப்போ சொல்லாமல் இங்க இருந்து கிளம்புறேன். என்ன மன்னிச்சிடு."

விஸ்வா பேசுவதற்கு வாய்ப்பு அளிக்காமல் பேசிய கனலி அழைப்பை துண்டித்து விட்டாள். அதன் பிறகு கனலி தொலைபேசி எண் உபயோகத்தில் இல்லை என்ற பதிலை மட்டுமே வழங்கியது.

சொல்லாமல் சென்றவள் விஸ்வாவை மீண்டும் தான் பணிபுரியும் அலுவலகத்திலேயே தன் முதலாளியாக சந்தித்தாள்.

நினைவு நிஜமாகுமா.....!



ஹலோ ப்ரெண்ட்ஸ் வீட்டில அக்கா குழந்தைகள் கூட கொஞ்சம் பிஸியா இருந்ததுனால ஒரு அப்டேட் மட்டும்தான் கொடுக்க முடிஞ்சிச்சு.

படிச்சுட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க முடிஞ்ச அடுத்த அப்டேட் நாளைக்கு தான் தருவேன்.
 
Top