Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 15

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 15

விஷ்வா கனலி எண்ணிற்கு தொடர்பு கொள்ள, சிலபல அழைப்பிற்கு பின்பு அழைப்பை ஏற்ற கனலி

"விஜி அம்மா கால் பண்ணாங்க, எனக்கு இப்போதைக்கு என் குடும்பத்துல இருக்குற பிரச்சினையை சமாளிக்கிறது தான் முக்கியமா படுது.

அதுமட்டுமில்லால் இப்பாே யாேசித்து பார்த்த அவங்க சம்மதம் இல்லாம உன்ன மேரேஜ் பண்ண எனக்கு பிடிக்கல சோ நான் இப்போ அங்க போறேன்.

உன்கிட்ட சொன்னா நீ விட மாட்ட, அதனால தான் இப்போ சொல்லா
மல் இங்க இருந்து கிளம்புறேன். என்ன மன்னிச்சிடு."

விஸ்வா பேசுவதற்கு வாய்ப்பு அளிக்காமல் பேசிய கனலி அழைப்பை துண்டித்து விட்டாள். அதன் பிறகு கனலி தொலைபேசி எண் உபயோகத்தில் இல்லை என்ற பதிலை மட்டுமே வழங்கியது.

தன் காதுகளில் விழுந்த செய்தியை நம்ப முடியாமல் விஸ்வஜித் உறைந்து நின்றிருந்தான்.

சிறுவயதிலிருந்து நினைத்தது எல்லாம் அடைந்தவனிற்கு முதல்முறையாக சற்றும் எதிர்பாராத இடத்தில் இருந்து கிடைத்த ஏமாற்றம் அவனை பெருமளவில் பாதிக்கவே செய்தது.

தன்னை உயிருக்குயிராக காதலித்தவள், அந்த 'காதலை விட உன் மீது எனக்கு நம்பிக்கையை அதிகம் இருக்கின்றது' என்று கூறியவள் எந்தப் பிரச்சனை வந்தாலும் தான் அவளுடன் இருப்பேன் என்ற நம்பிக்கை இழந்து இன்று தன்னை விட்டு சென்றது அவனுக்கு பெருத்த அடியாக இருந்தது.

தந்தையின் தொழிலை கையில் எடுத்த இந்த மூன்று வருடத்தில் பல சிக்கலான பிரச்சினைகளை கையாண்டு அவற்றில் வெற்றி கண்டவனுக்கு இந்த தோல்வியை எவ்வாறு சமாளிப்பது என்று தெரியவில்லை.

யாருக்கும் தலை வணங்காத தன் காதலுக்காக கனலி முன்பு மண்டியிட்டு கிடந்தான் என்பதே உண்மை.

யாருக்கும் அடங்காதவன் அவள் முன்பு அடங்கி இருந்தான். கட்டுக்குள் அடங்காத காளையாய் வலம் வந்தவன் கனலி காதலில் கட்டுண்டு கிடந்தான்.

"கனலி வேறு ஏதாவது பிரச்சனையால் கூட இப்படி நடந்திருக்கலாம். கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணலாம் மாப்பிள." என்று ஆனந்த் தன் நண்பனை சமாதானம் செய்ய நினைக்க, அதுவரை சிந்தனையின் பிடியில் இருந்தான்

"என்னடா பிரச்சினையா, அப்படி பிரச்சனையாகவே இருக்கட்டும் அதுக்கு என்ன விட்டு பிரிஞ்சு போறது மட்டும் தான் அவளுக்கு கிடைச்ச தீர்வா.

நான் அவளுக்காக என்ன வேணும்னாலும் செய்யத் தயாராய் இருந்தேன், ஒரு நாய்க்குட்டி மாதிரி அவளை சுத்தி சுத்தி வந்தேன்.
சில சமயம் அவ என்ன கிண்டல் பண்ணுவா, கேலி பண்ணுவா அதையெல்லாம் நான் ரசிச்சிருக்கேனே தவிர அவ மேல கோபப்பட்டது கிடையாது.

அவ என்கிட்ட பொய் சொன்னாலும் கூட நம்புற மாதிரி காட்டவேனே தவிர, எதுக்காக நீ பொய் சொல்றேன்னு கேட்டது கூட கிடையாது.

அவளுக்காக நான் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து பண்ணும் பொழுது, எதுக்காக இப்படி என்ன விட்டுட்டு போனா."

"பொறுமையா இருடா"

பாட்டி தன் பங்கிற்கு பேரனை அமைதிப்படுத்த நினைக்க அவனும் ஆத்திரத்தில்

"சுலபமா நான் அவளுக்கு கெடச்சதனால ஈஸியா என்ன தூக்கி போட்டுட்டு போயிட்டா. இனி இந்த விஸ்வா கனலி வாழ்க்கையில நுழைய மாட்டான்."

♪♦♪♦♪♦♪♦♪♦♪♦♪♦♪♦♪♦♪♦♪♦♪♦♪


விஷ்வாவிடம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்த அடுத்த நொடி கனலி தன் அருகில் நின்ற காருக்குள் இழுக்கப்பட்ட அடுத்த நிமிடம் மூக்கில் வைத்து அழுத்தப்பட்ட துணியின் காரணத்தால் தன் சுயநினைவை இழந்தாள்.

கனலி மீண்டும் தன் சுய உணர்வை பெற்ற பொழுது நான் இருக்கும் இடத்தின் சூழ்நிலையை கிரகிக்கவே நேரம் பிடித்தது.

ஒரு சிறிய அறையில் கனலில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அந்த அறையில் ஒரு கட்டிலும் மின்விசிறியையும் தவிர வேறு எதுவும் இல்லை.

அந்த அறையில் இருந்த ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கும் பொழுது தான் இருக்கிறது ஒரு கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் என்பது வரை மட்டுமே புரிந்தது.

கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை மக்கள் கூட்டம் அலைமோத, எவ்வளவு ஜனத்திரள் இருக்கும் இடத்திலேயே இடத்திலா கடத்தி வந்த பெண்ணை அடைத்து வைப்பார்கள் என்ற எண்ணம் கனலி மனதில் தோன்றியது.

கண்ணில்பட்ட ஒரு சில அறிவிப்பு பலகைகளும், விளம்பர பலகைகளும் தான் இருக்கிறது தமிழ்நாட்டிலோ கர்நாடகத்திலாே இல்லை என்பதைப் புரியவைக்க வேறு எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை.

இங்கிருந்து தப்பிப்பதற்கான வழி எதுவும் புலப்படாத கனலி அங்கு இருந்த கட்டிலில் சென்று அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்தில் கதவு திறக்கும் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்த கனலி முன்பு நடுத்தர வயதில் பெண்மணி ஒருவர் நின்று கொண்டு இருக்க அவரிடம் கனலி பேச ஆரம்பிப்பதற்கு முன் அந்த பெண் அவள் முன்பு உணவுத் தட்டையும் துணியையும் வைத்து விட்டு வெளியேறி விட்டாள்.

மின்னல் வேகத்தில் அந்த பெண்மணி வந்து மறைந்துவிட கனலி முன்பு இருந்த பொருட்கள் மட்டுமே அந்தப் பெண் வந்து விட்டு சென்றதற்கு ஆதாரமாக இருந்தது.

தன்முன் வைக்கப்பட்டு இருந்த துணியை எடுத்து பார்த்த கனலி அருவருப்பின் அதை தூக்கி எறிந்து இருந்தாள்.

காரணம் அதை முட்டி வரை நிற்கும் கட்டை பாவாடையும், முன்புறம் தாராளமாக இறக்கம் வைத்து தைக்கப்பட்டிருந்த கையில்லாத ரவிக்கையுமே.

மூடப்பட்டிருந்த கதவருகில் நின்ற கனலி காதுகளில் விழுந்த கலவையான குரல்களை கேட்ட நிமிடத்திலேயே தான் இருக்கும் இடம் எப்படிப்பட்டது என்று புரிந்து கொண்டாள்.

"கமதிபுற" என்ற ஒரு வார்த்தையை தன் வாழ்கை இன்றோடு அழிந்தது என்ற பயத்தை கனலி மனதில் விதைத்தது.

கல்லூரி காலத்தில் அவளது சக நண்பர்களுடன் கலகலப்பாக பேசும் சந்தர்ப்பத்தில் ஒரு நாள் இந்த இடத்தைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கின்றாள்.

பாலியல் தொழில் புரியும் நபர்களுக்கு என்று மும்பையில் இருக்கும் இடம் தான் இந்த கமதிபுற.

தான் இருக்கும் இடம் என்ன என்பதை தெரிந்து கொண்ட உடன் எப்படியாவது இங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியது.

நேரம் சென்றதே தவிர தான் இருக்கும் இடத்தில் இருந்து தப்பிப்பதற்கான எந்த வழியும் கனலி தென்படவில்லை.

சிறிது நேரத்தில் மீண்டும் கதவு திறக்கப்பட ஐந்தரை அடி உயரத்தில் ஒரு ஆண் உள்ளே வந்தான்.

தன் அருகில் வந்தவன் கண்களில் இருந்த காமவெறி அவனின் கேவலமான எண்ணத்தை உணர்த்தி விட, கனலி அருகில் வந்த அடுத்த நொடி தரையில் சுருண்டு விழுந்து கிடந்தான்.

"கனலி ப்ளீஸ் நான் 24 ஹவர்ஸ் உன் கூடவே இருக்க முடியாது. செல்ஃப் டிஃபென்ஸ் கத்துகிறது உனக்கு நல்லது."

தன்னை கட்டாயப்படுத்தி விஷ்வா சேர்த்துவிட கராத்தே, கும்பூ, சிலம்பம் இன்னும் சில தற்காப்பு கலை வகுப்புகளை நினைத்து கனலி ஆசுவாசப் பட்டுக் கொண்டான்.

கீழே விழுந்து கிடந்த அவன் எழுந்து நிற்பதற்கே அரை மணி நேரத்திற்கும் மேல் ஆனது. தட்டுத்தடுமாறி அவன் வெளியே சென்றதும் மேலும் நான்கு நபர்கள் உள்ளே வர தற்சமயம் கனலி மனதிற்குள் உண்மையாகவே பயம் வர ஆரம்பித்தது.

இங்கு உள்ள நாள்வரை எப்படியாயினும் சமாளிக்க முடியும், ஆனால் வெளியில் இன்னும் எத்தனை பேர் இருக்கின்றார்களோ? அத்தனை பேரையும் சமாளித்து, தான் எந்த வித பாதிப்பும் இல்லாமல் வெளியேற முடியும் என்ற நம்பிக்கை கனலியிடம் சுத்தமாக இல்லை.

இருந்தும் துணிவுடன் போராட ஆரம்பித்தாள், முந்தைய தினம் காலையில் உணவு உண்டது அடுத்த நாள் மதியம் நெருங்கும் வேளை வரை கனலி தண்ணீர்கூட அருந்தாததும், அவள் போராட்டத்தில் தொய்வு கொடுக்க மயங்கி சரிந்தாள்.

இம்முறை கடலில் மயக்கம் தெளிந்து விழித்தபோது இருந்த அறை மிகவும் பெரிதாக இருந்தது.

மிகப்பெரிய கட்டில், அலங்காரப் பொருட்கள், டிவி என சகல வசதிகளுடன் இருந்தது.

தான் மயங்கி இருந்த நேரத்தில் தனக்கு ஏதேனும் ஆகி இருக்குமோ என்று பயந்து தன்னை பார்க்க தான் வந்த போது இருந்த அதே உடையிலேயே இருந்தாள்

"உன்னுடைய துணிய மாற்ற சொல்லலாம்னு நெனச்சேன், ஆனா நல்லவேளை நான் அப்படி எதுவும் செய்யல. செஞ்சிருந்தா உனக்கு தேவையில்லாத பல சந்தேகம் வந்திருக்கும்." என்று கூறிக்கொண்டு தன் முன்நின்ற நபரை கனலி பார்வையால் எடை போட்டுக்கொண்டு இருந்தாள்.

கனலி பார்த்தவுடனே அவள் சிந்தனையில் தோன்றியது தன் முன் நிற்பது ஒரு திருநங்கை என்பது மட்டுமே. அதன் பின்பே தான் இருக்கும் இடத்தின் சூழ்நிலையை உணர்ந்து பயத்தில் எழுந்து நிற்க

"நீ தேவையில்லாம என்னைப் பார்த்து பயப்பட வேண்டாம், உன்னுடைய சம்மதம் இல்லாமல் எதுவும் நடக்காது.

நீ குளிச்சிட்டு துணி மாத்திட்டு வந்தா நாம அமைதியா உட்கார்ந்து பேசலாம்."

துணி என்றதும் சற்று நேரத்துக்கு முன் தன் முன் இருந்த துணியை நினைத்து அருவருப்பில் அவள் முகத்தை சுழிக்க அதை புரிந்துகொண்ட எதிரில் நின்றவர்

"கவலைப்படாத இது இந்த இடத்துக்கு பொருந்தாத துணி தான்." என்று அவளிடம் சுடிதார் ஒன்றை கையில் தந்தார்.

அந்த அறையை ஒட்டியிருந்த குளியலறையில் தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு வெளியில் வர அவள் முன்பு உணவு வகைகள் வைக்கப்பட்டது.

ஏனோ அதை உண்ண மனம் இல்லாமல் கனலி பார்த்துக் கொண்டே நிற்க, அவள் அருகில்

"பயப்பட வேண்டாம் இந்த சாப்பாட்டில் மயக்க மருந்து எதுவும் இல்ல. உன்ன மயக்கமாக்கி காரியம் சாதிக்கணும்னு நான் நினைச்சிருந்தா அதற்கான வாய்ப்பு ரெண்டு தடவை இருந்துச்சு."

தன் முன் கேட்ட குரலில் முதலில் அதிர்ந்தாலும் அதிலிருந்து இரண்டு விஷயங்களை புரிந்து கொண்டாள்

ஒன்று இந்த இடம் தன்முன் நிற்பவரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், மற்றொன்று இப்பொழுது இப்போதைக்கு தன்னை இவர்கள் தவறான விஷயத்திற்கு கட்டுப்படுத்த போவதில்லை என்பதுமே.

மேலும் அவள் உடல் சோர்வில் தள்ளாட அதை நிதானப் படுத்த உணவு தேவை என்ற காரணத்தால் ஒன்றும் பேசாமல் தனக்குத் தேவையான உணவை எடுத்துக்கொண்டு அமைதியாக சாப்பிட்டு முடித்தாள்.

கனலி சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக எதிரில் நின்ற நபர்

"சரி இப்போ நீ உன்னுடைய கேள்விய கேட்க ஆரம்பிக்கலாம்." என்று கூற அவரை நிதாரணமாக பார்த்த கனலி

"நான் என்ன கேட்க போறேன்னு உங்களுக்கு நல்லா தெரியும்." என்று நிறுத்தி அதே சமயம் அழுத்தமாக பேச, அவளை ஒரு முறை கூர்ந்து பார்த்த அந்த நபர்

"இந்த இடத்தில் இதுவரைக்கும் எத்தனையோ பொண்ணுங்கள நான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொருத்தருக்கு பின்னாடியும் ஒரு கதை இருக்கும். உன் பின்னாலயும் கண்டிப்பா ஏதோ ஒரு கதை இருக்கு. ஆனா அந்த கதையில சோகம் இல்ல போராட்டம் மட்டுமே இருக்கு."

தன் முன் நிற்கும் நபர் பார்வையால் தன்னை எடைபோடுவது பிடிக்காத கனலி அதை முகத்தில் அப்பட்டமாக காட்ட அதை புரிந்து கொண்ட நபரும்

"சரி உனக்கு தேவையில்லாதது நான் பேச விரும்பல, உனக்கு என்ன தேவையோ அதை கேட்டு அதற்கான பதிலை நான் சொல்றேன்." என்று முன்வர கனலி அடுத்த வினாடி

"உடனடியாக நான் இங்க இருந்து போகணும் அது மட்டும்தான் எனக்கு தேவை.."

"நீ இங்க இருந்து வெளியே போன அடுத்த நொடி இதே மாதிரி இன்னொரு எடத்துல இருப்ப. அங்க இருக்கறவங்க என்ன மாதிரி உன்னை உட்கார வச்சி பேசிக்கிட்டு இருக்க மாட்டாங்க.

இங்க நீ இருக்குறவங்கள அடிச்சமாதிரி அங்குபோய் அடிச்சா பத்து பதினஞ்சு பேரு உன்னுடைய வாழ்க்கை நாசமாக்கிடுவாங்க."

மேற்கொண்டு எதுவும் பேசத் தோன்றாமல் தலையில் கைவைத்து கனலி அமர்ந்துவிட எதிரில் நின்ற நபரை பேச ஆரம்பித்தார்

"ஒரு நிமிஷம் என்ன பாரு, நீ யாரு என்ன எதுவும் எனக்கு தெரியாது, ஆனா நீ கண்டிப்பா தப்பான பொண்ணு இல்ல, அது மட்டும் எனக்கு நல்லா தெரியுது. அதனால நான் சொல்றதை நீ கவனமா கேட்டா உனக்கு எந்தவித சேதாரமும் இல்லாமல் இங்கே இருந்து தப்பிச்சி போகமுடியும்." என்ற வர்த்தைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பது போல் கனலி பார்த்து வைக்க,

"நீ நம்பினாலும் நம்பவில்லை என்றாலும் உனக்கு இங்கே என்ன தவிர வேற யாராலயும் உதவி பண்ண முடியாது."

அவர் கூறியதில் இருந்த உண்மையை புரிந்து கொண்ட கனலி மெளவுனமாக அமர்ந்து விட, அவள் மௌனத்தையே சாதகமாக எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

"என்னோட நிஜ பேரு ராஜா 12 வயசு வரைக்கும் தான். ஆணா இருந்த எனக்குள்ள பெண் உணர்வு வர ஆரம்பிச்சிருச்சு, இதன் வெளியே தெரியாமல் மறைக்க நான் இவ்வளவு முயற்சி பண்ணுனேன்.

ஒரு கட்டத்துல இதைத் தெரிஞ்சுகிட்ட என் வீட்டுல உள்ளவங்க என்ன வீட்டைவிட்டு வெளியே அனுப்பிட்டாங்க.

பொழப்புக்காக எங்கெங்கேயோ அலைஞ்ச என்ன கடைசியா உதவி பண்றேன்னு சொல்லி ஒருத்தன் இதே இடத்துல என்ன வித்துட்டு போயிட்டான்.

அழுகை, அடி, வலி இதை எல்லாத்தையும் விட பசி இது எல்லாம் சேர்ந்து என்னை இந்த வாழ்க்கைக்கு தள்ளி விட்டுடுச்சு.

ராஜாவாக இருந்த நான் ராணியா மாறீட்டேன். வேலை பார்த்தா கிடைக்கிற பதவி உயர்வு மாதிரி பத்து வருஷத்துக்கு முன்னாடி இந்த இடத்துக்கு நான் தலைவியா மாறிவிட்டேன்.

நீ நினைக்கலாம் பாதிக்கப்பட்ட நீங்களே இப்படி செய்யலாமான்னு" என்று கனலியை பார்த்து அவள் கேள்வி இதுவாகத்தான் இருக்கும் என்பது முன்வைக்க, கனலி கண்களும் அப்படித்தான் என்பது போன்ற உணர்வை பிரதிபலித்தது.

நான் இங்கே இந்த இடத்தில இருக்கிறதுக்கு ஒரே ஒரு காரணம் மட்டும் தான். இங்க விருப்பப்பட்டு தொழில் செய்ய வர பொண்ணுங்களை என்னால ஒன்னும் பண்ண முடியாது.

ஆனால் விருப்பம் இல்லாம உன்னை மாதிரி எத்தனையோ பொண்ணுங்க இதுல வந்து மாட்டுகிறார்கள். அதுல குறைஞ்சபட்சம் என்கிட்ட வர பொண்ணுங்கள என்னால காப்பாத்த முடியும்."

ராணி தன் சுய விளக்கத்தை கொடுத்து முடிக்க அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த கனலி ஏனோ அவர் கூறும் அனைத்தும் உண்மையாக இருக்கும் என்று நம்ப ஆரம்பித்தாள்.

ராணி கனலியிடம் கூறியது போலவே ஒரு வாரத்தில் பத்திரமாக அங்கிருந்து மீண்டும் கனலியை பெங்களூர் அனுப்பி வைத்தார்.

♪♥♪♥♪♥♪♥♪♥♪♥♪♥♪♥♪♥♪♥♪♥♪

அதுவரை பொறுமையாக கனலி கூறும் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த விஷ்வா

"வந்ததுக்கு அப்புறம் என்ன பாக்கணும்னு உனக்கு தோணலையா கனல்."

சாதாரணமாக பேச வேண்டுமென்று நினைத்தாலும் விஷ்வாவின் குரல் ஆதங்கமாக வெளிப்பட்டது.

"நான் வரலைன்னு நினைக்கிறியா விஜி." கேள்வியாக பார்த்த விஷ்வாவிடம்

"உன்னப் பாக்கத்தான் நான் வந்தேன், ஆனா நீ வீட்டுல இல்ல. உனக்கு பதிலா உன்னுடைய மாமா சுந்தர் தான் இருந்தாங்க."

"சாே அவங்க பேச்சை கேட்டு என்ன விட்டு பாேயிட்ட."

"விஜி நான் எப்பவும் யார் பேச்ச கேட்டு முடிவு எடுக்க மாட்டேன். என்ன யாராலையும் கட்டுப்படுத்த முடியாது, இவ்வளவு ஏன் என்ன காதலிச்ச உன்னால கூட என்ன கட்டுப்படுத்த முடியல."

"அது என்னமோ உண்மைதான்."

"உன்னுடைய அம்மா என்ன நான் காலேஜ் தேட் இயர் படிக்கும் பொழுதே ஒரு தடவை பார்க்க வந்திருக்காங்க.

நான் உன்ன விட்டுட்டு போறதுக்காக எவ்வளவு பணம் வேணாலும் தரேன்னு சொன்னாங்க. உன் அப்பா ஒரு படி மேல போயி என்ன மிரட்டிட்டு கூட போனாங்க.

நான் அவங்களுக்கு பயந்து போகணும் நினைச்சிருந்தா உன்னை விட்டு அப்பவே போயிருப்பேன்."

"சரி நீ காரணம் என்னன்னு என்கிட்ட சொல்லவே இல்ல."

"நம்ம கல்யாணத்தில எந்த பிரச்சனையும் வர கூடாதுன்னு நினைச்சு தான் யாருக்கும் தெரியாமல் நடக்கிற அந்த ரிஜிஸ்டர் மேரேஜ் நான் சம்மதம் சொன்னேன்.

அப்படி இருந்தும் எங்க வீட்டுல உள்ளவங்களுக்கு நம்மளுடைய ரிஜிஸ்டர் மேரேஜ் பற்றி தெரிந்திருக்கு. ஆனந்த் அண்ணாவை கூப்பிட நீ போன கொஞ்ச நேரத்திலேயே எனக்கு எங்க வீட்டுல இருந்து நிறைய போன் கால் வந்துச்சு.

ஃபர்ஸ்ட் அவங்க கூட பேச வேண்டாம்ன்னு தான் நான் நினைச்சேன். தொடர்ந்து வரவும் வேற வழி இல்லாம தான் எடுக்க வேண்டியதா பாேச்சு."

♥♪♦♪♥


"அம்மா இதுக்காக எத்தன தடவ கால் பண்றீங்க.."

"உனக்கு அம்மா போன் பண்ணா எடுக்க கூட மனசு இல்லையோ....
அது எப்படி இருக்கும் நீதான் கண்டவன் கூட சுத்திக்கிட்டு அவனோட மயக்கத்திலே இருக்கிறியே."

"அம்மா தேவையில்லாமல் வார்த்தையை விடாத."

"என்னடி தேவையில்லாமல் வார்த்தையை விட்டேன். கல்யாணம் ஆகாம ஒருத்தன் கூட தனியா ஒரு வீட்டுல தங்கி இருக்கியே உனக்கு வெக்கமா இல்ல."

"நான் ஒண்ணும் கண்டவன் கூட தங்கியிருக்கல, நான் காதலிக்கிறவன் கூட தான் இருக்கேன். இன்னைக்கு எனக்கும் அவனுக்கும் கல்யாணம்."

"கனலி இன்னைக்கு மட்டும் அந்த கல்யாணம் நடந்துச்சு உன்னுடைய அம்மாவ உயிரோடு பார்க்க முடியாது."

அனைத்து காதல் திருமணத்திலும் வழக்கமாகப் பெற்றோர் கூறும் மிரட்டல் வசனத்தை திலகவதி கூற

"என்னமா என்னை மிரட்டி பார்க்கணும்ன்னு நினைக்கிறாயா! உன்னோட மிரட்டலுக்கு பயப்பட நான் ஒன்னும் கமலி இல்லை; கனலி.."

"உனக்கு இந்த அம்மாவை பத்தி கவலை இல்ல தானே, சரி ஆனா உனக்கு அந்த பிச்சைக்கார குடும்பத்து மேல கொஞ்சம் பாசம் இருக்கு தானே.

நீ மட்டும் அங்க இருந்து இப்போ கிளம்பி வரலைன்னா மதியம் சாப்பிட்ட சாப்பாட்டில் மொத்தமாக சுத்த விஷம் வச்சி அவங்க எல்லாத்தையும் கொன்னுட்டு உன்ன பெத்த பாவத்துக்கு நான் சேர்ந்து செத்துடுவேன்."

"எங்க அம்மா அப்படி சொல்லும் பொழுது எனக்கு வேற என்ன செய்வதென்று தெரியல, வேற யாருக்கும் போன் பண்ணி சொல்லவும் முடியல.

அதனாலதான் உன்கிட்ட அப்படி சொல்லிட்டு நான் கிளம்புனேன், ஆனா என்ன கடத்துனது யாரு? எதுக்காக என்ன மும்பையில விட்டுட்டு போனாங்க எதுவும் எனக்கு அப்பாே தெரியல, ஆனால் இது எல்லாமே உன்னுடைய மாமா சுந்தர் வேலையின்னு உன்னைத்தேடி உன்னுடைய வீட்டுக்கு வந்தப்போ புரிஞ்சுகிட்டேன்."

கனலி கூறியதை கேட்ட விஸ்வா முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் இருக்க கனலியே தாெடர்ந்து அன்று நடந்ததை கூறினாள்,

"அட வா மா கனலி கமதிபுற எப்படி இருந்துச்சு, அங்க இருந்து ராணி உன்னை பத்திரமாக திருப்பி அனுப்பி வச்சுட்டா போல.

என்னம்மா முழிக்கிற நாம அங்க இருந்தது இந்த ஆளுக்கு எப்படி தெரியும்ன்னு பார்க்கிறியா, உன்ன அங்க அனுப்பி வைத்தது நான்தான்."

அனல் கக்கும் கனலி பார்வை பொருட்படுத்தாமல்

"நான் எதற்காக இதையெல்லாம் செய்தேன்னு பார்க்கிறாயா! என்னுடைய பொண்ண விஷ்வாவிற்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு நான் நினைச்சேன், ஆனா அதை நீ குறுக்க வந்து தடுக்க நெனச்சா நான் சும்மா இருப்பேனா.

இது சும்மா உன்ன மிரட்ட நான் செஞ்ச சின்ன நாடகம்தான். திரும்பவும் நீ விஷ்வா வாழ்க்கையில் வர நெனச்சா உன்னை எதுவும் பண்ண மாட்டேன், உனக்குப் பதிலாக உன் வீட்டுல இருக்க உன் தங்கச்சி பேரு என்ன...."

யாேசிப்பது பாேல தலையில் ஒரு விரலால் தட்டி பார்த்துவிட்டு

"ஆங்ங் யாழினி....
வயசு என்ன ஒரு பதினெட்டு இருக்குமா...
அவளை தூக்கி விடுவேன்."

"நான் உன்னை தேடி திரும்பவும் வந்தா, எனக்கு வந்த அதே நிலைமைதான் என்னுடைய தங்கச்சி யாழினிக்கும் நடக்கும்ன்னு சொல்லி மிரட்டும் பொழுது என்னால அதுக்கு மேல அங்க இருக்க முடியல.

கடவுள் புண்ணியத்துல என்னை காப்பாற்ற ஒரு ராணி கிடைச்ச மாதிரி, என் தங்கச்சிய காப்பாற்ற இன்னொருத்தர் இருப்பாங்கன்னு நான் எப்படி நம்ப முடியும்."

"சரி விடு இனி நடக்க வேண்டியதை நான் பாத்துக்குறேன், உன்னை இவ்வளவு கஷ்டப்படுத்தினவங்களை நான் சும்மா விட போவதில்லை. நான் அவங்களை கவனிக்கும் வரைக்கும் நீ என்ன மட்டும் பார்த்தால் போதும்."

தீவிரமாக ஆரம்பித்து விளையாட்டாக விஸ்வா பேசி முடிக்க, அதுவரை இருந்த இருக்கம் தளர்ந்த கனலி

"விஜி...." என்று செ ல்ல சினுங்களுடன் அவன் மார்பினிலே சாய்ந்து கொள்ள, விஸ்வா அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

இனி நிஜங்களுடன் பயணம்.....
 
Top