Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 16

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 16



முந்தைய நாள் இரவு கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட களைப்பில் காலையில் தாமதமாக கிளம்பி அலுவலகம் வந்த பூஜாவிற்கு அங்கு அலுவலகத்தில் நடந்த விஷயங்கள் எதுவும் தெரியாமல் போனது.

வழக்கம்போல உணவு நேரத்தில் கனலி பற்றி அவதூறு பேச பொறுக்கமுடியாத விமலா

"பூஜா ப்ளீஸ் இதுக்கு மேல நீங்க கனலி மேடம் பத்தி தப்பா பேசினா நான் பாஸ் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியதா இருக்கும்.

இதுவரைக்கும் அவங்கள பத்தி நீங்க தப்பா பேசினது போதும். இதுக்கு மேல ஏதாவது பேசினா உங்களுக்குதான் அது தேவையில்லாத பிரச்சனையை வரும்."

"நான் எங்க அவளைப் பத்தி தப்பா சொன்னேன், அவ நடந்துக்கிறத தானே சாென்னேன். இந்த ஆபீஸ்ல ஏதாவது ஒரு பொண்ணு நம்ம பாஸ் கூட அதிகமா ஒரு வார்த்தை பேசிருக்காங்களா, ஆனா இன்னைக்கு நான் ஆஃபீஸ் வர்றதுக்கு முன்னாடியே பாஸ் ரூமுக்குள்ள போன கனலி சாப்பிட கூட வெளிய வரல."

"அவங்க வராங்க வரல அது அவங்க பிரச்சனை, அதுல உங்களுக்கு எதுக்கு வலிக்குது. ஒருவேளை உங்களுக்கு ஏதாவது தெரிய வேண்டியது இருந்தால் நீங்களே போய் பாஸ் கிட்ட கேட்டுக்கங்க." என்று

அங்கிருந்து அனைவரும் எழுந்து வேறு இடம் சென்று தன் உடம்பை சாப்பிட ஆரம்பித்தனர். இது நாள் வரையில் தான் கூறும் அனைத்தையும் சரி என்பது போல் கேட்ட கூட்டம், இன்று மறுத்து பேசியதுடன் தன்னை அவமானப்படுத்தும் விதமாக பாதியிலேயே எழுந்து சென்றது பூஜாவிற்கு கோபத்தையே வரவழைத்தது.

இதுநாள்வரையில் கனலி மனதில் இருந்த அனைத்து பாரங்களும் நீங்க உள்ளத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி அவள் முகத்தில் பிரதிபலித்தது.

சூரியனைத் பெயராக கொண்டவள் முகம் அந்த சூரியனில் பிரகாசத்தை ஏற்றது. நீண்ட நாட்களுக்குப் பின்பு மனம் விட்டு பேச ஆரம்பித்த காதலர்கள் இருவரும் தாங்கள் இருப்பது அலுவலகம் என்பதை மறந்தும் பேச ஆரம்பித்தனர்.

"விஜி உனக்கு என் மேல கோபமே இல்லையா?"

இவ்வளவு நடந்த பின்பும் தன்னை ஒரு வார்த்தைகூட குறை கூறாமல் ஏற்றுக்கொள்ளும் காதலனை நினைத்து வியப்பு மேலிட கனலி கேட்க

"உன் மேல எனக்கு கோபம் வந்தது உண்மைதான், ஆனால் அது ரெண்டு நாள் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் என்ன விட்டுப் போயிடுச்சு."

"அப்புறம் எதுக்காக நீ என்ன தேடி வரல."

"உன் மேல இருந்த கோபத்தை விட முடிஞ்சா என்னால, எனக்குள்ள தலைதூக்கின ஈகோ அடக்க தெரியல. நீ என்ன விட்டு போனதுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்குன்னு என என்னுடைய மனசுக்கு புரிஞ்சது.

ஆனால் என்னுடைய மூளை எந்த காரணமாக இருந்தாலும் அவ எப்படி உன்னை விட்டுட்டு போகலாம், இனி அவள உன்னை தேடி வராமல் நீ அவகிட்ட போகக்கூடாது அப்படின்னு என்கிட்ட சொல்ல ஆரம்பித்தது.

நான் என்னைக்கும் என்னுடைய மூளை சொல்றதை மட்டும்தான் கேட்டு நடப்பேன். உன்னுடைய விஷயத்தில் மட்டும்தான் நான் என்னுடைய மனசு சொல்வதை கேட்டு நடந்து இருக்கேன்.

அந்த சம்பவத்துக்கு அப்புறம் உன் விஷயத்துல கூட மனசு சொல்றதை கேட்க கூடாதுன்னு ஒரு முடிவுக்கே வந்துட்டேன். ஆனா அது என்ன உன்ன அந்த லிப்ட்குள் பாக்குற வரைக்கும் தான்."

"ஒருவேளை நான் இந்த ஆபீஸ்க்கு வேலைக்கு வந்து சேரமா இருந்திருந்த நீ என்ன தேடி வந்திருக்க மாட்டார் தானே. அந்த அளவுக்கு நான் உன்ன ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன் இல்லையா விஜி."

தான் செய்தது தவறு என்ற குற்ற உணர்வில் கனலி பேச

"நான் உன்கிட்ட வந்து பேசல அவ்வளவுதான், ஆனால் உன்னை பத்தி தகவல்களை கேட்டுகிட்டு தான் இருந்தேன். அதுல நான் எதிர்பார்க்காத ஒரு விஷயம் நம்முடைய கம்பெனிக்கு நீ வேலைக்கு வந்தது."

'நம்முடைய கம்பெனி' என்று விஷ்வா கூறிய வார்த்தைகளில் மனம் நெகிழ்ந்த கனலி

"அப்புறம் எதுக்காக அன்னைக்கு தெரியாதமாதிரி நடந்துக்கிட்ட. நீ என்ன திட்டிருக்கலாமே, நான் செஞ்சது தப்புன்னு சொல்லி என்ன அடிச்சு கூட இருக்கலாம். நீ என்கிட்ட பேசாமல் இருந்தது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா."

"கனல் பேபி நான்தான் சொல்றேன் தானே, உன் மேல எனக்கு கோபமே இல்ல. உன்னை பார்த்த அடுத்த செகண்ட் அப்படியே உன்ன கடத்திக்கிட்டு எங்கயாவது போயிடனும் மட்டும்தான் எனக்கு தோணுச்சு. ஆளே இல்லாத இடத்துல நீயும் நானும் மட்டும் நல்லா இருக்கும் தானே."

கனலி செய்த தவறை நினைத்து வருத்தமாக பேச, விஷ்வாவாே காதல் வசனம் பேசிக்கொண்டே இருக்க அவனிடமிருந்து தள்ளி நின்ற கனலி முறைத்துப் பார்க்க

"என்ன கனல் பேபி இப்படி ஒரு ரொமாண்டிக் லுக் கொடுக்கிற, நான் என்ன அவ்வளவு ஹேண்ட்சமா!" என்று இப்படியும் அப்படியும் திரும்பி போஸ் கொடுக்க, தலையில் அடித்துக்கொண்ட கனலி

"உன்னைப் போயி இந்த ஆபீஸ்ல உள்ள பொண்ணுங்க எல்லாம் சாமியார்ன்னு சொல்றாங்க பாரு எல்லா காலக்கொடுமைடா. எனக்கு மட்டும் தானே தெரியும் நீ போலிச் சாமியார்ன்னு." என்று அலுத்துக் கொள்ள அவள் இடையை பற்றி தன்னிடம் இழுத்துக்கொண்ட விஷ்வா

"அவங்க சொன்னாலும் சொல்லட்டியும் நான் இன்னும் சாமியாரா தான் இருக்கேன்." விஸ்வா நெஞ்சில் கைவைத்து தன்னிடமிருந்து பிரிக்க போராடி

"இதுதான் நீ சாமியாரா இருக்கிறதுகாண அடையாளமா." என்று நக்கல் நிறைந்த குரலில் கூற, அவள் கழுத்தில் முகம் புதைத்த விஷ்வா

"கடல் பேபி நான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சு பத்து வருஷம் ஆகுது. ஆனா நான் இன்னும் கன்னி பையனாத்தான் இருக்கிறேன். அப்பாே நான் சாமியார் தானே." என்று கூறிக்கொண்டே

அவள் வாசத்தை தன்னுள் நிரப்பிக்கொள்ள, அவன் மீசை முடி கழுத்தில் உரச அதில் ஏற்பட்ட கூச்சத்தில் நெளிந்த கனலி

"நீ கன்னி பையன் தான், ஆனா அதே சமயத்தில் களவாணி பையன்." என்று கூற ஒரு நிமிடம் அவள் கழுத்து வளைவில் இருந்து தன் முகத்தை அவள் முகத்தின் அருகே கொண்டு சென்ற விஷ்வா

"நீ சொல்றதும் சரிதான் இனி களவாணி பயலா மாறுனாதான் சரி." என்று கூறி அவள் உதட்டை களவாட ஆரம்பித்தான்.

வருடக்கணக்கில் காத்திருந்த கடனை எல்லாம் இன்று வட்டியுடன் செலுத்த அந்தக் காதலனின் கடமையில் கனலி கரைந்து போனாள்.

இருவரின் மாேன நிலையை விஷ்வா அலைபேசி ஒலித்தது தடுத்தது. இரு முறை முழு அழைப்பும் முடிந்து மூன்றாவதாக என்னை கொஞ்சம் கவனி என்பதுபோல ஒலிக்க விலக மனமே இல்லாமல் கனலி இதழ்களை விடுதலை செய்தான்.

அவன் விலகிய பின்பும் கனலி அதே நிலையில் இருக்க அவளின் கன்னம் தட்டிவிட்ட விஷ்வா அவன் நாற்காலியில் அவளை அமர வைத்தான்.

ஆனால் இதை அனைத்தையும் உணரும் நிலையில் கனலி தான் இல்லை. அவளோ மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி இருந்தாள்.

விஷ்வா அலைபேசியில் பேசி முடிக்கும்வரை கனலி அதே நிலையில் இருக்க, அந்த சுழல் நாற்காலியை ஒரு முறை சுழற்றி விட, அதில் தன்னுணர்வு பெற்ற கனலி விஷ்வா முகத்தை பார்க்க முடியாமல் குனிந்து கொண்டாள். நாற்காலியின் இருபுறமும் தன் கைகளை ஊன்றி

"கனல் ஐ காண்ட் வைட் எனி மோர் பேபி." என்றவன் குரலில் அவனின் மொத்த தேவைகளும் எதிரொலிக்க, கனலி பதில் பேச மறந்து அவன் கண்களில் கட்டுண்டு கிடந்தாள்.

பூஜை வேலை கரடியாக உள்ளே வந்த பூஜா கண்டது அவர்களின் இந்த நிலையைத்தான். இருவரும் மெய்மறந்து ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தவண்ணம் அமர்ந்திருக்க, அதைக் கண்ட பூஜா மனதில் நல்ல எண்ணம் எதுவும் எழவில்லை.

"க்கும்" தன் தொண்டையை செருமி தான் அங்கு இருப்பதை பூஜா உணர்த்த நினைக்க,

தங்கள் அருகில் கேட்ட சட்டத்தில் நிமிர்ந்து பார்த்த விஷ்வா தன் காதலியுடன் தனித்து இருக்கும் சமயத்தில் உள்ளே நுழைந்த பூஜாவை பார்த்து

"உள்ள வரும்போது கதவை தட்டிட்டு வரணும்னு பேசினால் ஃபேசிக் மேனர்ஸ் கூட உங்களுக்கு தெரியாதா." என்று கோபமாக கேட்க,

"பட்டப்பகல்ல அதுவும் ஆபீஸ் நேரத்துல இவரு இங்க வேலை பாக்குற பொண்ணு கூட கட்டிப்பிடித்து கொஞ்சிக் குலாவிக் கொண்டு இருப்பாரா, அது எல்லாம் தப்பு இல்ல. நாம கேட்காம உள்ளே வந்து தான் தப்பா." என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல்

"இல்ல சார் உங்க கிட்ட இதக் காட்டி சைன் வாங்கிட்டு போகத்தான் வந்தேன்." என்று அவன் முன்பு ஒரு பையை வைக்க, அதை கையால் தொட்டுக் கூட பார்க்காத விஷ்வா

"நீங்க ரிப்போர்ட் பண்ண வேண்டியது மேனேஜர் ராம் கிட்டன்னு நான் நினைக்கிறேன். அதுவும் நீங்க மெயில் பண்ணினாலே போதும், இப்படி பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வந்து நிற்க எந்த அவசியமும் இல்லை.

உண்மையிலேயே நீங்க ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் தானா. போங்க போயி உங்க வேலைய ஒழுங்கா பாருங்க." என்று கோபமாக பேச,

பூஜா நடப்பது அனைத்தையும் எம்டி இருக்கையில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த கனலியை பார்த்து முறைத்து விட்டு வெளியேறினாள்.

பூஜா வெளியேறியதும் கனலியை பார்த்துத் திரும்பிய விஷ்வா, அவள் முகத்தில் இருந்த கலவையான உணர்வை கண்டு

"கனல் பேபி..." என்று அவள் தோளை தொட்டு உழுக்க நிமிர்ந்து பார்த்த கனலி,

"இப்ப வந்தது என்னுடைய அண்ணி பூஜா." என்று தகவலாக கூற

"ஓ" என்று விஷ்வா கூறினானே தவிர மேற்கொண்டு எதுவும் கண்டுகொண்டதாக காட்டிக்கொள்ளவில்லை.

"நாம இனி வீட்டுக்கு போகும் போது இதைப் பத்தி பேசிக் கொள்ளலாமே." என்று கூறிவிட்டு அந்த இருக்கையிலிருந்து எழ,

அவள் இரு தோள்களிலும் கைவைத்து அவளை ஏற விடாமல் தடுக்க விஷ்வா

"கனலி இனி நீ ஒரு விஷயத்தை நல்லா ஞாபகம் வச்சுக்கோ, இப்போ நீ வெறும் கனலி கிடையாது, இந்த விஷ்வா மனைவி.

இனி நீ அதுக்கு ஏற்ற மாதிரி தான் நடந்துக்கணும். இந்த ஆபீஸ் மட்டும் இல்ல உன் அம்மா வீட்டுலயும் சரி, நம்ம வீட்டுலயும் சரி நீ மிஸஸ் கனலி விஸ்வஜித் தான் நடந்துக்கணும்."

சரி என்னும் விதமாக கனலி தலையை மட்டும் ஆட்ட வாய்விட்டு சிரித்த விஷ்வா

"வாழ்க்கையில நான் ஒரு விஷயத்தை சொல்லி நீ உடனே அத்தை அக்செப்ட் பண்ணியிருக்க கனல்."

மதிய உணவையும் தங்கள் அறையிலேயே முடித்த பின்பே விஷ்வா கனலியை வெளியே செல்ல அனுமதிதான், அதுவும் தனக்கு சில வேலைகள் இருப்பதாலேயே.

கனலி விஷ்வா அறையில் இருந்து வெளியே வர, அதேசமயம் ராம் அறையிலிருந்து வெளியே வந்த பூஜா மனதுக்குள் கருவிக் கொண்டாள்.

தன்னுடைய ஃராேக்ரமில் இருக்கும் தவறுகளை காரணம் காட்டி ராம் திட்ட அதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொண்ட பூஜாவிற்கு மனதுக்குள் இருந்த கோபமெல்லாம், இப்பொழுது பாஸ் அறையிலிருந்து சிரித்துக்கொண்டே கனலி மீது திரும்பியது.

கனலி தன் இடத்தில் அமரும் வரை பொறுமையாக காத்திருந்த பூஜா அவள் அமர்ந்த பின்பு, அவள் இருக்கைக்கு எதிரில் இருக்கும் உமாவிடம் சாதாரணமாக பேசுவது போல் நின்று கொண்டு சற்று உரத்த குரலில்

"உமா சிலர் எல்லாம் எதுக்கு தான் ஆபீஸ் வராங்கனு தெரியல. வேலைக்கு வந்த இடத்துல வேலையப் பாக்காம, வேலை பார்க்கிற ஆம்பளைங்க எல்லாம் மயக்க அலங்காரம் பண்ணிக்கிட்டு வராங்க."

பூஜா உமாவிடம் பேசினாலும் அவள் குரல் அருகில் இருந்த பலருக்கும் கேட்க, கேட்ட அனைவருமே அது கனலி பற்றிய பேச்சு என்பதை புரிந்து கொண்டனர்.

கோபத்தில் கனலில் நிமிர்ந்து பார்க்க உமாவிற்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது.

ஏனெனில் சிறிது நேரத்திற்கு முன்புதான் ஃப்யூன் கனலியை தவறாக பேசிய சுரேஷ்க்கு வேலையை விட்டு நீக்கப்பட்டதாக கூறிவிட்டு சென்றான்.

இப்பொழுது பூஜா தன்னிடம் கனலி பற்றி கூறுவதை கனலி கவனித்துக்கொண்டு இருப்பதை கண்ட உமா 'இன்று தனக்கும் வேலை போய் விடுமோ' என்ற பயத்தில் நாக்கு குழற ஆரம்பித்தது.

உமா பூஜாவை பேச விடாமல் தடுக்க நினைக்க அதையெல்லாம் கண்டுகொள்ளாத பூஜா தன்போக்கில் பேசிக்கொண்டே இருக்க, அதைக் கவனித்த மற்ற அனைவரும் இன்று பூஜாவுக்கு என்ன நடக்கப் போகின்றதோ என்று ஆர்வமுடன் கவனித்துக் கொண்டிருந்தனர்.

மெதுவாக பூஜா அருகில் வந்து நின்ற கனலி எதுவும் பேசாமல் அமைதியாக கையை கட்டிக்கொண்டு நிற்க, ஆத்திரத்தில் ஏதாவது சண்டை விடுவாள் என்று எதிர்பார்த்த பூஜா இப்பொழுது அமைதியாக நிற்கும் கனலி வியப்புடன் பார்த்த வண்ணம் தன் பேச்சை நிறுத்தினாள்.

உமா மேஜை மீது இருந்த அலைபேசியை எடுத்த கனலி, பூஜா முகத்தை பார்த்தக்காெண்டே

"விஜி நான் கனலி விஸ்வஜித் பேசுறேன். இன்னும் பத்து நிமிஷத்துல நான் இந்த கம்பெனி JMDயா ஜாயிண்ட் எல்லா ஃபார்மாலிட்டீஸ் முடிச்சிட்டு வரீங்க.

என்னுடைய ரூம் இனி எம்டி ரூமுக்கு பக்கத்துல இருக்கணும். ரூம் அரேஞ்ச் பண்ற எல்லா வேலையையும் மிஸ்டர் பிரதாப் டீம்ல இருக்கிற மிஸஸ் பூஜா கார்த்தி கிட்ட கொடுத்துடுங்க.

நான் நாளைக்கு மார்னிங் இந்த ஆபீஸ்குள்ள வரும் பொழுது எனக்கான ரூம் ரெடியா இருக்கணும்."



இனி நிஜங்களுடன்.........
 
வாவ் சூப்பர் எப்பி....அவங்க என் அண்ணி ...விஜி மைன்ட் வாய்ஸ்(அதான அவங்கள இங்க வேலைக்கு சேத்தேன்)?????

அருமை...ஆனா இன்னும் விஜிக்கிட்ட இருக்க குழந்தைகள் யாருனு சொல்லலையே....ஒருவேளைஅவன் மாமா பொண்ணோட குழந்தைகளா இருக்குமா...

பூஜா????நிமிந்து நிக்கிற கத்தியப் பாத்து அதில போய் உக்காந்துட்டீயே?????
 
வாவ் சூப்பர் எப்பி....அவங்க என் அண்ணி ...விஜி மைன்ட் வாய்ஸ்(அதான அவங்கள இங்க வேலைக்கு சேத்தேன்)?????

அருமை...ஆனா இன்னும் விஜிக்கிட்ட இருக்க குழந்தைகள் யாருனு சொல்லலையே....ஒருவேளைஅவன் மாமா பொண்ணோட குழந்தைகளா இருக்குமா...

பூஜா????நிமிந்து நிக்கிற கத்தியப் பாத்து அதில போய் உக்காந்துட்டீயே?????
ஒரு டிக்கட்(பூஜா) அவுட்
நெக்ஸ்ட்??????
 
Top