Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 23

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 23


"எங்கள விட்டுட்டு போயிடுவியா பா.....!"

"விஷ்வா எதுக்கு கோபப்பட்ட.....!"

காய்ச்சலின் வேகத்தில் அணத்திக்கொண்டு இருக்கும் பிள்ளைகளை விஸ்வா தவிர வேறு யாராலும் நெருங்க முடியவில்லை. விஷ்வா கலக்கமாய் கனலி முகம் காண அவளோ இனி என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தாள்.

பிள்ளைகள் இருவருக்கும் ஒருசேர காய்ச்சல் வந்தது அவளுக்கும் சங்கடமாகவே இருந்தது. கிருபா அபி இருவரின் அழுது சிவந்த முகமே கனலி மேலும் வேதனையை கொடுத்தது.

தன்னுடைய முகத்தை பார்த்து பிள்ளைகள் இருவரும் அழ தயாராக தான் இன்னும் இங்கே இருந்தாள் மேலும் அவர்கள் அழுவார்கள் என்று

"நான் ரூமுக்கு போறேன்." என்று விஷ்வாவை பார்த்து சொல்லிவிட்டு திரும்ப அவள் அருகில் இருந்த பூரணி

"போதுமடா இதற்காகத்தான் நான் சொன்னேன்...." என்று பேச ஆரம்பிக்க யாழினி

"அக்கா பிள்ளைங்கள கீழ காணோம் இங்க மேல வந்தாங்களா..." என்று விசாரிக்க அடுத்த நிமிடம் வீடு மீண்டும் பரபரப்பு ஆகியது.

பிள்ளைகள் இருவரும் ஒருபுறம் காய்ச்சலில் துடிக்க, மறுபுறம் காணாமல் போன மூன்று பிள்ளைகளை நினைத்து விஷ்வா மனது மேலும் பதறியது.

நேரத்தை வீணடிக்காமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு புறமாக தேடிச்செல்ல அடுத்த ஒரு மணி நேரத்தில் விஸ்வா மூவருடன் வீட்டிற்குள் வந்தான்.

ஆதரவற்ற தோற்றத்தில் சாலையின் ஓரத்தில் நடந்து சென்ற பிள்ளைகள் மூவரும் விஸ்வா கவனத்தில் விழுந்தனர்.கட்டாயப்படுத்தி மூவரையும் வீட்டிற்கு அழைக்க

"நாங்க வந்த கனலி சித்தி சந்தாேஷமா இருக்க மாட்டங்க. பாட்டி எங்கள அவங்க மருமகன் கூட அனுபிடுவாங்க."

'சித்தி' என்ற இந்திரா வார்த்தை விஸ்வா மனதை தைக்க, தன்னால் தான் கனலிக்கு இப்படி சித்தி பட்டம் கிடைக்க வேண்டுமா என்ற எண்ணமே அவன் மூளையை சிந்திக்க விடாமல் செய்தது.

கிருபா, அபி இருவரை யும் அம்மா என்று அழைக்க வைக்க நினைப்பவளுக்கு சித்தி என்ற பெயரா?

மூவரையும் வீட்டிற்கு அழைத்து வந்து சேர நழுங்கி சாேர்ந்து வந்த பிள்ளைகளை தன் கண்களுக்குள் நிரப்பிய கொண்ட கனலி அவர்களிடம் சென்று

"எதற்காக இந்த அம்மாவை விட்டு போக நினைச்சீங்க...." என்று கண்களில் கண்ணீர் வழிய கேட்க மெதுவாக நிமிர்ந்து பார்த்த இந்திரா

"எங்களால நீங்க கஷ்ட பட வேண்டாம் சித்தி....." என்று கூறி முடிக்கும் முன்பு கனலிக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததாே இந்திராவை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தாள்.

ஆத்திரத்தின் உச்சியில் இருந்த கனலியை தடுத்து நிறுத்திய விஷ்வா

"கனலி ஸ்டாப் திஸ் நோன்சென்ஸ்...
உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு சின்ன பையனை இப்படி போட்டு அடிக்கிற..." என்று கேட்க இயலாமையுடன் கூடிய பார்வை ஒன்றை பார்த்த கனலி

"இன்னும் எனக்கு அது மட்டும் தான் பிடிக்கல...." என்று கூறிவிட்டு பெருமுயற்சி எடுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டு

"விஷ்வா நான் கொஞ்ச நாள் அம்மா வீட்டுக்கு போயிட்டு வரேன்....." அனைவரும் ஏதோ கூற வர அவர்களை தடுத்த விஸ்வா

"நீ அம்மா வீட்டுக்கு போறது கொஞ்ச நாளா?
இல்ல நிரந்தரமா?ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா."

நிதானமாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் வெளிவந்த விஸ்வா வார்த்தைகளில் கலங்கி தவித்த கனலி கையாலாகாத தனத்துடன் நிற்க, என்ன நினைத்தனாே

"போயிட்டு வா...." என்ற வார்த்தைகளுடன் விடை கொடுத்தான்.

கனலி தன் தாய் வீடு வந்து இரண்டு நாட்களுக்குப் பின்பும் திலகவதி தன் ஆத்திரத்தை எல்லாம் அப்பொழுது அவ்வப்போது மகளின் மீது காட்டினாலும் கனலி அனைத்தையும் ஒரு உணர்ச்சியற்ற பார்வையுடன் ஏற்றுக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

கனலி வீட்டின் சூழ்நிலைக்கு சற்றும் குறையாமல் விஷ்வா வீட்டிலும் பூரணி வெடித்துக் கொண்டே இருந்தார். ஆனால் விஸ்வா எதையும் காது கொடுத்துக் கேட்க தயாராக இல்லை.

அனைவரும் இப்படியா ஒரு பிரச்சனை வர வேண்டும் என்பது போல இருக்க, இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த பூஜாவிற்கு மனதுக்குள் குத்தாட்டம் போட்டுக் கொண்டு இருந்தாள்.

என்னதான் கார்த்திக் கனலியை வெறுத்தாலும் நடந்தவற்றை எல்லாம் பார்க்கும் பாேது அவள்மீது சிறுது இறக்கம் தோன்றவே செய்தது.

அனைத்து பிரச்சனையும் சுமூகமாக முடிந்து மீண்டும் தங்கை வாழ்வு நன்றாக அமைய வேண்டும் என்று நினைத்தான்.

ஆனால் மறந்தும் அதை வெளியே குறிப்பிடவில்லை, ஏனெனில் அவ்வாறு எதுவும் வெளிப்படையாக செய்தால் மனைவியின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் என்று பயந்தே தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல சுற்றி வந்தான்.

திங்கள் கிழமை காலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு என்ன செய்வது என்பது போல கனலி அமர்ந்து இருக்க அவளை புன்னகையுடன் பூஜா கடந்து சென்றாள்.

கனலி அமர்ந்திருந்த தோற்றத்தை பார்த்து திலகவதி புலம்ப ஆரம்பிக்க தாயின் புலம்பல்கள் காதுகளில் விழுந்தாலும் கனலி கண்டுகொள்ளாமல் இருக்க திடீரென்று தாயின் புலம்பல் நின்றுவிட என்ன என்று பார்த்த கனவில் பார்வை வட்டத்தில் விழுந்தான்....
அவன்.....
அவள் காதல் கணவன்......

"வாங்க மாப்பிள்ளை." என்று மனதில் தோன்றிய நிம்மதியுடன் திலகவதி மருமகனை உள்ளே அழைக்க, கனலி என்ன பேசுவது என்று தெரியாமல் தலை குனிந்து நின்றாள்.

"அத்தை இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. எங்க கம்பெனி ஜேஎம்டி வேலைக்கு வந்தா ரொம்ப நல்லா இருக்கும்." என்று உணர்ச்சியற்ற குரலில் கூறிவிட்டு கனலியை பார்த்தவண்ணம் இருக்க, அவள் வேகமாக சென்று தயாராகி வந்தாள்.

அவள் தயாராகி வந்த வேகம் பார்த்து விஸ்வா மனதுக்குள் புன்னகைக்க திலகவதி வெளிப்படையாகவே சிரித்து வைத்தார்.

அனால் இவை எதுவும் கனலி கவனத்தில் விழவில்லை. விஸ்வாவை எவ்வாறு சந்தித்து சமாதானப்படுத்துவது என்று கனலி நினை த்திருக்க, தானாக வந்த வாய்ப்பை விரநை்து பற்றிக்காெண்டாள்.

விஷ்வா கார் அலுவலகம் நோக்கி செல்லாமல் வேறு பாதையில் செல்வதை உணர்ந்து அவன் புறம் பார்க்க அவனோ சாலையை தவிர வேறு எதையும் நான் பார்க்கப் போவதில்லை என்கிற ரீதியில் வெகு கவனமாக சென்றுகொண்டிருந்தான்.

இப்பொழுது தான் எதுவும் பேசி அது விஸ்வா மனதை காயப்படுத்தி விடக்கூடாது என்று தன் கை விரல்களை அறிந்தபடி ஆராய்ந்த படி எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

அவள் ஒவ்வொரு செய்கையையும் ஓரக்கண்களால் விஸ்வா கவனித்துக் கொண்டுதான் இருந்தான். விஷ்வா ஆடி காரை ஒரு சிறை பங்களா முன்பு நிறுத்திவிட்டு உள்ளே செல்ல கனலி கிட்டத்தட்ட அவன் பின் ஓடினாள் என்றே சொல்ல வேண்டும்.

உள்ளே வந்த பின்பும் விஷ்வா எதுவும் பேசாமல் ஒற்றை சோஃபாவில் அமர்ந்துகொள்ள கனலி அவன் எதிர்ப்புறம் இருந்த மற்றொரு சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

"எதுக்கு நீ இப்படி ஒரு முடிவு எடுத்த கனல்...." என்று கேட்டான்.

உணர்வற்ற குரலில் கேட்க நினைத்தலும் வார்த்தைகளில் இருந்த வலி கனலியை ஏதாே செய்தது. அவன் பார்வையோ எனக்கு உண்மையான பதில் வேண்டும் என்ற ரீதியில் இருக்க இனியும் மறைக்கும் எண்ணம் அவளுக்கு இல்லை

"அது விஜி...... எனக்கு..... கொஞ்சம் குற்ற உணர்ச்சியா இருந்துச்சு அதான்....."

"கில்டினஸ்சா.....?"

"ஆமா...."

"எதற்காக என்று தெரிஞ்சுக்கலாமா...! நீ ஏதாவது தப்பு செஞ்சு இருக்கியா?

"இல்ல விஜி இந்திரா பிறந்ததிலிருந்தே எனக்கு அவன ரொம்ப பிடிக்கும். சம் ஹவ் ஹீ இஸ் கிளோஸ்ட் டூ மீ. அவனுக்கு பேரு வைக்கும்பொழுது எனக்கு உன்னுடைய ஞாபகம் தான் வந்துச்சு. அதனால தான் அவனுக்கு கிட்டத்தட்ட உன்னுடைய பெயர் வருகிற மாதிரி இந்திரஜித் அப்படின்னு பேரு வச்சேன்.

"பிகாஸ் தேட் மச் யூ லவ் மீ.... ரைட்."

"எஸ் ஐ லவ் யூ சாே மச். ஐ நோ நீ நாம பிரிஞ்ச பிறகும் என்னவிட அதிகமா பீலிங்ல தான் கிருபா பேர கிருபாலின்னு மாத்தி வச்சுருப்ப.

அவங்க எல்லாரையும் நாம நம்மளுடைய குழந்தைகளா தான் நினைக்கிறோம்...
ஆனா....
இப்போ அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போட்டுக்கிட்டு நிற்கும்பொழுதும், தங்கள் கஷ்டப்படுத்தி கிட்டு...." என்று சொல்லும்பொழுது அவளுக்கு கண்ணீர் முட்ட

"ஹேய் அவங்க எல்லாரும் குழந்தைகள் கனல், அவங்களுடைய பிரேவியஸ் எப்படி இருக்குமுன்னு யாராலயும் ஃரிடிக்ட் பண்ண முடியாது." என்று சமாதானம் செய்ய நினைக்க

"இல்ல விஜி இப்படி குழந்தைங்க எல்லாம் கஷ்டப்படும்போது நம்மளை தானே எல்லாரும் தப்பா நினைப்பாங்க அதான்...." என்று வார்த்தைகள் தயக்கமாக வெளிவர

"அவங்களுக்கு அப்பா யாரு?" என்று அழுத்தமாக விஸ்வா கேட்க, அவன் குரலில் இருந்த அழுத்தத்தில் நிமிர்ந்து பார்த்த கனலி

"நீதான்." என்று கூற

"அவங்களுக்கு அம்மா நீதானே..!" என்று மேலும் அழுத்தமாக கேட்க அவன் கேட்ட விதத்தில் தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து அமர்ந்த கனலி

"நாம் மட்டும் தான் அவங்களுக்கு அம்மா.
வேற யாருக்கும் அந்த உரிமை இல்லை." என்று சற்று கோபமாகவே கனலி சொல்ல

"அப்படி நீ அவங்களுக்கு அம்மாவா இருக்க நெனச்சா இப்படி ஒரு கில்டி பீலிங் உனக்கு வந்திருக்க கூடாது. அண்ட் அவங்க எல்லாம் நம்முடைய பிள்ளைகள் அப்படி இருக்கும் பொழுது அவங்கள பத்தி முடிவு எடுக்கிற உரிமை நமக்கு மட்டும்தான் இருக்கு."

விஷ்வா எவ்வளவு சமாதானம் கூறினாலும் பிள்ளைகள் விஷயத்தில் அவசரப்பட்டு இனி தன்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று கனலி மீண்டும் தலை குனிந்து அமர்ந்துகொள்ள, அவள் தெளியாத முகத்தை கண்டு அவள் அருகில் வந்து அமர்ந்தான். கனலி ஒரு கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு

"கனல் பேபி என்ன பாரு....
குழந்தைங்க அப்படித்தான் இருப்பாங்க.
கொஞ்ச நாளுக்கு அப்புறம் இப்படி ஒரு சம்பவம் நடந்த மாதிரி அவங்களே காட்டிக்காமல் இருப்பாங்க.
அவங்க ஈஸியா சில விஷயங்களை மறந்துடுவாங்க. நீயும் சிலதை மறக்க முயற்சி பண்ணு, இனி நாம் அவங்களுக்கு ஏற்றமாதிரி நடக்க முயற்சி பண்ணுவோம்." என்று விஷ்வா பொறுமையாக கூற கனலி என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

பிரச்சனையை அருகில் வைத்துப் பார்க்கும் பொழுது பூதாகரமாகவே தெரியும், ஆனால் அதையே நாம் சற்று தொலைவில் வைத்து பார்க்கும் பொழுது இதற்காக நாம் இவ்வளவு பயந்தோம் என்று எண்ண தோன்றும்.

சிலவற்றை நாம் அதன் போக்கிலேயே விட்டுப் பிடிக்க வேண்டும், அதை விட்டுவிட்டு நம்முடைய மனப்பக்குவத்தை குழந்தைகளிடம் எதிர்பார்க்கக்கூடாது.

விஸ்வா சாெல்வது எல்லாம் மூளைக்கு சென்று சேர்ந்தாலும் மனது ஏதோ ஒன்றில் சிக்கி தவித்தது.

"எனக்கு என்ன சொல்றதுனு தெரியல விஜி. ஆனால் நான் பிள்ளைகளுக்கு ஒன்னுனா பார்த்துகிட்டு இருக்க முடியாது. இதுவரைக்கும் தீபா ரூபா இந்திரா மூணு பேருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் எந்த ஒரு குறையும் இல்லாமல் பார்த்து பார்த்து செஞ்சுகிட்டு இருந்தேன்.

அதுமாதிரிதான் கிருபா அபி ரெண்டு பேருக்கும் செய்யணும்னு நினைக்கிறேன். இந்த இரண்டு நாளில் நம்மள மீறி சில விஷயங்களினால் அவங்க ஏங்கும் பொழுதும், அழும் பொழுது எனக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு." என்று மீண்டும் கண்கலங்க அவள் கண்ணீரை துடைத்து விட்ட விஷ்வா

"இப்போ நீதான் பேபி மாதிரி அழுதுகிட்டு இருக்கிற, முதலில் அழுவதை நிறுத்து. சில விஷயங்களில் நாம் அவசரப்பட்டு முடிவு எடுத்து இருக்கிறோம் கனல், இனி அதை சரிசெய்ய பார்க்கணும்." எதைப்பற்றி கூறுகின்றான் என்பது தெரியாமல் கனலி பார்க்க

"ஃபர்ஸ்ட் நம்ம வீட்டுல யார்கிட்டயும் சொல்லாமல் மேரேஜ் பண்ண முடிவு எடுத்தோம். நம்மளால அப்போ சேர்ந்து வாழ முடியாமல் போயிடுச்சு.

செகண்ட் பிள்ளைகளை பத்தி யோசிக்காம முடிவு எடுத்தோம்.. அதுவும் சில பிரச்சினைகளை கொண்டு வந்துவிட்டது.
இந்த தடவை எல்லாரையும் சமாதான படுத்துவோம் ஓகே." என்று கூறி விட்டு

இனி எப்படி இது வீட்டாரையும் பிள்ளைகளையும் சமாதானப்படுத்துவது என்று பேசி முடித்துவிட்டு புன்னகையுடனே நாளைய தினத்தை எப்படி கையாள்வது என்பது பற்றிய திட்டத்துடன் அலுவலகம் நோக்கி பயணித்தனர்.

காலையில் வெகு விரைவாக அலுவலகம் வந்த பூஜா இரு தினங்களுக்கு முன் வந்த பிரச்சனையை தனக்கு ஏற்றார்போல திரித்து கதை பரப்பினாள்.

இனி விஷ்வா கனலில் இருவரும் பிரிந்து விடுவார்கள் என்ற ரீதியில் அலுவலகத்தில் கதை கட்டி விட ஆரம்பித்தாள். அவள் கூறுவதை கேட்டேன் அனைவருக்கும் அதை நம்புவதா! வேண்டாமா? என்று தெரியவில்லை.

வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பூஜா கனலியின் அண்ணி என்கின்ற அளவு தெரிந்திருந்தது. ஏதோ குடும்பப் பிரச்சினையில் காரணமாகவே கனலி பற்றி இவ்வாறு பேசுகின்றாள் என்பது என்று புரிந்து கொண்டாலும் அடுத்தவீட்டு பிரச்சனைகளை பற்றி பேசுவது என்பது மற்றவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போன்று அல்லவா..!

இனி கனலி விஸ்வா வாழ்க்கையில் விட்டு நிரந்தரமாக பிரிந்து விடுவாள் என்று பூஜா கூறிக்கொண்டு இருக்க சிலர்

'இப்படியா ஒரு பெண் பேசுவாள்.?' என்று ஆற்றாமையுடனும், 'அவள் கூறுவது போல் நடந்து விடக்கூடாது' என்று சிலர் கவலையுடனும், 'எது நடந்தால் நமக்கென்ன' என்று சிலரும் தங்கள் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்க, அவர்கள் என்ன நாயகனும் நாயகியும் ஜோடியாக சிரித்துக்கொண்டே அலுவலகத்திற்குள் வந்தனர்.

அவர்கள் இருவரின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்தவர்களின் கண்கள் பூஜாவை பார்க்க, அனைவரின் பார்வையில் இருந்த செய்தியில் பூஜா முகம் அவமானத்தில் கருத்தது....

இனி நினைவை நிஜமாக்க......

கனலி விஸ்வா பிரிஞ்சதுல வருத்தப்பட்ட பலர் என்னை பஞ்சர் பண்ண காரணத்தால் உடனே சேர்த்து வை த்து விட்டேன்.
மீ குட் கேள் மா..
படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க.
 
I started yesterday night around 9pm now I finished upto this episode, entha oru ethirparpum illamal than padika arambithen now I am fan for u, I found few spelling mistakes mostly kanali name, குழந்தைகளை பற்றி யோசிக்கலாம் இருந்தது தவறு இனி அதை புரிந்து சரி செய்ய முடிவு எடுத்த பின் கஷ்டங்களும் கானல் நீர்...
ஏற்கனவே 10வருடங்கள் வீன் இனியும் அவர்களை பிரித்தால் எப்படி ஏற்பது ஆகவேதான் எல்லோரும் உங்கள் மேல் கோவம், பூஜா விற்கு அவள் கணவன் ஏதாவது shock treatment கொடுத்தால் நல்லா இருக்கும் (நேயர் விருப்பம்), we are expecting happy episodes, குழந்தைகளை சமாதானம் செய்வதை jollya sonna nalla irukum
 
Top