Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு விமர்சனம்

Advertisement

Chitrasaraswathi64@gmail.

Well-known member
Member
தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை 005 கதிர் நிலவு எனது பார்வையில். பெற்றோரை விபத்தில் இழந்தாலும் தாத்தா, பாட்டி மற்றும் சித்தப்பா திருமணம் செய்து கொள்ளாமல் அவனை மகனாக பார்த்துக் கொள்ளும் கண்ணபிரான் உடன் இருந்து சொந்த ஊரான ஏற்காட்டில் காபி மற்றும் மிளகு விவசாயம் மற்றும் ஏற்றுமதி செய்கிறான். தந்தையின் மற்ற இரு சகோதரர்கள் ராஜேந்திரன் கதிரின் அப்பா ராஜதுரை மீது வருத்தத்தில் இருப்பதால் அதிகம் ஒட்டாமல் இருக்கிறார். பள்ளி படிப்பை முடித்த உடனே தொழிலில் ஈடுபட்டதால் தொலைதூரக் கல்வியில் இளநிலை பட்டம் பெறுகிறான். சின்ன அத்தை காந்தள் மகன் அஜய் கதிர் மீது எதிர்மறை எண்ணங்கள் கொண்டவன். ஆனால் மருத்துவம் படிக்கும் அவன் தங்கை வெண்ணிலா கதிர் குமரனை விரும்புகிறாள். ஆனால் கதிர் அவள் படிப்பை நிறைவு செய்யாமல் இருப்பதால் தன் மனதை வெளிப்படுத்தாமல் இருக்கும் அவர்களின் திருமணம் நடைபெற்றதா. இல்லை பாட்டி தாத்தா பெரிய அத்தை பெண் மதியை திருமணம் செய்ய நினைப்பது நடந்ததா என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார். காபி மற்றும் மலையில் விளையும் பொருட்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் பற்றிய விவரங்கள் தந்திருப்பது நன்றாக இருக்கிறது. குடும்ப ஒற்றுமை மற்றும் உறவுகள் அருமையை உணர்த்துவது நன்று. எல்லா கதாபாத்திரங்களும் கச்சிதமாக இருந்தது. பாட்டி, தாத்தா மற்றும் சித்தப்பா அருமையான கதாபாத்திரங்கள். வாழ்த்துகள் எழுத்தாளரே.
 
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்.
 
Top