கவிக்குயிலின்_கவி_விமர்சனம்

Advertisement

Mrs beena loganathan

Well-known member
Member
#CompletedStory
#TNWContest2026

#நெஞ்சமெல்லாம்_நிலவாக_நீ
#லாவண்யா_ராஜேஷ்

#திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன்
#கவிக்குயிலின்_கவி_விமர்சனம்

ரேவந்த்🌿ரேஷ்மா

அண்ணன் தங்கை பாசம்


அன்பின் அர்த்தம் அறிந்தவன்
அண்ணன் என்ற உறவில் உயர்ந்தவன்...

அம்மாவையும் அப்பாவையும் இழந்த பின்
அனாதையென விடாமல் காத்தவன்...

அடைக்கலமாய் மாமன் நிழல் இருந்தாலும்
அரவணைப்பாய் தங்கைக்கு துணை நின்றவன்...

ஆளுமையும் ஆதிக்கமும் கொண்ட ரேவந்த்
அச்சமின்றி வாழ்க்கையை எதிர்கொண்டவன்...

அன்பின் பெயரில் கட்டுப்படுத்தாமல்
அவளின் கனவுகளுக்கு மதிப்பளித்தவன்...

அறிவும் தைரியமும் நிறைந்த தங்கையின்
ஆசைகளைக் கேட்டு புரிந்துகொண்டவன்...

அவள் விரும்பிய வாழ்க்கைத்துணையை
அன்போடு ஏற்று ஆசீர்வதித்தவன்...

அண்ணன் என்பவன் காவலன் மட்டுமல்ல,
அவள் சிரிப்பை காக்கும் தந்தையும் கூட.....



அன்பான முத்தான மூன்று அக்கா தங்கைகள்....

இனியா,மதுரா,இலக்கியா


அப்பாவின் ஸ்தானத்தில் நின்று
அக்காவிற்கு திருமணம் செய்து
அரவணைத்து காத்தவள் மதுரா...

அன்னையின் கரம் போல
அன்பை அள்ளித் தந்தவள்...

அதிரடி கோபம் காட்டினாலும்
அதன் பின்னால் அக்கறை மறைந்திருக்கும்...

அழுகையில் தோள் கொடுத்து
அச்சங்கள் அனைத்தையும் அகற்றியவள்...

அன்பு, அக்கறை, அதட்டல், கொஞ்சல் என
அனைத்தையும் அளவாக கலந்து,

அருமையான உறவின் அர்த்தத்தை
அன்றாடம் உணர வைத்தவள்...

அக்கா–தங்கை பாசமென்பது
அலைகள் ஓயாத கடல் போன்றது...

அதன் ஒளி நிலவென
அமைதியாக நெஞ்சங்களை வருடுகிறது...

அருகில் இருந்தாலும், தூரத்தில் இருந்தாலும்
அன்பு மட்டும் குறைவதில்லை...

அழியாத நினைவுகளோடு
அக்காவாகவும் அன்னையாகவும் வாழும்
அருமை மதுரா...
அன்பின் நிலவாய் என்றும் ஒளிர்கிறாள்!


லக்கி 🔥 ரேவந்த்

லாவகமாக சிரிக்க வைத்தும்
லயித்த மனதை மீட்டும்
லக்கிக்கு அக்கறை காட்டி
லேசான வருத்தம் வந்தாலே
லயித்து கலங்கும் பாசம் கொண்டது...
லக்கிக்கும் ரேவந்திற்கும் இடையில்
லோகமே வியக்கும் நட்பு....

யுவி ⭐💐காதல்

யாசிக்கும் பக்தனாக
யுகம் காத்து இருந்து
யுவி கைசேரும் காதல்....


தாய் தந்தையின் வாழ்வு
தெரியாத வயதிலும்
தெளிந்த எண்ணம்
திடமான மனம் தான்
தைரியமாக வாழ்வை
தனித்து வாழ
திடம் வந்தது
இருவருக்கும்.....



ஸ்வீட்டி ❤️ ஊட்டி

நிழலாய் வந்து நெஞ்சில் நின்ற
நேசம் என்ற சிறு விதை
நாளடைவில் காதலாய் மலர....


நனவாகாத சிறுவயது ஈர்ப்பு
நாட்கள் கடந்தும் நினைவாய் தங்கிட...


நெடுந்தூரம் பிரித்த காலமும்
நெஞ்சங்கள் நினைவில் பிரியவில்லை...


நொந்திட வைத்த சோகங்களும்
நிழல்போல் தொடர்ந்த பிரிவுகளும்...


நடுவே நுழைந்த சதிகளால்
நம்பிக்கை கூட தடுமாறிட...


நேர்மையான உறவுகளின் புரிதல்
நெருக்கத்தை மீண்டும் விதைத்திட...


நாட்கள் கலைத்த பந்தத்தை
நேசம் மீண்டும் இணைத்தது...


நிலவொளி போல அமைதியாக
நித்தமும் மனதை வருடும் காதல்...

நினைவுகள் நிறைந்த வாழ்வாக
நெஞ்சில் என்றும் ஒளிர்ந்து நின்றது...
நெஞ்சமெல்லாம் நிலவாக நீ....

வெற்றி பெற வாழ்த்துக்கள் மா 💐 👏🏻 👌🏻👏🏻👏🏻👏🏻👍🏻❤️🔥

 

Advertisement

Advertisement

Back
Top