Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் கண்ட கணமே- பாகம் 14

Advertisement

பிரேமாமகள்

Well-known member
Member
பாகம் – 14

இடம்: லவ்வபிள் லண்டன்

நேரம் : காதலிக்க உகந்த நேரம்


விடியும் காலை அற்புதமாக இருந்தது. ஆம் காதல் வயப்பட்டால், இந்த உலகத்தில் எல்லாம் அழகாய் தெரியும்.

காணுகிற காட்சியெல்லாம் உந்தன் பூ முகம்
அது எந்தன் ஞாபகம்’


என்று பாடத் தோன்றும்.

இந்த அர்ஜூனுக்கும் காதல் வந்திருச்சு. திகட்ட திகட்ட அமுதினியை காதலிக்கப் போறேன். அவளின் அன்பில் மூழ்கி முத்தெடுக்கப் போறேன் சாரி அவளுக்குள் என் காதல் முத்தை விதைக்கப்போறேன். நான் பேசறது உங்களுக்கு அபத்தமாய் தோன்றலாம்.

ஆனா இது என் வாழ்க்கை, யாரைக் காதலிக்கனும்ன்னு நாந்தான் முடிவு பண்ணுவேன். என்னைப் புடிச்சிருந்தா என் காதலை ரசிங்க. புடிக்கவில்லை என்றால் கந்தபுராணம் படிங்க. ஆனா அதுவும் முருகன்-வள்ளி காதல்ல தான் முடியும். ஆக காதல் இல்லாமல் உலகம் இல்லை. காதலிக்காத கடவுளும் இல்லை. நவ் அர்ஜூன் ஆன் லவ் மோட் டியூட்.

முதல் கட்டமாய் அம்முவைப் பற்றி முழுமையாய் தெரிந்துகொள்ளவேண்டும். சும்மாவே எதாவது காரணம் சொல்லி அவள் வீட்டிற்குச் செல்வேன். இனி கேட்கவா வேண்டும்? காலை 7 மணிக்கே அவள் வீட்டு முன் நின்று கொண்டு, கதவை திறக்கச் சொல்வதற்காக போன் பண்ணினேன்.

‘’என்ன இவ்வளவு சீக்கிரம் வந்திருக்கீங்க’’ என்றாள்.

‘’உன்னைப் பார்க்கத்தான்’’ என்றேன்

‘’நேத்துதான பார்த்தோம், அதுக்குள்ள என்ன?’’

‘’நான் நேத்து பார்த்த பார்வை வேற, இனி நான் பார்க்கத் துடிக்கிற பார்வை வேற, முதல்ல கதவைத் திறடி’’ என்றேன். களைந்த முடிகளோடு, கழுத்து இறங்கிய நைட்டியில் அழகோவியமாய் வந்தாள். எனக்குள் எழுந்த பெரும் மூச்சை அடக்கியபடி,

‘’ போ, காப்பி போட்டுத் தா’’ என்றேன்.

கோபப்பார்வை ஒன்றை வீசியவள்,

‘’ ஏன் அந்த காப்பியை உங்க வீட்டில் போட்டுக் குடிக்கத் தெரியாதா? இதுக்காக மெனக்கெட்டு வந்திங்களாக்கும்? எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் தூங்கனும்’’ என்றபடி படுக்கையறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள்.

அடிங்… மாமன் உன்னை நினைச்சுத் தூங்க முடியாமல் தவிக்கிறேன். நீ மட்டும் எப்படி தூங்கலாம்? எதாவது செஞ்சாகனுமே! ஆங் ஐடியா, டி.வியை ஆன் பண்ணி, யூடியூப்பில் சத்தமாகப் பாட்டு வைத்தேன்.

காதல் ஆசை யாரை விட்டதோ

உன் ஒற்றைப் பார்வை ஓடிவந்து

உயிரைத் தொட்டதோ

காதல் தொல்லை தாங்கவில்லையே

அதைத் தட்டிக் கேட்க

உன்னைவிட்டால் யாரும் இல்லையே!’


கூடச் சேர்ந்து நானும் பாடினேன், கடுப்பானவள், தலையனையை எடுத்துவந்து என்னை அடித்தாள். ‘’பக்கத்தில் வீடுங்க இருக்கு. எதுக்கு, காலங்க்காத்தால இவ்வளவு சத்தமா பாட்டு வைச்சு பிரச்சனைப் பண்ணறீங்க’’ என்று திட்டினாள்.

‘’அப்ப எனக்கு காப்பி போட்டுத்தா’’ என்றேன்.

கேவலமான பார்வை ஒன்றை வீசினாலும், பல்விளக்கி, முகம் கழுவிவிட்டு வந்து காபி போட்டுத் தந்தாள். காபியை உறிஞ்சியபடியே பார்வையால் அவளை பருகினேன்.

’’ஓய்… என்ன முழுங்கற மாதிரி பார்க்கறீங்க, சைட் அடிக்கறீங்களா?’’

‘’இல்ல, அதுக்கு மேல’’என்றேன் கண்ணடித்து.

‘புத்தி ஏன் இப்படி போகுது உங்களுக்கு? அதுசரி. எதுக்கு இவ்வளவு காலையில் கிளம்பி வந்தீங்க?’’

………………………………………………

‘’உங்களுக்கு என்னவோ ஆகிடுச்சு, பேய் ஏதும் புடிச்சிடுச்சா?’’

‘’ஆமா ஒரு மோகினிப் பிசாசு புடிச்சிருக்கு. என்னை அடையாமல் அது அடங்காதாம்’’ என்றேன்.

‘’முடியல, இன்னிக்கு நீங்க ஒரு மார்க்கமாகத்தான் இருக்கீங்க’’ என்றபடி தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

‘’ஹேய் இனி, நான் கேட்கிற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லனும். குறுக்க எதுவும் கேட்க கூடாது சரியா?’’

‘’என்ன ‘இனி’யா? இதென்ன புதுசா?’’ என்றாள்.

‘’உன் பெயரின் பின்பகுதி, எல்லோரும் உன்னை அம்முன்னு கூப்பிடறாங்க. நான் மட்டும் ஸ்பெஷலா ‘இனி’ன்னுதான் கூப்பிடுவேன் என்றேன்.

‘ஸ்ஸப்பா’ என்று போலியாகச் சலித்துக் கொண்டாலும், உள்ளுக்குள் ரசிக்கிறாள் என்று புரிந்தது.

‘’ம்ம்… சரி என்ன கேட்கனுமோ கேளுங்க’’ என்றாள்.

‘’உங்க அண்ணன் பேரு என்ன?’’

‘’அவனப்பத்தி உங்ககிட்ட சொல்லிருக்கேனே? போட்டோ கூட காட்டிருக்கேனே?’’ என்றாள்.

‘’கேள்விக்கு பதில் மட்டும் சொல்லுன்னு சொன்னேன்’’

‘’ஓ.கே, சரவணன்’’

‘’உங்கக்கா பேரு என்ன?’’

‘’விஜயா’

‘’உங்க அம்மா பேரு என்ன?’’

‘’சந்திரா’’

‘’உன் புருஷன் பேரு என்ன?’’

‘’அது வந்து’’

‘’பதில் மட்டும் போதும்’’

‘’தயவு செய்து என்னைப் பேசவிடுங்க, நான் என்ன சொல்ல வர்றேன்னு இப்பவாவது கேளுங்க பிளீஸ்’’ என்றாள்.

‘’அமுதினி, உனக்கு என் மேல பாசம் இருந்தா, கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு. நீ வேற என்ன சொல்ல முயற்சி செஞ்சாலும், என்னை உனக்கு புடிக்காதுன்னு நினைச்சுக்குவேன்’’ என்றேன் உறுதியாக.

அம்மு மைண்ட் வாய்ஸ்…

(‘இவன் கடைசி வரைக்கும் இப்படியேதான் இருப்பானா?, சரி எதாவது பேரைச் சொல்லி இந்த குயிஸ் புரோகிராம்க்கு முற்றுப் புள்ளி வைப்போம். சட்டுன்னு ஒரு பேரும் தோண மாட்டீங்கிதே? ஆங்… ரகுவரன், நல்லாயிருக்கு. இதிலேயே பிக்ஸ் ஆகிடுவோம்.)

‘’ரகுவரன்’’

‘’என்னது, கேட்கல, ஒழுங்காச் சொல்லு’’ என்றேன்.

‘’ரகுவரன்’’ என்று சத்தமாகக் கத்தினாள்.

‘’ எனக்கு வில்லன்டி’’

‘’என்ன என்ன சொன்னீங்க?

‘’இல்ல, வில்லனோட பேருன்னு சொன்னேன்’’ என்று பல்லைக் காட்டி சமாளித்தேன்.

‘’யோவ் ரகுவரா, எங்கய்யா இருக்க? உன் முன் கதைச் சுருக்கம் என்ன?’’ என்றது அர்ஜூனனின் மனசாட்சி.

காதல் வளரும்
 
அர்ஜுன் கொஞ்சம் அமுதிணி சொல்லுறத்தை கேட்டா தான் என்ன
.... அந்த கல்யாணம் அதில் ஏதோ ஒன்னும் இருக்கு ஆனா என்ன
 
அர்ஜுன் கொஞ்சம் அமுதிணி சொல்லுறத்தை கேட்டா தான் என்ன
.... அந்த கல்யாணம் அதில் ஏதோ ஒன்னும் இருக்கு ஆனா என்ன


அர்ஜூன்க்கு அறிவு இருக்கும் அளவுக்கு பொறுமை இல்லீங்க.
 
Top