Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் கண்ட கணமே- பாகம் 19 (இறுதி)

Advertisement

பிரேமாமகள்

Well-known member
Member
பாகம் – 19



இடம்: அமுதினி வீடு

நேரம்: இனியெல்லாம் சுகமே!

அர்ஜூன் அடித்த அடியில் பொறி கலங்கினாலும், பொய் சொன்ன காரணத்தால் அமைதியாய் இருந்தேன். என் மெளனம் அவனை தொந்தரவு செய்திருக்க வேண்டும். அடிபட்ட இடத்தை மிக மிருதுவாக தடவிக் கொடுத்தவன்,

‘’எதுக்கு இனி, அப்படி சொன்ன? உனக்கு கல்யாணம் ஆகலைன்னு எனக்கும் தெரியும். ஆனா நீ ஏன் அப்படி சொன்னன்னு தெரியாமல்தான் ரொம்ப கஷ்டப்பட்டேன்னு’’ அர்ஜூன் சொல்லும் போது ஆச்சர்யப்படுவது என் முறையானது.

‘’உங்களுக்கு தெரியுமா? எப்படி? அப்ப ஏன், இத்தனை நாளாய் எங்கிட்ட கேட்கல’’ என்றேன்.

‘’உனக்கு கல்யாணம் ஆகலைன்னு கண்டுபிடிச்சிட்டேன். ஆனாலும் நீ சொன்னது ஒருவேளை உண்மையா இருக்குமோன்னு உள்மனசு படபடத்தது. என் இனி பொய் சொல்லத் தெரியாதவள்ன்னு நம்பினேன்’’ என்றான்.

‘’அன்னிக்கு அப்படி சொன்னாலும், அதன்பிறகு பல முறை உண்மையைச் சொல்ல நினைச்சேன். ஆனா நீங்க எங்க சொல்ல விட்டீங்க? நான் பேச ஆரம்பிக்கும் போதெல்லாம் எதாவது சொல்லி என் வாயை அடைச்சிடுவீங்க’’ என்று சிணுங்கியபடியே,

‘’சரி, எப்படி தெரியவந்தது?’’ என்று கேட்டேன்.

‘நீ எங்கம்மாவை இன்ஸ்டாகிராமில் பின்பற்றினால், நான் உன் குடும்பத்தை நேரிலேயே பின் தொடர்ந்தேன்’’ என்று அர்ஜூன் சொல்லும் போது ஆச்சர்யத்தில் என் கண்கள் விரிந்தது.

‘’எங்களுக்கும் மூளையை உபயோக்க தெரியும் பேபி’’ என்று கண்ணடித்தவன்,

‘’உங்க கடை சேலத்தில் பிரபலம் என்பதால், உங்க ஊர்ல ஒரு கல்யாண தரகரைப் புடிச்சு, உங்கப்பாக்கிட்ட அனுப்பி வைச்சேன்.

அவரும் நான் சொல்லிக் குடுத்த மாதிரியே, ‘ உங்க பையன் சரவணனுக்கு பொண்ணு ஏதும் பார்க்கறீங்களா?’ ன்னு பிட்டு போட்டாரு. உங்கப்பாவும், ‘இல்லீங்க, சின்னவளுக்கு கல்யாணம் முடிச்சிட்டுத்தான் பையனுக்கு பார்க்கனும்’ ன்னு சொன்னாரு.

அப்ப உனக்கு கல்யாணம் ஆகலைன்னு சந்தோஷப்பட்டாலும் ‘அலைபாயுதே’ ஸ்டைலில் வீட்டுக்குத் தெரியாமல் கல்யாணம் பண்ணி, அவன் உன்னை விட்டிட்டு ஓடிட்டானோன்னு ஒரு சந்தேகம்.

அப்புறம் உன் பிரெண்டு கவியை சுத்தி வளைச்சோம். என் பிரெண்டோட தங்கச்சியை கவிக்கிட்ட பேச வைச்சு, ரகுவரன்ங்கிற பேரில் யாரையாவது தெரியுமான்னு விசாரிச்சுப் பார்த்தோம். அவளும் அப்படியெல்லாம் இல்லைன்னு சொன்னாள். உன் ஃபேஸ் புக் பக்கத்திலேயும் எந்த விபரமும் கிடைக்கல. கடைசி முயற்சியா சேலம் மாவட்டம் மட்டுமல்லாமல், நாமக்கல், ஈரோடு ஒசூர்ன்னு பக்கத்திலிருந்த மாவட்ட திருமண பதிவாளர் அலுவலகத்திலும் விசாரிச்சிட்டோம். அமுதினி புருஷோத்தமன்- ரகுவரன்ங்க்கிற பேரில் எந்த கல்யாணமும் பதிவாகலைன்னு சொல்லிட்டாங்க.

உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனது எனக்கு பிரச்சனை இல்லை, ஆனா அந்த ரகுவரன் உயிரோட இருந்து, மறுபடியும் உனக்கு எதாவது தொல்லைதரக் கூடாதுன்னுதான் தீவிர விசாரிச்சேன்.

சினிமாவில் கண்டதும் காதல்ன்னு சொல்றப்பெல்லாம் விழுந்து விழுந்து கலாய்ச்ச நானே, கோயிலில் உன்னைப் பார்த்ததும் கிறங்கிப் போவேன்னு நினைக்கல.

நீ யாரு என்னன்னு தெரியாமலேயே, எனக்கானவள் நீயா இருக்கனும்ன்னு சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டேன். ஆனா உனக்கு என் மேல குறைந்தபட்ச நம்பிக்கைகூட இல்லாமல்தான் பொய் சொல்லிருக்கேங்கிற ஆத்திரத்தில்தான் அடிச்சிட்டேன். சாரிடி’’ என்றபடி என் கன்னத்தை தன் கைகளில் ஏந்திக் கொண்டான்.

‘’யப்பா, இந்த மூளை என்னமா வேலை செஞ்சிருக்கு? அமுதினி கொடுத்துவைச்சவதான்’’ என்று அவனை வம்புக்கு இழுத்தேன்.

‘’ஏன்டி பொய் சொன்ன?’ என்று நிஜமாகவே வருத்தப்பட்டான் அர்ஜூன்

‘’கண்டதும் காதல் வந்தது உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் தான், பார்த்தவுடனே மனசுக்குள்ள பயர் அலாரம் அடிச்சிது. ஹாஸ்பிட்டலில் உங்களைப் பத்தி தெரிஞ்சதும் அலாரம் இன்னும் வேகமா அடிச்சிது.

பத்தாதுக்கு நீங்க வீடு வரைக்கும் கொண்டு வந்துவிட்டீங்க. உங்களோட ஒவ்வோரு செயலிலும் நீங்களும் கவுந்திட்டீங்கன்னு தெரிஞ்சது. போறப் போக்கைப் பார்த்தா, அடுத்த மாசமே, அம்முவை ‘அம்மா’ ஆக்கிடுவீங்க என்ற எண்ணத்தில் ஒரு தற்காப்புக்காகத்தான் அப்படி சொன்னேன்.

அதன்பிறகு, எவ்வளவு வருத்தப்பட்டேன்னு தெரியுமா? எத்தனையோ தடவை சொல்ல வந்தேன். ஆனா நீங்க கேட்க ரெடியா இல்லை. சரி இவன் கடைசி வரைக்கும் முரட்டு சிங்கிளாவே சுத்தட்டும்ன்னு விட்டிட்டேன்’’ என்றேன் கண்ணடித்தபடி.

‘’அடிங், இத்தனை நாள், என்னை கதற விட்டதுக்கு உன்னை பழிவாங்காமல் விட மாட்டேன்டி’’ என்று என்னை தன்னோடு சேர்த்து இழுத்தவன், என் கண்ணில் தெரிந்த கலக்கத்தைக் கண்டு,

‘’என்னடி’’ என்றான்.

‘’இல்ல, நாம ரெண்டு பேரும், ஒன்னு சேர முடிவெடுத்திடோம். ஆனா இதை உங்க வீட்டில் எப்படி எடுத்துக்குவாங்க? எங்கப்பா என்ன சொல்வார்ன்னு நினைச்சாலே பயமா இருக்கு. வெளிநாட்டுக்கு வந்ததும் திமிரெடுத்து ஆடறோம்ன்னு திட்டுவாங்களா?’’ என்று என் பயத்தைச் சொன்னேன்.

‘’ஹேய் இனி, ஏன் பயப்படுற? நாம ஒன்னும் டீன் ஏஜ் புள்ளைங்க மாதிரி வயசுக் கோளாறில் தப்பான முடிவு எடுக்கல. நானும் படிச்சிட்டு வேலை பார்க்கிறேன். நீ இன்னும் ஒருபடி மேலபோய், தன்னந்தனியா ஒரு கடையையே நிர்வாகம் செய்யற, இத்தனை நாள் பழகிய பழக்கத்தில் நாம தேர்ந்தெடுத்தவங்க, நல்லவங்களா இல்லை கெட்டவங்களான்னு கூடவா தெரியாது?

உங்க வீட்டில் நீ பேசு. எங்க வீட்டில் நான் பேசி புரியவைக்கிறேன். எல்லாம் நாம பேசறவிதத்தில் தான் இருக்கு. நிச்சயம் ஒத்துக்குவாங்க.

அதுவும் இல்லாமல் எங்கம்மாவுக்கு புடவைன்னா ரொம்ப புடிக்கும். 3 ஃபீரோ வழிய அடுக்கி வைச்சிருக்காங்க. ஜவுளிக்கடை சம்பந்தம்ன்னா, விதவிதமா புதுப்புடவை எடுக்கலாங்கிற ஆசையில் உன்னை ஏத்துக்குவாங்க.

என்னை மாதிரி, இங்கிலாந்தில் அரசாங்க சம்பளம் வாங்கிறவன் மருமகனா வர, உங்கப்பா குடுத்து வைச்சருக்கனும். என் பொண்ணைக் கட்டிக்கங்கன்னு கும்பிடு போட்டு, பொண்ணுத் தருவாரு பாரு’’ என்று அவன் சொன்னதும் எனக்கு கோபம் வந்துவிட்டது.

‘’என்னது, எங்கப்பா உங்களுக்கு கும்பிடு போடனுமா? நான் உங்க வீட்டுக்கு வர, உங்க பரம்பரையே புண்ணியம் பண்ணிருக்கனும். உங்க பவுசுக்கு கோழிப் பண்ணைக்காரிதான் கிடைப்பாள்’’ என்றபடி அவனை முறைத்தேன்.

‘’விடுறி, விடுறி, இனி அந்த கோழிபுடிக்கிறவ நீதாண்டி’’ என்றபடி என்னை அணைத்துக் கொண்டான்.

‘’அப்ப நமக்கு கல்யாணம் ஆனபிறகு திரும்பவும் லண்டனே வந்திடுவோமா? ஐ ஜாலி’’ என்று குதுகலித்தேன்.

‘’ஆமா, இப்போதைக்கு இங்கேயே இருக்கலாம். பின்னாடி இந்தியாவுல போய் வாழ நினைச்சால், ஊருக்கு போய்டலாம், ஆனா ஒன்னு எங்கிருந்தாலும் சண்டைப் போடாமல், ஒற்றுமையாய் சந்தோஷமாய் இருக்கலாம்.

கல்யாணம் ஆகற வரைக்கும், அதுக்கான டிரையல் பார்க்கலாம்’’ என்றவன் ஒரு கையால் என்னை அணைத்தபடி மறுகையால் லைட்டை அணைத்தான்.

கதை பதிவாளர் மைண்ட் வாய்ஸ்

(அடேய் அர்ஜூனா, இப்படி லைட் ஆப் பண்ணினால், அங்க என்ன நடக்குதுன்னு எனக்கு எப்படிடா தெரியும், அப்புறம் எப்படி நான் கதை எழுதறது?.)


பத்து நாட்களுக்குப் பிறகு,

அமுதினி இந்தியாவுக்கு திரும்பிவிட்டாள், அர்ஜூனும் வீட்டில் விசயத்தைச் சொல்லியவுடன், அவங்கம்மா சேலத்துக்குப் பொண்ணு கேட்டுப் போய், பேசி முடிச்சிட்டாங்க. கல்யாண ஏற்பாடு ஆனதும், அர்ஜூனும் ஊருக்குச் சென்று, பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்கள் ஆசியுடன் அமுதினியைத் திருமணம் செய்து கொண்டான். இப்ப இருவரும் தேனிலவுக்காக கோவா போயிருக்காங்க.

*சுபம்*
 
எங்கம்மா புடவை நிறைய எடுக்கலாமுன்னு ok சொல்லுவாங்க,, உங்கப்பாவுக்கு வெளிநாட்டுல கவர்மெண்ட் மாப்பிள்ளைன்னு சொல்லி ok சொல்லிடுவாரு ?????
சூப்பர் அர்ஜு ????
 
என்ன அதுக்குள்ளே இந்த அழகிய நாவல் முடிந்து விட்டதா?
ரொம்பவே குட்டி கதையா, பிரேமா டியர்?
 
Semma jolly story saree kaandi ponnu k va very gud family romba chinna story ah irukkey pa its k eagerly waiting for ur next one
All the best for ur upcoming stories
 
Top