Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் - 13

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member
தன் படுக்கையில் வந்து சாய்ந்த கண்மணிக்கு சட்டென்று ஒரு சோர்வு வந்து இதயத்தை பீடிக்க கண்கள் மூடிக்கொண்டன..மறுபடியும் ஒரு சிறு தூக்கம் ..மயக்கமா உறக்கமா என்று பிரித்தறிய முடியாத உறக்கம். ..ஆயாசத்துடன்.

மறுபடி இவள் விழிக்கும் போது இவளை தவிர மொத வீடும் விழித்து அமர்ந்திருக்க ..ஒரு பரபரப்பும் சலசலப்பும் இருப்பது புரிந்தது.

தன்யஸ்ரீ வேக வேகமாய் கதவை திறந்து உள்ளே வந்தாள்.

"ஏய் கண்மணி ..உன் பிரெண்டு முத்துச்செல்வி இருக்காளே ..அவள் தங்கச்சி சூசைட் பண்ணிக்கிட்டாளாம் .."

முத்துச்செல்வி இவளுடன் அதே கல்லூரியில் பயில்பவள். வெவ்வேறு துறை இருவரும்!
விடுதியிலிலும் பக்கம் பக்கம் அறை தான். எப்போதும் ஒன்றாக தான் சுற்றுவர். ஆனாலும் நெருக்கமா என்றால் இல்லை!

அது என்னவோ ப்ரியாதான் இவளுக்கு மனதளவில் நெருக்கம்..முத்துசெல்வியே ஒட்டாமல் இருப்பது போல் தான் இருக்கும்.

ஏற்கனவே பெரும் குழப்பத்தில் இருந்த கண்மணிக்கு ஒன்றுமே புரியவில்லை .."என்னடி சொல்ற ?"என்று திரும்பவும் கேட்க ..

"ஏண்டி உனக்கென்ன காது கேக்காம போய்டுச்சா ?"

"முத்துச்செல்வி தங்கச்சி ராமலக்ஷ்மி சூசைட் பண்ணிகிட்டாளாம் ... பெரியம்மா பெரியப்பா அங்க போயாச்சு ..நீ எழுந்ததும் வர சொன்னாங்க "

இதற்குள் சமையல் வேலை செய்யும் செல்வி காபியோடு வரவும்.. அது அந்நேரம் கண்மணிக்கு மிகவும் தேவையாய் இருந்தது.

முத்து செல்வி சென்ற வாரமே ஊருக்கு வந்திருந்தாள். வீட்டில் ஏதோ பிரச்சனை என்பது வரை மட்டுமே இவள் அறிந்தது. என்னவாக இருக்கும்? என்று இவள் இதுவரை சிந்திக்கவில்லை.

"எதுக்குடி சூசைட் பண்ணிக்கிட்டா?" செல்வியை பார்த்து இவள் கேட்க .. செல்வியின் மகளும் இன்று அவளுடன் வந்திருந்தாள்.அவள் அந்த ஊரின் ட்விட்டர் போல ..அனைத்து செய்திகளும் அப்டேட்டாக இருப்பாள்.

"வேறென்னக்கா ..எல்லாம் அந்த மேட்டர் தான் " எனவும் கதை கேட்கும் ஆர்வத்துடன் அவளை இழுத்து பிடித்து கொண்டாள் தன்யஸ்ரீ .

குரலை தழைத்தவள்" என்ன மேட்டர்..அந்..த மேட்டரா? என்று கேட்க .."அதாங்க்கா லவ்ஸ் மேட்டர் "

"ம் கும் " என்று சலித்தவள் .."இந்த ஊருல லவ்வே மேட்டர் ஆயிடுச்சா ..விளங்கிடும் "

"சரி மேல விஷயத்தை சொல்லு .."

" யாரோ வேற சாதி பையனோட அந்த பொண்ணுக்கு காதலாம். பக்கத்து டவுன்ல காலேஜ் படிக்குதில்ல ..அங்க பாத்திருக்கும் போல ..ரெண்டு போரையும் நம்ம ஊர் கோடியில ஒரு பாலம் இருக்கில்ல ..அங்க வச்சு நம்ம ஊர்க்காரங்க யாரோ பாத்தாங்களாம் .அப்படியே கையும் களவுமா புடுச்சிட்டாங்களாம் அப்படியும் அந்த பையன் தப்பிச்சு ஓடிட்டானாம். இந்த பொண்ணு வீட்ல ஒரே அடியும் புடியும் தான் இந்த ஒரு வாரமா. எங்க போய் சொல்ல இந்த கோராமையை " என்று அங்கலாய்த்தபடி சென்றுவிட்டாள் .

இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வந்த சங்கீதாவும் சந்தியாவும் கூட கதை கேட்க அமர்ந்துவிட்டனர்.

"ஏண்டி ஒரு உயிரே போயிருச்சு..நீ என்னவோ கதை கேட்டுகிட்டு இருக்க" கண்மணி எரிந்து விழ..

அவளை சமாதான படுத்தினாள் சந்தியா .

"நம்ம ஊரும் குடும்பமும் அப்படி கண்மணி .அவங்களா பாத்து கிணத்துல தள்ளினாலும் தள்ளுவாங்களே தவிர காதல் கல்யாணம் லாம் பேசவே முடியாது."

"அப்படி என்னக்கா அதில தப்பு ? காலம் எவ்வளவோ மாறி போச்சே "

"காலம் மாறினாலும் நாங்க மாற மாட்டோம்னு உறுதியால்ல இருக்காங்க. "

" அப்படின்னா காதலிக்கவே கூடாதா ? அதென்ன அவளோ பெரிய பாவமா ?"

"தப்பு சரி எல்லாம் அவங்களுக்கு இல்லை.. தாராளமா நமக்கு புடிச்ச பையனை கல்யாணம் பண்ணிக்கலாம் ..அனால் அதுக்கு முன்னால அவங்களுக்கு புடிக்கணும் . அவங்களுக்கு புடிக்கணும்னா நம்ம ஆளுங்களா இருக்கணும்..நல்ல குடும்பமா இருக்கணும் ..இவங்களுக்கு அடங்கி இருக்கணும்."

"ம் கும் " என்று இடையிட்ட தன்யஸ்ரீ "இதுக்கு காதலிக்கவே கூடாதுன்னு சொல்லிட்டு போக்கா " என்று சொல்ல புரிந்தும் புரியாமல் கேட்டு கொண்டிருந்தாள் சோபிதா .

இன்னும் இவர்களது அத்தை மகள்களும் இருக்க..பேச்சு நீண்டு கொண்டே போக..செல்வி வந்து காலை உணவுக்கு அழைத்தாள்.

"நீங்கலாம் சாப்புடுங்கக்கா ..நான் ஒரு எட்டு போய் முத்துவை பாத்துட்டு வரேன்."

உடை மாற்றி முகம் கழுவியவள் முத்து செல்வியின் வீட்டை நோக்கி நடந்தாள்.

அடுத்த தெருவில் தான் அவள் வீடு . வீட்டை நெருங்குகையில் அழுகையின் சத்தம் கூட வெளியே கேட்கவில்லை.. ஒருவர் முகத்திலும் அழுகையில்லை.


வெளியில் நாற்காலியிட்டு சில வெள்ளை வேட்டிகள் அமர்ந்திருக்க " இந்த பொண்ணு இப்படி பண்ணிக்கிச்சே ..கோயில் திருவிழா வேற நேத்து தான் காப்பு கட்டியிருக்கு. இப்போ பாத்தா இப்படி செஞ்சுக்கணும் . போஸ்ட் மார்ட்டம் முடிச்சு சாயங்காலமா தான் வருமாம். அகால மரணம் வேற அதனால ஊருக்குள்ள வரக்கூடாது. அப்படியே இடுகாடு தான். " என்று பேசி கொண்டிருக்க ..இவளுக்கு சீயென்றானது.

இவர்களுக்கெல்லாம் ஒரு உயிர் போன கவலையே இல்லையா? அதுவும் இளம் குருத்து அவள். படிப்பிலும் சுட்டி.

பிற்காலத்தில் எவ்வளவோ சாதனைகள் செய்திருக்கலாம். இப்படி பாதியிலேயே போய்விட்டாள் என்று உள்ளம் அரற்றியது.

இதற்கு முன்னும் இது போல் சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன .. அப்போதெல்லாம் கூட இவளுக்குள் இத்தனை உணர்ச்சி கொந்தளிப்பில்லை.

இப்போது தன் மனமும் காதல் வயப்பட்டிருக்க நடக்கும் விஷயங்களின் அழுத்தம் அதிகமாக இருந்தது.
 
அப்போ அந்த பையன் தான் இந்த பெண்ணின் காதலனா..?
இதுக்கெல்லாம் காரணம் இவளின் அப்பா தானா..?
சூப்பர் 😀
 

Advertisement

Top