Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் - 16

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member
சுரேஷின் உயிர் தன் ஊசலாட்டத்தை நிறுத்தி சற்றே திடம் கொள்ள அதே நேரம் யாரோ வரும் அரவம் கேட்க.. இருவரும் சுவரோரமாக ஒட்டி அமைதியாக நின்று விட்டனர் ..பூட்டப்பட்டிருந்த கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

திறந்து உள்ளே நுழைந்தவன் அஜித் .. வேகமாக உள்ளே நுழைந்தவன் .. வந்த வேகத்தில் சுரேஷை எட்டி உதைக்க அவன் சுவரோடு சென்று மோதினான்.

வலியில் அம்மா என்று முனக மட்டுமே முடிந்தது அவனுக்கு.

"ஏண்டா நாயே .. என்னடா சொல்லி மயக்கி வச்ச எங்க ஊரு பொண்ண ? உனக்கு ஒண்ணுன்னா உடனே உயிரை விட்டுட்டா அந்த கெரகம் புடிச்சவ ..மானமே போச்சு. உன்னை அன்னிக்கே போட்டுருக்கணும். நோம்பி முடயட்டும்னு கைய கட்டி போட்டுட்டாங்க. இப்போ விஷயம் ஊரெல்லாம் தெரிஞ்சு போச்சு." என்றவன் "இன்னிக்கு ராத்திரிதாண்டா உனக்கு கடைசி .. ஊரே இன்னிக்கு ராத்திரி கோயில் பூசைல இருக்கும் ..அப்போ வந்து உன்னை கவனிச்சுக்கிறேன் " என்றவன் மேலும் சில அடிகளை அவன் மீது இறக்கிவிட்டே சென்றான்.


தன உயிரானவளின் உயிர் பிரிந்த செய்தியில் ஸ்தம்பித்து போயிருந்தவனுக்கோ தன் மீது விழுந்த அடிகளினால் ஒரு வலியும் ஏற்படவே இல்லை!

ஒளிந்திருந்து கேட்டுக் கொண்டிருந்த பெண்கள் இருவருக்கும் குலை நடுங்கியது.

அவன் சென்றதும் முத்துவும் கதவை பூட்டிவிட்டு செல்ல இருவரும் வீடு நோக்கி நடந்தனர்.

வீட்டில் சென்று குளித்து கிளம்பும்வரை யோசனையில் உழன்று கொண்டிருந்த கண்மணிக்குள் ஒரு உறுதி ஏற்பட என்ன செய்வது என்று முடிவெடுத்துக் கொண்டவளாய் தன் கைபேசியை எடுத்தாள்.


காலை உணவை முடித்துக் கொண்டவர்கள் .. கண்மணியும் தன்யஸ்ரீயும் வெளியே கிளம்ப .."எங்க பிள்ளைகளா கிளம்பிடீங்க ?" என்றவாறே உள்ளே வந்தார் சாவித்ரி.

'எல்லாம் உங்க மகன் செய்ய போற கொடுமையை தடுக்கத்தான்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு "நேத்து வாங்கின ட்ரெஸ்ஸுக்கு மேட்சிங் அக்சஸரீஸ் வாங்க போறோம் சித்தி " என்று சொல்ல ..

"என்னை விட்டுட்டு நீங்க மட்டும் வாங்க போறீங்களா ? நானும் வருவேண்டி ..எனக்கும் வாங்கணும் " என்று ஸ்வாதியும் கிளம்பினாள்.

"மூணு பேர் போனா வேல நடக்காதுடி.. நீ வீட்லயே இரேன் "

"அதெல்லாம் முடியாது..நீவேணா வீட்ல இரு ..நானும் கண்மணியும் போறோம் " என்று வம்படித்து கொண்டிருக்க .."சரி விடு தன்னு...அவளும் வரட்டும் " என்றவள் மெல்ல அவள் காதருகில் சென்று "நாம ரெண்டு பேர் எப்படி அவனை தூக்க முடியும்.. அவளும் வரட்டும் " என்று சொல்ல ..வான்டடாக வந்து வண்டியில் ஏறுகிறாளே என்று நினைத்தபடி "சரிடி நீயும் வா " என்று கூறினாள் தன்யஸ்ரீ !

மூவருமாக கிளம்பி தங்கள் ஸ்கூட்டி எடுத்து கிளம்ப கண்மணியும் தன்னுவும் ஒரு வண்டியிலும் ஸ்வாதி ஒரு வண்டியிலுமாக கிளம்பினார்.

கண்மணி முன்னால் செல்ல ..அவள் கடைத்தெரு நோக்கி செல்லாமல் வேறெங்கோ செல்வதை பார்த்த ஸ்வாதிக்கு ஒன்றும் புரியவில்லை.."ஏய் எங்கடி போறீங்க ?"

"இந்த தெருவில அப்பிடியே போனா புதுசா ஒரு மால் திறந்திருக்காங்களாம் ..அங்க தான் போறோம் ".

"ஏண்டி இந்த ஊர்ல ஹைஸ்கூலே கிடையாது.. இதுல மால் இருக்குன்னு கத விடறீங்க. எங்க தாண்டி போறீங்க "

"அமைதியா வாடி ..கொஞ்ச நேரத்தில தானே தெரியும் "என்று அவளை அடக்கிய கண்மணி வேகமாக வண்டியை விட பின் தொடர்ந்து வந்த ஸ்வாதிக்குள் ஆயிரம் கேள்விகள்..

சற்று நேரத்தில் வண்டியை நிறுத்த அவர்கள் நின்றிருந்தது சொக்கலிங்கத்திற்கு சொந்தமான மாந்தோப்பில் !

"இங்கே எதுக்குடி வந்துருக்கோம் ?" மீண்டும் கேள்விக்கணைகளை தொடுத்தவளை கண்டுகொள்ளாமல் தன உடைக்குள் மறைத்திருந்த அலைபேசி எடுத்து ஆன் செய்து மெசேஜ் செய்ய.. பார்த்துக் கொண்டிருந்த தன்னுவுக்கும் ஸ்வாதிக்கும் ஆச்சரியம் தான்..

"என்னடி .. மொபைல் ஹாஸ்டல்ல விட்டுட்டு வந்துட்டேனு சொன்ன ?' என்று கேட்க "அப்பாகிட்ட சொல்லாம வந்ததுக்கு திட்டு வாங்காம இருக்கணும்ல அதனால சொன்னேன் ..ஊருக்கு போறவரை அதையே மைண்டைன் பண்ண வேணாமா " என்றாள் கண்மணி .

இதற்குள் யாரோ வாயில் கேட்டை திறக்கும் சப்தம் கேட்க எட்டி வாயிலை பார்த்த தன்னு வாய் பிளந்து நின்றுவிட்டாள்.

" ஏய் ..நேத்து கடைல பாத்தோமே அந்த ஸ்மார்டி வர்றாண்டி .."

"அவன் தாமரை அத்தைக்கு சொந்தம்னு சொன்னாங்களே .. அவன் இப்போ எதுக்கு வர்றான் இங்கே? "

" சுத்தி பாக்க வந்திருப்பான் "என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கையிலேயே இவர்கள் அருகில் வந்துவிட்டான் .

அவன் இயல்பாக இவர்களை பார்த்து ஒரு மந்தகாச புன்னகையை வீசியபடி "ஹை கேர்ள்ஸ் " என்று கையசைக்க .. வாய் பிளந்து நின்றுவிட்டனர் ஸ்வாதியும் தன்னுவும் .மாறி மாறி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் .

பின் கண்மணியை பார்த்தவன் லேசாக கண்சிமிட்ட குப்பென்று சிவந்துவிட்டது அவள் முகம்.
 
கதிர் தானா காப்பாற்ற வந்த கடவுள்
அவனுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை ....அதாவது அவனின் பெற்றவர்களுக்கு..?
சூப்பர் 😀
 
Top