Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் -18

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member

இதுவரை அமைதியாக ஒரு ஓரமாக நின்றிருந்த கதிர் நகர்ந்து முன்னால் வர .. அப்போது தான் அவனை கவனித்தனர் அனைவரும் .
"நீ யாருப்பா? " என்றார் ரெங்கசாமி.

" நான் பக்கத்தூருல இருந்து வரேங்க. என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சிக்கலாமா ?"என்றதும் கூட்டத்தில் சலசலப்பு.

அனைவரும் சந்தேகக் கண்ணோடு இவனை நோக்க .."உங்க ஊருக்கு வந்த எங்கூரு பையன காணோமுங்க .. இப்போ நீங்க இங்க எதுக்கு வந்திருக்கீங்க ?"என்றார் ரெங்கசாமி.

" உங்க ஊரு பையன் சுரேஷ பக்கத்துக்கு ஊருக்காருங்கதான் அடிச்சு ஒரு இடத்தில அடைச்சு வச்சிருக்காங்க .அவனை எப்பிடியாவது வெளிய கொண்டு வரணும் .அது மட்டுமில்ல அவன் காதலிச்ச பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டா “ எனவும் அனைவர் முகமும் வாடியது.

"நீங்க அந்த ஊரு இல்லையா ?" என்றான் அந்த இளைஞன்.

" நான் சென்னைல இருந்து வந்திருக்கேன் . சொக்கலிங்கம் வாத்தியாருக்கு சொந்தங்க.."

சொக்கலிங்கம் வாத்தியாரின் பெயர் கேட்டவுடனே ஒரு மரியாதை தெரிந்தது அனைவரின் விழிகளிலும்.

" சுரேஷ் எங்க இருக்கானு எனக்கு தெரியும் . நீங்க இன்னிக்கு ராத்திரி வந்தா காப்பாத்திடலாம். ஊரே கோயில்ல பூஜைல இருக்கும்." என்றான் கதிர்.

"நாங்க ஊருக்குள்ள வந்தா பெரிய பிரச்னை ஆயிடுங்க.. எப்படியாவது நீங்க அவனை ஊருக்கு வெளிய கொண்டு வந்துருங்க ..இந்த ஒரு உதவி செய்ங்க தம்பி " என்று இவன் கைபிடித்து கெஞ்சினார் ரெங்கசாமி.

அந்த இளைஞனோ ஏதும் பேசாமல் கதிரையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். கதிரின் உருவமும் சாயலும் அவனுக்கு வெகு பரிச்சயமாக தோன்ற அவன் மனம் சிந்தையில் ஆழ்ந்தது.

எப்போது எப்படி சுரேஷை மீட்பது என்று சிறிது நேரம் பேசியவர்கள் ஒரு முடிவு ஏற்பட்டவுடன் கதிர் விடைபெற்று தங்கள் ஊருக்கு திரும்பினான்.









மாலை மயங்கியிருந்தது.
அன்று கோவிலில் விளக்கு பூஜை ! அனைவரும் தயாராகியிருக்க.. இவர்கள் மூவரையும் பார்த்த சங்கீதாவுக்கு " என்னடி மூணு பெரும் சிகப்பு கலர் டிரஸ் போட்டிருக்கீங்க ..அதுவும் ரத்த சிகப்புல " என்றாள்.

"எதுக்கு தன்னு இந்த டிரஸ் போட சொன்ன ?" என்று கிசுகிசுத்தாள் ஸ்வாதி .."ஏண்டி கண்மணி ஏதாவது கேள்வி கேட்டாளா ? நான் சொன்னதை அப்பிடியே செய்றாள்ள ..நீ மட்டும் கேட்டுகிட்டே இரு " என்று கூற "எனக்கு சொல்ல மாட்ட ..? இப்போ உங்க அக்கா கேக்குறாங்கல்ல ..பதில் சொல்றது"

"இன்னிக்கு விளக்கு பூஜை இல்லக்கா ..அதான் "

"காஞ்சனா மாதிரி இருக்கீங்கடி.. இப்படியே போனீங்க உங்கள தான் உக்கார வச்சி வேப்பிலை அடிப்பாங்க " என்றவளை கண்டுகொள்ளாமல் " அம்மா நாங்க ஸ்கூட்டில வரோம்" என்று கூறியபடி கிளம்பிவிட்டனர்

பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்க .. யார் கவனமும் கவராமல் எழுந்து சென்றவர்கள் தங்கள் வண்டியை எடுத்துக் கொண்டு தோப்பை நோக்கி சென்றனர் .. முத்து வேலை முடிந்து சென்று விட்டிருக்க ..அங்கு கதிர் காத்துக் கொண்டிருக்க .. இவர்கள் நால்வருமாய் உள்ளே சென்றனர்.

ஏற்கனவே கேட்டிருந்த கதைகளும் இருளின் அமைதியும் திகிலை கூட்ட.. யாரும் வந்து விடக் கூடாதே என்ற பயமும் சேர்ந்துகொண்டது.

மோட்டார் அறையை நெருங்கியவர்கள் கதவு பூட்டியிருக்க.. அங்கு கிடந்த ஒரு பாறாங்கல்லை எடுத்து பூட்டை உடைத்தான் கதிர்.

உள்ளே சென்று பார்க்க அலங்கோலமாய் கிடந்தான் சுரேஷ்.

பல இடங்களில் வெட்டுப்பட்டு குருதி வடிந்து காய்ந்து போயிருந்தது. பல இடங்கள் கன்றி சிவந்து இருந்தன. மூச்சு மட்டும் ஏற்ற இறக்கமாய் வர ..மதியம் உள்ளே சென்றிருந்த இளநீர் அவன் உயிரை தக்க வைத்திருந்தது.

மயக்கத்தில் இருந்தவனை ஆளுக்கு ஒரு பக்கமாய் பிடித்து தூக்க அவன் ஆஜானு பாகு என்றில்லாவிட்டாலும் ஆண்மகனுக்கே உரிய உருவமும் கணமும் இருக்க .. திக்கு முக்காடியது மூவருக்கும் . கதிர் மட்டும் இல்லாவிட்டால் அவ்வளவு தான் என்றே தோன்றியது. அவனை ஒரு ஓரமாக படுக்க வைத்தவர்கள் ..

"யப்பா ..என்னா வெயிட்டு? இப்படின்னு தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே மாட்டேனே " என்று ஸ்வாதி புலம்ப .." காலையில நாங்க மட்டும் தானேடி கிளம்பினோம் .. நீயா தானே வர்றேன்னு சொன்னே "

"ஆமாண்டி நீங்க வளையலு பொட்டுன்னு ஆசை காமிச்சுட்டு இப்ப இங்க வந்து ஆளை தூக்க சொல்றீங்க "

" நாங்களே எப்படி இவனை இங்கேருந்து ஷிப்ட் பண்றதுன்னு கவலைல இருந்தா ..நீதான் வான்டடா வந்து வண்டியில ஏறுனே. அதனால் தாண்டி நீ வரேன்னு சொன்னதும் உடனே சரின்னு சொல்லிட்டோம் " என்று தன்னு சொல்ல ஸ்வாதிக்கு புசு புசுவென்று பொங்கியது.

"ஏய் ஒரு உயிரை காப்பாத்த போராடுறோம்னுகிறதாலே சும்மா விடுறேன் ..இல்ல அடுத்த டெட்பாடி நீ தாண்டி "

இவர்கள் இருவரும் வழக்கடித்துக் கொண்டிருக்க கதிர் யாருக்கோ போனில் அழைத்து பேசினான் " அவங்க ஊர் எல்லையில ரெடியா இருக்காங்க கண்மணி" என்றவன் இவர்கள் மூவரும் சுரேஷை தாங்கி நிற்க அவனது கால்களை பிடித்து தூக்கி தோளில் போட்டான் .

"இதை முன்னாடியே செஞ்சிருக்கலாம்ல ப்ரோ . எதுக்கு கை வலிக்க தூக்க சொன்னீங்க ?"

"வந்ததுக்காகவாவது ஒரு வேலை குடுக்க வேணாமா ?" என்றான் நக்கலாய் .

"ம்ம்.. நக்கலு ! " என்றவள் "அண்ணனா போய்ட்டிங்க ..அதனாலே விடறேன்" என்று ஸ்வாதி சொல்ல " ஸ்வாதி நீங்க போய் ஸ்கூட்டி உள்ளே எடுத்துட்டு வாங்க" என்றான்.

எதற்கு என்று புரியாமல் தன் வண்டியை எடுத்து வந்து நிறுத்த கண்மணி நீயும் வண்டி கொண்டு வா என்றவன் ஸ்வாதி அனுமானிக்கும் முன்னர் தொய்ந்து கிடந்த சுரேஷை பின்னிருக்கையில் அமர வைத்து விட்டவன் "நீங்களும் பின்னாலே உக்காருங்க சிஸ்டர் " என்று தன்னுவை பணிக்க " நான் ஒன்னும் உங்களுக்கு சிஸ்டர் இல்ல " எனவும் "சரிங்க. மரியாதைக்குரிய மச்சினிச்சி அவர்களே ..ஏறி உட்காருங்கள். உங்கள் ஊர்க்காரர்கள் யாராவது பார்த்துவிட்டால் நமக்கெல்லாம் சங்கு தான் .. ஆகையால் நேரத்தை வீணடிக்காமல் ஏறவும் " என்று நாடக பாணியில் சொன்னவன் "உன் துப்பட்டாவை தா ஷாலு " என்று அதைக் கொண்டு சுரேஷை ஸ்வாதியின் பின்னோடு சேர்த்து கட்டிவிட்டு சீக்கிரம் ஊருக்கு வெளியே இருக்க வழியா போங்க ..ஊர் எல்லைக்கு போகணும்.. நாங்க பின் தொடர்ந்து வரோம் " என்றவன் கண்மணியின் வண்டியில் ஏறிக் கொள்ள இரு வண்டிகளும் பறந்தன.
 
Top