Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 3.2

Advertisement

Admin

Admin
Member
ஆம்! அங்கையர்கண்ணியும் ஆட்களை எளிதில் வசீகரித்துக் விடுவாள். அந்த ஒரு மரபணு விகாஸிடமும் இருந்தது. அங்கை, அவளின் அப்பா மாதிரி, அதாகப்பட்டது அன்பழகன் போல், அதனைக் கொண்டே அன்பழகன் மேல் அப்படி ஒரு காதலில் ராஜலக்ஷ்மி விழுந்து விட, அன்பழகன் பெண் கேட்டான் அவளின் தந்தையிடம். அப்படி ஒரு பிரளயம் வெடித்தது. அன்பழகன் ஒரு பீ எஸ் சி பட்டதாரி அவ்வளவே. அந்த பீ எஸ் சி யும் ராஜராஜன் வீட்டினர் படிக்க வைத்தது.

அவனுக்கு அப்பா, அம்மா கிடையாது. சிறு வயதிலேயயே தவறி விட செல்வந்தரான ராயர் அவனின் அப்பா அவரிடம் வேலை செய்ததால் அவனுக்கு அடைக்கலம் கொடுத்தார். காலையில் அவர்கள் வீட்டில் உண்டு பள்ளிக்கு செல்பவன் மதியம் பள்ளியில் சத்துணவு உண்பவன் இரவு இவர்களின் வீட்டினில் உண்டு வீட்டின் ஹாலில் ஒரு ஓரமாய் படுத்துக் கொள்வான்.

பள்ளியில் இருந்து வந்ததிலிருந்து, அவர்கள் சொல்லும் வேலையை செய்வது, கடைக்கு போவது, விடுமுறை நாட்களில் அவர்கள் சொல்லும் வீட்டு மற்றும் தொழில் சார்ந்த வேலையை செய்வது, இப்படி அவனின் நாட்கள் நகர அவனும் வளர, அவனுக்கு ஐந்து வயது இளையவளான ராஜலக்ஷ்மிக்கும் அவன் மேல் காதல் வளர்ந்தது.

அழகான ராஜலக்ஷ்மி இன்னும் அழகான அறிவான அன்பழகன் மேல் காதல் பித்தாக, யாருமற்றவனான அன்பழகனின் மனமும் அவளின் காதலில் அக்கரையில் அவள் பால் சாய, இருவரும் ஒரே இனம் கூட என்பதால், அவனிடம் ராஜலக்ஷ்மியின் வீட்டினர் எதுவும் வேற்றுமை பாராட்டி இராததால் நல்ல வேலையில் அமர்ந்து விட்டால் பெண் கொடுத்து விடுவர் என்று நினைத்து விட்டான்.

உலக ஞானம் அந்த நிலையினில் அவனுக்கு தெரிய வரவில்லை

அன்பழகன் மிகுந்த தைரியசாலி, ராயரிடம் சென்று பெண் கேட்க, உலக ஞானம் அவனுக்கு புரிய வைக்கப் பட்டது.

“யாருமில்லாதவன்னு வீட்ல தங்க இடம் கொடுத்தா, எங்க வீட்டு பொண்ணோட மனசையே நீ கலைப்பியா” என்று அடித்து விரட்டப் பட்டான்

ஆம்! அடித்து தான் விரட்டப் பட்டான்.

உண்மையின் அவனுக்கு பெண் கேட்கும் வயதே இல்லை, ஆனால் பதினேழு வயது ராஜலக்ஷ்மிக்கு ஒரு வரன் வர வீட்டினரும் அதை முடிக்கும் ஆர்வத்தில் இருந்தனர். சுவாமிநாதனுக்கு திருமணமாகி இருக்க, அடுத்து தமிழ்செல்வனும் திருமணதிற்கு நிற்க, வீட்டில் பெண் பிள்ளையை வைத்துக் கொண்டு அவனுக்கு முடிக்க விருப்பமின்றி சிறு வயது என்றாலும் நல்ல வரன் என்றதால் முடிக்க நினைக்க,

அதனை கொண்டே அன்பழகன் திருமணதிற்கு பேசினான்.

பீ எஸ் சி முடித்திருந்தவன் அரசு தேர்வுகளுக்கு பயிற்சி எடுத்து கொண்டிருந்தான். அதுவரை எப்போதும் போல அவர்களின் வயலில் மில்லில் கடையில் என்று எங்கே வேலை இருந்தாலும் செய்வான்.

பெண் கேட்டதும் ராயர் கூட அவனை மிரட்டி தான் பேசினார்.

ஆனால் சுவாமிநாதனும் தமிழ்செல்வனும் அவனை அடித்து விட்டனர் அடித்தது மட்டுமல்லாமல் வீட்டை விட்டு ஊரை விட்டு விரட்ட

எங்கே போவது என்று தெரியாமல் ராணுவத்தில் போய் சேர்ந்தவன், இன்று படிப்படியாய் உயர்ந்து ஜெனரல் பதவியில் இருந்தான்.

அடித்து விரட்டிய சுவாமிநாதனும் தமிழ்செல்வனும் இன்னும் ஊரில் பெரிய ஆட்கள் தான். ஆனால் பெயரளவில், பரம்பரையில், சொத்துக்கள் கொண்டு கிடையாது.

அவனை அடித்து விரட்டி விட்டனர் என்று தெரிந்ததும், அவன் எங்கே போனான் என்று தெரியாததால் ஒரு வேளை கொன்றே விட்டனரோ, என்று பயந்து பூச்சி மருந்தை எடுத்து ராஜலக்ஷ்மி குடித்து விட, அவளை காப்பாற்றுவதற்குள் அப்படி ஒரு சிரமம் ஆகிப் போனது.

அந்த திருமண பேச்சு அப்படியே நின்று விட, தமிழ்செல்வனுக்கு திருமணம் செய்து வைத்தனர். மூன்று வருடங்கள் முடிந்த பிறகு மீண்டும் ராஜலக்ஷ்மியின் திருமணம் அவளின் பலத்த மறுப்புக்கு பிறகும் பக்கத்துக்கு ஊரில் இருக்கும் ஊர் பெரிய தனக்காரனின் மகன் ஆத்மனுக்கு பேசி முடித்தனர். அவர்களுக்கு இவர்களை விட செல்வமும் செல்வாக்கும் அதிகம்.

சுவாமிநாதனின் புது நண்பனும் கூட, அப்படி தான் அந்த வரன் அமைந்தது.

வீட்டினருக்கு ராஜலக்ஷ்மி சிறு பெண் அவளின் மனசை அன்பழகன் கெடுத்து விட்டான். திருமணமானால் சரியாகிவிடும். இது தான் அவர்களின் நினைப்பு. ராஜலக்ஷ்மியின் காதலின் தீவிரம் அவர்களுக்கு புரியவில்லை.

இரண்டு ஊருமே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது இந்த திருமணதிற்காக, அப்படி காசை வாரி இறைத்து ஒரு வாரம் விருந்து என்று அமர்களப் பட்டுக் கொண்டிருக்க,

திருமணதிற்கு முன் தினம் பெண் காணாமல் போய் விட்டால் என்ன நடக்கும்?

ஊர் கலவரமாகி விட்டது!

ஆம்! அன்பழகன் மூன்று வருடம் ராணுவத்தில் இருந்து அப்போது தான் விடுமுறையில் வந்தவன், திருமண செய்தி கேட்டு அப்படியே அருகிருந்த கோவிலில் அவனின் பயணப் பொதிகையோடு அமர்ந்து விட்டான்.

அவளுக்கு திருமணம் ஆகியிருக்கும் என்று தான் நினைத்தான், ஆகவில்லை என்பது மகிழ்ச்சி என்றால் ஆகப் போவது துரதிர்ஷ்டம்! மனம் தொய்ந்து அமர்ந்திருந்தான்.

தன்னுடைய அத்தனை மறுப்பையும் மீறி இவர்கள் திருமணம் செய்வது அப்படி ஒரு இயலாமையை ராஜலஷ்மிக்கு கொடுத்திருந்தது.

அவளின் பல வருட காதல் தூக்கி ஏறிய முடியவில்லை. அதுவும் அன்பழகனுக்கு என்ன ஆனது என்று கூடத் தெரியவில்லை, திருமணதிற்கு முதல் நாள் கோவிலுக்கு போகிறேன் வேண்டுதல் என்று சொல்ல, தில்லையை உடன் அனுப்பி வைத்தனர். அப்போது தில்லை கர்ப்பிணியும் கூட,

தில்லை இன்னும் இரு உறவு பெண்கள் என்று புடை சூழ வந்த ராஜலக்ஷ்மி அங்கிருந்த அன்பழகனை கவனிக்கவில்லை.

ஊரை விட்டு சற்று தள்ளி இருந்த கோவில் ஜன நட மாட்டமும் அதிகமில்லை, காரில் டிரைவருடன் வந்தனர், உள்ளே நுழைந்தவள் ஏதோ உந்த அந்த நொடி உயிர் வாழ பிடிக்காமல் அங்கிருந்த கோவில் கிணற்றில் உயிரை மாய்க்க குதித்து விட,

சத்தம் கேட்டு, பெண்களின் கத்தல் கேட்டு ஓடி வந்த அன்பழகன் யாரென்று தெரியாமல் கிணற்றில் குதித்தான் காப்பாற்றுவதற்காக.

குதித்து மேலே தூக்கிய பிறகு தான் அது ராஜலஷ்மி என்று தெரிய, பதறி விட்டான். அவள் குடித்த தண்ணீரை வயிற்றில் இருந்து அமுக்கி எடுத்தவன் அவள் கண்விழிக்கவும், அவள் கண்களின் சேதியை படித்தான்.

“ஒன்று என்னை அழைத்து செல், இல்லை சாக விடு” என்று அது தெளிவாய் சொல்ல, அப்படி போவதில் அவனுக்கு உடன்பாடு இல்லையென்றாலும் அந்த நொடியில் அதனை தவிர வேறு வழி புலப்படாததால்,

யாரும் எதுவும் உணரும் முன்னர், தன்னுடைய பயணப் பொதிகையை தூக்கிக்கொண்டு அங்கிருந்த டிரைவரை ஒரு குத்து விட்டு, என்ன ஏது என்று கிரகிக்கும் முன்னர், ராஜலக்ஷ்மியை கையை பிடித்து இழுத்துச் சென்று காரில் ஏற்றி பறந்திருந்தான்.

இவர்கள் ஓடி வீடி சென்று விவரம் சொல்லி ஆட்களை அழைத்து எங்கே என்று தேட, கார் பக்கத்தில் இருந்த நகரத்தில் ஒரு இடத்தில் அனாதையாய் நிற்க, அவர்கள் இருவரும் ரயில் ஏறியிருந்தனர்.

எதுவுமே செய்ய இயலவில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள் என்று கூட யாருக்கும் தெரியவில்லை.

மாப்பிள்ளை ஆத்மனின் கோபம் முழுவதும் ராயரின் குடும்பம் மேல் திரும்ப, “எப்படி பெண் காதலித்தது தெரிந்தும் எனக்கு கட்டி வைக்க நினைத்தனர். அதுவும் நண்பன் என்று எனை ஒருவன் இப்படி ஏமாற்றுவானா, அடுத்தவனை காதலிக்கும் பெண்ணை கட்டும் அளவிற்கு நான் இளப்பமா” என்று தோன்ற,

அவனின் கோபம் ராஜலக்ஷ்மியின் மேலும் இருந்தது. “அந்த பெண்ணாவது எனக்கு தகவல் சொல்லியிருக்கலாம், என்னுடன் போனில் பேசியிருக்கலாம், இல்லை யார் மூலமாவது சொல்லியிருக்கலாமே” என்ற கோபம்.

இரு ஊர்களுக்குள் கலவரம் வெடிக்க,

இப்படி எல்லாம் சேர்ந்து ஆத்மன் அவர்களை பழி எடுக்க, அவர்கள் ஒன்றுமில்லாமல் போகும் வரை ஓயவில்லை. அவர்கள் மட்டுமல்ல ஊரும் நிறைய பாதிக்கப் பட்டது. ஆனாலும் ஊர் அவர்களோடு நின்றது, இன்னும் நிற்கின்றது.


ஆக்கமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்

 
Hi..
ஏகப்பட்ட மக்கள் கூட்டம்...
பெயர் மனதில் பதிய நேரம் பிடிக்கும் போல...
அங்கை அம்மா
2 முறை சாவைத்தேடிப்போய் பிழைச்சிட்டாங்க...
ஆனால் குடும்பம் ரொம்ப அடிபட்டிருக்காங்க.
இதில் ராஜாவும் அங்கையும் எப்படி சேருவாங்க..
 
Last edited:
???

அத்தை காதலில் தீவிரமாக இருந்து அவங்க வாழ்க்கையை பார்த்துகிட்டாங்க......
அப்போது எதிர்த்த அப்பா பையனுங்க பொண்ணை சேர்த்துக்க மாட்டாங்கன்னு பெண்ணோடு சேரத்தான் கல்யாணமா???

பொண்டாட்டி அப்பா கூட்டணியில் தான் அன்பழகனின் கோபமா???

பொண்ணுக்கு பார்த்த மாப்பிள்ளையும் தான் வீட்டின் அழிவுக்கு காரணம்.....

இப்போ ராஜராஜன் மட்டும் மனசு வைத்தால் போதாது......
தட்டு தடுமாறும் அவனுக்கு அண்ணன்கள் தான் உதவி பண்ணுறாங்க......
இங்கே இருக்கும் அங்கை mental torture அவனுக்கு......
எந்த தப்பும் செய்யாமல் தாத்தா சொல் கேட்டதுக்கு தண்டனை இவனுக்கா???

கல்யாணம் எப்படி நடந்தது???

விகாஸ் குட்டி வழியனுப்ப மாமா போவாரா???
 
Last edited:
வாழ்க்கையே போச்சி ன்னு விரக்தில உடையும்போது கிணத்துக்குள்ள சத்தம்...
தண்ணியோட தூக்கிட்டு ஒரே ஓட்டம்..

மேல கூரையை மட்டும் பிச்சிக்கிட்டு கொடுக்கறது இல்ல, கடவுள்..
கீழ பாதாளத்தில இருந்தும் அள்ளிக் கொடுக்குறார்..
 
Last edited:
Top