Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 4 1

Advertisement

நல்லாவா இருக்கு மருமகள அந்தப்பொண்ணு
இந்தப்பொண்ணு சொல்லுவது
 
அருமையான பதிவு, தங்களின் முயற்ச்சி வெற்றிபெற இறைவனை வேண்டுகிறேன்
 
புதிய முயற்சிக்கு வரவேற்பு மற்றும் வாழ்த்தாகுக.
 
ஹாய் FRIENDS,

அனைவருக்கு இனிய ஆயுத பூஜை , விஜயதசமி நல்வாழ்த்துக்கள். நாம் அனைவரும் கல்வி , செல்வத்துள் சிறக்க நம் இறைவ இறைவியை வணங்கிக் கொள்வோம். மல்லிகா இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல் லா முடிக்காம நிக்குற கதையெல்லாம் முடிச்சு விரைவில் ஒரு பெரிய கதையை விரைவா எழுதணும்னு வேண்டிக்கறேன்.

அப்புறம் ஒரு வேண்டுகோள் உங்க எல்லோர் கிட்டயும், இந்த youtube வீடியோல precap போடறது எங்க ஒரு புதிய முயற்சி. இப்போ தான் நாங்களே கத்துக்கறோம். அதனால அந்த வீடியோ நல்லா வர நாள் ஆகும். போட போட தானே அதுல இருக்குற குறைகள் தெரிஞ்சு அதை சரி செய்ய முடியும்.

அதாகப்பட்டது ரீடர்ஸ் இல்லைன்னா நாங்க இல்லை , எழுதறது எதுக்கு படிக்க தானே , இந்த முயற்சி கண்டிப்பா நல்லா வரும் , அதுவரை கொஞ்சம் பொறுமை தேவை , வீடியோ போட்டு ஒரு அரை நாள் விட்டு தான் precap எழுத்துல போடுவோம். இல்லைன்னா நாங்க சிரமப் பட்டு பண்ற வீடியோ உங்க எல்லோரையும் வந்து அடையாது. இது கூட வீடியோ நல்லா வந்து உங்களுக்கு பழகும் வரை தான்.

precap க்காக youtube வீடியோ ஸ் கிடையாது. நம்ம ஸ்டோரி ஆடியோ புக்ஸ் காகத் தான் இது. நம்ம பசங்க நிறைய பேருக்கு இப்போ இருக்கிற தலைமுறைல தமிழ் படிக்கவே தெரியறதில்லை. சோ அதுக்கான முயற்சி இது. அவங்களையும் நம்ம கதைகள் ரீச் பண்ணும் முயற்சி. அதுக்கு கொஞ்சம் நாள் பிடிக்கும். அதுவரை youtube பழக தான் இந்த முயற்சி.

KINDLY COOPERATE WITH US!

எங்களோட புது முயற்சிக்கு நீங்க துணை நிற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இன்னும் நிறைய நிறைய ப்ளான்ஸ் இருக்கு. அதை நடைமுறைபடுத்த நேரமில்லை. அவ்வப் போது இந்த மாதிரி புது முயற்சி வரும் போது வேண்டாம்னு சொல்லாதீங்க. கண்டிப்பா அதை இன்னும் நல்லா கொடுக்க முயற்சிப்போம்.

சில பேர் கதை முடிச்ச பிறகு போடலாம்னு கூட சொல்றீங்க , கதையை பாதில விடணுன்றது intension கிடையாது. சில தவிர்க்க முடியாத சூழல்கள் முடிக்க முடியலை, கண்டிப்பா முடிச்சிடுவேன். இங்க வராம புக்காவும் வராது. நான் எழுத்தாளார் ஆன பிறகு ஆன்லைன்ல எழுதலை , ஆன்லைன்ல எழுத ஆரம்பிச்சு தான் எழுத்தாளர் ஆனேன். சோ இங்க எழுதாம என்னால எழுத முடியாது. என்னை என் வழில வேலை செய்ய விடுங்க.

THERE ARE A VERY FEW WHO ARE TRYING TO DICTATE THINGS, KINDLY DON'T DO THAT.
THANKS TO MY FRIENDS WHO STAND WITH ME, I DON'T CALL THEM AS JUST READERS , ALL ARE VERY SPECIAL TO ME.

THANK YOU VERY MUCH FOR YOUR SUPPORT AND ENCOURAGEMENT


அத்தியாயம் நான்கு:

“என்ன மாமா, என்ன விஷயம்?” என்று தன் முன் வந்து நின்ற ராமுவிடம் கேட்க,

“கரண்ட் பிரச்சனை தம்பி, இந்த மாசமாவே இருக்குறதுதான், இப்போ ரொம்ப அதிகமா இருக்கு, இப்போ நமக்


ராமுவிடம் அதற்கு பதில் இருந்தது, “இப்ப சில மாசம் முன்ன உங்க கல்யாணம் உங்க அத்தை பொண்ணோடன்னு அவர் காதுக்கு போயிருக்கு போல” என தயங்கி சொல்ல..

ராஜராஜனின் முகம் தீவிரத்திற்கு மாறியது.

“அது கல்யாணம்னு பெருசா நடக்கலை, உங்களோட சேர்ந்தும் இருக்கலை, அதனால இப்போதான் தெரிஞ்சது போல”

“இவ்வளவு நாளா பெரியப்பா வார்த்தைக்காக விட்டேன், அப்போவும் நாம திருப்பி அடிக்கறோம்னு தெரிஞ்ச பிறகு தான் அவன் விட்டான், இப்போ மட்டும் இது அவனோட வேலையா இருக்கட்டும், திருப்பி எல்லாம் அடிக்க மாட்டேன், நான் புதுசா அடிக்கறேன்” என்று சொன்ன ராஜராஜனின் முகத்தினில் இருந்த ரௌத்திரம்,

“ரௌத்திரம் பழகு” என்று சொல்லத் தூண்டியது.

அவன் அவ்வளவு கோபமாய் பேசிக் கொண்டிருக்கும் போது நாச்சியம்மால் வர, எப்போதும் இருக்கும் துறுதுறுப்பு அவரிடம் இல்லை சோர்வாய் வந்தார்.

“என்ன கிழவி?” என்று அவரிடம் சென்றான்.

பதில் பேசாமல் அவனை பார்த்தார்.

“எதுவோ சரியில்லை?” என்று புரிந்தவன், “வா வந்து உட்காரு” என்று அவரை அழைத்து வந்து அவனின் இருக்கையில் அமர்த்தி, “மாமா, டீ ஒன்னு வாங்கிட்டு வாங்க” என்று அனுப்ப,

இதோ தம்பி என்று அவர் விரைந்தார்.

“என்ன கிழவி பண்ணுது?” என்றான் அக்கறையாய்.

“தெரியலை உடம்புக்கு என்னவோ பண்ணுச்சு, அதான்யா உன்கிட்ட சொல்லலாம்னு வந்தேன்” என்றார்.

“ஏன் உன்கூட உன் பேத்தி இருப்பாளே?”

“சொல்லலையா, சொன்னா பயந்துக்குமோ என்னவோன்னு”

“அதெல்லாம் பயப்படற ஆள் கிடையாது, உன்னை உடனே ஆசுபத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்கும், நீ வா நாம போகலாம்”
வாவ் நீநீநீநீநீநீளளளளள கதையா?
சூப்பர்ப் நியூஸ், மல்லிகா டியர்
 
Last edited:
Top