Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காத்திருத்தேனடி உனது காதலுக்காக!!- 12

Advertisement

Miloni

Active member
Member
முதலில் எல்லோரும் கபடி விளையாடினர்..
காரின் உள்ளே இருந்து அவளைப் பார்த்த இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் சிரித்துக் கொண்டார்கள்..
இன்னும் சின்ன பிள்ளை போல குழந்தைத்தனம் மாறாமல் இருக்கிறாள் என கூறி கொண்டே அவளை பார்க்க அவளோ ஒரு படி மேலே போய் அவர்களுடன் சண்டையிட்டு கொண்டிருந்தாள்..

ஹரிஷ் நீ சரியான போங்காட்டம் ஆடுகிறாய் கோட்டில் கால் படவேயில்லை..

தன்யாக்கா நீதான் போங்கு கால் கோட்டில் பட்டு விட்டது சின்ன பிள்ளை என என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா..

யார் நீ சின்ன பிள்ளையா விட்டால் இந்த ஊரையே விற்று விடுவாய் என அவனும் அவளும் மல்லுக் கட்டிக் கொண்டிருக்க அஞ்சலி இருவரையும் சமாதானப் படுத்தினாள்..

அக்கா இந்த விளையாட்டு இதோடு போதும் இனி கண்ணாமூச்சி விளையாடலாம் என யார் முதலில் கண்ணை கட்டுவது என அதற்கு ஒரு வாக்குவாதம் முடிந்து தன்யாவே கண்ணை கட்டுவது என முடிவானது..

அவர்களை தேடி ஓடிக் கொண்டிருந்தவள் கைகளில் வலிமையான தோள்கள் பட மெல்ல அதனை தடவி பார்த்தாள் இது இந்த வாசனை அவனுடையது அல்லவா ஆர்வத்துடன் மெல்ல கண்களை திறந்து பார்த்தாள்..

சட்டென்று கண் கட்டை அவிழ்த்ததால் கொஞ்சம் இருட்டாக இருக்க முதலில் அவள் பார்வையில் நிரஞ்சனா தான் பட்டாள்..

அவளைத் தான்டி பின்னால் பார்க்க மிதுர்வனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்..

இருவருக்கும் பொதுவாக வந்து.. வாருங்கள்.. நீங்கள்.. இங்கே எப்படி என திணறினாள்..

இப்படி வந்து அவன் எதிரில் நிற்பான் என அவள் எதிர்பார்க்கவில்லை..

நிரஞ்சனா பதில் சொல்ல வாயெடுத்த நேரம் அவளுடைய தந்தையும் வந்து விடவும் இருவரையும் அவருக்கு அறிமுகப்படுத்திவிட்டு உள்ளே வருமாறு அழைத்தாள்..

பிள்ளைகள் எல்லோரையும் நாளைக்கு விளையாடலாம் என வீட்டிற்கு அனுப்பினாள்..

அவர்கள் உள்ளே வந்து அமர்ந்ததும் அருணா அவர்களுக்கு டீ தயாரிப்பதாக சொல்லி உள்ளே சென்றார்..

சைதன்யா இப்போது உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கிறது என நிரஞ்சனா கேட்டாள்..

பர.. பரவாயில்லை நிரஞ்சனா தயக்கத்துடனேயே பதில் வந்தது..

சைதன்யா உன்னிடம் ஒரு ஆடை தொடர்பான சந்தேகம் கேட்க கம்பெனி வந்தேன் உனக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னார்கள் உடனே உன்னை பார்க்க வேண்டும் என தோன்றியது..

நல்லவேளை கம்பெனி விஷயமாக அண்ணன் இந்த பக்கம் வருவதாக சொன்னதும் அவனையே அழைத்து வரச் சொல்லி விட்டேன்..

அங்கிள் நீங்கள் அண்ணனுடன் பேசிக் கொண்டிருங்கள் நான் சைதன்யாவுடன் என் சந்தேகம் பற்றி பேசிவிட்டு அப்படியே வீட்டை சுற்றிப் பார்த்து வருகிறேன் என சொல்லி எழுந்து அவளை அழைத்து சென்றாள்..

நிரஞ்சனா தன்னிடம் ஏதோ பேச நினைத்து தான் அழைத்துச் செல்கிறாள் என்பது சைதன்யாவுக்கு புரிந்தது அவர்கள் கண் மறைந்ததும் நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்..

"என்ன தன்யா உங்களை திறமைசாலி என நினைத்தேனே இப்படியா ஓடிவருவது"..

இவளுக்கு என்ன தெரியும் என தெரியவில்லையே ஒரு நிமிடம் யோசித்து "புரியவில்லை" என ஒற்றைச் சொல்லாக பதிலளித்தாள் சைதன்யா..

உள்ளுக்குள் புன்னகைத்தாலும் வெளியே அவளிடம் ஒரு நாள் வேலை அதிகமாகி விட்டது என இரண்டு நாள்கள் லீவு எடுத்து விட்டீர்களே வேலை விஷயத்தில் நீங்கள் புலி என நினைத்தேன் என சொல்ல நிம்மதியாய் மூச்சு விட்டாள் சைதன்யா..

நீ இல்லாமல் அண்ணனுக்கு வேலையே ஓடவில்லை என பொடி வைத்துப் பேசவும் சைதன்யா திருதிருவென விழித்தாள்..
நிரஞ்சனாவே தொடர்ந்து நீ பாட்டுக்கு வேலையை பாதியில் நிறுத்திவிட்டாய் விழா வேறு நெருங்குகிறது வீட்டினருக்கு ஆடைகளை தைத்துவிட்டு பிறகு விழா கண்காட்சியில் வைக்க ஆடைகளை வடிவமைக்க வேண்டும் இப்படி லீவு எடுத்தால் எங்கே அதையெல்லாம் முடிப்பது..

என்ன சொல்வது என தெரியாமல் ஒரு நிமிடம் யோசித்தவள் இல்லை நிரஞ்சனா எனக்கு கொஞ்சம் சோர்வாக இருந்தது நாளையிலிருந்து வரலாமென இருந்தேன் என பொய்யுரைத்தாள்..

நிரஞ்சனாவுக்கும் அவள் நிலை புரிந்தது அதனால் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவள் ஒத்துக்கொண்டே போதும் என பொதுவான விஷயம் பேசினாள்..

வேறு ஏதாவது பேசப்போய் முறுக்கி கொண்டால் அண்ணனுக்கு யார் பதில் சொல்வது..

இவர்கள் பேசி முடித்து வெளியே வந்ததும் அண்ணனுக்கு கட்டை விரலை உயர்த்திக் காட்டினால் அவனும் புரிந்துகொண்டு முகம் மலர்ந்தான்..

அதற்குள் ஆண்கள் இருவரும் கம்பெனி தொடர்பான ஒரு சில விஷயங்களை பேசிக் கொண்டிருந்தார்கள் இவர்கள் வந்ததும் அருணா எல்லாருக்கும் டீயும் பலகாரமும் கொண்டுவந்து கொடுத்தார்..

சாப்பிட்டு விட்டு கிளம்பும் போது அங்கிள் எங்கள் வீட்டில் பூஜை இருக்கிறது நீங்கள் எல்லோரும் அவசியம் அதற்கு வரவேண்டும்..

நான் யாரிடமும் அவ்வளவாக நெருங்கி பழக மாட்டேன் அங்கிள் எனக்கு என்னமோ சைதன்யாவை பார்த்ததும் ரொம்பவும் பிடித்துவிட்டது..

அம்மாவிடம் இவளைப் பற்றி சொல்லியிருந்தேன் அங்கிள் உங்கள் எல்லோரையும் அவர்கள் அழைக்கச் சொல்லி இருந்தார்கள் நானே ஒருநாள் வீட்டிற்கு வந்து அழைக்கலாம் என நினைத்தேன் அவளுக்கு உடம்பு சரி இல்லை எனவும் இப்போதே வந்துவிட்டேன்..

ஏற்கனவே வேலை தொடர்பாக சைதன்யா வருவதாகச் சொல்லி இருந்தாள் நீங்களும் அவளுடனேயே வாருங்கள் என பயங்கரமாக ஐஸ் வைத்தாள்..

அவள் கம்பெனிக்கு வருவதற்கு மட்டுமல்ல வீட்டிற்கு வருவதையும் உறுதி செய்வதற்காக தான் அவ்வாறு பேசுகிறாள் என்பது சைதன்யாவிற்கு புரிந்தது..

கதிரேசன் தாங்கள் இருவரும் முக்கியமான உறவினர் வீட்டு விசேஷத்திற்கு செல்வதால் தங்களால் வர இயலாது இன்னொரு நாள் கண்டிப்பாக வருகிறோம் இப்பொழுது சைதன்யா மட்டும் வருவாள் என அவள் வீட்டிற்கு வருவதை உறுதி படுத்தினார்..

இப்போது அவளுடைய புத்திசாலித்தனத்தை மெச்சத் தான் வேண்டி இருந்தது..

எல்லோரிடமும் விடைபெற்று சைதன்யாவிடம் வீட்டு பூஜையில் உங்களை சந்திக்கிறேன் என் சைடிலிருந்து நான் உங்களை மட்டும்தான் அழைத்திருக்கிறேன் வந்துவிடுங்கள் உங்களை எதிர்பார்ப்பேன் என வேண்டுதலோடு விடைபெற்றுக் கிளம்பினாள்..

அதுவரை ஏதும் பேசாமல் சைதன்யாவையே பார்த்துக் கொண்டிருந்த மிதுர்வன் எல்லோரிடமும் விடைபெற்று இவளிடம் ஒரு பார்வையோடு விடைபெற்றுச் சென்றான்..

நிரஞ்சனாவிடம் கம்பெனி வருவதாகச் சொன்னாலும் பிறகு அதைப் பற்றி யோசிக்கலாம் என நினைத்தாள்..
ஆனால் அவனின் பார்வையில் என்ன இருந்ததோ நாளை கட்டாயம் போக வேண்டுமென முடிவெடுத்தாள்..
மறுநாள் எப்பொழுதும் போல லேட்டாக எழுந்து அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பினாள்..
வழக்கம்போல் பொட்டிக் ஆர்டர்களை கவனித்துவிட்டு மூன்றாவது தளம் வந்து கம்பெனிக்கு நுழைந்து நேரே அவளது அறைக்கு சென்றாள்..
சுந்தரி செல்வி கிறிஸ்டி என அனைவரும் அவளை விசாரிக்க அவரவருக்கு தகுந்த மாதிரியான பதிலை சொன்னாள்..
இரண்டு நாட்களாக அவள் இல்லாததால் ஓரளவு வேலை அதிகமாகவே இருந்தது கண்காட்சிக்கு வைக்க வேண்டிய ஆடைகளை வடிவமைக்க ஆரம்பித்திருந்தார்கள் உதவிக்கு இன்னும் இரண்டு பெண்கள் கூட வந்திருந்தார்கள்..
சிறிது நேரம் கழித்து மிதுர்வன் கூப்பிடுவதாக அவளுக்கு அழைப்பு வந்தது..
ஆனால் அவனது அறைக்கு செல்ல கால்கள் ஒத்துழைக்கவில்லை நகர மறுத்தது ஒருவழியாக சமாளித்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றாள்..
அவனும் எப்பொழுதும் போல வேலைகளின் விவரம் கேட்டானே ஒழிய அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை எல்லாம் சொல்லிவிட்டு அவனை பார்க்கையில் அவன் ஏதோ பேசுவதற்கு தயங்குவது போல தெரிந்தது..
இதுவரை இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அவனைப் பார்க்காத சைதன்யாவுக்கு அவனது தயக்கம் ஆச்சரியமாக இருந்தது..
அவன் பதிலுக்காக அவள் நிற்பதை உணர்ந்து ஒரு முறை கண் மூடி திறந்து அன்றைக்கு நடந்த எல்லாவற்றுக்கும் சாரி தன்யா இனி எப்பொழுதும் இது போல் நடக்காது என்றான்..
என்ன சொல்வது என தெரியாமல் தலையாட்டிவிட்டு வெளியே வந்தாள்..
மதியம் சந்தோஷ் அவளைத் தேடி வந்தான் அவளுக்கு வேலைக்கு வருவதற்கு எதுவும் பிரச்சனையில்லையே என திரும்பத் திரும்ப கேட்டு உறுதி செய்துகொண்டுதான் கிளம்பினான்..
அவனது அக்கரையில் அவளுக்கு கண்கள் கூட கலங்கியது தான் முன்னேறுவது மட்டும் நோக்கமாக இல்லாமல் அவளது உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கிறானே இவனை போல ஒரு நண்பன் தனக்கு கிடைத்தது பெரிய பாக்கியம் தான் என நினைத்தாள்.
 
???
 
Top